ரிசானா விவகாரம் குறித்து மரணதண்டனைக்கு எதிரான தமிழ்நாடு மற்றும் இலங்கை இஸ்லாமிய எழுத்தாளர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் கூட்டறிக்கை மீதான சில மறுப்புரைகள்.- ப.வி.ஸ்ரீரங்கன்
திரு.இத்திரயாஸ்அவர்கள் எழுதிய கட்டுரையான “ரிஷானா குற்றமும் தண்டனையும்” (இத்திரியாஸின் தளம் இப்போது முடங்கியுள்ளது)எனும் தொடர் கட்டுரைகள் விவாதிக்கும்குதர்க்கத்துக்கும்-தர்க்கத்துக்கும் இந்த இஸ்லாமியப் படைப்பாளிகள் -அறிஞர்களது கூட்டு “அறிக்கை”க்கும் எந்த வேறுபாடுமில்லை!இத்திரியாசாவது சரியாவின் வன் கொடுமைத்தண்டனையை இடம்-சூழலில் வைத்து மிகச் சாதுரியமான வார்த்தைகளால் விவாதித்து-விசாரித்து அதைக் காக்கின்றார்.இந்த அறிக்கையோ சரியாவைக் குறித்து வாயே திறக்காது “குற்றவியல்-மன்னிப்பு”எனும் பொது மொழியால் உரையாடிக்கொள்கிறது.இது ,1993 வீனாப் பிரகடனமும் நடவடிக்கைகளுக்கான திட்டத்தையும் [Vienna Declaration and Programme of Action-VDPA ]ஒரு பொருட்டாகக் கணக்காக எடுக்காதவொரு கூட்டறிக்கை.இஸ்லாமியச் சிந்தனையாளர்கள் விரிந்த தளத்திலான மதங்கடந்த மனிநேயக் கருத்தாடலுக்குள் சிக்குப்படாத மதவாதச் சிந்தனையாளர்களாவிருப்பதன் அர்தம் என்ன?எந்த அதிகாரத்துக்கும் கட்டுப்படாத கலகத்தனமான போராட்டமென்பது பெரும்பகுதி மக்களை அண்மித்தியங்கும் அரசியலாகவே இருக்க முடியும்.அத்தகைய இலக்கை மறுத்துவிட்டு மதவாதிகளாகவிரிந்துகொண்டு சரியாவின் வன் கொடுமை மனிதவிரோச் சட்டங்களுக்கெதிராகக் குரல்கொடுக்க முடியாது!
இங்கு, குற்றிவியல்சார்ந்த வெறும் சட்டவாதப் பிரச்சனையாக இந்த மனிதவிரோதக் கழுத்தறுப்பு ஒறுப்புச் சட்டமான சரியாவைக் காப்பதில் கொலை செய்யப்பட்ட ரிஷானாவை இவர்கள் மீளவும் கொலை செய்கின்றனர்.
சரியாவின் இருப்பானதும்,அதை இலங்கை-இந்தியச் சூழலில் நிலைப்படுத்த முனையும் ஒவ்வொரு எழுத்தும் தொடர்ந்து பல ரிஷானாக்களது கழுத்துக்களைத் தேடியலைவதாகவே பார்க்கப்படவேண்டும்.
இது,நியாயமா?
இந்தக் கூட்டறிக்கை மானுட நேயமான அறிக்கையாக இருக்குமா?
சரியாச் சட்டங்களையும்,அதன் பாதகத்தையும் குறித்து Islamophobia க்கு மாற்று வெளியில் உலகில் பல பலதளத்தில் நேர்மையானவுரையாடலெழுகிறது.ஆனால், இந்திய-இலங்கைச் சூழலலோ மிகக் கெடுதியான முறையில் சரியாவையும் அதன் வன் கொடுமையையும் நிலை நிறுத்தவும்,நியாயப்படுத்தவும் முனைகிறது.இதை வன்மையாகக் கண்டிப்பதோடு இதுள் இருக்கும் மதவாதப் புனைவுகள்,அதன்வழி மீள மனிதவிரோதச் சட்டங்களை நிலைப்படுத்தும் ஆதிக்கத்தின் விசுவாசமும் அம்பலப்படுத்தப்படவேண்டும்.
இங்கே நான் சுட்டும் புள்ளியில் இந்த மனிதவிரோத அறிக்கையையும்,இஸ்லாமியத் தாரளவாதிகளது சரியாவின்மீதான மறைமுக ஆதரவும் தெளிவாக மறுக்கப்படவேண்டுமென்பதே எனது கருத்து.
நவீன திறந்த சமுதாயத்துக்கெதிரான இத்தகைய மழுப்பு அறிக்கைளால் இன்னொரு ரிஷானா படுகொலையாவதை மனித நேயமிக்க மனிதர்கள் எவருமே விரும்பார்.அத்தகைய மனிதநேயமிக்கோர் இதுபோன்ற அறிக்கைகளைத் தொடர்ந்து விவாதித்து இதற்குள் மறைக்கப்படும் மனிதவிரோத ஆதிக்க உளவியலைத் தோலுரிப்பர்.இனியொரு இந்த அறிக்கைமீது எந்த ஆய்வுக் கண்ணோட்டத்தையும் வைக்காது சதித்தனமாக இஸ்லாமியச் சட்ட ஓழங்கான சரியாவைக் காக்கும் தந்திரத்துக்குப் பலியாவதை நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
இது சார்ந்து நான் தொடராக விமசர்னத்துக்குட்படுத்தும் சரியாவைக் காக்கும் இஸ்லாமியத் தாராளவாத எழுத்துக்கள்மீதான கருத்துக்களாகவே மேற் கூறுபவைகள் தொடர்ந்து எழுதப்படுகிறது.
அத்தோடு இந்தக் கூட்டறிக்கையானது ரிஷானாவின் படுகொலைக்குடந்தையான சவுதி அரேபிய நிலைப்பாடுகளைச் சர்வதேசரீதியாகக் கொண்டு சென்றிருக்க வேண்டுமெனச் சொல்வதிலிருந்து இவர்கள் ரிஷானாவின் படுகொலைக்குப் பின்பேதாம் இந்த விஷயத்துள் தலைவைத்திருக்கின்றனரென்று தெரிகிறது.
சாதரணமாக இந்த ரிஷானாவுக்கு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சர்வதேச அமைப்புகளே இறுக்கமாகப் போராடியுள்ளதைக்கூட இவர்கள் கவனிக்காது அறிக்கை எழுதுவது பெரும் மோசடியானது.
இலங்கை அரசு ஒரு காட்டுமிராண்டிக் கூட்டத்தின் கைகளிலிருக்கும்போது அந்தவரசிடம் போய் நீதி-நியாயம் கேட்பது சுத்த மோசடி.அந்தத் தேசத்தில் சட்டவாத அரசுக்கான தர்மம் முள்ளி வாய்க்காலுக்குப்பின் அடிபட்டுப் போயிருப்பதைக்கூட இவர்கள் புரிந்துகொள்ளவில்லையா அல்லது ஷரியாவின் கொடிய கழுத்தறுப்பைத் திசைதிருப்புந் தந்திருத்துக்கான பொறிக்குள் இலங்கை அரசிடம் எதிர்பார்ப்பைக் குவித்து அப்பாவிகள் போல் நடித்தலா இஃது?
சவுதியில் நிலவும் கழுத்துவெட்டுஞ் சட்டமெனவுரைப்பதிலும் அத்தகைய சட்டங்களை இஸ்லாமிய நாடுகளே பயன்படுத்துவதில்லையென்பதிலிருந்தும் ஷரியாச் சட்டவொழுங்கு வேறானது சவுதியில் நிலவும் சட்டம் வேறானதெனக் காட்டும் கருத்தின்வழி மறைமுகமாக இஸ்லாமியச் ஷரியாச் சட்டவொழுங்கையும் அதன் மனிதவிரோதக் கோரத் தண்டனைகளையும் நீதியாகவும்-நேர்மையானதாகவும் உணர்த்துகின்றனர்.ஷரியாவின் கொடி முகத்தைச் சவுதிக்குள் தேடுவதைவிட சோமாலியாவிலும்,நைஜீரியாவிலும் தேடுங்கள்.அங்கே,கை-கால்-மூக்கு அறுக்கப்பட்ட பல்லாயிரும் மனிதர்கள் நாளாந்தம் அவஸ்த்தைப்படுவதப்போது தெரியும்.ஷரியாச்சட்டமானது இத்தகையமத அடைப்படைவாதத் தேசத்தில் மிகப்பெரும் அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவதைக்கூட இவர்கள் அறியாதிருப்பதென்பது நமது காலத்துச் சாபக்கேடாகும்.
சர்வதேசரீதியாக ரிஷனாவின்மீதான விதிக்கப்பட்ட தண்டனைக்கெதிரான பாரிய போராட்டமெல்லாம் ஷரியாவின் முன் செல்லாக்காசாக்கிய இஸ்லாமிய மத அடிப்படைவாதமானது தொடர்ந்து விமர்சனத்துக்குட்படுவதை இத்தகைய கூட்டறிக்கைகள் மெல்லத் தவிர்த்துவிட்டு வெறும்”தண்டனையும்-மன்னிப்பும்” எனவிந்தக் கொடிய ஷரியாவைக் குறித்து இஸ்லாத்தின் வழி நியாயத்தை அடுக்குவதும்,அத்தோடு அரசுகளின்மீது பழியைப்போட்டுவிட்டு மனிதவிரோத இஸ்லாமிய அடைப்படைவாதத்தை இவர்கள் காத்துக்கொண்டு விடுகிறார்கள்.இது,கூட்டறிக்கை எழுதிய அனைவரதும் போக்காகப் பார்க்காது நிலவும் மத அடிப்படைவாத்தின் இறுகிய ஜனநாயகவிரோதப் போக்காவே நாம் பார்த்தாகவேண்டும்.
இவர்களது தெரிவில்இஸ்லாம் சார்ந்த மென்போக்கும் அதையொட்டிய ஷரியாச் சட்டத்தின் மீதான நியாயப்படுத்தல்களும் மனித அறத்துக்கெதிரானது.இதைப் புரிந்துகொள்ளத்தக்க முறைமைகளோடு இதை விரிந்த தளத்தில் பார்த்தாகவேண்டும்.
மனிதவுரிமை,தண்டனை,சட்டம் என்பதெல்லாமே இப்போது கசாப்புக் கடைக்கு நிகராச்சு.நிலவும் உடமைகளைக் காப்பதிலும்,உலகிலுள்ள அனைத்து வளங்களையும் தமதாக்க முனைந்த கடந்த கால ஆதிக்கமுடையவர்கள் தமக்கேற்ப அமைத்துக்கொண்ட கொடிய சட்டங்களை இறைவன் பெயரால் எழுதியபோது அது நீதியாகவும்-நேர்மையானதாகவும் புரிந்துகொள்கிறோம்-புரிந்துகொள்ள வைக்கப்பட்டோம்.
இயற்கையில் ஜடப்பொருள்கள்மீதும்,உயிர்களது உடல் வரை நிகழ்த்தப்படும் அரசியலானது பௌதிகவிருத்தலைத் தமது அதிகாரத்துக்குட்படுத்தும் முயற்சியில் இத்தகைய கொடிய”திறந்த சமுதாயத்துக்கு எதிரான”அன்றைய காட்டுமிராண்டிகளது உணர்வுக்கும்,அகவொழுங்குக்கும் அமைய அதிகார மனிதர்கள்அமைத்துக்கொண்டனர்.
எனவேதாம், கி.மு. 1770 களில் பாபிலோனியச் சமுதாயத்துள் கமுராபியின் [Hammurabi]ஆளுமைகளை நிலை நாட்டும் தந்திரத்துள்:
“இறைவன்அரசனின் நிழல் அதுபோல் அரசனது நிழல் மனிதர்கள்”என விளக்கப்பட்டது.[ Zu den ersten Gesetzessammlungen gehörte die des König Ur-Nammu aus der Ur-III-Zeit. Die ersten babylonischen Gesetze stammten aus der Zeit des Herrschers Lipit-Ischtar (1934-1924 v. Chr.) ]
இத்தகைய ஒழுங்கை கி.மு. 6 ஆம்நூற்றாண்டில் கிரேக்க சட்டவாதி டிராக்கோன் [ Drakon der Athener‘ um 650 v. Chr. ]மிக நுணுக்கமாகப் பாவித்து, இன்றை அரேபியக் காண்டுமிராண்டித்தனத்தின் அன்றைய முளையை ஊன்றினான்.
பின் கி.பி. 5 ஆம் நூற்றாண்டு இஸ்லாமோ அதைத் தகவமைத்துக் கொண்டு இன்றுவரை அதை மனிதர்களது உடலில் எழுதிவரும் குறியீடுகளைக் கழுத்து-கை-கால்,மூக்கிழந்த மனிதர்களில் வாசிக்க முடியும்.இதைத்தாம் காட்டுமிராண்டிகளென்றும், நாய்கள், என்றும்,கபோதிகளென்றும் திட்டித் தீர்த்து இந்த குறியீட்டைக் காவும் ஒவ்வொரு மனிதர்மீதும் இரங்கிக்கொள்கிறேன்.
அவர்களைத் தகவமைத்த “குற்றம்”இந்தச் சமுதாயத்தினது. மனிதர்களது வாழ்நிலைதாம் சமூகவுணர்வைத் தீர்மானப்பதில் பெரும் ஆதிகாரஞ் செலுத்துகிறது.எனவே,குற்றமென்பது நிகழக் காரணமானது இந்த அமைப்பு முறையே.ஆதலால் ,குற்றமென்பது வெறும் தனிநபர் நடாத்தையல்ல.
இத்தகைய கொடிய தண்டனைகள் யாவும் அதிகாரத்தை நம்ப வைப்பதற்கும் அதை நிலைப்படுத்தவும் ஏற்படுத்தப்பட்டவை.
களவு,கொலை,சச்சரவுகள் அனைத்தும் இந்தத் தோற்று வாயிலிருந்து ஆரம்பமாவது.மனிதர்களது உடல் மீதானவுரிமையானது அடிமைகளையுருவாக்கிய அன்றைய சமுதாயத்தின் நேரடியான அராஜகம் இத்தகைய வடிவில் உருவாகியது.இதே கொடிய உடலாதிக்க-உலகாதிக்க அரசியல்,அதிகாரம்,சட்டமாகவும்,கருத்தியலாகவும்,குறியீடுகள் ரீதியாகவும் இப்போதும் கொடிய அடக்குமுறையாகக் கண்ணுக்தெரியாத நவீனவொழுங்காச்சு.
நான்,இங்கு உரையாடுவது மனித நடாத்தை குறித்து.உணர்வு வழிப்பட்ட அநுதாபத்தின் அடிப்படையை தள்ளிவைத்துவிட்டும்,பொதுப் புரிதலை அழித்துவிட்டும் “குற்றமும்,தண்டனையும்”குறித்த வரலாற்றுப் புரிதலிலிருந்து இதை அணுகவும்.
அதைவிட , இது குறித்த புரிதல்கள் ஏலவே பூப்கா போன்ற பிரஞ்சியச் சிந்தனையாளர்களால் தெளிவாகப் புரிய வைக்கப்பட்டுள்ளது.பூப்காவின் “கண்காணிப்பும் தண்டனையும்”எனும் நூலை[ Discipline and Punish] வாசித்தால் குரானும்,ஷரியாவும் வகுத்துரைக்கும் ஒழுங்குகள் புரிந்துபோகும்.
குழந்தையின் மரணத்தைக் கொலையா,விபத்தாவென அறியும் அடிப்படைப் புரிதலற்றவொரு தீர்புக்கும் நாகரீகமேயற்ற கழுத்தறுப்புக்கும் அல்லாவையும்,மதத்தையும் சார்ந்து மனிதத்தைத் தொலைப்பதே இன்றைய இத்தகைய அரேபியப் பயங்கரவாதிகளைக் காக்கிறதில் முடிகிறது. காட்டுமிராண்டிகளாகச் சிந்திக்கும் காலம் கடந்துவிட்டது.
இங்கே,சட்டம்-தண்டனைகள் குறித்துப் புதிய புரிதல்களைப் பாமரத்தனமாக மதவாதியாவிருந்து புரியமுடியாது!!
மதம் கொண்டு மனிதத்தை அளவிடாது,நிகழ்த்தப்படும் அராஜகத்தைப் புரிய முனையுங்கள்-மனிதனாக!
ஒரு மதவாதியாக மனிதத்தைத் தொடமுனைந்தால் இறுதியில் நமது தேசங்களிலெல்லாம் ஒரு அரேபியக் காட்டுமிராண்டிகளது கழுமரம் முற்றத்துக்கு வந்துவிடும்.
இதை, ஏலவே நாம்கண்ட வரலாறு நமக்குப் போதும்.
முதலில் மனிதனாக வாழ்வதற்கு வரலாற்றையும்,மதங்கள்-சட்டங்கள்,அரசு,அமைப்பு,பொருளாதார முறைமைகள் குறித்து ஓரளவாவது விஞ்ஞான பூர்வமாக அறிய முனையுங்கள். இதற்கும்,மதத்துக்கும் என்ன சம்பந்தமென்ற கேள்வியோடு. மற்றும்படி,கழுத்தறுத்துப் போட்டுக் காசப்புக் கடை நடாத்தும் ஷரியாவைக் கொண்டாடும் வக்கிரம் எனக்கு இல்லை!
நான் எந்த மதத்தையும் ஏற்க்கப்போவதில்லை!
அனைத்துமே மனிதவிரோதப் பயங்கர நச்சுப் பொருட்கள்.இதற்கு உலகிற் தோன்றிய எந்த முதமும் விலகல்ல!
அனைத்துமே இன்றைய 21 ஆம் நூற்றாண்டில் காலப் பொருத்தமற்ற கபட விஷக்கருத்தியல் கட்டுமானங்கள்.அதிகார வர்க்கத்துக்கு பாதுகாப்பளிக்கும் பெரும் நிறுவனங்கள் இவை.இத்தகைய மேற்கட்டுமானமின்றி இந்த அரேபிய-உலக பெரும் பணக்காரரின் பொருள் வாழ்வு நிலைக்காது.
மனிதர்களை முதலில் மொழியிலிருந்தும்,மதத்திலிருந்தும் விடுவிக்கும்போது அதன் வழியிலான குறியீட்டுவினை அகச் சிந்தனை-நினைவுகளிலிருந்தும்,வாழ்நிலையில் உணர்வுபெறும் ஊக்கத்தோடு இவை இரட்டிப்பாகிப் ஏதோவொன்றின்மீது பைத்தியமாகித் தனது சுய இலபத்துக்கு-பாதுகாப்புக்கு”ஒரு இறைவன்”தேவையெனப் பிரதியெடுக்கும் மனிதர்களது நினைவிலி மனதுக்கும் இந்த விடுதலை சாத்தியமாகும்.
தறித்தெறியும் தலைகளைக் கண்டும்”குற்றம்-தண்டனை”எனவும்,முஸ்லீம் எனவும் உரையாட நெஞ்சு வலிக்கா உங்கள் குணம்தாம் அல்லாவினதும்-ஆண்டவனதும், இறைவனதும்,கர்த்தரினதும் மகிமை!
இந்தவுலகம் ரொம்பக் கொடுமையானது.இஃது, பெரும்பாலும் மெலிந்தவர்களை அனைத்து வடிவிலுஞ் சுரண்டியே கொழுத்துப் போயிருக்கிறது.இந்த மெலிந்தவர்கள் உலகில் பெரும்பகுதியாவிருந்தும் இந்த அதிகார மனிதக் குழுவைச் சிதைத்து தமக்கானவொரு அமைப்பை நிறுவமுடியவில்லை.
“இது,ஏன்? “என்று, யாரும் புரிய முற்பட்டால்-அஃது, ” இந்த வகையில் ஒன்றுக்கொன்று முரணாகவுரைத்தும்-விளக்கியும்,உண்மையானவொரு கொலையை,கொலையெனச் சொல்லாது கருத்தாடும் இத்திரியாசினது கட்டுரையை வாசிக்கும்போது,அந்த அதிகாரக் குழுவினது ஆதிக்கத்தைத் தொடர்ந்து, மெலினப்பட்டவர்களுள் “இறையச்சம்” செய்து அஃது, கடவுளால் அருளப்பட்ட “மேன்மை-நியாயம்” என்றெல்லாஞ் சொல்லித் தப்பிக்க வைக்கப்படும் டிராக்கோனியின்[draconian] சட்டவரைவின் கொப்பியான ஷரீயாவுக்கு இப்படியெத்தனை பேர்கள் ஒத்தூதுவர்?” என்று நம்மை, நாம் கேட்டுக்கொள்ளலாம்!
எனக்கு இத்திரியாசைவிட மிகப்பெரும் அறிஞர்களும்,நவ இஸ்லதமியச் சிந்தனையாளர்களான திரு.பாஷான் ரைபியையும்[Prof. Dr.Bassam Tibi ],ராறிக் ராமடானையும்[ Prof.Dr. Tariq Ramadan ],நன்றாகவே புரியும்.எனவே,இத்திரியாஸ் கூறும் [ரிசானா மீதான மரணதண்டனை: எதிர்வினைகளும் பதில்களும் ]கருத்துக் கலவை வடித்தெடுத்த கயமையானது!ஒரு கொலையை நியாயப்படுத்துவதென்ற புள்ளியில் நேரடியான கருத்தைக் கூறுவதிலிருந்து தப்பிக்கும்பொருட்டு, படுகொலை செய்யப்பட்ட ரிஷானாவின்பக்கம் நியாயத்தைச் சொல்லிச் ஷரியாவின் பெயரால் நடாத்தப்பட்ட காட்டுமிராண்டித் தனத்தைக் கருத்துக்களால் நீத்துப்போக வைக்கும் இவர்களை யாரால் மன்னிக்க முடியும்?
நாம்,உண்மைகளைப் பாதிக்கப்படும் பெரும்பகுதி மக்களது பக்கம் நின்றும்,அவர்களது நலனுக்காவும் கருத்தாடுகிறோம்.இத்தகைய இத்திரியாஸ்போன்று நிலவும் அதிகார வர்க்கத்தின் நிறுவனங்களை இறைவனதோ அன்றி எதன் பேராலும் நாம் தக்கவைக்க-நியாயப்படுத்த முனையவில்லை!ஆனால்,முற்போக்கு முஸ்லீம் அறிஞர்கள்-சிந்தனையாளர்கள் இந்த அப்பாவி பெண்ணைப் படுகொலை செய்த “சட்ட” அறத்தைக் காப்பதிலேயேதாம் குறியாகக் கருத்தாடுகிறார்கள்.
கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட உடலைப் பார்த்தும் இப்படியாகவா கருத்து வைத்துச் ஷரியாவைக் காப்போம்?குறிப்பாக, ஏபிஎம் இத்ரீஸ் சின் கட்டுரையையொட்டி. அவரது கருத்துக்களை ஆழ்ந்த புரிதலற்ற வாசகர்கள் ” சிறப்பானது-நேர்மையானதென்பது” இந்தப் போக்கின் ஆபத்தின் தொடர்ச்சியை இன்னொரு தளத்துக்கு[ dar al-islam ]நகர்த்துவதாகும்.
உலகம் இறை மூலத்தைக் குறித்து Higgs-Boson ஆய்வுக்குள் நிறுவப்பட்டவுண்மைக்குள்[ Higgs particle ] வந்துவிட்ட 21 ஆம் நூற்றாண்டின் நாம் வாழ்கிறோம்.இதுள் மதங்கள் தம்மைப் புதிப்பித்தபடி நிறுவனப்பட்ட அத்திவாரத்தைக் காக்க முனையும் போது பற்பல கருத்துக்களை முன் வைக்கின்றனர்.
இலங்கைப் பெண் ரிஷான சவுதியரசாலும்,அதன் இஸ்லாமியச் சட்டச் ஷரியாவின் மனிதத்தன்மையற்ற கொடிய வரையறுப்புக்கமைய அவள் படுகொலை செய்யப் பட்டதை இலங்கை முஸ்லீம்கள் பலர் குறிப்பாக,ஏ பி எம் இத்ரீஸ் புதிய விளக்கத்துக்கமைய[ dar asch-schahada ] விமர்சிப்பதும், நிலவும் ஷரியச் சட்டத்தை நிலைப்படுத்துவதும் புதியதில்லை!
இங்கே, ஐரோ இஸ்லாமென [ Euro-Islam ]விரித்துக் கருத்தாடுபவர்களை யொட்டியவுரையாடலே [Dr.Bassam Tibi ,Prof.Dr. Tariq Ramadan ]இது.
1992 இல் பாசான் ரைபியால் [Bassam Tibi ] உருவாக்கப்பட்ட நவ இஸ்லாம் எனும் கருத்துக்கொட்ப [ Liberal movements within Islam involve Muslims who have produced a considerable body of liberal thought on the re-interpretation and reform of Islamic understanding and practice. Their work is sometimes characterised as “progressive Islam”. ]இவர் [ஏபிஎம் இத்ரீஸ் எழுதியுள்ள ‘ரிசானா மீதான மரணதண்டனை-எதிர்வினைகளும் பதில்களும் ]உரையாடுகிறார்.
இது நிலவுகின்ற அதிகாரத்தைத் தொடர்ந்திருத்தும் புதியவகையான மொழியாடல்கள்[Dar asch-Schahada ].இதற்குள் மறைந்திருப்பது ஷரியாவைக் காத்து நிலைப்படுத்தும் தந்திரம்.ராறிக் ராமாடான் [Tariq Ramadan ] போன்றவர்கள் ஐரோப்பாவுக்குள் வாழும் இஸ்லாமியர்களுக்கான நவ லிபரல் மட்டத்திலான இஸ்லாம் பேசுவதும்,அவ்வண்ணம் ஷரியாவைத் தமக்குள் இணைப்பதென்பதில் நிலவும் ஐரோப்பிய ஜனநாயகப் பண்புகளோடு அண்மித்த புதிய போக்குகளைப் புதிதாகவிணைப்பதும், பெருப்பிப்பதும்,மனிதவிரோதத் தன்மையுள் இணைவு மறுவாக்கஞ் செய்ய முனையும் ஷரியாவின் நுட்பத்துள் அவரும் , மேற்கூறிய இத்திரீயாஸ்கூட அமைப்பாண்மை-நிறுவனப்பட்ட அதிகாரத்துக்கிசைந்த ஷரியாவை மறு விளக்கமளித்துக் காக்க முனைவதைச் சுட்டிக் காட்டுவது என் தலை முறைக்கு அவசியம்.
எனவே,இந்த ஆபத்தைப் புரிவதற்கு நான் மேலே சொன்ன ஐரோ-இஸ்லாம் குறித்த புரிதலை நிலவும் அதிகாரத்தோடான புரிதலிருந்து புரியும்போது இத்திரியாஸ் கூறுவதும் முற்றிலும் மனிதவிரோதத் தன்மையிலான புதிய அடிமைப்படுத்தும் அதிகாரத்துக்கமைவான எண்ணங்களென்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
ரிசானவென்ற பெண்ணை வைத்துப் புரட்சி-அரசியல் செய்யும் பலருக்குள் நான் இதை எனது அறிதலுக்கும் மானுடப் பெரு நோக்கிலும் வைத்துரைப்பதில் இன்னுஞ் சிலவற்றைச் சொல்வேன்.
இந்தவுலகத்தில் தினமும் ஆயிரக் கணக்கான மனிதர்கள் கொல்லப்படுகின்றனர்.அரசியலின் பெயராலும்,மதத்தின் பெயராலும்-சமூக விரோதத்தின் பெயராலும் பலர் கொல்லப்படுகின்றனர். இதையெழுதும்போது கூட இவ்வுலகத்தின் ஒரு மூலையில் அநியாயமாகவொரு மனிதர் எதன் பெயராலோ கொல்லப்பட்டிருப்பார்.
யுத்தம்-தூக்கு-மருந்தூசியடித்துக் கொலையெனப் பலரூபத்தில் இந்தச்சாவு மனிதருக்கு நேரிடுகிறது.எனவே,மதங்கள்,அரசியல் அதன் ஓழுங்குவெனும் அனைத்து மனிதவிரோத முறைமைகளது பெயராலும் மனிதர்கள் தண்டிக்கப்படுகின்றனர்-கொலை செய்யப்படுகின்றனர். அஃது, எந்தவொரு அரசுக்கும் விதிவிலக்கல்ல!ஆனால், இஸ்லாத்தின்-ஷரியாச் சட்டத்தின் பெயரால் நடாத்தப்படும் அட்டூழியம் மிகப்பெரும் அவஸ்த்தை இவ்வுலகுக்கு-திறந்த சமுதாயத்துக்கு-வரலாற்றுக்கு!
கொடூவாள்-கழுத்தறுப்பு!
வாழும் மனிதவிருப்பைச் சில கபோதிகள் ஆட்டை வெட்டுவதுபோல் மனிதரை வெட்டும் அரேபிய முஸ்லீம் நாய்களை அணுக்குண்டடித்துக் கொல்வதில் முனைப்புறும் இஸ்ரேலுக்குச் சமமாகவே பார்க்கவேண்டும்!
இஸ்லாத்தின் ஷரியா!
இது,மனிதவுரிமையையே மறுத்தவொரு மிகக் கெடுதியானவொரு சட்டமாகும். 21 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தபடி, கற்கால நினைவுகளோடும்,அநுபவத்தோடும் இந்த மோசமான அரபு நாடுகள் செய்யும் மனிதவிரோதத் தன்மையிலான கொலைகள்-தண்டனைகள் இந்தவுலகத்துக்கு அச்சத்தைத் தருகிறது.
கடந்த 09.01.2013 அன்று, படுகொலை செய்யப்பட்ட என் தேச மகளது சின்னஞ்சிறு கனவை அரேபிய நாய்களும் அந்த நாய்களது இஸ்லாமிய மத எருமைகளும்,அவர்களது மனித விரோதச் சட்டமான ஷரியாவுஞ் சேர்ந்து, கொடூவாளால் வெட்டிச் சரித்திருக்கிறார்கள்.
இது திறந்த சமுதாயத்துக்கு எதிரானது.
மக்களது இருப்புக்கு அச்சமான ஆளும் வர்க்கத்தின் அதிகாரப் பணத் திமிர் பிடித்த காட்டுமிராண்டிகளது மதமான இஸ்லாத்தின் அராஜகம் இது.இஸ்லாத்தின் பெயரால் நடாத்தப்படும் மனிதவிரோதமான கொடுமை இதுவென்பதில் எவருமே முரண்பட முடியாது.
மனித மகத்துவத்துக்கான திறந்த சமுதாயத்தின் எதிரிகளா நாம் ???
கடந்த நூற்றாண்டின் தலைசிறந்த சிந்தனையாளனும்,பௌதிகவாதியுமான கார்ல் போப்பரது [Sir Karl Raimund Popper ]”திறந்த சமூதாயமும் அதன் எதிரிகளும்” The Open Society and Its Enemies எனும் தலை சிறந்த நூலானது இந்த நூற்றாண்டில் இஸ்லாமியப் பயங்கரவாதிகளது காட்டுமிராண்டித்தனத்தை உங்வாங்கத் தக்க நூலாகும்.இந்தக் கார்ல் போப்பரே 1935 ஆம் ஆண்டில் மிகப்பெரும் இளஞ் சோசலிஸ்ட்டாகவிருந்து அதைவிட்டே ஓடியவன்.வீன் மாநகரில் கம்யூனிஸ்டுக்களுக்கும்,பொலிசுக்கும் ஏற்பட்ட கலகமானது 1935 ஆம் ஆண்டில் எட்டுப் பொலிசுக்காரர்களைக் கொல்லும் நிலைக்கெட்டியபோது போப்பர் அந்தச் சோசலிச அமைப்பையே விட்டொழித்து விலகியவர்.அவ்வளவு பெரிய மானுட நேசிப்பில் ஒரு பெரும் மக்கள் புரட்சிகரப் போராட்டத்தையே[wie bei einer gewaltsamen Auseinandersetzung zwischen Kommunisten und der Wiener Polizei acht Menschen ums Leben kamen, wandte er sich schockiert vom Marxismus ab und wurde zu einem seiner konsequentesten Kritiker. In der damals einzigartigen Wiener Atmosphäre begegnete er Menschen wie Ruth Fischer, Hanns Eisler, Paul Lazarsfeld, Oskar Kokoschka, Adolf Loos, Arnold Schönberg und Rudolf Serkin.] நிராகரித்தவர்.மனிதாபிமானம் வர்க்கஞ்சார்ந்ததென வகுப்பெடுப்பதும் அதன்வழி அனைத்து வர்க்கமும் கொலை செய்வதும் எனக்கு உடன்பாடற்றது.
இந்தவுலகத்தில் முதலாளிய-ஏகாதிபத்தியங்கள் மட்டும் மக்கள் விரோதிகளல்ல.அனைத்து மதவாதிகளும்தாம் இந்த விரோதக் கூட்டத்துள் இருக்கிறார்கள். உலகுக்கு இதுவொரு புதிய நடவடிக்கை அன்று!
போப்பர் கொலையைக் கண்டித்து அதைவிட்டு வெளியேறிச் சாகும்வரை தனது ஆய்வுகளைச் செய்தவர்.கார்ல் போப்பரைப்போல் ,ரிசானாவின் படுகொலையைப் பார்க்கும் ஒவ்வொரு இந்திய-இலங்கை “முஸ்லீமும்” அந்த மதத்தை விட்டு மனிதராக வெளியேற வேண்டும்.
இப்படியொரு மனித விரோதச் சட்டத்தையும்,மக்கள் விரோதப் பக்கத்தையும்[Xenophobia] நியாயப்படுத்தும் எந்த மதமும் மக்களுக்குத் தேவையில்லை.இதுவொரு கொடிய மதம்.இஸ்லாம் என்பது மிகப் பெரும் விலங்கு.மனித வளர்ச்சிக்கும்,மனிதப் பெறுமானத்துக்கும் எதிரான இந்த மதம் அரேபிய அணுக்குண்டாகும்.
கீழ்வரும் இணைப்பில் ஷரியாவால் எழுத்தப்பட்ட சட்டத்தின் அகோரத்தை இந்த இணைப்பிலுள்ள முகங்களில், அங்கங்களில் வாசித்துக்கொள்ளுங்கள் சகோதரர்களே!
http://michael-mannheimer.info/category/scharia/
-ப.வி.ஸ்ரீரங்கன்
American President Lyndon Baines Johnson once said that there is time for everything. So we have to wait for Saudi Arabia to respond.
Philosopher Sidney Hook praised The Open Society and its Enemies as a “subtly argued and passionately written” critique of the “historicist ideas that threaten the love of freedom [and] the existence of an open society”. Hook calls Popper’s critique of the cardinal beliefs of historicism “undoubtedly sound,” noting that historicism “overlooks the presence of genuine alternatives in history, the operation of plural causal processes in the historical pattern, and the role of human ideals in redetermining the future.” Nevertheless, Hook argues that Popper “reads Plato too literally when it serves his purposes and is too cocksure about what Plato’s “real” meaning is when the texts are ambiguous.” Moreover, Hook calls Popper’s treatment of Hegel “downright abusive” and “demonstrably false,” noting that “there is not a single reference to Hegel in Hitler’s Mein Kampf.”[4]
Reviewing the book’s legacy at the end the 20th century, Rajeev Bhargava claims that Popper “notoriously misreads Hegel and Marx,” arguing also that the formulation Popper deployed to defend liberal political values is “motivated by partisan ideological considerations grounded curiously in the most abstract metaphysical premises.”[5]
Walter Kaufmann’s The Hegel Myth and Its Method[6] argues that Popper’s section on Hegel is a simplified and misleading representation of Hegel. He claims that Popper’s views are based on an incomplete reading of Hegel, suggesting that “Popper has relied largely on Scribner’s Hegel Selections, a little anthology for students that contains not a single complete work.”[7] Kaufmann also views Popper as betraying the scientific method he proposes so passionately and instead is “intent on psychologizing the men he attacks.” In fact, Kaufmann accuses Popper of using the same distorting methods of which totalitarians are also guilty.[8]
The Open Society Foundations, created by investor George Soros, are inspired in name and purpose by Popper’s book
தலை, இதை எங்கிருந்து வெட்டியொட்டினீர்கள்?இவையெல்லாம் தெரிந்து அறிந்து, Maurice Allais, Walter Eucken, Milton Friedman, Friedrich August von Hayek, Frank Knight, Fritz Machlup, Ludwig von Mises, Karl Popper, Wilhelm Röpke, George Stigler.இன்னும் பலருமாகக் கண்ட Mont Pelerin Society யையும் நாம் அறிவோம்.போப்பரின் மூவுலக் கோட்பாடு,அதசார்ந்து அவர் முன்வைத்த “எல்லோருக்கும் பொதுவானவொரு சமுதாயம் எப்பவும் கிடையாதென்பதிலிருந்து” அத்தகைய சமுதாயத்துக்காப் போராடுபவர்கள் நிலவும் திறந்த சமுதாயத்துக்கெதிரானதென்றதெல்லாம் அறிவோம்.புதிதாகச் சொல்லுங்கோ கேட்போம்.
அதுவல்ல இங்கே சுட்டப்படுவதற்கான தேற்றங்கள்.
திறந்த சமூதாயத்தின் ஆணிவேரான மக்களது அதிகாரத்துக்கும் அதைத் தொடர்ந்து பாதுகாப்பதற்குமான நெறியாண்மைக்கு வழிவிடும் ஜனநாயக விழுமியங் குறித்தே நான் தொட முனைகிறேன்.
மானுட சமத்துவத்துவத்தைநேசிக்கும் மனிதனாக மதங்களின் விசம் குறித்த ஆதங்கத்தை என்னால் புரிந்துகொள்ளமுடிகின்றது.
அதேவேளை கார்ல் போப்பருக்கு பிடித்த அதே வியாதி பிடித்தாட்டுவதைத்தான் புரிந்துகொள்ளமுடியவில்லை. கார்ல்போப்பர் வரலாற்று பொருள்முதல்வாதத்தை நிராகரித்தவர். அவரது ஆய்வுமுறை விஞ்ஞான பூர்வமானதல்ல என்று பல தத்துவாசிரியர்களும் நிராகரித்திருக்கின்றார்கள். கூடவே ” திறந்த சமூகமும் அதன் எதிரிகளும்” என்ற் நூலை எழுதிய போப்பருக்கு பிரித்தானிய பேரரசின் அடிவருடிகளுக்கு வழங்கப்படும் “சேர்” பட்டத்தை வழங்கி கெளரவித்தது காலனிய அரசு. 19ம் நூற்றாண்டில் அல் ரசீத் இனக்குழுவிற்குமி அல் சவுத் குடும்பத்திற்குமான மோதலில் இருந்து இன்றுவரை அல்ச்வுத் குடும்பத்தை ச்வூதி அரேபியாவின் அரசகுடும்பமாக பிரித்தனிய அரசு பாதுகாத்துவருகின்றது. அல் சவுத் குடும்பத்தினது அரச மதமே வகாபிஸம். மாறுபுறம் அமெரிக்க அரசியல் விஞ்ஞான கழகத்திடம் விருது பெற்றவரான போப்பரை முன்னிலைப்படுத்துவதன் மூலம் உலகிலுள்ள வறிய இஸ்லாமிய மக்களை தனது கனிமவழ தேவைக்காக கொன்றுபோடுவதை நியாயப்படுத்துகின்றது.
கார்ல் போப்பர் ஒன்றும் அதிசிற்ந்த மேதாவியல்ல.. மெற்குலகின் ஐரோப்பிய மையவாதத்திற்கு த்த்துவ விமோசனம் கொடுத்தவர். கிட்டத்தட்ட இந்துத்துவாவிற்கு இன்னொரு முகம் கொடுக்கும் நம்ம ஜெயமோகனை போல.
\”மக்களது இருப்புக்கு அச்சமான ஆளும் வர்க்கத்தின் அதிகாரப் பணத் திமிர் பிடித்த காட்டுமிராண்டிகளது மதமான இஸ்லாத்தின் அராஜகம் இது.இஸ்லாத்தின் பெயரால் நடாத்தப்படும் மனிதவிரோதமான கொடுமை இதுவென்பதில் எவருமே முரண்பட முடியாது.”// மிக சரியான கருத்து.
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்
‘ரிஸானா நபீக்’ உலகம் முழுவதும் உச்சரிக்கப்பட்ட பெயர்… நீதி சரிந்ததா?﹐ நிமிர்ந்ததா? என்று நீதியே இல்லாத உலகம் பேசிய பேசுபொருளின் கரு… இந்தச் சிறிய வயதில் முழு உலகையும் தன் பக்கம் ஈர்த்த சாதனையின் சொந்தம். ஏன் ரிஸானா இவ்வளவு பிரபல்யமானாள்? இலங்கையின் ஒரு மூலையில் வறுமையின் கோரப் பிடியில் சிக்கித் தவித்த அந்த சின்னவளை உலகம் ஏன் இவ்வளவு தூரம் தலைநிமிர்ந்து நோக்கியது. அந்த அதிசயம் நிகழ்ந்ததற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்கிறது. ஆம்﹐ ரிஸானாவின் விடயத்தில் ஷரீஆ நீதி சம்பந்தப்பட்டிருக்கிறது﹐ அவ்வளவுதான்.
இவளைப் போன்ற எத்தனையோ ரிஸானாக்களை அமெரிக்க﹐ இஸ்ரேல் நீதிகள் ஆப்கானிலும் ஈராக்கிலும் பலஸ்தீனிலும் கொன்று குவித்திருக்கின்றன. செச்னியா விடயத்தில் ரஷ்யாவின் நீதி﹐ காஷ்மீர் விடயத்தில் இந்தியாவின் நீதி﹐ முஸ்லிம்கள் விடயத்தில் மியன்மாரின் நீதி﹐ சிரியா விடயத்தில் ஈரானின் நீதி என்பன யாவும் அமெரிக்க﹐ இஸ்ரேல் நீதிகளை விடக் குறைந்ததல்ல.
உலகம் இந்த நீதிகளை அலட்டிக் கொள்ளவில்லை. பேசுபொருளாக அவற்றை எடுத்துக் கொள்ளவுமில்லை. எனினும்﹐ ஷரீஆ நீதியை பேசுபொருளாக மாற்றி அதற்கு எல்லையில்லாத முக்கியத்துவத்தை உலகம் கொடுத்திருக்கிறது கொடுக்கத்தான் வேண்டும்.
ஷரீஆ நீதியை உலகின் பேசுபொருளாக ஆக்கிய ரிஸானாவுக்கு எமது பிரார்த்தனைகள். ரிஸானாவின் உயிர் மீண்டும் உலகத்துக்குத் திரும்பி வராது. ஆனால்﹐ பல ஆயிரம் ரிஸானாக்களுக்கு உயிர் கொடுக்க ஷரீஆ நீதி உலகை நோக்கி மீண்டு வரும். அப்போது உயிர் கொடுத்த ரிஸானா வாழ்ந்துக் கொண்டிருப்பாள்.
ரிஸானாவின் உயிருக்காக நல்லெண்ணத்தோடு அழுத முஸ்லிம்﹐ முஸ்லிமல்லாத அனைத்து உள்ளங்களையும் வாழ்த்திவிட்டு ரிஸானா நபீக்கின் விடயத்துக்கு வருகிறேன். ரிஸானாவின் மரண தண்டனை குறித்து இதுவரை ஊடகங்களில் வெளியான செய்திகள் அனைத்தையும் தொகுத்து வகுத்தால் ரிஸானா நபீக் விடயத்தில் இரண்டு விதமான அலசல்கள் நடைபெற்றுள்ளன. அந்த அலசல்கள் இரண்டில் எதை உலகம் சரி கண்டாலும் ஷரீஆ நீதியை எவரும் குறை கூற முடியாது. ஷரீஆ நீதி அந்த இரண்டு அலசல்களின்போதும் முன்வைக்கப்பட்ட கீழ்த்தரமான விமர்சனங்கள்﹐ கண்டனங்கள் என்பவற்றிலிருந்து பாதுகாக்கப்பட்ட நிலையிலேயே இருக்கின்றது.
அலசல் 01: இந்த அலசலில் நீதி﹐ விசாரணை குறித்து பல வகையான விமர்சனங்கள் ஊடகங்களில் உலா வருகின்றன. ரிஸானா குற்றவாளியல்ல. ஒரு சதிமோசக் கொலையை அவள் செய்யவில்லை. செய்ய வேண்டிய அவசியமும் இருக்கவில்லை. ரிஸானாவின் கையிலிருந்த குழந்தை இறந்ததற்கான காரணங்கள் விஞ்ஞானபூர்வமாகக் கண்டறியப்படவில்லை. அது இயற்கை மரணமாகவும் இருக்கலாம். அல்லது பால்புரையேறி மூச்சுத் திணறி குழந்தை இறந்திருக்கலாம். குழந்தை இப்படித்தான் இறந்தது என்பதைக் கண்ட சாட்சிகளும் இல்லை.
இந்த நிலையில் ரிஸானா குற்றவாளி என்பதை உறுதி செய்வதற்கான விசாரணை முழுமையாக நடைபெறவில்லை. தீர்ப்பு அவசரமாக வழங்கப்பட்டிருக்கிறது. இது நீதியல்ல. தனது பக்க நியாயங்களை முன்வைத்து வாதிடுமளவு அறிவுத் திறமைகள் இல்லாத ஒரு சின்னப் பெண் மொழி தெரியாத புதியதொரு சூழலில் நீதி விசாரணையொன்றுக்கு முகம் கொடுக்கும்போது அச்சத்துக்குட்படுவது இயல்பு. அவளது நியாயங்களை முன்வைத்து வாதிடுவதற்கு சட்டத்தின் உதவியை அவள் பெற்றாளா? அல்லது பெற வேண்டும் என்ற அறிவு அவளுக்கு இருக்கவில்லையா?
இத்தகைய சூழ்நிலைகளுக்கு மத்தியில் அவள் குற்றவாளியாகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளாள். இது நீதியின் நடைமுறைகளுக்கு அப்பாற்பட்டது. அதனால்தான் ரிஸானா நபீக் வீணாக உயிரிழக்க வேண்டியேற்பட்டுள்ளது. இவ்வாறு ஊடகங்கள் ரிஸானா நபீக்கிற்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை பல்வேறு கோணங்களில் விமர்சிக்கின்றன.
இந்த விமர்சனங்கள் உண்மையானால் (இந்த விமர்சனங்களின் உண்மைத் தன்மைகள் ஆராயப்பட வேண்டும்) குற்றம் யாரைச் சாரும்? ஷரீஆ நீதியையா? அல்லது நீதி விசாரணை செய்து ரிஸானாவைக் குற்றவாளியெனத் தீர்ப்பு வழங்கியவர்களையா? இந்த விமர்சனங்கள் உண்மையானால் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ரிஸானாவை விசாரணை செய்து குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கியவர்களுக்கே உரியன.
ஷரீஆ நீதி எந்த வகையிலும் ரிஸானா விடயத்தில் அநீதியிழைத்ததாகக் கூற முடியாது. இலங்கையில் பிரதம நீதியரசரை விசாரித்த முறை பிழையானது என ஊடகங்கள் விமர்சிக்கின்றன. ஏன் ஊடகங்கள் நீதி பிழையானது என விமர்சிக்காமல் விசாரித்த முறை பிழையானது என விமர்சிக்க வேண்டும்? இலங்கையின் நீதி விடயத்தில் ஊடகங்களின் முகம் வேறு ஷரீஆ நீதி விடயத்தில் ஊடகங்களுக்கு மற்றொரு முகமா?
நீதியை விமர்சிப்பவர்களிடமே நீதியில்லாததை இங்கு பார்க்கிறோம். இங்கு மட்டுமல்ல﹐ உலகம் முழுவதிலும் இன்று இப்படியான இரட்டை வேடம்தான் தாண்டவம் ஆடுகின்றது. அமெரிக்கா﹐ இஸ்ரேல் போன்ற வல்லரசுகளின் வேடத்தை எல்லோரும் தரித்திருக்கிறார்கள். தங்களது சுயத்தை இழந்து வேடம் பூண்டவர்களால் நீதியை எப்படி நிலை நாட்ட முடியும்.
அலசல் 02: இது ஊடகங்களில் தனியாக அலசப்பட்ட விடயமல்ல. முன்னையதோடு இரண்டறக் கலந்து வந்த அலசல்தான் இது. எனினும்﹐ அலசியவர்களுக்கு விளங்காத ஒன்றை விளக்குவதற்காக அவர்களது அலசல்களை நான் இரண்டாகப் பிரித்துக் காட்டுகிறேன். அலச முன்பு இதனை அவர்கள் பிரித்துப்பார்த்திருக்க வேண்டும். எனினும்﹐ பிரித்துப் பார்க்குமளவு நிதானம் அவர்களிடமில்லை. ஷரீஆ என்றவுடனேயே நிதானத்தை இழந்து விடுகிறார்கள் ஒரு பூதத்தைக் கண்டது போல்.
இரண்டாவது அலசல்: விசாரணை சட்டபூர்வமாக நடந்தேறியுள்ளது. கொலை என்பதற்கான ஆதாரங்கள் விஞ்ஞான பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. சந்தேகங்களுக்கிடமின்றி ரிஸானா கொலையாளிதான் என்பது நிரூபணமாகி விட்டது என்று வைத்துக் கொள்வோம். இந்த நிரூபணம் உறுதியானதன் பின்பு தண்டனை வழங்கப்படுகிறது. தண்டனை ஷரீஆ நீதியின்படிதானே வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஷரீஆ நீதி காட்டுமிராண்டித்தனமானதே என கூக்குரலிட்டன ஊடகங்கள். இதுதான் ஊடகங்களில் அலசலுக்குட்பட்ட இரண்டாவது விடயம்.
உண்மையில் ஷரீஆ நீதி கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒரு கொலையாளிக்கான தீர்ப்பு கொலை என்றுதான் வரையறை செய்கிறது. இது காட்டுமிராண்டித்தனமா?
இது காட்டுமிராண்டித்தனம் என உலகமே வாதிட்டாலும்﹐ ஒருவர் மாத்திரம் இதனைக் காட்டுமிராண்டித்தனம் எனக் கூற ஒருபோதும் முனைய மாட்டார். அவர்தான் கொலை செய்யப்பட்டவரின் சொந்தங்கள்﹐ தாய்﹐ தந்தையர்கள் அல்லது பிள்ளைகள்﹐ சகோதரர்கள் என்போர். இவர்களது உணர்வைத்தான் ஷரீஆ நீதியின் கர்த்தாவாகிய அல்லாஹ் கருத்தில் எடுத்திருக்கிறான். கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தவர்கள்தான் உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள்.
நீதி அவர்களுக்குத்தான் வேண்டும். காட்டுமிராண்டித்தனம் எனக் கூக்குரலிடுபவர்களுக்கு இங்கு நீதி தேவையில்லை. அவர்கள் கொக்கரித்துக் கொண்டிருக்கட்டும். நீதி தேவையானவர்களுக்கு நான் நீதி வழங்குகிறேன் என மனிதனைப் படைத்தவன் எடுத்த முடிவுதான் ஷரீஆ நீதி.
உலகில் நடைபெறுகின்ற எத்தனையோ குற்றச் செயல்களுக்கெதிராக வீதியிலிரங்கி ஆர்ப்பாட்டம் நடத்துபவர்கள் அந்தக் குற்றச் செயல்களைத் தடுப்பதற்காக ‘மரண தண்டனையை’ அறிமுகம் செய்﹐ அமுல்படுத்து என்று கோஷமிடுகின்றனர். அங்கெல்லாம் பாதிக்கப்படட்டவர்களுக்காகக் குரல் கொடுத்து மரண தண்டனைக்கு வந்தனம் கூறுபவர்கள் ஷரீஆ நீதி என்றவுடனேயே மரண தண்டனையைக் காட்டுமிராண்டித்தனம் என எப்படி வர்ணிக்கிறார்கள்.
அவர்கள் கோஷமிடும் அல்லது வாழ்த்துக் கூறும் மரண தண்டனை ஈவிரக்கமற்றது. ஷரீஆ நீதி விதிக்கும் மரண தண்டனை கருணையுடன் கலந்தது. கொலைக்கு கொலை என்று தீர்ப்பு வழங்கும் ‘ஷரீஆ நீதி’ மற்றுமொன்றையும் வலியுறுத்துகிறது என்பதை நிதானமிழந்த விமர்சகர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளத் தவறி விடுகிறார்கள். அல்லது வேண்டுமென்றே புறக்கணிக்கிறார்கள்.
கொலை செய்யப்பட்டவரின் குடும்பம்தான் ஷரீஆ நீதியின்படி தனது இறுதி முடிவை வழங்க வேண்டும். ஷரீஆ நீதிமன்றம் விசாரணைகளின் பின் நடைபெற்றுள்ளது கொலைதான் என்பதை ஆதாரங்களோடு உறுதி செய்த பின்னர் குடும்பமே தீர்ப்பு வழங்க வேண்டும். ஷரீஆ நீதியின் மூலகர்த்தாவான அல்லாஹ் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் கையில் நீதி வழங்கும் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு இருந்துவிடவில்லை. மாறாக﹐ அந்தக் குடும்பத்தினரின் உணர்ச்சிகளைத் தடவிக் கொடுத்து நீங்கள் விரும்பினால் உங்களுக்கு உயிர் நட்டத்தை விளைவித்தது போல் கொலையாளிக்கும் உயிர் நட்டத்தை விளைவிக்கலாம். அல்லது கொலையாளியிடமிருந்து நீங்கள் விரும்பும் ஒரு நட்ட ஈட்டுத் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம். அல்லது பெருமனதோடு மன்னித்தே விடலாம். என பல தரப்பட்ட தெரிவுகளை அவர்கள் முன் வைக்கிறான் ஷரீஆவின் மூலகர்த்தா.
அது மட்டுமல்ல மன்னிப்பதை ஊக்குவித்து அதற்கு நன்மை தருவதாகவும் கூறுகின்றான். ஷரீஆ நீதி எத்துனை அற்புமானது மனித உணர்வுகளுக்கும் மதிப்பளித்து மனிதனின் மானுசீகத்தையும் உயர்த்துகின்றது. இதுவா காட்டுமிராண்டித்தனம்?
ரிஸானா நபீக் விடயத்திலும் இந்த நடைமுறையே கைக்கொள்ளப்பட்டது. ஷரீஆ நீதிமன்றம் கொலை எனத் தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பில் நாம் முன்னர் பார்த்ததுபோல்﹐ அவர்கள் தவறு செய்திருந்தால் அது அவர்களின் குற்றமே ஷரீஆ நீதியின் குற்றம் அல்ல. பின்னர் தண்டனைத் தீர்ப்பு குடும்பத்திற்கே விடப்பட்டது. மன்னர் குடும்பம் முதல் அனைவரும் ரிஸானாவை மன்னிக்குமாறு இறந்த அல்லது கொலை செய்யப்பட்ட குழந்தையின் குடும்பத்தை வேண்டினர். குற்றம் நடைபெற்று ஏழு ஆண்டுகள் ஆகியும் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ரிஸானாவை மன்னிக்கும் மனநிலையில் இருக்கவில்லை. இறுதி நேரத்திலும் அவர்களது விருப்பம் கேட்கப்பட்டபோது அவர்கள் மன்னிக்கத் தயாராக இருக்கவில்லை.
அவ்வளவு கள்நெஞ்சமா அவர்களுக்கு? என்று யாராவது இந்த இடத்தில் வினவலாம். எனினும் முஸ்லிம்களாகிய நாம் அப்படிக் கேட்க மாட்டோம்﹐ ‘மன்னித்திருக்கலாம்’ அல்லது ‘மன்னித்திருந்தால் நன்றாக இருக்குமே’ அல்லது ‘மன்னித்திருக்க வேண்டுமே’ என்றுதான் நாம் கூறுவோம். காரணம்﹐ ஷரீஆ நீதி மன்னிப்பை ஊக்குவித்தாலும் தண்டிக்கும் உரிமையைப் பறிக்கவில்லை. அதனால் அந்த உரிமையை முஸ்லிம்களாகிய நாமும் பறிக்க முடியாது. முஸ்லிமல்லாதவர்கள் மன்னிக்காத அந்தத் தாய் தந்தையைக் குறை காண்பது அவர்களைப் பொறுத்தது. எனினும்﹐ ஷரீஆ நீதியை அவர்கள் குறை காண்பது எந்த வகையிலும் நீதியானது அல்ல. குறை காணும் ஒவ்வொருவரும் பிறறொருவரால் தனது குழந்தை கொலை செய்யப்பட்டால் எந்த மனநிலையில் இருப்பார் என்பதை ஒரு முறை பரிசீலனை செய்து கொள்ளட்டும்.
இதனை எழுதும் நான்﹐ ரிஸானா சம்பவத்தை விமர்சிப்பவர்கள் எப்படியான நோக்கில் தங்களது விமர்சனத்தை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டலையே வழங்கியுள்ளேன். ரிஸானா சம்பவத்தின் பின்னணிகள் எவை? உண்மைகள் என்ன? என்பதை விமர்சனங்கள் செய்யும் ஊடகங்கள் வாயிலாகவன்றி நேரடியாக ஆராய்ந்து அறிந்தவனல்ல.
எனினும்﹐ ஒரு மனிதன் என்ற வகையில் எனதுள்ளம் ரிஸானாவுக்காக அழுகிறது. ஒரு முஸ்லிம் என்ற வகையில் எனதுள்ளம் பின்வரும் விடயத்தில் ஆறுதலடைகிறது.
அல்லாஹ் ஒரு ரிஸானாவை வைத்து உலகத்தை ஒரு முறை உசுப்பியுள்ளான். அந்த உசுப்பலில் இஸ்லாம் எல்லையற்ற நன்மைகளைப் பெற்றுள்ளது பெற்றுக் கொண்டிருக்கிறது. எனினும்﹐ அந்த உசுப்பலில் பலியானவள் ரிஸானா அல்லவா? அதனால் ஷரீஆ நீதியை விமர்சித்தவர்கள் கூட நாளை மறுமையில் நான் அந்த ரிஸானாவாக இருந்திருக்கக் கூடாதா என்று நினைக்குமளவு ரிஸானாவைத் தனது அருளால் அல்லாஹ் பரவசப்படுத்துவான் போலும் என எனது மனம் கூறுகின்றது. யா அல்லாஹ்! ரிஸானாவின் பாவங்களை மன்னித்து உனது அருள் சுவனத்தில் அவளை சேர்த்தருள்வாயாக!
உண்மையில் ஷரீஆ நீதி கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒரு கொலையாளிக்கான தீர்ப்பு கொலை என்றுதான் வரையறை செய்கிறது. இது காட்டுமிராண்டித்தனமா?
இது காட்டுமிராண்டித்தனம் என உலகமே வாதிட்டாலும்﹐ ஒருவர் மாத்திரம் இதனைக் காட்டுமிராண்டித்தனம் எனக் கூற ஒருபோதும் முனைய மாட்டார். அவர்தான் கொலை செய்யப்பட்டவரின் சொந்தங்கள்﹐ தாய்﹐ தந்தையர்கள் அல்லது பிள்ளைகள்﹐ சகோதரர்கள் என்போர். இவர்களது உணர்வைத்தான் ஷரீஆ நீதியின் கர்த்தாவாகிய அல்லாஹ் கருத்தில் எடுத்திருக்கிறான். கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தவர்கள்தான் உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள்.
நீதி அவர்களுக்குத்தான் வேண்டும். காட்டுமிராண்டித்தனம் எனக் கூக்குரலிடுபவர்களுக்கு இங்கு நீதி தேவையில்லை. அவர்கள் கொக்கரித்துக் கொண்டிருக்கட்டும். நீதி தேவையானவர்களுக்கு நான் நீதி வழங்குகிறேன் என மனிதனைப் படைத்தவன் எடுத்த முடிவுதான் ஷரீஆ நீதி.
உலகில் நடைபெறுகின்ற எத்தனையோ குற்றச் செயல்களுக்கெதிராக வீதியிலிரங்கி ஆர்ப்பாட்டம் நடத்துபவர்கள் அந்தக் குற்றச் செயல்களைத் தடுப்பதற்காக ‘மரண தண்டனையை’ அறிமுகம் செய்﹐ அமுல்படுத்து என்று கோஷமிடுகின்றனர். அங்கெல்லாம் பாதிக்கப்படட்டவர்களுக்காகக் குரல் கொடுத்து மரண தண்டனைக்கு வந்தனம் கூறுபவர்கள் ஷரீஆ நீதி என்றவுடனேயே மரண தண்டனையைக் காட்டுமிராண்டித்தனம் என எப்படி வர்ணிக்கிறார்கள்.
அவர்கள் கோஷமிடும் அல்லது வாழ்த்துக் கூறும் மரண தண்டனை ஈவிரக்கமற்றது. ஷரீஆ நீதி விதிக்கும் மரண தண்டனை கருணையுடன் கலந்தது. கொலைக்கு கொலை என்று தீர்ப்பு வழங்கும் ‘ஷரீஆ நீதி’ மற்றுமொன்றையும் வலியுறுத்துகிறது என்பதை நிதானமிழந்த விமர்சகர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளத் தவறி விடுகிறார்கள். அல்லது வேண்டுமென்றே புறக்கணிக்கிறார்கள்.
கொலை செய்யப்பட்டவரின் குடும்பம்தான் ஷரீஆ நீதியின்படி தனது இறுதி முடிவை வழங்க வேண்டும். ஷரீஆ நீதிமன்றம் விசாரணைகளின் பின் நடைபெற்றுள்ளது கொலைதான் என்பதை ஆதாரங்களோடு உறுதி செய்த பின்னர் குடும்பமே தீர்ப்பு வழங்க வேண்டும். ஷரீஆ நீதியின் மூலகர்த்தாவான அல்லாஹ் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் கையில் நீதி வழங்கும் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு இருந்துவிடவில்லை. மாறாக﹐ அந்தக் குடும்பத்தினரின் உணர்ச்சிகளைத் தடவிக் கொடுத்து நீங்கள் விரும்பினால் உங்களுக்கு உயிர் நட்டத்தை விளைவித்தது போல் கொலையாளிக்கும் உயிர் நட்டத்தை விளைவிக்கலாம். அல்லது கொலையாளியிடமிருந்து நீங்கள் விரும்பும் ஒரு நட்ட ஈட்டுத் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம். அல்லது பெருமனதோடு மன்னித்தே விடலாம். என பல தரப்பட்ட தெரிவுகளை அவர்கள் முன் வைக்கிறான் ஷரீஆவின் மூலகர்த்தா.
அது மட்டுமல்ல மன்னிப்பதை ஊக்குவித்து அதற்கு நன்மை தருவதாகவும் கூறுகின்றான். ஷரீஆ நீதி எத்துனை அற்புமானது மனித உணர்வுகளுக்கும் மதிப்பளித்து மனிதனின் மானுசீகத்தையும் உயர்த்துகின்றது. இதுவா காட்டுமிராண்டித்தனம்?
ரிஸானா நபீக் விடயத்திலும் இந்த நடைமுறையே கைக்கொள்ளப்பட்டது. ஷரீஆ நீதிமன்றம் கொலை எனத் தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பில் நாம் முன்னர் பார்த்ததுபோல்﹐ அவர்கள் தவறு செய்திருந்தால் அது அவர்களின் குற்றமே ஷரீஆ நீதியின் குற்றம் அல்ல. பின்னர் தண்டனைத் தீர்ப்பு குடும்பத்திற்கே விடப்பட்டது. மன்னர் குடும்பம் முதல் அனைவரும் ரிஸானாவை மன்னிக்குமாறு இறந்த அல்லது கொலை செய்யப்பட்ட குழந்தையின் குடும்பத்தை வேண்டினர். குற்றம் நடைபெற்று ஏழு ஆண்டுகள் ஆகியும் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ரிஸானாவை மன்னிக்கும் மனநிலையில் இருக்கவில்லை. இறுதி நேரத்திலும் அவர்களது விருப்பம் கேட்கப்பட்டபோது அவர்கள் மன்னிக்கத் தயாராக இருக்கவில்லை.
அவ்வளவு கள்நெஞ்சமா அவர்களுக்கு? என்று யாராவது இந்த இடத்தில் வினவலாம். எனினும் முஸ்லிம்களாகிய நாம் அப்படிக் கேட்க மாட்டோம்﹐ ‘மன்னித்திருக்கலாம்’ அல்லது ‘மன்னித்திருந்தால் நன்றாக இருக்குமே’ அல்லது ‘மன்னித்திருக்க வேண்டுமே’ என்றுதான் நாம் கூறுவோம். காரணம்﹐ ஷரீஆ நீதி மன்னிப்பை ஊக்குவித்தாலும் தண்டிக்கும் உரிமையைப் பறிக்கவில்லை. அதனால் அந்த உரிமையை முஸ்லிம்களாகிய நாமும் பறிக்க முடியாது. முஸ்லிமல்லாதவர்கள் மன்னிக்காத அந்தத் தாய் தந்தையைக் குறை காண்பது அவர்களைப் பொறுத்தது. எனினும்﹐ ஷரீஆ நீதியை அவர்கள் குறை காண்பது எந்த வகையிலும் நீதியானது அல்ல. குறை காணும் ஒவ்வொருவரும் பிறறொருவரால் தனது குழந்தை கொலை செய்யப்பட்டால் எந்த மனநிலையில் இருப்பார் என்பதை ஒரு முறை பரிசீலனை செய்து கொள்ளட்டும்.
ஸ்ரீரங்கனின் நீண்ட ஆய்வு குழப்பத்தையே தருகின்றது. அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகிவிடும் என்பது இக்கட்டுரைக்கு சாலவே பொருந்தும். ரிசானாவின் தீர்ப்பின் வெறுமை பற்றி ஏலவே பலரும் பல்வேறு பாதையில் பேசி ஆயிற்று. ஸரியாச் சட்டமூலத்தை கேள்வியாக்கும் சம்பவங்கள் பல நடந்தேறிய போதும் அதை மகத்துவம் மிக்கதென்றே வாதிடுகின்றார்கள் அதன் பக்தர்கள் பலரும்.அண்மையில் தந்தை தன் மகவினை கொன்ற சம்பவத்தில் தந்தை என்பதால் பணம் செலுத்தி பரிகாரம் தேடலாம் என்கின்றது ஸரியா. {Saudi man name’s Faihan Alghamdi. He has killed his 5 years old daughter after months of torturing her. Two days ago, the judge has decided to release him after he pays money to the victim’s family (himself) because he’s her father and in Sharia Law the father is under no obligation for having killed his offspring }இதனையே பரிசுத்தமான சட்டம் என்று வாதிடுகின்றார்கள் அதன் காவலர்கள்.கோவில்கள் இல்லையடி பாப்பா- குலத்தாட்சி உயர்ச்சி சொலல் பாவம் என்று கற்றுக்கொடுக்க வேண்டிய முற்போக்கு சிந்தையுள்ள தங்களைப் போன்றோர் கிளிநொச்சியில் மசூதி அமைத்து விட்டார்கள் என்று சந்தோசம் கொண்டாடிப் போட்டோ பிடித்துப் போடுகின்றீர்கள். புத்த கோவில் கட்டினால் எதிர்ப்பு,மசூதியும், இந்துக்கோவிலும் எழுந்தால் மகிழ்ச்சியா???? என்று கேட்போரில்லாமல் சந்தர்ப்ப வாதிகளாக பச்சைக்கண் வைத்திருக்கும் பிச்சைகாரர்களுக்கு மட்டும் பிச்சை போடலாம் என்று பரிந்துரை செய்வதைப் போலவே உலக நீதிகளும், உங்களின் நீதிகளும் தடம் புரள்கின்றன.
அண்மையில் இலங்கையிலும் ஓர் சம்பவம். நீதித்துறைக்கும் நிறைவேற்றுத் துறைக்கும் இடையிலான முறுகல் அது. இச்சம்பவத்தை ஆய்ந்தவர்களில் எவரும் இலங்கையின் சட்ட அமைப்பில் குறையுள்ளது என்று கூற முன்வரவில்லை. மாறாக “சட்டம் சரியாகவே உள்ளது அது துஸ்பிரயோகிக்கப்பட்டுள்ளது” என்றே நிறுவ முயன்றனர். உலகின் எந்த மூலையில் இன்று நீதி சரிந்தாலும் அவர்களின் இன்றைய பார்வை இதுவே. மாறாக ஷரியா என்ற நீதி மட்டும் இங்கு விதி விலக்காகின்றது. ஷரியா நீதி துஸ்பிரயோகிக்கபட்டிருக்குமோ என்ற கோணத்தில் நோக்க எந்த ஒரு நடுநிலை!வாதிகளுக்கும் ஏனோ மனம் கொள்வதில்லை. நீதியே பிழை என்று நிறுவவே இங்கு முற்படுகின்றனர். காரணம் ஒன்றே இன்றைய அறிவாளிகளாக! உலகிற்கு அடையாளம் காட்ட நினைப்பவர்கள். மேற்கத்தேயர்களின் ஊடக பிரச்சாரத்திற்கு அடிமைகளாகி விட்டனர்
இது காட்டுமிராண்டித்தனம் என உலகமே வாதிட்டாலும்﹐ ஒருவர் மாத்திரம் இதனைக் காட்டுமிராண்டித்தனம் எனக் கூற ஒருபோதும் முனைய மாட்டார். அவர்தான் கொலை செய்யப்பட்டவரின் சொந்தங்கள்﹐ தாய்﹐ தந்தையர்கள் அல்லது பிள்ளைகள்﹐ சகோதரர்கள் என்போர். இவர்களது உணர்வைத்தான் ஷரீஆ நீதியின் கர்த்தாவாகிய அல்லாஹ் கருத்தில் எடுத்திருக்கிறான். கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தவர்கள்தான் உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள்.
நீதி அவர்களுக்குத்தான் வேண்டும். காட்டுமிராண்டித்தனம் எனக் கூக்குரலிடுபவர்களுக்கு இங்கு நீதி தேவையில்லை. அவர்கள் கொக்கரித்துக் கொண்டிருக்கட்டும். நீதி தேவையானவர்களுக்கு நான் நீதி வழங்குகிறேன் என மனிதனைப் படைத்தவன் எடுத்த முடிவுதான் ஷரீஆ நீதி.
“ரிஸானா நபீக் விடயத்திலும், ஷரீஆ நீதிமன்றம் கொலை எனத் தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பில் நீதிபதிகள் தவறு செய்திருந்தால் அது நீதிபதிகளின் குற்றமே தவிர ஷரீஆ நீதியின் குற்றம் அல்ல. பின்னர் தண்டனைத் தீர்ப்பு குடும்பத்திற்கே விடப்பட்டது. மன்னர் குடும்பம் முதல் அனைவரும் ரிஸானாவை மன்னிக்குமாறு இறந்த அல்லது கொலை செய்யப்பட்ட குழந்தையின் குடும்பத்தை வேண்டினர்.”