இலங்கையில் தமிழ்ப் பேசும் முஸ்லீம்களின் இலங்கை அரசிற்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக ஆரம்பிக்கும் நாடுகடந்த அரசின் அறிக்கை ஆரம்பித்ததும் ஏதோ இவர்கள் மனிதத்தை மதிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்ற உணர்வைத் அனைவருக்கும் தோற்றுவித்தது.
1915 ஆம் ஆண்டு இலங்கையில் முதன் முதலில் சிங்கள பௌத்த பேரினவாதிகளின் வன்முறை முஸ்லீம்களையே குறிவைத்துத் தாக்கியது. முஸ்லீம்கள் தெருத்தெருவாகத் தாக்கப்பட்டனர். அவர்கள் வர்த்தக நிலையங்கள் தீ மூட்டிக் கொழுத்தப்பட்டன. 4075 கடைகளும் வீடுகளும் சிங்கள பௌத்த வெறியூட்டப்பட்ட காடையர்களால் சூறையாடப்பட்டன. நான்கு தமிழ்ப் பேசும் முஸ்லிம் பெண்கள் பாலியல் வன் புணர்விற்கு உட்படுத்தப்பட்டனர். 17 பள்ளி வாசல்கள் தீமூட்டி எரிக்கப்பட்டன. 85 பள்ளிவாசல்கள் சேதமாக்கப்பட்டன. 25 வரையான முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர். இதே வேளை இன்னொரு துயரமும் அரங்கேறிக் கொண்டிருந்தது. தமிழ் தலைவர்களில் ஒருவரான சேர்.பொன்னம்பலம் இராமனாதன் முஸ்லீம்களுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்தார்.
இவை அனைத்தையும் மறந்த முஸ்லீம்கள் 1920 இலிருந்து 30 வரைக்கும் இராமநாதனின் முக்கிய ஆதரவாளர்களாகத் திகழந்தனர்.
தமிழ்ப் பேசும் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக மாற்றமடைந்த 80 களில் முஸ்லிம்களில் பலர் தமிழ் விடுதலை இயக்கங்களில் இணைந்து போராடி மடிந்திருக்கிறார்கள்.
அது நீண்ட நாள் நீடிக்கவில்லை. இன்று சாதிய முரண்பாடுகளைத் தூண்டி சாதிச் சங்ககங்களை இலங்கை அரசு தமிழ்க் காடையர்களை வைத்து உருவாக்கி இராணுவத் துணைக்குழுக்களாக உருமாற்றுவதைப் போல, முஸ்லிம் காடையர்களை தமிழ் விடுதலை இயக்கங்களுக்கு எதிராக உருவாக்கிற்று. முஸ்லிம் குடியேற்றங்களை கிழக்கில் ஆங்காங்கு தோற்றுவித்தது. இவற்றைக் கையாள வலுவற்ற ஏகபோக அரசுகளின் அழுத்தக் குழுக்கள் போன்று செயற்பட்ட விடுதலை இயக்கங்கள் முஸ்லீம் மக்கள் அனைவரையுமே எதிரிகளாக்கி அப்பாவிகள் மீது தாக்குதலைத் தொடுத்தன.
கிழக்கில் இவ்வாறு நடைபெற்ற போதிலும் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் மக்களின் நிலை வேறுபட்டதாக இருந்தது. அவர்களில் பெரும்பாலானோர் விடுதலை இயக்கங்களின் ஆதரவாளர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.
இதனைக் கூடக் கருத்தில் கொள்ளாத தமிழீழ விடுதலைப் புலிகள் 1990 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த அனைத்து முஸ்லிம்களையும் ஒரு இரவுக்குள் தமது பாரம்பரிய நிலங்களிலிருந்து வெளியேறுமாறு ஆயுத முனைய்ல் பணித்தனர்.
அவர்களிடமிருந்து தங்க நகைகளும் சொத்துக்களும் புலிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.
இரவோடு இரவாக சாரி சாரியாக முஸ்லீம் மக்கள் தாம் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வழகமாக்கிய மண்ணை விட்டு வெறுங் கையோடு துரத்தப்பட்டனர். கைக் குழந்தைகளின் அழுகுரல்கள், முதியவர்களின் முனகல்கள், கண்ணீர் மல்கிய மனிதர்கள், நிறைமாதக் கற்பிணிப் பெண்கள் என்று எந்த வேறுபாடுமின்றி தமது மண்ணிலிருந்து பிடுங்கி எறியப்பட்டனர்.
இச்சம்பவம் போராட்ட வரலாற்றில் நிரந்தரக் கறைபடிந்த நிகழ்வு. இதனைத் தமக்கு ஏதுவாகப் பயன்படுத்திக்கொண்ட முஸ்லிம் பிழைப்புவாதத் தலைமைகள் முரண்பாட்டை ஆழப்படுத்தும் தமது வேலையை ஆரம்பித்தன.
இன்று புலிகள் இல்லை. போராட்டம் சிதைக்கப்பட்டுவிட்டது. முஸ்லிம் மக்கள் மீது ராஜபக்ச பாசிஸ்டுக்களின் திட்டமிட்ட வன்முறை கட்டவிழ்த்துவிடப்படுகின்றது.
முஸ்லிம் மக்கள் தம்மை ஒழுங்கமைத்துப் போராட முற்படுகிறார்கள். சிங்கள பௌத்த பாசிஸ்டுக்கள் பௌத்த அடிப்படைவாத அமைப்புகளை தாமே தோற்றுவித்து முஸ்லிம்களின் கலாச்சார மையங்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். தேவையேற்பட்டால் முஸ்லிம்கள் மீதான இனப் படுகொலைக்குத் தயாராகி வருகின்றனர்.
இன்று வட கிழக்குத் தமிழர்கள் மட்டுமல்ல, முஸ்லிம்களும், சிங்கள உழைக்கும் மக்களும், மலையக மக்களும் ராஜபக்ச பாசிஸ்டுக்களால் மிருகத்தனமாக ஒடுக்கப்படுகின்றனர்.
கொலை வெறிகொண்ட இராணுவத்தை மட்டும் வைத்துக்கொண்டுள்ள இலங்கை பேரினவாத பாசிஸ்டுக்களுக்கு இலங்கையில் எல்லைக்குள் வாழும் பெரும்பான்மையான மக்கள் எதிரிகளே. போர்க்குற்ற விசாரணை நடத்துகிறோம் என்று மக்களை ஏமாற்றும் ஏகபோக நாடுகளும் அவற்றின் அடிவருடிகளான புலம்பெயர் ஐந்தாம் படை பிழைப்புவாதிகளையும் விட ராஜபக்சவின் பலமான எதிரிகள் இவர்கள் தான்.
இந்தப் பின்னணியில் இலங்கை அரச பாசிஸ்டுக்களால் தாகுதலுக்கு உள்ளாகும் முஸ்லிம்களை நாடுகடந்த தமிழீழம் தம்மோடு இணைந்து போராட அழைக்கிறது. அதுவும் தமிழ் மக்களோடு போராட்டத்தில் இணைந்து கொள்ளக் கோரிக்கை விடுக்கிறது.
இலங்கை அரச பாசிஸ்டுக்கள் வட கிழக்குத் தமிழர்களை தேசிய இனம் என்பதை அங்கீகரிக்க மறுப்பதைப் போலவே நாடுகடந்த தமிழிழம் முஸ்லீம்களை தனித் தேசிஅ இனமாக அங்கீகரிக்க மறுக்கிறது. அவர்களின் சுய நிர்ணைய உரிமையை நிராகரிக்கிறது. ‘தமிழ், முஸ்லீம், சிங்களம்’ என்றெல்லாம் பேச வேண்டாம் எல்லாரும் இலங்கையரே’ என்ற ராஜபக்சவின் மொழியை நாடுகடந்த அரசு பேசுகிறது.
இன்று மக்களை நேசிக்கும் எந்த ஜனநாயகவாதிக்கும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் பிரிந்துசெல்லும் உரிமைக்கான போராட்டத்தின் வெற்றியே இலங்கையில் அழிவுகளிலிருந்து மீழ்வதற்கான ஒரே வழி என்பதில் சந்தேகங்கள் இருக்கமுடியாது.
இந்த நிலையில் ஒடுக்கப்படும் முஸ்லிம் மக்களதும், மலையக மக்களைதும் தன்னுரிமையை அங்கிகரிப்பதும் சுய நிர்ணய உரிமைக்கான அவர்களது போராட்டத்தை சுய நல நோக்கின்றி மனிதர்கள் என்ற அடிப்படையில் நேர்மையாக அங்கீகரிப்பதும் அவர்களுடைய போராட்டத்திற்கு வலுச் சேர்பதுமே ராஜபக்ச அரசையும் பேரினவாத பாசிசத்தையும் அழிப்பதற்கான ஒரே வழி,
அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள் மத்தியில் கடந்தகாலத்தின் மன்னிக்க முடியாத கசப்பான நிகழ்வுகளுக்காக சுய விமர்சனம் செய்துகொள்வது ஒவ்வொரு மக்கள் பற்றுள்ள மனிதனதும் தாரிமீகக் கடமை. அமரிக்காவையும் இந்தியாவையும் கூட்டிவந்து ராஜபக்சவை அழிக்கிறோம் என்று பிழைப்பு நடத்தவேண்டிய எந்த அவசியமும் இல்லை. போராடும் சிறுபான்மைத் தேசிய இனங்களோடும் சிங்கள உழைக்கும் மக்களோடும் இணைந்து கொண்டாலே ராஜபக்ச அரசு சிறுபான்மை அரசாகிவிடும். இவர்கள் அனைவரதும் ஒருங்கிணைந்த ஆதரவோடு சிறுபான்மைத் தேசிய இனங்கள் தமது பிரிந்து செல்லும் உரிமைய வென்றெடுக்கவும் முழு இலங்கையை அழிக்கப்படுவதிலிருந்து காப்பாற்றவும் இயலும்.
======================================================================================
சிங்கள பௌத்த தேசியவாதத்திற்குள் சிக்கியுள்ள முஸ்லிம் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவு: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
இலங்கைத் தீவில் சிங்கள பௌத்த தேசியவாதத்தினால் முஸ்லிம் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் அராஜகத்தினை வன்மையாக கண்டிப்பதோடு, முஸ்லிம் மக்களின் உரிமைக்கான போராட்டத்திற்கு தனது வலுவான ஆதரவினை தெரிவித்துக் கொள்வதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதேவேளை தமிழ் மொழியினை தாய்மொழியாக் கொண்ட சகோதரர்கள் என்ற வகையில் தமிழர் தாயகத்தில் தமது பாதுகாப்பான எதிர்காலத்தினை கட்டியெழுப்ப தமிழ்மக்களுடனும் அவர்களது போராட்டத்துடனும் இணையுமாறும் முஸ்லிம் மக்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தோழமையோடு அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்திரகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கைத் தீவில் தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகத்தினை ஆக்கிரமித்து வைத்திருக்கும் சிங்கள பௌத்த தேசியவாத அரசு தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமைக்கான போராட்டத்தினை தனது இராணுவ சர்வாதிகாரத்தின் வல்லாதிக்க கரங்கொண்டு அடக்கிவிடலாம் என நினைத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது தனது இன அழிப்பு காட்டுமிராண்டித்தனத்தினை முஸ்லிம் மக்களினை நோக்கியும் அவர்களது வழிபாட்டு உரிமையினையும் ஏனைய பண்பாட்டு உரிமைகளினைக் குறிவைத்தும் செயற்படத் தொடங்கியுள்ளது.
உலகின் 600 மில்லியன் மக்களின் வழிபாட்டிற்கும் மதிப்புக்கும் உரிய பௌத்த மதத்தினை தங்களது அரசியல் அதிகாரத்திற்காக சிங்கள பெருந்தேசியவாதத்தினுள் சிறைப்படுத்தியுள்ள இலங்கை இனவெறி அரசு தமிழர் தாயகத்தினுள் காணப்படக்கூடிய தமிழ் பௌத்த புராதன சின்னங்களினை சிங்கள பௌத்த சின்னங்களாக பிரகடனப்படுத்தி, தமிழ் மக்கள் பௌத்தமதத்தின் மீது கடந்த காலங்களில் கொண்டிருந்த பெருமதிப்பினை களங்கப்படுத்துவதோடு, அப்பிரதேசங்களில் சிங்கள மக்களினைக் குடியேற்றுவதன் மூலம் தமிழர் தாயகத்தினை சிதைத்து கூறுபோடும் முயற்சியினை துரிதப்படுத்தியுள்ளது.
கடந்த பல தசாப்தங்களாக தமிழ்மக்களின் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு நிகழ்ச்சி நிரலின் தொடர்ச்சியினை தற்போது முஸ்லிம் மக்களின் மீது திருப்பி விட்டுள்ளது. முஸ்லிம் மக்களின் உணவு பழக்கவழக்கங்கள், ஆடையணியும் முறைமைகள் ஆகியவற்றில் தனது வன்முறையினை ஆரம்பித்த சிங்களபௌத்த தேசியவாதம் தற்போது அவர்களின் வழிபாட்டு தலங்களினை அழிப்பதிலும் வழிபாட்டு உரிமைகளினை மறுப்பதிலும் தனது சட்டரீதியானதும் சட்டத்திற்கு புறம்பானதுமான சகலசக்திகளினையும் ஈடுபடுத்தியுள்ளது.
பௌத்த மதத்தினை தேசிய மதமாக தனது அரசியலமைப்பில் பிரகடனப்படுத்தியுள்ள இலங்கை அரசு ஏனைய மதங்களுக்கும் பண்பாடுகளுக்கும் உரிய சமத்துவ உரிமைகளினை மறுத்துள்ளது.
கடந்த பல தசாப்தங்களாக தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமையினை அபகரிப்பதில் சுவை கண்ட சிங்கள பௌத்த தேசியவாதம் அடுத்தகட்டத்தில் முஸ்லம் மக்களின் இருப்பினை அழிப்பதற்கான திட்டங்களினை விரிவுபடுத்தியுள்ளது.
இதன் தொடர்ச்சியாகவே கடந்த நாட்களுக்கு முன்னர் தென்னிலங்கையில் தலைநகரினை அண்டிய வெல்வெரி பிரதேசத்தில் கத்தோலிக்க சிங்கள மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இராணுவ வன்முறையினையும் புரியமுடிகின்றது.
கூர்மையடைந்துள்ள சிங்கள பௌத்த தேசியவாதம் சிங்களவராயினும் கிறிஸ்தவ மதத்தவர்களினைக்கூட விட்டு வைக்கத் தயாரில்லை என்கின்ற அளவிற்கு மூர்க்கமடைந்துள்ளது.
இது மறுவகையில் மாற்றுப் பண்பாடுகளினையோ மற்றைய மதங்களினையோ ஏனைய மக்களின் தேசிய உரிமைகளினையோ ஏற்று அங்கீகரித்து இணைந்து வாழத் தயாரில்லை என்ற சிங்கள பௌத்த தேசியவாதிகளின் உறுதியான நிலையின் வெளிப்பாடாகவே அமைந்துள்ளது.
இத்தகைய நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது சுதந்திரசாசனத்தில் குறிப்பிட்டுள்ள ஒரு விடயத்தினை மீண்டும் இங்கு நினைவூட்ட விரும்புகின்றது.
“தமிழீழஅரசு ஒரு மதசார்பற்ற அரசாக அமையும். அதன் கீழ் சகல மக்களினதும் மதவழிபாட்டு உரிமையும் தங்கள் மதக்கடமைகளினை நிறைவேற்றுவதில் அவர்களுக்குரிய பண்பாட்டு உரிமையும் தங்கு தடையின்றி உறுதிப்படுத்தப்படும்.”
இலங்கைத்தீவில் தமிழர்களின் பாரம்பரிய தாயகத்தில் உருவாகவிருக்கும் சுதந்திர தமிழீழம் சகலவித மதங்களுக்கும் பண்பாடுகளுக்கும் சமஉரிமையும் மதிப்பும் அளிக்கும் ஒருதேசமாகும்.
சிங்கள பௌத்த தேசியவாதத்தினைப் போன்று சகல மாற்றுப் பண்பாடுகளினையும் இனங்களினையும் தனது பெருந்தேசியவாதத்தினுள் விழுங்கி அழிக்கின்ற குரோத மனப்பான்மையற்றதும் “யாதும் ஊரேயாவரும் கேளீர்” என்ற முது பெரும் தமிழ்பண்பாட்டிற்கு அமைய வந்தார் அனைவரினையும் வாழவைக்கும் சுதந்திர பூமியாக தமிழீழத்தின் மண்ணும் அங்கு அமையும் மக்கள் ஆட்சியும் இருக்கும்.
அவ் விடுதலை நாளினை நோக்கி காத்திருக்கும் உலகெங்கும் சிதறியுள்ள தமிழீழ மக்கள் அனைவரும் இன்று சிஙகள பௌத்த தேசியவாதத்தின் கொடியகரங்களுக்குள் சிக்கியுள்ள முஸ்லிம் மக்களின் போராட்டம் வெற்றிபெற தங்களது ஆதரவினை பெருமனதுடன் தெரிவித்துக் கொள்கின்ற அதேவேளையில் தமிழ் மொழியினை தாய்மொழியாக் கொண்ட சகோதரர்கள் என்ற வகையில் தமிழர் தாயகத்தில் தமது பாதுகாப்பான எதிர்காலத்தினை கட்டியெழுப்ப தமிழ் மக்களுடனும் அவர்களது போராட்டத்துடனும் இணையுமாறு வரவேற்கப்படுகின்றனர் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரைகாலமும் போராடம் எனும் பெயாரால் தமிழினத்தை எதிரி மட்டும்அல்ல அம்மவர்களும் பல அவதூறகளைப்பரப்பியே வந்தார்கள் அதனால் போராம் எந்தளவிறஇக காலத்தின் தேவையோ ஆதே அளவிற்குசமூகம் அதனை வலுப்படுதப்பட வேண்டும் எதிரியைப்போல் கல் எறிவதனைவிட யதார்தங்களை புரிந்து ஒரு அரசியல் கட்டமைப்பைவளர்கப்பட வேண்டும் என்றால் அது நா.க.த.அரசாங்கமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பம் தான் ஆனால் அது உருத்திர குமாரை பரதமாரக வளர்பதற்கு என்பதனை அவரோ அவருக்கு எதிரானவர்களோ நினைத்தால் அது வே எமது விடுதலைக்கான தடங்கலாகவே முடியும்
காரணம் ஒரு தலமைத்துவத்திற்குள் 30வருடப் போராடம் நகர்தப்பட்டு இன்றுவரை எமது போராட்டம் தோற்க்கவில்லை என்றால் அதற்கு காரணம் ஈழத்தின் வரலாற்றனை அடையாளமாக பேணப்பட்டு உண்மையான உயிர்தியாகங்களை எமது சமூகம் கடமையாக எற்றமைக்கானது.
அதில் தவறு காண்பதோ அதனை எமது பிழைப்பாக கொள்வதோ அல்ல காலத்தின் தேவைக்காக போராடும் இனம் தவறுகளை மட்டும் பிரித்துப்பார்க்க முடியாது காரணம் எந்தச்சந்தற்பத்தில் எதற்காக யார் செய்தாலும் அதில் தனிமனிதர்களை குறைகாணலாமே தவிர போராட்டத்தை குறைகாண முடியாது. அதனால் சில தனிமனிதர்களது குறைகளைவைத்து நா.க.த.அரசாங்கத்தில் தவறுகளை ஏற்படுத்தாமல் தமிழினத்தினது கடமை என்ன என்பதனை ஒவ்வொரு தமழர்களும் உணர்ந்து நா.க.த.அரசாங்கத்தை வளர்க்க வேண்டியது காலத்தினது தேவை மட்டுமல்ல வரலாற்றினது கடமையும் கூட .
New York based Lawyer Visuvanathan Rudrakumaran known generally as Rudra is the driving force behind the TGTE. Earlier Rudra was the legal adviser to the LTTE international secretariat and participated in the Oslo brokered Govt-LTTE peace talks as a resource person to the LTTE delegation.
• According to DBSJ, TGTE is a “re-branded manifestation of the LTTE overseas structure”.
• Rudrakumaran addresses a gathering with LTTE flag in the background (October 2010).
• An interview with Rudrakumaran (August 2009).
• LTTE flag hoisted at TGTE Philadelphia summit (May 2010).
Read this discussion about TGTE…
http://en.wikipedia.org/wiki/Template_talk:Liberation_Tigers_of_Tamil_Eelam
Expulsion of Muslims from the Northern province by LTTE
Background
With the creation of the Sri Lanka Muslim Congress on the 21st of September 1981, the idea of the Muslim people of Sri Lanka being separate from the Tamils, was being reinforced. Due to this, they felt that if the goal of Tamil Eelam was reached, they would be a “minority, in a minority state”, and the SLMC were strongly opposed to the idea of Tamil Eelam. The situation was further aggravated with the creation of the Muslim Home Guard, by the Sri Lankan Government, leading to violent clashes and incidents taking place between the two communities. Tensions between the Tamils and Muslims were at an all time high, with the UTHR reporting that “It became an unspoken cliché that Muslims were traitors.”
Expulsion
The first expulsion was in Chavakacheri, of 1,500 people. After this, Muslims in Kilinochchi and Mannar were forced many to leave their homeland. The turn of Jaffna came on October 30, 1990; when LTTE trucks drove through the streets ordering Muslim families to assemble at Osmania College. There, they were told to exit the city within two hours. The entire Muslim population was expelled from Jaffna. According to a 1981 census (the last official count), the total Muslim population in Jaffna was 14,844. They could take with them only the clothes they were wearing and no more than 50 rupees in cash. Their houses were subsequently looted by the LTTE. In total, over 14,400 Muslim families, roughly 72,000 people, were forcibly evicted from LTTE-controlled areas of the Northern Province. This includes 38,000 people from Mannar, 20,000 from Jaffna and Kilinochchi, 9,000 from Vavuniya and 5,000 from Mullaitivu.
Most of the Muslims were resettled in Puttalam district, though the Jaffna Muslim refugees can be found in other parts of Sri Lanka as well.
Aftermath
The expulsion still carries bitter memories amongst Sri Lanka’s Muslims. In 2002, the LTTE leader Vellupillai Prabhakaran formally apologized for the expulsion of Muslims from the North. There has been a stream of Muslims travelling to and from Jaffna since the ceasefire. Some families have returned and the re-opened Osmaniya College. 11 Mosques are functioning again. According to a Jaffna Muslim source, there is a floating population of about 2000 Muslims in Jaffna. Around 1500 are Jaffna Muslims, while the rest are Muslim traders from other areas. Muslim shops are functioning and the numbers are thought to have grown…
Watch this…
Kattankudy Mosque Genocide- 1990
http://www.youtube.com/watch?v=ocxm8ucdPbA
பள்ளிவாசலிர்க்குள் தொழுகையில் இருந்தவர்களை கொன்று குவித்து… இன்று புத்த கோவில்களைக் கட்டுகிறார்கள் என்று ஒப்பாரி வைத்து என்ன பயன்…???
இந்தப் புலிகள் இந்துகோவில்களையும் இடித்து உள்ளார்கள்.
ஆதாரம் உள்ளது.
LTTE SUICIDE ATTACK ON MUSLIMS .Umat Islam Dibom OF…
http://www.youtube.com/watch?v=UFVC1HXw2hQ
Jaffna Muslims and LTTE after 21 after 21 yrs…
http://www.youtube.com/watch?v=FFHajppzNFw
முஸ்லிம் சகோதர்களை வாழ்த்த இடங்களில் இருந்து உடுத்த உடைகளுடன் அப்புறப்படுத்தி நாம் என்னத்தை சாதித்தோம்…???
Indian Muslims poorest among religious groups, says NSSO survey… PTI
Muslims’ average per capita spending a day is Rs. 32.66, while it is Rs. 37.50 for Hindus, Rs. 51. 43 for Christians and Rs. 55.30 for Sikhs
Among various religious groups, Muslims have the lowest living standard with the average per capita expenditure of just Rs. 32.66 in a day, says a government survey.
At the other end of the spectrum, the Sikh community enjoys a much better lifestyle as the average per capita spending among them is Rs. 55.30 per day, while the same for Hindus is Rs. 37.50. For Christians it is Rs. 51.43.
“At all-India level, the average monthly per capita expenditure (MPCE) of a Sikh household was Rs. 1,659 while that for a Muslim household was Rs. 980 in 2009-10,” said a study titled “Employment and Unemployment Situation Among Major Religious Groups in India” by the National Sample Survey Organisation (NSSO).
The average household MPCE is a proxy for income and reflects the living standard of a family.
According to the study, the average MPCE for Hindus and Christians were Rs. 1,125 and Rs. 1,543, respectively.
The survey said that average monthly per capita consumption at all-India level was Rs. 901 in villages and Rs. 1,773 in cities. Overall, the average MPCE was Rs. 1,128.
Muslims were at the bottom in rural areas, with an average MPCE of Rs. 833, followed by Hindus at Rs. 888, Christians at Rs. 1,296 and Sikhs Rs. 1,498.
In urban areas, Muslims’ average MPCE was also the lowest at Rs. 1,272 followed by Hindus at Rs. 1,797, Christians Rs. 2,053 and Sikhs at Rs. 2,180.
இரை மீட்டெழுதி என்னத்தை கண்டீர்?
அறிவாற்றலை அவ்வப்பொழுது ஆராய்ந்து செயல்படுத்தணும்.
உலகம் உருண்டை என்று சொன்ற கலிலியோவையே சிறைப்பிடித்த காலம் உண்டு.
மண்டைக்கனத்தால் வரலாற்றை மறந்து பதிவெழுதலை தவிர்த்தல் புத்திசாலிக்கு அழகு.
1915 ஆண்டு,வியாபார,கடலோடுதல் தேவைகளுக்காய்,
வெள்ளைக்காரர்களால் கொண்டு வரப்பட்ட துருக்கிய,அரபிய,ஈரானிய,ஆப்கானிஸ்தான் மற்றும் தமிழகத்து இஸ்லாமியர்களின் ஊடுருவலால்,சிங்கள மக்கள் திரண்டெழுந்தனர்.
அதே நேரத்தில் இலங்கைத் தேசியவாதியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட இராமநாதனும்,அன்னியர்களுக்கெதிரான போராட்டத்தில் தலைமை வகித்தார்.
ஆனால் இன்றைய எண்ணை வளமும்,சிங்கள பௌத்த பேரினவாதமும் தன் கையாட்களை வைத்து,1915 வரலாற்றை தமிழ்-இஸ்லாமிய முரண்பாடாக கட்டுடைப்பு செய்கிறது.
மேலும் ‘நாடு கடந்த அரசின்’ கட்டமைப்பானது,’புலிகளை’ நிர்மூலமமாக்க,சிங்கள பௌத்த பேரினவாத அரசினால் ‘கே.பி.’யின் தலைமையில்,’பேராசிரியர்’ உ.சேரன் மூலமாக உருவாக்கப்ப்பட்டு,2009,மாசியில் மலேசியாவில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
சிங்களம் மட்டும் சட்டம் உருவாக்கிய ‘மகாஜெனா’க் கல்லூரியின் சிறப்புப் பிள்ளைகள் தான் சேரனும்,கேபியும்.
தமிழினத்தை நிரந்தர அடிமைகளாக வைத்திருக்க விரும்பும் நா.க.அ.வின் அறிக்கையை வைத்து,தமிழினத்தின் மேல் பாறாங்கல் போட்டு,’அறபு அழுகை’ வடிக்கும் செய்தி,கருத்துகள் பற்றி சொல்ல என்ன இருக்கிறது? இன்னொரு’ PLOT’ எனலாமா?