இலங்கையில் 9 வீதமாக உள்ள முஸ்லிம்களால் பௌத்த மதத்துக்கும், கலாச்சாரத்துக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பௌத்த அமைப்பான பொதுபலசேனா அறிவித்துள்ளது.தற்போது அமலில் உள்ள ஹலால் சான்றிதழ் வழங்கும் முறைமை நகைப்புக்குரியது என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
இலங்கையில் முஸ்லிம்களுக்கும் கூட ஹலால் முறைமையை அனுமதிக்கக் கூடாது என்றும் ஹலால் சான்றிதழ் வழங்கும் முறைமையை நாட்டில் இருந்து முழுமையாக அகற்ற வேண்டும் என்றும் சிங்கள பௌத்த பாசிச அமைப்பான பொதுபலசேனா அறிவித்துள்ளது.
ராஜபக்ச குடும்பத்தின் நேரடி ஆதரவுடன் இயங்கும் போதுபல சேனா என்ற பௌத்த அடிப்படைவாத அமைப்பின் ஊடாக முஸ்லீம்கள் மீது இன வன்முறையைக் கட்டவிழ்த்துவிட ராஜபக்ச அரசு திட்டமிடுகிறது.
முஸ்லீம்கள் மீதான அவமானகரமான இத்தாக்குதல்களுக்கு இனவாதத்திற்கு எதிராகப் போராடுவதாகப் படம்காட்டும் முன்னிலை சோசலிசக் கட்சி போன்ற அமைப்புக்கள் இதுவரை ஒரு கண்டன அறிக்கை கூட வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.