முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் போது லட்சம் லட்சமாகக் கொலைசெய்யப்பட்ட அப்பாவிப் பொதுமக்களுக்கும் போராளிகளுக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் வடமாகாண சபைக் கட்டடத்தின் முன்பாக தீபம் ஏற்றப்பட்டது, இதனை இலங்கைப் போலிசார் உடனடியாகவே அணைத்து நிர்மூலமாக்கினர். மரணித்துப்போன மனிதர்களுக்கு தீபம் ஏற்றுவதைக் கூடத் தடைசெய்யும் கோரமான இலங்கை அரச பாசிஸ்டுக்களின் அடியாள் படைகளான போலிஸ் மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஏற்றிய தீபத்தைக் காலால் மிதித்து அணைத்தனர்.
இதற்கு முன்பதாகவே மாகாண சபைக் கட்டடம் பூட்டப்பட்டு அங்கு பெரும் தொகையான போலிசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
தானக்கு அரசியல் தெரியாது என்றும் சட்டரீதியாகவே தமிழ்ப் பேசும் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கப்போவதாகவும் கூறித் தேர்தலில் வெற்றிபெற்ற வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்களின் உரிமையை அல்ல தீபம் ஏற்றும் உரிமையைக் கூட வென்றெடுக்க முடியாத வெற்றிப் பேப்பராகிவிட்டார்.
இலங்கையில் அடிப்படை உரிமை மறுக்கப்படும் தமிழப் பேசும் சிறுபான்மை இனங்களைப் பாசிஸ்டுக்களோடு அடையாளப்படுத்தும் இலங்கைக்கு வெளியில் தலைமைகளைத் தக்கவைத்துக்கொள்வோர் அழிவை மேலும் தீவிரப்படுத்துகின்றனர்.