முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டக் கோரி கேரளாவில் நாளை மாநிலம் தழுவிய பந்த் நடத்தபோவதாக முல்லை பெரியாறு போராட்ட குழு அறிவித்துள்ளது.முல்லை பெரியாறு பிரச்சனைக்கு ஒரு மாதத்தில் தீர்வு காணப்படும் என்று கூறி மத்திய அரசுஏமாற்றி விட்டதால் இந்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதாக போராட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்.
நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பந்த் நடத்தப்படுகிறது. இதனால் கேரளாவில் நாளை அரசு பஸ், தனியார் பஸ், டாக்சி, ஆட்டோ உள்பட வாகனங்கள் எதுவும் ஓடாது. கடைகளும் அடைக்கப்பட்டிருக்கும்.
இதற்கிடையே முல்லை பெரியாறு போராட்டகுழு நடத்தும் இந்த போராட்டத்திற்கு கேரளாவை சேர்ந்த எந்த அரசியல் கட்சிகளும் இதுவரை ஆதரவு தெரிவிக்காமல் இருந்து வந்தது. கேஎம் மாணி தலைமையிலான கேரளா காங் (எம்) நாளைய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.