ஐவர் குழு ஆய்வில், அணை பலமாக உள்ளது என்றும், நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏதும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டிந்தது. நிலநடுக்கத்தால் அபாயம் ஏதும் இல்லை என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. தமிழகத்தின் வாதத்தை முற்றிலுமாக நியாயப்படுத்தும்வகையில் அமைந்திருப்பதாகக் கூறி நிராகரித்துள்ளது.
ஐவர் குழுவின் ஆய்வறிக்கையை கேரள நிராகரித்தது மட்டுமின்றி புதிய அணை கட்ட வேண்டுமென்று கேரள வழக்கறிஞர்களும், அணை பலமாக உள்ளதால் புதிய அணைக்கு அவசியம் இல்லை என்று தமிழக வழக்கறிஞர்களும் வாதங்களை வைத்தனர்.
எது எவ்வாறாயினும் கேரள மக்கள் மத்தியில் ஐவர் குழு அறிக்கை மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. உண்மையை உணர்த்தும் வகையில் சில முற்போக்கு அமைப்புக்கள் செயற்பட ஆரம்பித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன.