ஒரு புறத்தில் ராஜபக்ச சமூகவிரோத ஆட்சியாளர்கள் மர்ம மனிதர்கள் என்ற போர்வையில் மக்களை தொடர்ச்சியான அச்சத்திற்கு உள்ளாக்கி வருகின்றனர். மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களைத் தலைமை தாங்க வாக்குப் பொறுக்கும் கட்சிகள் தயாராகவில்லை. போராட்டங்களை திசைதிருப்பிப் பேச்சுவார்த்தை, சமாதானத் தீர்வு என்று மழுங்கடிக்க முனைகின்றனர். இதன் மறு புறத்தில் பேரினவாத அரசு திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டு வருகின்றது. முல்லைத் தீவில் புதிய திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களையும் அதற்கான நிர்வாக அலகையும் இல்ங்கை அரசு தயார் செய்து வருகின்றது. எவ்வித எதிர்ப்புமின்றி இக் குடியேற்றங்கள் நிறைவேற்றப்படும் நிலையிலேயே காணப்படுகின்றது.
குடியேற்றப்படும் சிங்கள மக்களுக்கான அரச அதிபர் பிரிவு உருவாக்கப்பட்டு வருகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அமையப்போகும் உதவி அரசாங்க அதிபர் பிரிவிற்கான எல்லையை நிர்ணயம் செய்யும் பணியினை அனுராதபுரம் மாவட்ட அரசாங்க அதிபர் பணிமனை மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. புதிதாக அமையவிருக்கும் உதவி அரசாங்க அதிபர் பணிமனைக்கு வெளிஓயா பிரதேசம் மட்டும் போதாது. எனவே, மேற்கொண்டு சில தமிழ் கிராமங்களும் முல்லைத்தீவின் கரைதுறைப்பற்று உதவி அரசாங்க அதிபர் பிரிவிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு புதிய அலுவலகத்துடன் சேர்க்கப்படவிருப்பதாகத் தெரியவருகிறது. குறிப்பாக கொக்குளாய் கிழக்கு மேற்கு, கருநாட்டுக்கேணி, கொக்குத்தொடுவாய் கிழக்கு, மேற்கு, மத்தி, வடக்கு, நித்தியாகுளம், குமுளமுனை, முந்திரிகைகுளம், தண்ணீர்முறிப்புகுளம், கடற்கரை எல்லைப் பிரதேசம், தென்னைமரமாவடி, டொலர் பண்ணை, கென்பண்ணை போன்ற பல பூர்வீக கிராமங்கள் புதிதாக அமையவுள்ள சிங்கள பிரதேச செயலகத்துடன் இணைக்கப்படவுள்ளது. இது அப்பட்டமான தமிழரின் நில அபகரிப்பு நடவடிக்கையாகும்.
மக்களின் அவல நிலை குறித்தும், சிங்களக் குடியேற்றங்கள் இனச்சுத்திகரிப்பை அடிப்படையாக கொண்டது என்பது குறித்தும் இலங்கை தழுவிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இலங்கையில் சூறையாடப்படும் மக்களின் அவலங்களை வெளிக்கொண்டுவரும் போர்க்குணம் மிக்க புதிய அரசியல் தலைமை அவசியமானது.
This is dangerous..we must stop this ..We must fight against this colonization program.
திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தினால் கிழக்கு மகாணத்தில் தமிழர்கள் சிறுபான்மை இனமாக மாறிவிட்டார்கள். திருகோணமலை மாவட்டத்தில் 1881 இல் தமிழ் மக்களது விழுக்காடு 64.8 . இந்த விழுக்காடு 1981 இல் அதாவது 100 ஆண்டுகள் கழித்து 36.4 விழுக்காடாகக் குறைந்துவிட்டது! அதே காலகட்டத்தில் சிங்களவர்களது விழுக்காடு 4.2 இல் இருந்து 33.6 விழுக்காடாக அதிகரித்து விட்டது. கிழக்கு மாகாணத்தில் இதே கால கட்டத்தில் 1881 இல் 61.35 விழுக்காடாக இருந்த தமிழர்கள் 1981 இல் 41.9 ஆகக் குறைந்துவிட்டது. சிங்களவர் 4.5 விழுக்காட்டில் இருந்து 24.9 விழுக்காடாக உயர்ந்து விட்டனர். 1981 க்குப் பிறகு நிலைம இன்னும் மோசம் அடைந்திருக்கும். 2011 இல் எடுக்கப்பட்ட குடிமக்கள் கணக்கெடுப்பு வெளியிடப் படும்போது உண்மை நிலைமை தெரியவரும்.