வன்னிப்படுகொலைகள் உரமாய் விழுந்த முல்லைத் தீவு மண்ணில் ஆக்கிரமிப்பு இராணுவம் மக்களின் நிலங்களைப் பறிக்கப்ப்போவதாக மிரட்டியிருக்கிறது.
முல்லைத்தீவு நகர அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடல் ஒன்று இருப்பதாகவும் அதில் கலந்து கொள்ளவருமாறும் முல்லைத்தீவு மக்கள் பிரதிநிதிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருக்கின்றது. கரைதுறைப் பற்று பிரதேச செயலரின் அழைப்பினை ஏற்று மக்கள் பிரதிநிதிகள் நேற்று (03-10-2012) பிற்பகல் இரண்டு மணிக்கு பிரதேச செயலக வளாகத்தில் ஒன்றுகூடியிருந்தனர். அதன் போது இருபத்தைந்துக்கும் மேற்பட்ட இராணுவத்தினரும் அதிகாரிகளும் அந்த நிகழ்வில் பங்கேற்பதற்காகச் சென்றிருக்கின்றனர். நிகழ்வு தொடங்கியதும் நகர அபிவிருத்தி தொடர்பிலான திட்ட வரைபு ஒன்றினை மொரட்டுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் காட்டி அது தொடர்பில் விளகத்தையும் வழங்கினர். அவர்களின் திட்டத்தின் அடிப்படையில் முல்லைத்தீவு நகரை உள்ளடக்கி கடற்கரையோரமாக 350 மீற்றர் தூரத்தை பெற்றுக்கொண்டு அந்தப் பகுதியை சுற்றுலா மையமாக்குதல், அங்கு விடுதிகள், பொழுதுபோக்கு அம்சங்கள், மதுபானச் சாலைகள் உட்பட்டவற்றை அமைப்பது எனத் தெரிவித்து உரையாற்றியிருக்கின்றனர்.
இதன் போது இடைமறித்த முல்லைத்தீவு காணி உத்தியோகத்தர் சோ.சேந்தன் குறித்த விடயங்கள் தொடர்பில் உரையாற்றுகின்றீர்கள். அவ்வாறாயின் அந்தப் பகுதிகளில் குடியமர்ந்திருக்கின்ற 2000ஆயிரத்துக்கும் அதிகமான மக்களின் நிலை என்ன? அவர்கள் எங்கே செல்வது என்று கேள்வி எழுப்பியிருக்கின்றார். உடனடியாக அங்கு கருத்துத் தெரிவித்த இராணுவப் பிரிகேடியர் சம்பவம் தொடர்பில் கேள்வி எழுப்ப முடியாது என்றும், இது தொடர்பில் பதிலளிக்க முடியாது என்றும் தெரிவித்ததுடன், அங்கு கூடியிருக்கின்ற மக்களை நான்கு குழுக்களாகப் பிரிக்க முற்பட்டிருக்கின்றார். 1. அனர்த்த முகாமைத்துவம். 2. மீன்பிடி மற்றும் விவசாய நடவடிக்கைகள், 3. சுற்றுலாத்துறை அபிவிருத்திச் செயற்றிட்டம், 4. நகர முன்னேற்றம் ஆகிய விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக நான்கு குழுக்களாகப் பிரிந்து செயற்படுமாறு தெரிவித்திருக்கின்றார். இந்த நடவடிக்கை மக்களைப் பிரிப்பதன் ஊடாக எதிர்ப்புக் குறைவதற்கான சந்தர்ப்பம் ஏற்படும் எனவே அதன் மூலம் நினைத்ததைச் சாதிக்க முடியும் என்று இராணுவத் தரப்பு எண்ணியிருக்கின்றது. இருப்பினும் அதற்கு மக்கள் பிரதிநிதிகள் உடன்பட மறுத்திருக்கின்றனர். நாங்கள் மக்கள் பிரதிநிதிகள் எனவே எமது பகுதிகளில் நடைபெறுகின்ற அனைத்து விடயங்கள் தொடர்பிலும் நாங்கள் அனைவரும் அறிந்திருக்க வேண்டும் எனவே நாங்கள் பிரிந்து செல்ல முடியாது என்று அவர்கள் கூறியிருக்கின்றனர்.
மீண்டும் கரையோர நில சுவீகரிப்பு விவகாரம் பேசப்பட்டிருக்கின்றது. அந்தப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு நட்டஈடு வழங்கமுடியும் அதற்கு ஒத்துழைக்குமாறு பிரதேச செயலரும் இராணுவத்தினரும் வலியுறுத்தியிருக்கின்றனர். முல்லைத்தீவு மக்களைப் பொறுத்த மட்டில் அவர்களது வாழ்க்கை என்பது கடற்கரையை அண்டியதாகவே அமைந்துவருகின்றது. அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டால் அவர்களது வாழ்க்கையில் பாரிய பாதிப்பு ஏற்படும் எனவே அது சாத்தியமற்ற விடயம் என முல்லைத்தீவு காணி உத்தியோகத்தர் சேந்தன் மீண்டும் வலியுறுத்தித் தெரிவித்திருக்கின்றார். உடனடியாக ஆத்திரமடைந்த பிரிகேடியர் அவரைத் தாக்குவதற்காக ஓடிச் சென்றிருக்கின்றார். அங்கு நின்றிருந்தவர்களால் அவர் மீதான தாக்குதல் முயற்சி தடுக்கப்பட்டிருக்கின்றது. அதன் பின்னர் உரையாற்றிய கரைதுறைபற்றுப் பிரதேச செயலர், அங்கு கூடியிருந்தவர்களை முரண்டுபிடிக்கவேண்டாம் என்றும் இந்தத் திட்டத்திற்கு உடன்படுமாறும் கேட்டதுடன், கரையோரத்தில் 350 மீற்றர் தூரத்தினை வழங்க முடியாதுவிட்டால் 125 மீற்றர் அளவு தூரத்தினை கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்திருக்கின்றார். இதனை அடுத்து அங்கு கூடியிருந்த மக்கள் பிரதிநிதிகள் எந்தச்சந்தர்ப்பத்திலும் இதற்கு உடன்பட முடியாது என்று ஆணித்தரமாகக் கூறியிருக்கின்றனர். இதனைவிடவும் முல்லைத்தீவு அபிவிருத்தித் திட்டத்தினை மூன்று இடங்களில் முன்னெடுப்பதற்கான திட்டம் இருப்பதாகவும் அங்கு தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
முல்லைத்தீவு நகர அபிவிருத்தித் திட்டம், வற்றாப்பளை கலாச்சார அபிவிருத்தி திட்டம் மற்றும் நாயாற்று அபிவிருத்தித் திட்டம் என்ற மூன்று திட்டங்களும் நடைமுறைப்படுத்த ஆலோசித்திருப்பதாகவும் அரச அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இதன் போது வற்றாப்பளை கலாசார அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில் அங்கு சுற்றுலா மையம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சி முன்னெடுக்கப்பட்டால் இந்துக்களின் புனிதத் தலங்களில் ஒன்றாக விளங்குகின்ற குறித்த ஆலய வளாகத்தில் மதுபான சாலைகள், சமூக விரோதச் செயற்பாடுகள் அதிகளவில் இடம்பெற்று கலாச்சாரம் சீரழிக்கப்படுமே தவிர அங்கு கலாசாரம் அபிவிருத்திபெறாது என்பது நோக்கத்தக்கவிடயமாகும்.
இது இவ்வாறு இருக்க, முல்லைத்தீவு அபிவிருத்திச் சங்கத் தலைவர்களில் ஒருவரும் போருக்கு முன்னர் முல்லைத்தீவு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவராக சேவையாற்றியவருமான ரவிகரன் பிரதேச செயலரிடம் இராணுவத்தினரின் முன்னிலையில் பகிரங்கமாக கோரிக்கை விடுத்திருக்கின்றார். நாங்கள் குடும்பத்தினர், எங்களுக்கும் மனைவி, பிள்ளைகள் உள்ளனர். தீர்மானங்களை இறுதி செய்தபின்னர் சம்பிரதாயபூர்வமாக எங்களை அழைத்து உங்கள் கருத்துக்களைத் திணிக்கவேண்டாம். நீங்கள் முடிவுகளை எடுத்தால் அவற்றினை நடைமுறைப்படுத்துங்கள். எங்கள் முன்னிலையிலேயே எங்களுக்காக குரல் கொடுக்கின்ற அரச உத்தியோகத்தருக்கே அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்ற நிலை காணப்படுகின்றது. அவருக்கே அந்த நிலை ஏற்படும் போது எங்களைப் போன்ற அப்பாவி மக்கள் பிரதிநிதிகளுக்கு எவ்வாறான நிலை ஏற்படும் என்பதை நீங்கள் விளங்கிக் கொள்ளவேண்டும் என்று காரசாரமாகத் தெரிவித்திருக்கின்றார். இந்தச் சம்பவம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அதே இராணுவ அதிகாரியும் இராணுவப் புலனாய்வாளர்கள் மற்றும் இராணுவத்தினரும் அந்தக் கலந்துரையாடலில் கூடியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.









இது என்ன எதிர்பார்க்காத செய்தியா, ராஜபக்சவை பதவிக்கு கொண்டு வந்தவர்கள் 2005 ம் ஆண்டு இதை எதிர்பார்காத முட்டாள்கள், அந்த முட்டாள்கள் செய்த வினையே இது
அட இன்னும் வடஹிழக்கு மண் பறி போகவில்லையா.நான்நினைச்சேன் ,2009 மே 18 கு பிறகு எப்பவோ நம்ம மண் நம்மிடம் இல்லை என்று . இனி என்ன எல்லாரும் ஓடோடிப்போய் நம்ம டக்கிளஸ் அன் சுகு.சிறிதரனிடம் முறையிடுங்கோ…அவெர்கள் , உங்களைக் காப்பாற்றினால்தான்.நம்ம தமிழ் சாதிக்கு வயிறுதானே முக்கியம். மானம் என்ன பெரிய மானம்.நம்மளைக் காக்க வேண்டியவர்ளைத்தான் நாமே அழித்து விட்டோமே.
நீர் தான் உலகமகா அறிவாளி ஆச்சே. தீர்க்க சிந்தனையும் , தூரநோக்கும் உள்ளநீர் தமிழ்மக்களுக்கு” முன்னமே” தலையேற்று தமிழ் ஈழம் பெற்றுத் தந்திருக்கலாமே. இப்பவும் ஒன்றும் கெடவில்லை. வாரும் வந்து தலைமைப் பொறுப்பை ஏற்று முட்டாள் தமிழ் மக்களை வழிநடத்தும்.