ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டது. இந்த வழக்கில் 3 பேரின் சீராய்வு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ப.சதாசிவம் தலைமையிலான அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது. மேலும் மூவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.
ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் தங்களது கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பரிசீலிப்பதில் மிகவும் காலதாமதம் ஏற்பட்டது. எனவே, ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை பிப்ரவரி 4-ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, தீர்ப்பை ஒத்திவைத்தது.
கடந்த ஜனவரி 21-ம் தேதி மற்றொரு வழக்கில் ‘கருணை மனுவை பரிசீலிப்பதில் தேவையற்ற தாமதம் செய்ததால், பாதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கலாம்’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை மேற்கோள்காட்டியே முருகன் உள்ளிட்ட மூவரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.
ஆனால், மனுதாரர்களின் கோரிக்கையை கடுமையாக எதிர்த்த மத்திய அரசு, “இந்த விவகாரத்தில் முடிவெடுக்க மத்திய அரசு அளவுக்கு அதிகமான தாமதம் எதையும் செய்யவில்லை. இந்த வழக்கில் தண்டனை பெற்றவர்கள் இதுவரை தங்கள் செயலுக்காக சிறிதும் வருந்தவில்லை என்பதை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இன்று மூவரின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இவர்கள் மூவரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
This is indeed consoling. We can look forward to reconciliation n the region.
Dr, you mean reconciliation in the region of TamilNadu or India…?
Alex Ravi you must talk to the Ananda Raman the Tamilian Brahmin that was born and bred in Jamshedpur, West Bengal, India. He came to study in Indiana, USA.
இனி தமிழக விபச்சார அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும்… வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு (உள்ளிற்குள் கோவணம் கட்டியிருக்கிறார்களோ… கோடு போட்ட காற்சட்டை போட்டிருக்கிறார்களோ… அது வேறை) தம்மால் தான் இவ் மூவரினதும் தண்டனை குறைக்கப்பட்டதாக உளறத் தொடங்குவர்…
காங்கிரசில் இருக்கும் சிதம்பரம் உட்பட்ட அரசியல் வாதிகளும்… உளறுவர்…
மோடியும் தன் பங்கிற்கு உளறினாலும் தப்பில்லை…
ஆனால், கிளைமாக்ஸ் இனித்தான் உள்ளது…
இவர்கள் மூவரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ள நிலையில்…
ஜெயலலிதா இவர்களை விடுதலை செய்தால்… தான் என்ன புலுடா விட்டு தனது அரசியல் விபச்சாரத்தை தொடருவது என்று கருணாநிதி ராசாத்தி அம்மாள், தயாளு அம்மாள் வீடுகளில் இருந்தோ… மடியில் இருந்தோ… மாறி மாறி யோசித்துக் கொண்டு இருப்பார்…
சந்தேகநபர்கள் 25 ஆண்டு காலம் சிறையில் இருந்த பின் விடுதலையாவது உங்களைப்போன்ற நியாயவாதிகளின் வயித்தெரிச்சலை கிளப்பி விட்டுள்ளது .
அதனால்தான் காய்ச்சல் வந்தவர் போல் நீங்களும் தாறுமாறா உளற ஆரம்பித்து விட்டீர்கள் ..
Deal maker சுப்பிரமணியம் சுவாமியும்… இன்னும் வெளியில்… தன்னைக் காப்பாற்றிக் கொண்டு அறிக்கை விட்டுக் கொண்டிருப்பார்…
நாபா கொலைக்கு உடந்தையாக இருந்த அரசியல்வாதிகள் பற்றி கதையில்லை…
நாபாவா ? யார் அவர் ? கிரிக்கெட் பிளேயரா ??
ஏன் கிரிக்கட் வெளையாடுறவங்கள மட்டும்தான் தெரியுமோ ?
ராஜீவ் கொலை கைதிகள் 7 பேர் விடுதலை சர்ச்சை தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது:–
ராஜீவ்காந்தியை படுகொலை செய்ய நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல், இந்தியாவின் ஆன்மா மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும். எனவே தீவிரவாதத்துக்கு எதிரான நமது போராட்டத்தில் எந்த ஒரு அரசு அல்லது கட்சியும் மென்மையான போக்கை கடைபிடிக்கக் கூடாது.
ராஜீவ் கொலை கைதிகள் விடுதலை செய்யப்படக் கூடாது. ஏனெனில் அந்த செயல் நீதியின் அனைத்து கொள்கைகளுக்கும் எதிரானது.
ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரையும் தமிழக அரசு விடுதலை செய்ய முடிவு செய்திருப்பது சட்டப்படி ஏற்கத்தக்கதல்ல. இதில் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடரப்படக்கூடாது.
இதுபற்றி மத்திய அரசு, தமிழக அரசுடன் தொடர்பு கொண்டு அறிவுறுத்தியுள்ளது. தமிழக அரசின் விடுதலை நடவடிக்கை எந்த விதத்திலும் தொடரக் கூடாது.
இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார்.
பிரதான எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாவும் தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான அருண்ஜேட்லி கூறியதாவது,
ராஜீவ்காந்தி கொலை கைதிகள் மீது பல்வேறு அமைப்புகளும் கருணையுடன் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை பா.ஜ.க. ஏற்கவில்லை. அந்த முடிவுகள் ஏமாற்றம் தருகிறது. உண்மையில் தமிழக அரசின் முடிவு எனக்கு வேதனையைத் தருகிறது. அந்த முடிவை மாற்ற வேண்டும். இவ்வாறு பா.ஜ.க. தலைவர் அருண்ஜேட்லி கூறினார்.
அருண்ஜேட்லி கூறியுள்ள கருத்துக்கு மற்ற பா.ஜ.க. மூத்த தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். கருணை மனு மீது முடிவு எடுக்க தாமதம் ஆனதை காரணம் காட்டி, மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளதையும் பா.ஜ.க. தலைவர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.
ஆனால் தேசிய தலைவர்களிடம் இருந்து மாறுபட்ட நிலை எடுத்துள்ள தமிழக பா.ஜ.க. தலைவர்கள் முதல்– அமைச்சர் ஜெயலலிதா அறிவிப்புக்கு நன்றி தெரிவித்துள்ளனர். பொன்.ராதா கிருஷ்ணன் தமிழக அரசை பாராட்டி அறிக்கை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மூவரின் விடுதலை தொடர்பாக இந்தியாவின் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் முடிவு எடுக்க முடியாது.
உச்ச நீதி மன்றம்தான் முடிவெடுக்க முடியும் . உச நீதி மன்றமும் மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து விட்டு விடுதலையை தமிழக அரசுதான் எடுக்க வேண்டுமென பொறுப்பை தமிழக அரசிடம் தந்த்திருக்கிறது .
இதில் காங்கிரசும் , பாரதீய ஜனதாவும் எங்கிருந்து வருகிறது ?
இந்த இரு கட்சிகளுமா தமிழ் நாட்டை ஆளுகின்றன ?
தேர்தலில் நின்றால் டெபாஸிட் கூட கிடைக்காதே ?
இவர்கள் என்ன சொல்கிறார்கள் என நாம் ஏன் கவலைப்பட வேண்டும் ?
பாரதீய ஜனதா தமிழக அரசின் முடிவை எதிர்த்தாலும் , தமிழக தலைவர் பொன் ராதா கிருஷ்னன் தமிழக அரசின் முடிவை பாராட்டியிர்ப்பதாக குறிப்பிருக்கிறீர்கள் .
பாவம், அவர் பிரச்சனை அவருக்கு . இந்த பிரச்சனைக்கு முன்பு பாரதீய ஜனதாவுக்கு தமிழகத்தில் டெபாசிட்டையும் தாண்டி ஒரளவு கவுரவமான வாக்குகளை பெறும் நிலை இருந்தது.
தமிழக அரசின் முடிவை அவர் ஆதரிக்கா விட்டால் , தேர்தலில் டெபாசிட்டும் கிடைக்காதென்ற பயம் அவருக்கு.
அதனால்தான் நீங்கள் ஆசைப்பட்ட படி எதிர்த்து அவரால் குரல் கொடுக்க முடியவில்லை ..
ராஜீவ் கொலை வழக்கில், பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய இடைக்காலத் தடை விதித்து இந்திய உச்ச நீதிமன்றம் இன்று (20) உத்தரவிட்டது.
மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி, தமிழக அரசின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து இரண்டு மறு ஆய்வு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.மறுஆய்வு மனுவை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
உச்ச நீதிமன்றம் முடிவு எடுக்கும் வரை முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகிய மூவரையும் விடுவிக்கத் தடை விதித்துள்ள உச்ச நீதிமன்றம், இவர்களை விடுவிப்பது தொடர்பாக 2 வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இதேபோல், குற்றவாளிகள் 7 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
தூக்குத் தண்டனையை குறைத்தல் என்ற தீர்ப்பின் மீதான மறுசீராய்வு மனு நிலுவையில் உள்ள நிலையில், சிறையில் இருந்து குற்றவாளிகள் விடுவிக்கப்படக் கூடாது என்று மத்திய அரசு தனது மனுவில் கூறியுள்ளது.
மத்திய அரசின் இந்த மனுவை அவசர வழக்காக ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், தமிழக அரசின் நடவக்கைகளுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் 7 பேரை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவில், நடைமுறைகள் சரிவர பின்பற்றப்படவில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும, இந்த வழக்கை எதிர்வரும் மார்ச் 6ஆம் திகதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இதனால், ராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுதலையாவதில் மேலும் சிக்கல் எழுந்துள்ளது.
## ராஜீவ் கொலையாளிகள் விடுதலையாவதில் மேலும் சிக்கல் எழுந்துள்ளது ###
இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா ??
இவர்கள் தற்போது மரண தண்டனையில் இருந்துதான் குறைக்கப்பட்டுள்ளார்கள்… இன்னும் விடுதலை செய்யப்படவில்லை…
இன்னும் இந்திய அரசியல்… தமிழ்நாட்டு அரசியல்… தெரியாமல்…ஆரவாரப்படுபவர்கள்… இதை 2008 ம் ஆண்டு ஜெயலிதா விட்ட அறிக்கையை வாசியுங்கள்…
https://www.facebook.com/uthra.kumar.391?fref=ts&ref=br_tf#!/photo.php?fbid=1407979389455887&set=a.1375085476078612.1073741828.100007315171408&type=1&theater
உலக அரசியல் தெரியாமல் தான் இன்று நாம் இந்த நிலைக்கு வந்துள்ளோம்… தொடர்ந்து… அமிழ்ந்து கொண்டு இருக்கிறோம்…
என் கருத்து… உண்ணாவிரத புகழ்… இரு மனைவி… அரசியல் விபச்சாரியின்… அடியை ஜெயலைலிதாவும் பின் பற்றுகிறார்…
இவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் அம்மையாருக்கு வெற்றி… விடுதலை செய்யப்படாவிட்டாலும் அம்மையாருக்கு வெற்றி…
இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா…
இவர்கள் விடுதலைக்கு நான் எதிரானவன் என்று… முல்லிவைக்காலுக்கு கப்பல் போன மாதிரி விதண்டாவாதங்கள் எழுதாதீர்கள்…நிஜத்தை புரிய… ஏற்க்கப்… பழகுங்கள்…
அதானே பார்த்தேன் . எரிந்து கொண்டிருந்த வயித்துக்கு பால் வார்க்கப்பட்டுள்ளது.
தமிழக முதலவர் சரி , முன்னாள் முதல்வர் சரி ராஜிவ் கொலை சந்தேக நபரகளுக்கெதிராக நடவடிக்கை எடுத்தபோது , உங்களைப்போன்றவர்கள் அவர்களை இப்படி திட்டி தீர்த்ததாக தெரியவில்லை . இன்னும்ம் சொல்லப்போனால் தட்டி கொடுத்ததாகத்தான் தெரிகிறது .
இன்று மனம் மாறி தமிழக மக்களின் மன நிலை அறிந்துநவடிக்கை எடுக்கும்போது அவர்களை திட்டி தீர்க்க ஆரம்பித்துள்ளீர்கள் ..