நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்தும் நோக்கில்செயற்படும் குழுக்களுடன் இணைந்து செயற்பட்டால் மீளவும், முன்னாள் போராளிகளை கைது செய்யநேரிடும் இராணுவத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, முன்னாள் போராளிகள் அரசியலில் ஈடுபடுவதற்கு எவ்விததடையும் கிடையாது என புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் சந்தன ராஜகுரு தெரிவித்துள்ளார்.
சட்ட ரீதியான முறையில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் எனஅவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்துவோருடன்இணைந்து செயற்படும் முன்னாள் போராளிகள் கைது செய்யப்படுவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் மீள இணைக்கப்பட்டுள்ள முன்னாள்போராளிகள் குறித்து இராணுவத்தினர் உன்னிப்பாக கண்காணித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினதும் துணைக் குழுக்களதும் அச்சுறுத்தல் காரணமாக பல முன்னைநாள் போராளிகள் தற்கொலை செய்துகெள்கின்றனர்.
பெயரளவில் பலர் விடுதலை செய்யப்பட்டிருந்தாலும் அச்சுறுத்தலுக்கு மத்தியிலேயே அவர்கள் நாளாந்த வாழ வேண்டிய நிலை ஏற்படுகின்றது.