சம உரிமை இயக்கம் என்கின்ற ஒரு முன்னணி அமைப்பினூடாக, இலங்கையில்இனஒடுக்குமுறைக்கும், இனவாதத்திற்கும் எதிராக போராடுவது, இனங்களுக்கிடையில் ஓர் ஐக்கியத்தை உருவாக்குவதுடன், சமத்துவமின்மையை உருவாக்கிய சமூக அமைப்பு முறையை தூக்கி எறிந்து புதியசமூக அமைப்புமுறையை உருவாக்குவதன் மூலம் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் உரிமைகளைஉண்மையில் வென்றெடுப்பது என்னும் செயல் திட்டத்தினை முன்னிலை சோசலிச கட்சி முன்வைத்துள்ளது.
முன்னிலை சோசலிச கட்சியின் கொள்கை அறிக்கை, வேலைத்திட்டம் என்பன ஆங்கிலத்திலோ அல்லதுதமிழிலோ கிடைக்கப் பெற்றிருக்காத இன்றைய சூழலில், தோழர் குமார் குணரத்தினத்தின்ஐரோப்பிய பயணத்தின் போதான அவரது கருத்துக்களில் இருந்தும், சம உரிமைஇயக்கத்தின் வேலைத்திட்டதில் இருந்தும் அவர்களை புரிந்து கொள்ளவும், சாத்தியமான தளங்களில் இணைந்து வேலைசெய்யவும் முயற்சிக்கிறோம்.
சமீபகால இலங்கைவரலாற்றில் பெருந்தேசிய இனத்தை அடித்தளமாக கொண்ட ஓர் அமைப்பில் இருந்து, இனவாதத்திற்கும், இனஒடுக்குமுறைக்கும் எதிராக அழைப்புவிடப்படுவதும், இனங்களுக்கான சமத்துவதிற்காக போராட முன்வருவதும், வரவேற்கப்பட வேண்டிய விடயமாகும். சாத்தியமான முற்போக்கு அரசியல் பொதுத்தளங்களில் இணக்கம் கண்டு வேலைசெய்வது என்பது சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த விளையும் அமைப்புகளினதும், தனிநபர்களினதும் பிரதான கடமை என்பது எமது கருத்து.எமது அரசியல் எதிரியானாலும் சரி, அரசியல் நண்பர்களானாலும் சரி, சமூகத்தில் அவர்களால் முன்வைக்கப்படும் கொள்கைகள்,திட்டங்களுக்கு சரியான மாற்றீடு வைத்தோ அல்லது இணைந்து வேலைசெய்வதற்கான ஒரு திட்டத்தை வைத்தோ அல்லது சரியான வகையில் மறுத்தோ இயங்கும் மரபு பின்பற்றப் படவேண்டும் என்று கருதுகிறோம். இவை எமது மக்களை வளப்படுத்தும் நடவடிக்கைகள்.
இலங்கை இனவாத அரசால் கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட திட்டங்கள் எமது மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு எதிரானவையாகவும்,ஒடுக்குமுறையை அடிப்படையாக கொண்ட ஏமாற்று திட்டங்களுமாகவுமே இருந்துள்ளன. இவற்றை சரியான வகையில் அம்பலப்படுத்தி எமது தரப்பில் இருந்து மாற்று திட்டங்கள் முன்வைக்கப்படவில்லை, பதிலாக அவ்விடயத்தை முற்றாக புறந்தள்ளுவதும் யுத்தத்தின் மூலம் பதில் சொல்ல முனைவது என்பதும் கடந்த கால நடைமுறையாக இருந்து வந்திருக்கிறது. இதே நடைமுறையை பெருந்தேசிய இனத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் ஓர் அரசியல் இயக்கத்திற்கும் நாம் காட்டுவது தவறாகும். இன்றயவரை இதை ஒரு நேசக்கரமாக புரிந்து கொள்வோம்.
சம உரிமை இயக்கம் முன்வைத்துள்ள செயல் திட்டத்திற்கு சரியான மாற்று திட்டங்கள் அல்லது உடன் படும் திட்டங்களை முன் வைப்பதிற்கு பதிலாக முழுமையாக எதிர்ப்பது அல்லது நிபந்தனையின்றி ஆதரிப்பது என்ற போக்குகள் தவிர்க்கப்படவேண்டும்.
இன்று விடயங்களை, நபர்களின் போட்டி, இணையங்களின் போட்டி அரசியலாக்கி மக்களுக்குதேவையான அரசியலின் தலையை உருட்டுவதென்பது, பொறுப்பற்ற,கோமாளித்தனமான அரசியலாகவே எமதுகண்களுக்கு தெரிகிறது. சமூகத்திற்கு தேவையான இவர்களது கருத்துக்கள், சிந்தனைகள் இவர்களது தனிநபர் குறைபாடுகளால் வீணடிக்கப்படுவது கவலைக்குரிய விடயமாகும்.
ஜே வி பி என்னும் ஓர் இனவாத, சந்தர்ப்பவாத அமைப்பு, இடதுசாரி என்னும் போர்வையில் இருந்த படுமோசமான வலதுசாரி அமைப்பு என்ற வகையில்,அவர்களில் இருந்து ஓர் உட்கட்சி போராட்டதினூடாக ஜனநாயகதிற்கான கோரிக்கைகளுடன் வெளிவந்த ஓர் அமைப்பாகவே இன்றைய எங்களது புரிதலில் முன்னிலை சோசலிசக்கட்சியை புரிந்து கொள்ள முடிகிறது.அவர்களது கட்சியின் கொள்கைகளும், எதிர்கால நடைமுறைகளும் அவர்களை யார் என்று முழுமையாக புரிந்து கொள்ள உதவும் என்று கருதுகிறோம்.
பிரித்தானிய ஆட்சிக்காலத்திற்கு பிந்திய வரலாற்றுடன் தொடங்கும் சம உரிமை இயக்கதின் அறிக்கை, பிரித்தானியர் ஆட்சிக்கு முன் இலங்கை தீவில் இரு அரசுகள் இருந்தன என்பதை குறிக்கத்தவறியிருப்பதை நாங்கள் தற்செயலான நிகழ்வாக கருதவில்லை. கடந்த இரு தசாப்தங்களாக இலங்கை தீவில் இரு தேசங்கள் நிறுவனமயப்பட்டு இருந்தன என்பதை அவர்கள் பார்க்கத்தவறுவது என்பது சமூகத்தில் நிலவும் பிரதான முரண்பாடான தேசிய இனப்பிரச்சனையை புரிந்து கொள்வதில் பெரும் சிக்கலை உருவாக்கும் என்று கருதுகிறோம்.”அனைத்து தேசிய பிரஜைகளுக்குமான சம உரிமை” என்னும் அவர்களது சொல்லாடல், இரு தேசங்களின் இருத்தலை மறுப்பதாகவும் இலங்கை என்னும் ஒரு போலி தேசியத்தை முன்னிலைக்கு கொண்டு வருவதாகவே நாம் புரிந்துகொள்கிறோம்.
சுயநிர்ணய உரிமை என்பது இடது சாரிகள் என்ற முகாமிற்குள் நின்றுகொண்டு அராஜகம் பேசுவோரின் கருப்பொருளாகியிருப்பது வேதனைக்குரிய விடயம். சுயநிர்ணய உரிமை என்பது ஓர் தேசிய இனத்தின் அடிப்படை ஜனநாயக உரிமை. பிரிவினைக்கான ஒரு போராட்டம் நடைபெற்றதால் இலங்கையின் வடகிழக்கு தமிழ் மக்கள் இவ்வுரிமையை இழந்து விடமாட்டார்கள்.இதற்கு மார்க்சிய ஆசான்களை அடிக்கடி துணைக்கு அழைக்கவேண்டிய தேவை இருப்பதாக நாங்கள் கருதவில்லை.இனங்களுக்கிடையேயான ஐக்கியம் பற்றி பேசும் போது, பிரிந்து போகும் உரிமையை ஏற்றுக்கொள்ளாத சுயநிர்ணய உரிமை என்பது அடிப்படையில் இன ஒடுக்குமுறையேயாகும். சுயநிர்ணய உரிமை என்பது இலங்கை இனப்பிரச்சனை சூழலுக்குப்பொருந்தாது என்னும் தோழர் குமார் குணரத்தினத்தின் கருத்து, தாய் கட்சியின் சந்தர்ப்பவாத குணாம்சம் இவர்களிடமும் ஒட்டியிருக்கிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இது எமக்குள் இருக்கும் பிரதான விவாதப்பொருளாக அமையும் என்று கருதுகிறோம்.
பொது எதிரிக்கு எதிராக போராடுபவர் மத்தியில் முரண்படுகளை ஏற்றுக்கொண்டு உடன்பாடுகளில் ஊன்றி நின்று ஒரு பொது தளத்தில் கூட்டாக வேலை செய்து முரண்பாடுகளை களைய முனைவதுதான் எதிரியை பலவீனப்படுத்துவதற்கும், எம்மை பலப்படுத்துவதற்கும் உள்ள ஒரே வழி என்பது எங்கள் ஆழமான நம்பிக்கை. முன்னிலை சோசலிச கட்சியுடனான உறவையும் புதிய திசைகளாகிய நாங்கள் இவ்வகையிலேயே கருதுகிறோம்.
இன அழிப்பு, இனவாதம் ஆகியவற்றுக்கெதிரான அவர்களது போராட்டத்துடனும், இன ஒற்றுமையை உருவாக்குவதற்கான அவர்களது முயற்சிகளுடனும் இணைந்து வேலை செய்வது என்பது எமது இன்றளவிலான முடிவாகும்.
முன்னிலை சோசலிச கட்சியுடனான எமது அரசியல் உறவு மற்றும் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக தொடர்ந்தும் அறியத்தருவோம்.
சுய நிர்ணய உரிமை, பிரிந்து போகும் உரிமை, இதுவெல்லாம் கடுதாசியில் தான்
பார்த்திருக்கிறேன். எந்த முற்போக்கு நாடென்றாலும் அதை செயலுக்கு வழிகாட்டியாக
செயல் பட்டதாக கேள்விப்பட்டதில்லை
சம உரிமை அமைப்பு இனவாத அமைப்பில் இருந்து பிரிந்தாலும் தாங்கள் முற்போக்கு
சிந்தனையுடன் செயல்படுவதாக கூறுகிறார்கள் அவர்களுக்கு ஆதரவு கொடுப்பது
தவறில்லை. பிரிந்து போகும் உரிமை
யாப்பில் இருந்தால்தான் ஆதரவு என்பது அர்த்தமில்லாப் பேச்சு.
That is right. It is all on paper. Nothing will happen to the constitution. This Socialism thing never picked up well the Tamils or Muslims in the North and East in a big way. They all believe in the Free Market Economy.
அடப்பாவிகளா!!! என்னா அனியாயம் தலிவா!!!!!! மகிந்தா கூட இப்படித்தானய்யா சொல்றார். உங்களின் அடுத்த இணைவு மகிந்தவோ கே.பீ யோ?
Ramana, it is a single Sri Lankan Citizenship. Dr. T. Jayasingham (tjayasingham@gmail.com) said that America became a better country after the war.
நாவலன் , இதை நீங்கள் எப்போவோ செய்திருக்கவேணும் . உங்களை போன்றவர்களும் , ரஜா போன்றவர்களும் இணைந்து அரசியல் வேலை செய்வது சந்தோசமான விஷயம் .
புதிய திசைகளும் , புதிய ஜனநாயக மக்கள் முன்னணியும் , இணைத்து flsp உடன் செயற்படல் பாரட்டதக்கது . நீங்களும் , ரஜாஹரனும் உங்களுக்கு இடையில் உள்ள
முரண்பாடுகளையும், குழந்தபுள்ளதனமான தாக்குதல்களையும் விட்டு போட்டு , மக்களுக்காக இணையுங்கோ .
இப்படி எழுதுவதற்காக குறைநினைக்க வேண்டாம் . நீங்கள் இருவரும் இன்று மிக முக்கியமான சக்திகள் . பிரயோசனம் இல்லாமல் உங்கள் அறிவும் அனுபவமும் , பாழாய் போகிறது .
இப்போதவது சிந்தித்து செயற்படுங்கள் . வாழ்த்துக்கள் .
நண்பருக்கு,
எனது கருத்தை முன்னமே உங்களுக்கு முன்வைத்திருந்தேன். முன்னிலை சோசலிசக் கட்சியுடன் நடைபெற்ற தொடர்ச்சியான உரையாடலின் முடிவில் அவர்கள் சுயநிர்ணய உரிமை பற்றிப் பேசுவதில்லை மிக உறுதியாக இருந்தார்கள். கோட்பாட்டு முடிவுகள் பெரும் அழிவுகளைக் கூட ஏற்படுத்தியிருக்கின்றன. இவற்றை தனி நபர் பிரச்சனையாகக் குறுக்கிப் பார்க்க வேண்டாம். தவிர, புதிய திசைகள் என்ற அமைப்பில் நான் அங்கம் வகிக்கவில்லை. ஆக, அவர்களின் அறிக்கைகள் நான் சார்ந்தவை அல்ல.
மிக்க நன்றி
சம உரிமை யாருக்காம்? முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் போது இவர்கள் எல்லாம் எங்கே போனார்கள்? முள்ளிவாய்க்காலில் மக்கள் செத்து விழுந்தபோது ஒரு வார்த்தை கூட பேசமுடியாதவர்கள் இப்போ எதற்கு வருகிறார்கள்?
பிரிந்து போகும் உரிமை
யாப்பில் இருந்தால்தான் ஆதரவு என்பது அர்த்தமில்லாப் பேச்சு.
பட்டறிவு போதாது.
1948. Palestine and Kashmir.
ஆங்காங்கே நடைபெறும் சந்திப்புக்கள் , பிரச்சாரங்கள், தெரிவிக்கப்படும் கருத்துக்கள் என்பவற்றைப் பார்த்தால் பயத்தில் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொள்கின்றது. எல்லோரும் தமிழ் மக்களில் மிளகாய் அரைத்து விட்டுப் போய்விட்டார்கள். குமாரர்களும் என்ன செய்யப் போகின்றார்களோ?
No, Sri Lankan Tamils changed the course of the history of the world.
>> சம உரிமை இயக்கம் என்கின்ற ஒரு முன்னணி அமைப்பினூடாக, இலங்கையில்இனஒடுக்குமுறைக்கும், இனவாதத்திற்கும் எதிராக போராடுவது, இனங்களுக்கிடையில் ஓர் ஐக்கியத்தை உருவாக்குவதுடன், சமத்துவமின்மையை உருவாக்கிய சமூக அமைப்பு முறையை தூக்கி எறிந்து புதியசமூக அமைப்புமுறையை உருவாக்குவதன் மூலம் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் உரிமைகளைஉண்மையில் வென்றெடுப்பது என்னும் செயல் திட்டத்தினை முன்னிலை சோசலிச கட்சி முன்வைத்துள்ளது.<<
இதை மீள மீள வாசித்தால் தர்க்க ரீதியாகவும் ,சமூக விஞ்ஞான ரீதியாகவுஞ் சரியானதாகவேயிருக்கும்.ஆனால்,இதைத் தமிழ்பேசும்-இலங்கைச் சிறுபான்மை இனங்களது "பாதிப்புடைய வாழ் சூழலுக்குள் "மூழ்கி ,அநுபவித்துணரும்போது இஃது சுத்தப் பித்தலாட்டம்.!
இலங்கையில் நிலவும் பாசிச அரச ஜந்திரத்தை எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தொடர்ந்து பராமரித்துத் தமது கட்சி ந லனுக்கு-வர்க்கவுணர்வுக்கேற்ப அந்த ஜந்திரமும் அதன் ஆதிக்கமும் பற்பல ஒத்துழைப்போடு காக்கப்படுகிறது.
இன்றைய நிலையில் ,இலங்கையில் ஆட்சியைத் தூக்கியெறிந்துவிட்டுதாம் அதன் இடத்துக்குப் புரட்சிகரவாட்சி வந்து ,இலங்கைச் சிறுபான்மையினங்களுக்காகன சுயநிர்ணய விடுதலை கிடைக்குமென்பது அவர்களைப் பார்த்து, "இப்போது வடலியாக இருக்கும் இந்தப் பனையில் நாளை காத்திருந்து கள்ளுக் குடியுங்கோ" வென்பது போன்றதே!
முதலில் ,இலங்கைப் பாராளுமன்றத்துக்குள் எமது பிரச்சனையில்லையென்பதை நாம் எப்போது புரிவோம்?
பெரும் பான்மைச் சிங்கள மக்களிடம் ,தமிழ்பேசும்-இலங்கைச் சிறுபான்மையினங்களது நலன்கள் என்னவென்பது புரியவைக்கப்பட வேண்டும் கூடவே பெரும் பான்மைச் சிங்கள மக்கள் துய்க்கும் உரிமைகளை அவர்களும் அநுபவிக்கக் கற்றுக் கொடுக்கவேண்டும்.
ஒவ்வொருவரும் ,தத்தமது ஐதீகப் பாரம்பரிய பூமியில் தமது உரிமைகளோடு வாழும் யதார்தத்தைப் புரிவதென்பது அவசியமானது.அதன் அடுத்த கட்டமானது,சுயநிர்ணயவுரிமையை எவருக்காகவும் தமிழ்பேசும் மக்களோ அன்றிச் சிறுபான்மை மற்றய இனங்களோ தமதுவுரிமையை எவருக்காவும் விட்டுக்கொடுப்பதோ அல்லது அதைத் தவிர்ப்பதோ நியாயமில்லையென்பதைச் சிங்கள மக்கள் புரிந்துகொள்ளுஞ் சந்தர்ப்பத்தை இந்தச் சோசலிசக் கட்சி (முன்னணிச் சோசலிசக் கட்சி) செய்தாகவேண்டும்.
அதன் பிறகுதாம் அனைத்தையும் பார்த்துக்கொள்ளலாம்.இதைவிட்டு, இலங்கையில் நிலவும் அமைப்பை அகற்றியபின் புரட்சிகரக் கட்சி-ஆட்சி–அமைப்பு வந்தபின்னால் என்றால் அது , புரட்சிகரமாற்றமில்லை!
புரட்சிகர மாற்றமென்பது இதிலிருந்துதாம் விரியுமே தவிர முன்னணிச் சோசலிசக் கட்சியின் கூற்றுப்படியல்ல!
The reality is now you have to help them unwind and only then they will do something some favours for you. Like repealing the Thirteenth Amendment.
Who is denying you equality? I am a first class citizen in any part of the world.
எல்லாம் நல்லத்தான் கதைக்கிறியல் எங்க இருந்து தொடங்குறது யார் எல்லாம் மக்களுக்குள்ள இறங்கி வேலை செய்யப் போறியள் எல்லாத்தையும் நினச்சா தலை சுத்துது. கைமண் ஆசிரியர் சண் பற்றிய கட்டுரையில் சொன்ன மாதிரி நீங்கள் எல்லாம் மக்கள் திரளை தலைமை தாங்காத தளபதிகள்.
That is right. There are a lot of unsung heroes that have done immense service to our people.
புதிய திசை தம்பிமார் பயணிக்கவிரும்பிற திசை புதியதல்ல என்பது மட்டும் நிச்சயம். எழுவதுகளில் சிறையில் இருந்தவாறு ஜே.வி.பி யை பற்றி சண்முகதாசன் எழுதிய விமர்சனம் இன்றும் ஜே.வி.பி க்கும், அதிநின்றும் பிரிந்து போன குழுவிற்கும் பொருந்திப் போவதை வாசித்தறியலாம். தமிழ் வீர இயக்கமரபில் வந்த மறவர்களான புதியதிசையும் அதே பழைய இயக்கப்பல்லவி.
///சமீபகால இலங்கைவரலாற்றில் பெருந்தேசிய இனத்தை அடித்தளமாக கொண்ட ஓர் அமைப்பில் இருந்து, இனவாதத்திற்கும், இனஒடுக்குமுறைக்கும் எதிராக அழைப்புவிடப்படுவதும், இனங்களுக்கான சமத்துவதிற்காக போராட முன்வருவதும், வரவேற்கப்பட வேண்டிய விடயமாகும். //////////////////// நிச்சயமாக வரவேற்கப்படல் வேண்டும். இதை வரவேற்காதவர்கள் அதற்க்கான மாற்று வழிமுறையை முன் வைத்தால் அவர்கள் தமிழ் மக்களில் அக்கறையுள்ளவர்களாக,சமூக மாற்றத்தில் விருப்புள்ளவர்களாக பார்க்க வசதியாக இருக்கும்.
மக்கள் தான் தமது பிரிந்த்து போகும் உரிமைக்காக 30 வருசம் போராடுகிறார்க\ல். நீங்கள் மாற்று திட்டம் போட்டு சோத்துப்பாசல் கட்டி அனுப்பவா போகிறீர்கள். மக்களின் போராட்ட வழி முறை பிழை என்று தெரிந்தால் வேறு வழிகளில் எப்படி போராடுவது என்பதை வையுங்கள். நீங்கள் மக்களின் உணர்வுகளை எதிர்த்து திட்டம் போடாதீர்கள். அதுவும் தமிழர்களுக்கு தனி அலகைக்கூட மறுக்கும் இனவாதிகளுடன் சேர்ந்து!!
உங்கள் பிரச்சனை மக்கள் அல்ல, சமூக மாற்றம் அல்ல என்பது மட்டும் தெளிவாக புரிகிறது. //////////////// பொது எதிரிக்கு எதிராக போராடுபவர் மத்தியில் முரண்படுகளை ஏற்றுக்கொண்டு உடன்பாடுகளில் ஊன்றி நின்று ஒரு பொது தளத்தில் கூட்டாக வேலை செய்து முரண்பாடுகளை களைய முனைவதுதான் எதிரியை பலவீனப்படுத்துவதற்கும், எம்மை பலப்படுத்துவதற்கும் உள்ள ஒரே வழி என்பது எங்கள் ஆழமான நம்பிக்கை. முன்னிலை சோசலிச கட்சியுடனான உறவையும் புதிய திசைகளாகிய நாங்கள் இவ்வகையிலேயே கருதுகிறோம்.////////////புதிய திசைகளின் இந்தக்கருத்தையும் நான் வரவேற்கிறேன்
Nine flags have been assigned and approved to the nine provinces. North Central Province is the only other province that is 4,000 square miles in extent like North and East. Let us go from there,l
flags // ONLY FLAG won’t solve our problem. WE had nice FLAG. now We are having only ..kovanam.Dr.
மார்க்சியம் தான் விடுதலைக்கான ஒரே மார்க்கம் அதில் இரு வேறு கருத்துகளுக்கு இடமில்லை. ஒரு இனத்தின் சுய நிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்ளாத ஒரு கட்சியுடன் இணைந்து போவது பிரச்சினைக்குரியதாகும்.
/இன அழிப்பு, இனவாதம் ஆகியவற்றுக்கெதிரான அவர்களது போராட்டத்துடனும், இன ஒற்றுமையை உருவாக்குவதற்கான அவர்களது முயற்சிகளுடனும் இணைந்து வேலை செய்வது என்பது எமது இன்றளவிலான முடிவாகும் ////// இதை எந்த முற்போக்கு சிந்தனையுள்ள நபரும் எதிர்க்க மாட்டார்கள்.என்பது என் கருத்து. .விசரன்!! ,மன்னிக்கவும் விசரன்,இந்த கருத்து சிந்தனையுள்ள நபர்களிற்கு மட்டுமே.
Democracy is slow but democratic changes are permanent.. Single Sri Lankan Citizenship.
Thevan, Jathika Hela Urumaya is right. Our boys and girls have killed nearly 10,000 civilians.
Marxism is just for the text books. Very soon you will see political pluralism developing in Russia and China.
இன முரண்பாடு உச்சமடைந்திருக்கும் ஒரு நாட்டில் சுயநிர்ணய உரிமையை மட்டுமல்ல, மாநில சுயாட்சி போன்ற குறைவான தீர்வுகள் கூட இனவாதம் என்று நிராகரிக்கும் இந்த கட்சியோடு கூட்டுவைக்க ஒரு கூட்டம் தயார். இலங்கையில் இனவாத கட்சிகள் கூட தமிழருக்கு தனியான அலகு வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ளும் நிலைமையில் ஒரு பெயரையும் ரைப்பண்ண கொம்பியுடரையும் வைத்துக்கொண்டால் அறிக்கை ரெடியாகிடும். மாநகர சபையில் நாய் பிடிக்கக்கூட நான்பிடிக்க நீபிடிக்க என விதிமுறைகள் உண்டு. இங்கே யாரும் யாரையும் பிடித்துவைத்து எதையும் சொல்லலாம். நான் எத்தனை பிடித்தேன் நீ எத்தனை பிடித்தாய் என்றது தான் கடைசிக் கேள்வி!
Mr. Sivagnanam. We are in 3 R s. Reconciliation, reconstruction and rehabilitation. there is a separate ministry for that purpose. Dr. Sumanasiri Liyanage once talked about the 3 C s of somebody or something.
ஒரு பெயரையும் ரைப்பண்ண கொம்பியுடரையும் வைத்துக்கொண்டால் அறிக்கை ரெடியாகிடும்,இங்கே யாரும் யாரையும் பிடித்துவைத்து எதையும் சொல்லலாம். நான் எத்தனை பிடித்தேன் நீ எத்தனை பிடித்தாய் என்றது தான் கடைசிக் கேள்வி!/// ………………………………………………………………………………………………………………………………….இது போன்ற உங்கள் கருத்துகளில் இருந்து, உங்கள் பிரச்சனை சுயநிர்ணய உரிமை அல்ல, தனியான அலகு அல்ல, என்பது மட்டும் தெளிவாக புரிகிறது. இது உங்கள் தவறல்ல , நாம் இருக்கும் சமூகம் தான் காரணம் . .
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
புதிய திசைகள்: “சம உரிமை இயக்கம் முன்வைத்துள்ள செயல் திட்டத்திற்கு சரியான மாற்று திட்டங்கள் அல்லது உடன் படும் திட்டங்களை முன் வைப்பதிற்கு பதிலாக முழுமையாக எதிர்ப்பது அல்லது நிபந்தனையின்றி ஆதரிப்பது என்ற போக்குகள் தவிர்க்கப்படவேண்டும்.” .
.
.
.
.
.
.
.
.
.
”
மக்களுக்குதேவையான அரசியலின் தலையை உருட்டுவதென்பது, பொறுப்பற்ற,கோமாளித்தனமான அரசியலாகவே எமதுகண்களுக்கு தெரிகிறது. .//புதிய திசைகளின் இந்த கருத்துகளையும் நான் வரவேற்கிறேன் .
.
.
.
.
.
.
.
.
.
புதிய திசைகள்: ///சுயநிர்ணய உரிமை என்பது இலங்கை இனப்பிரச்சனை சூழலுக்குப்பொருந்தாது என்னும் தோழர் குமார் குணரத்தினத்தின் கருத்து, தாய் கட்சியின் சந்தர்ப்பவாத குணாம்சம் இவர்களிடமும் ஒட்டியிருக்கிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இது எமக்குள் இருக்கும் பிரதான விவாதப்பொருளாக அமையும் என்று கருதுகிறோம்./// Sivagnanam!!! நீங்கள் அக்கறைப்படும் சுயநிர்ணய உரிமை, தனியான அலகு பற்றி புதிய திசைகள், முன்னிலை சோசலிச கட்சியுடனான விவாதங்களில் வலியுறுத்த உங்களுடன் நானும் வாழ்த்துகிறேன்.
Arun Thambimuthu said that Districts could be the basis of power devolution. That came in the Daily Mirror. That is the son left by Sam Thambimuthu and Kala Mannickam at Batticaloa.
That is right Thevan. I think Mr. Sri Kuganesan (1965 – Trinco) have that facility at Police Head Quarters in Colombo. Now he is an SP. In 2002 he was an ASP at Batticaloa. May be he can become an IGP like T. E. Ananandarjah one day. He wants Ms. Narmada Rasanayagam (1967) to sell her Tooyota car worth 23 lakhs and move to Colombo for permanent friendship.
Thevan,//பொது எதிரிக்கு எதிராக போராடுபவர் மத்தியில் முரண்படுகளை ஏற்றுக்கொண்டு உடன்பாடுகளில் ஊன்றி நின்று ஒரு பொது தளத்தில் கூட்டாக வேலை செய்து முரண்பாடுகளை களைய முனைவதுதான் எதிரியை பலவீனப்படுத்துவதற்கும், எம்மை பலப்படுத்துவதற்கும் உள்ள ஒரே வழி எ//
இதைப்போல கொசுறுத் தனமான கருத்தை தேசியக் கூட்டமைப்பு கூட வைத்ததில்லை. அரசுக்கு எதிராக கதைப்பவர்கள் எல்லோரோடும் கூட்டுவைத்தால். சரத்போன்சேகா, தேசிய கூட்டமைப்பு, கஜேந்திரகுமார், மனோகணேசன், செந்தில்வேல், யூஎன்பி ஜேவிபி என்று அடுக்கிக்கொண்டே போகலாம். இவர்களோடு கூட்டுவைக்க உங்களுக்கு முடியாமல் குசும்புத் தனமாக குமாரோடு மட்டும் கூட்டுவைத்து அதுக்கு விளக்கம் வேற வேண்டிக்கிடக்கு.
அதை எல்லாம் விடால் கூட, ஜேவிபி கட்சிக்கும் முன்னணி சோசலிச கட்சிகும் என்ன வித்தியாசம். ஆறு வித்தியாசம் வேண்டாம் ஒரு வித்தியாசம் சொல்லுங்கள் பார்க்கலாம். நான் ஒரு வித்தியாசம் சொல்லலாம். ஜேவிபி ஆவது தமிழர்களை தனித்துவம் ஆனவர்கள் என்று ஏற்றுக்கொள்ளும் இவர்கள் அதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இவ்வளவு காலம் ஜேவிபியை ஏற்றுக்கொள்ளாமல் ஏன் பிரேம்குமார்.
சரி பிரேம்குமார் தமிழன் பாத்துப் பேச நல்லாப் பேசுறார் என்று ஒரு சொப்ட் கோணர் இருக்கு என்று வைத்துக்கொள்வோம். அப்படி ஒன்று உங்களுக்கு இருந்தால் அவர்களோடு சில காலம் விவாதித்து அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்து ஆதரித்திருக்கலாம் தானே?
நீங்கள் ஆதரித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள். சுய நிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளாத கூட்டம் ஒன்று இருக்கெண்டு சில பேருக்கு சொல்லப் போகிறீர்ய்கள்.
அதுவும் வருசத்திற்கு இரண்டு அறிக்கை விட்டு தெரிவித்துவிட்டு அமைதியாகி விடுவீர்கள். இப்படி எத்தனை அறிக்கையைப் பார்த்திட்டம்? உங்களைவிட புலி ரெடியோவிலையும், தொலைக்காட்சீலையும், இணையதளங்களிலையும் வந்து கருத்து சொல்லும் சாதாரண மக்கள் மக்கள் மத்தியில் உங்களைவிட கூடுதலாக அக்கறை கொண்டு வருகிறார்கள். உங்களுக்கு அறிக்கைவிட ஒரு காரணம் தேவை. விட்டீர்கள். இதைவிட நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்? எல்லாருக்கும் தாங்கள் இருக்கிறம் என்று அடையாளம் காட்ட ஒரு காரணம் தேவை. ரொப் லெவலில மாவீரர்…. உங்கடை லெவலில இனிஒருவில் அறிக்கை.
இதால எல்லாம் எதிர்கால சமூகத்திற்கு வரும் பாதிப்புகளை எல்லாம் கொஞ்சமும் சிந்திப்பது இல்லை.
கூட்டிக் கழித்துப் பார்த்தா புலியில இருந்து நீங்கள் வரைக்கும் வேவ்வ்று லெவலில ஒரே வேலையத் தான் செய்கிறீர்கள்.
உங்கட குழு கோஷ்டி… எல்லா சட்டையையும் களட்டி வத்திட்டு நிதானமா வாருங்கள். சரியெண்டால் சரி என்றும் பிழைஎன்றால் பிழை என்றும் முகத்துகு நேர சொல்லப் பழகுங்கள். இதை விட்டுட்டு மாகாண சபையை கூட நிராகரிக்கும் கட்சிக்கு ஆதரவா அறிக்கைவிட்டு ஆள்பிடிக்காதீர்கள்.
/////////சம உரிமைஇயக்கத்தின் வேலைத்திட்டதில் இருந்தும் அவர்களை புரிந்து கொள்ளவும், சாத்தியமான தளங்களில் இணைந்து வேலைசெய்யவும் முயற்சிக்கிறோம்.////புதிய திசைகள் .
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
///.//இவற்றை சரியான வகையில் அம்பலப்படுத்தி எமது தரப்பில் இருந்து மாற்று திட்டங்கள் முன்வைக்கப்படவில்லை, பதிலாக அவ்விடயத்தை முற்றாக புறந்தள்ளுவதும் யுத்தத்தின் மூலம் பதில் சொல்ல முனைவது என்பதும் கடந்த கால நடைமுறையாக இருந்து வந்திருக்கிறது. இதே நடைமுறையை பெருந்தேசிய இனத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் ஓர் அரசியல் இயக்கத்திற்கும் நாம் காட்டுவது தவறாகும். இன்றயவரை இதை ஒரு நேசக்கரமாக புரிந்து கொள்வோம்////
புதிய திசைகள் . .
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
///// சம உரிமை இயக்கம் முன்வைத்துள்ள செயல் திட்டத்திற்கு சரியான மாற்று திட்டங்கள் அல்லது உடன் படும் திட்டங்களை முன் வைப்பதிற்கு பதிலாக முழுமையாக எதிர்ப்பது அல்லது நிபந்தனையின்றி ஆதரிப்பது என்ற போக்குகள் தவிர்க்கப்படவேண்டும். ///// புதிய திசைகள் . .
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
//// அவர்களது கட்சியின் கொள்கைகளும், எதிர்கால நடைமுறைகளும் அவர்களை யார் என்று முழுமையாக புரிந்து கொள்ள உதவும் என்று கருதுகிறோம். /// புதிய திசைகள் . .
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
. /// இரு தேசங்களின் இருத்தலை மறுப்பதாகவும் இலங்கை என்னும் ஒரு போலி தேசியத்தை முன்னிலைக்கு கொண்டு வருவதாகவே நாம் புரிந்துகொள்கிறோம். /// புதிய திசைகள் . .
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
///தாய் கட்சியின் சந்தர்ப்பவாத குணாம்சம் இவர்களிடமும் ஒட்டியிருக்கிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இது எமக்குள் இருக்கும் பிரதான விவாதப்பொருளாக அமையும் என்று கருதுகிறோம். //// புதிய திசைகள் ………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………… புதிய திசைகளின் மேலே உள்ள கருத்துக்கள் ஒன்றும் நீங்கள் கூறும் நிபந்தனை அற்ற கூட்டோ அல்லது நிபந்தனை அற்ற ஆதரவோ என்று பயமுறுத்தும் வகையில் இல்லை என்பதை இட்டு மகிழ்ச்சி.
/இன அழிப்பு, இனவாதம் ஆகியவற்றுக்கெதிரான அவர்களது போராட்டத்துடனும், இன ஒற்றுமையை உருவாக்குவதற்கான அவர்களது முயற்சிகளுடனும் இணைந்து வேலை செய்வது என்பது எமது இன்றளவிலான முடிவாகும் ////// இதை எந்த முற்போக்கு சிந்தனையுள்ள நபரும் எதிர்க்க மாட்டார்கள்.என்பது என் கருத்து. .
//நான் ஒரு வித்தியாசம் சொல்லலாம். ஜேவிபி ஆவது தமிழர்களை தனித்துவம் ஆனவர்கள் என்று ஏற்றுக்கொள்ளும் இவர்கள் அதையும் ஏற்றுக்கொள்ளவில்லை//// “”தனித்துவம் “” : நீங்கள் அக்கறைப்படும் சுயநிர்ணய உரிமை, தனியான அலகு, “தனித்துவம்”பற்றி புதிய திசைகள், முன்னிலை சோசலிச கட்சியுடனான விவாதங்களில் வலியுறுத்த உங்களுடன் நானும் வாழ்த்துகிறேன்.