முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர் திருச்சி வழியாக பெங்களூருவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனால் அவர் எங்கும் செல்ல முடியாதபடி சுங்கச்சாவடிகள் உஷார் படுத்தப்பட்டுள்ளது.
முன்னாள் அதிமுக நிர்வாகி விஜயநல்லதம்பி என்பவர் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியிடம் ஒரு கோடி ரூபாய் 60 லட்சம் லஞ்சம் கொடுத்திருந்தார். இது அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி இந்த பணம் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் பணத்தைப் பெற்றுக் கொண்டு வேலை வாங்கிக் கொடுக்கவில்லை. இந்த பண மோசடி தொடர்பாக விஜயநல்லதம்பி காவல்துறையில் புகார்கொடுத்தார்.
கே.டி.ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் பாபுராஜ், பலராமன், முத்துப்பாண்டி ஆகிய 4 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் கடந்த மாதம் 15-ந்தேதி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாகி மனுத்தாக்கல் செய்ய அதை நீதிமன்றம் ரத்து செய்தது. இதனால் அவரை போலீசார் கைது செய்ய தீவிரம் காட்டினார்கள். நேற்று காலை விருதுநகர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ராஜேந்திரபாலாஜி போலீசார் வந்திருப்பதை அறிந்து அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இதனை தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சகோதரி மகன்கள் வசந்தகுமார், ரமணன், கார் ஓட்டுநர் ராஜ் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.