மட்டக்களப்பு செங்கலடி முகாமில் ரீ.எம்.வீ.பி உறுப்பினர்கள் நால்வர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பாக, தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பான ஊடகங்கள் கருணா குழுவின் பிரதான முகாம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆறு பேர் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர் என்கின்றன.
முகாம் தாக்கி நிர்மூலமாக்கப்பட்டுள்ளதுடன் ஆயுதங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
ரி-56-2 ரக துப்பாக்கி – 05, ரி-56 ரக துப்பாக்கி – 03 மற்றும் பெருமளவிலான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள சார் ஊடகங்கள் மேலும் தெரிவித்தன.
கிழக்கிலிருந்து வரும் செய்திகள், கருணா பிள்ளையான் உள்முரண்பாடுதான் தாக்குதலுக்குக் காரணமென்றும், பிள்ளையான் குழுவிரே கருணா குழுவிற்கெதிராக இத் தாக்குதலை நடாத்தியிருக்கலாம் எனவும் தெரிவிக்கின்றன.
கொல்லப்பட்டவர்களின் சடலங்களில் 1 வீட்டு வாசலிலும், ஒன்று வீட்டிற்கு உள்ளேயும், 2 சடலங்கள் வளவினுள்ளும் காணப்பட்டதாக நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவத்தை அடுத்து செங்கலடிப் பகுதியில் சிறு பதட்டம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
…………………………………………………………………………………………………………………………………………………………….
இனியொரு தேசம்நெற் என்ற பெயரைமட்டும் தணிக்கை செய்துவிட்டிருந்தது. தேசம் நெற்காரரைக்கண்டு அய்ரோப்பாவில் அவ்வளவு பயமோ என்று யோசித்தேன். பின்னர் பாரத்தால் கிழக்கில் சுதந்திர வர்ததகவலயம் தொடர்பான செய்தியில் அல்லது இனியொருவின் கருத்துரையின் பதில்களில் தேசம்நெற் பற்றிய குறிப்புக்கள் இருக்கின்றன.
அதற்குப் பின்புதான் லண்டன் ரேடியோ உடைப்பு மட்டுமதான் அய்ரோப்பாவின் தமிழர்களின் தற்போதைய அரசியலில் முக்கியமானதும் தேவையானதும் என்று தெரிந்தது.
இந்த ரேடியோக்களைவிட்டுவிட்டு வேற விசயத்துக்கு வாங்களேன்.