தடுப்பு முகாம்களில் பெண்கள் தற்கொலை வீதம் அதிகரித்திருப்பதாக அன்க்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணத்தில் தேர்தல்களத்தில் இறங்கியிருக்கும் பல துணை இராணுவக் குழுக்கள் அரச படைகளுடன் இணைந்து பெண்கள் மீதான பாலியல் வன் முறைகளில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று முன் தினம் அரச படைகளுடன் இணைத்து துணை இராணுவக் குழுக்களால் புல் மோட்டை முகாமில் கைது செய்யப்பட்ட இரு பெண்கள் விடுதலைக்குப் பின்னர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இச்செய்திகளை மறுத்திருக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் முற்றிலும் பொய்யானது என மறுப்புத் தெரிவித்துள்ளார். இதே வேளை த அவுஸ்திரேலியன் என்ற சஞ்சிகை இவ்வாறான தகவல்களை உறுதிப்படுத்த முடியாத நிலையில் முகாம்கள் வெளியுலகிற்கு தொடர்பற்ற வகையில் பேணபப்டுவதாகத் தெரிவிக்கிறது.