தமிழ் சிங்கள மக்களிடையே தேசிய ஒருமைப்பாட்டை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கமே தடையாகவுள்ளது. பிரபாகரனின் பிடியிலிருந்து தெற்கை நம்பி வந்த தமிழ் மக்களை இடைத்தங்கல் முகாம்களில் வைத்து அரசாங்கம் துரோகம் இழைத்து வருகின்றது.
அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கை இந்தியாவின் தலைமையில் தமிழர்கள் மீண்டும் தனி ஈழ இராஜ்ஜியத்தை நோக்கி பயணிக்கவே வழிவகுக்கும் என்று ஜே.வி.பி.யின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
இடைத்தங்கல் முகாமில் இன்னொரு பிரபாகரனை உருவாக்க அரசாங்கம் முயலுமானால் இனி வரும் எந்த ஒரு அரசாங்கத்தாலும் அந்த பிரபாகரனை அழிக்க முடியாது என்று அவர் சுட்டிக்காட்டினார். ஜே.வி.பி.யின் விஷேட செய்தியாளர் மாநாடு இன்று வியாழக்கிழமை கோட்டை “சோலிஸ்’ ஹோட்டலில் நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்