இலங்கையின் சமூக அமைப்பும் அரசியல் பொருளாதர முன்நிபந்தனைகளும் புரட்சிக்கான சூழலைப் பல தடவைகள் கனிவடையச் செய்திருந்தது. தலித் அல்லது தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டம் என்பது சமூக மாற்றத்திற்கான போராட்டமாக முன்னெடுக்கப்பட்ட பல உவமைகள் இலங்கையில் காணக்கிடைக்கிறது.
சூர்ய மல் இயக்கம், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டங்கள், இரண்டு முறை ஜே.வி.பி யின் ஆயுதம் தாங்கிய போராட்டங்கள் என்று, சரி-தவறு என்பதற்கு அப்பால், இலங்கை அரசியல் தளத்தில் பல ஆயுதப் போராட்டஙகளையும் மக்கள் எழுச்சிகளையும் சந்தித்துள்ளது. 70களில் ஜே.வி.பி ஆயுதக் கிளர்ச்சி முறியடிக்கப்பட்ட பின்னர் அமரிக்க அரசின் தன்னார்வ கொடுப்பனவு நிறுவனமான யூ.எஸ் எயிட்ஸ் இலங்கையில் மேலும் இளைஞர் இயக்கங்கள் உருவாகும் “ஆபத்துக் காணப்படுவதாகக்” கணிப்பிடுகிறது.
ஏகாதிபத்திய எதிர்ப்பியக்கங்கள் பேரினவாத இயக்கங்களாகவும், குறுந்தேசிய வாத சிந்தனைப் போக்காகவும் வளர்ச்சியடைந்தன.
இலங்கையின் மக்கள் போராட்டத்தை பேரினவாதப் போராட்டமாகச் சீரழித்த கட்சிகளில் மக்கள் விடுதலை முன்னணி என்ற ஜே.வி.பி பிரதான பாத்திரத்தை வகிக்கின்றது. இன்றைக்கு வரைக்கும் தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்க மறுக்கும் ஜே.வி.பி தன்னை மார்க்சிசக் கட்சியாகவே பிரகடனம் செய்து கொள்கிறது. மகிந்த ராஜபக்சவை ஆட்சிக்குக் கொண்டுவருவதில் ஆரம்ப நிலையில் ஜே.வி.பி யும் பங்களித்திருந்ததை மறுக்கமுடியாது.
சிங்கள மக்களின் மத்தியதர வர்க்கத்தின் மத்தியில் பேரினவாத உணர்வை வளர்த்து அதனை வாக்குகளாக அறுவடை செய்வதில் ஐக்கிய தேசியக் கட்சி, சிறீ லங்கா சுந்ததிரக் கட்சி என்பன வெற்றிகண்டன என்றால் சிங்களத் தொழிலாளர்கள் மற்றும் மத்தியதரவர்க்கத்தின் கீழணிகள் மத்தியில் பேரினவாத உணர்வை வளர்த்தெடுக்கும் வரலாற்றுத் துரோகத்தை மக்கள் விடுதலை முன்னணி புரிந்துள்ளது. அரங்கேற்றிவருகிறது. வன்னியில் ஆயிரமாயிமாய் மக்கள் படுகொலை செய்யப்பட்ட போது ஜே.வி.பி போரிற்கும் மகிந்த அரசிற்கும் ஆதரவு வழங்கியது. தம்மை இடதுசாரிகளாகக் கூறும் இவர்கள் இன்றுவரைக்க்கும் துரோகங்களை சுயவிமர்சன அடிப்படையில் ஏற்றுக்கொண்டதில்லை.
ஜே.வி.பி இன் செயலாளரின் நேர்காணலை அதன் “தமிழ்” மத்திய குழு உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் மொழிபெயர்த்துள்ளார். தகவல்களுக்காகவும் விவாத நோக்கோடும் நேர்காணலை இங்கு பதிவிடுகிறோம்.
நியமுவா: ராஜபக்ஷ அரசாங்கம் ஊடகங்கள் வாயிலாக மேற்குலகத்துக்கு வாய்மொழியாக தாக்கிபேசினாலும் பயங்கரவாதத்தை வளர்ப்பதற்கு காரணமாக இருந்த வெளிநாட்டு பிரதிநிதிகள் சிலர் அரசாங்கத்திற்கு நற்சான்றிதழ் வழங்கியுள்ளனர். இது தொடர்பாக உங்கள் கருத்துடன் எமது விவாதத்தை ஆரம்பிப்போம்.
தோழர் டில்வின் சில்வா: மேற்குலக நாடுகளும் வெளிநாட்டு பிரதிநிதிகளினதும், இலங்கை ஆட்சியாளர்களினதும் நடவடிக்கைள் அவர்களால் வெளியிடப்படும் கருத்துக்களை மேல்வாரியாக பார்க்கும்போது முரண்பட்டதாக தென்பட்டாலும் உண்மையில் அதில் எதுவித முரண்பாடுகளும் கிடையாது. மேற்குலக நாடுகள் அல்லது ஏகாதிபத்திய சக்திகள் இலங்கை தொடர்பாக துள்ளியமான நோக்கத்துடனேயே செயற்படுகிறது. தாங்களுக்கே உரித்தான தந்திரோபாயத்துடன், அதாவது அவர்களது நோக்கம் ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலின் கீழ் இலங்கையை வழிநடத்துவதாகும். அந்த குறிக்கோளை அடைவதற்காக அவர்கள் ஒருமுறை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கினறனர், அச்சுறுத்துகினறனர் மறுபுறத்தில் அதே குறிகோளிற்காக அரசாங்கத்துக்கு நற்சான்றிதலை வழங்குகின்றனர். பெயரளவிலான கடனையும் பெற்றுக் கொடுக்கின்றனர். இலங்கை முதலாளித்துவ ஆடசியாளர்களை சிறைபடுத்திக் கொள்வதற்காக அழுத்தத்தையும், அச்சுறுத்தலையும் கொடுக்கின்ற வெளிநாட்டுச் சக்திகள் அவர்களுக்கு கீழ்படிந்ததன் பின்னர் அவர்களை தாலாட்டுகின்றனர்.
இலங்கை ஆடசியாளர்களும் அப்படிதான் நாட்டு மக்களின் அபிமானத்தை பெற்றுக் கொள்வதற்காக தேர்தல் காலங்களில் ஏகாதிபத்திய எதிர்ப்பின் தேசிய வீரர்களாக நாடகமாடுவோர் தேர்தல் முடிந்தவுடன் ஏகாதிபத்திய நாடுகளில் கடன் அல்லது பொருளாதார உதவிகளை பெறுவதற்காக அவர்களுக்கு கீழ்படிந்து நல்ல பிள்ளை| யின் பாத்திரத்தை வகிக்கின்றனர். இப்போது அதையே எம்மால் காணக் கூடியதாய் இருக்கிறது. பிரிவினைவாத யுத்தம் நடைபெற்று சமயத்தில், பிரிவினைவாதம் ஆயுத ஆதிக்கம் கொண்டிருந்த சமயத்தில் மேற்குலகம் உள்ளிட்ட வெளிநாட்டுச் சக்திகள் அதை தாங்களது நோக்கத்திற்காக பயன்படுத்த முயற்சித்தனர். அது இலங்கை துண்டாடப்பட்ட நலிவடைந்த நாடாகவோ அல்லது பெடரல் முறையிலான இராச்சியமாக மாற்றியமைப்பதற்கு முயன்றனர். ஆனால் கடந்த வருடம் மே மாதத்தில் பிரிவினைவாத ஆயுதப்பிரிவு தோல்வியடைந்து அரசியலில் புதிய நிலமை தோன்றியதன் பின்னர் மேற்குலக நாடுகள் இப்போது அமைதி வழியிலான பிரிவினைவாதத்தை| தோற்றுவிக்க முயன்று வருகின்றனர். வடக்கின் அபிவிருத்தி| பணிகளுக்கு கடன் கொடுத்தும், அரசாங்கத்துக்கு நற் சான்றிதழை வழங்கியும் வருகின்றனர். அதாவது பிரிவினைவாத அரசியலை, மேற்குலகம் மற்றும் வெளிநாடுகளின் தலையீட்டை மீண்டும் வேறு வடிவத்தில் செயற்படுத்த முயற்சிக்கின்றனர் ஆகவே இப்போது. இலங்கை ஏகாதிபத்தியத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அகப்பட்டிருக்கிறது.
நியமுவா: கடந்த சில தினங்ககளாக ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கை சம்பந்தமாக தனக்கு ஆலோசனை வழங்கும் ஆலோசனை குழுவொன்றை அமைத்தார். அதேவேளை ஐரோப்பிய ஒன்றியம் புளுP10 நிவாரணத்திற்காக அரசாங்கத்துக்கு மனித உரிமைகளை பாதுகாக்கும் நிபந்தனைகளை விதித்து அதற்காக எழுத்து மூலமாக உறுதிமொழியை கேட்டது. இந்த நிலமைகள் பற்றி நீங்கள் எப்படி பார்க்கிறிர்கள்?
தோழர் டில்வின் சில்வா: மிக சுருக்கமாக கூறினால் அரசாங்கத்தின் இராஜதந்திர நடவடிக்கைகள் தோல்விகண்டுள்ளது. வெளிநாட்டுக் கொள்கையின் பலவீனமும் உலகில் பலம்வாய்ந்த நாடுகளுடன் கொடுக்கல் வாங்கலின் ஈடுபட இயலாமை சூழல் ஏற்பட்டுள்ளது. இப்போது ஜீ.எல் பீரிஸ் இலங்கையிலிருந்து செய்தியாளர் மாநாட்டை நடத்தி இவைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போலி வீரனாவதற்கு முயற்சித்தபோதும் உண்மையில் இராஜதந்திர துறையில் அவர்களின் இயலாமையானது மேற்கூறிய நடவடிக்கையினால் இப்போது ஏற்பட்டுள்ள விளைவுகளை சீர்செய்ய முடியாது. ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் இலங்கை தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்குவதற்கு குழுவினை நியமித்தமையானது இலங்கைக்கு ஏற்பட்ட இராஜதந்திர தோல்வியாகும். தவறான வெளிநாட்டுக் கொள்கையே இதற்கான பிரதான காரணமாகும். அடுத்தாக இந்த வெளிநாட்டு சக்திகளுக்கு இலங்கை தொடர்பாக இவ்வாறான நடவடிக்கைகள் எடுப்பதற்கான சந்தர்பத்தினை பெற்றுக் கொடுத்திருப்பது இந்த அரசாங்கமேயாகும். அது நாட்டின் ஜனநாயகத்தை இல்லாதொழித்தல், மனித உரிமை மீறல்கள் மூலமாகும். ஆரசாங்கத்தின் செயற்பாடானது, ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் ஆலோசனை குழுவை அமைத்தன் பின்னர் அவர்களுக்கு வீசா கொடுப்பதில்லையென போலி சண்டித்தனம்|| காட்டுவதல்ல. இந்த குழுவை அமைப்பதை தடுப்பதற்கான நடவடிக்கைகயை எடுப்பதாகும். அதற்காக இராஜதந்திர ரீதியாக செயலாளர் நாயகத்தை தெளிவுபடுத்துவதும் உண்மையாகவே நாட்டினுல் மனித உரிமைகளை பாதுகப்பதாகும். இவை இரண்டையும் செய்யாது இப்போது பொய்யாக கத்துவது கேளிக் கூத்தாகும்.
நியமுவா: நாடுகளை கீழ்படியச் செய்யும் நவீன உபாய முறை பொருளாதார ஆக்கிரமிப்பாகும். கடன், உதவிகள் என்பது அதன் ஒரு அங்கமாகும். இந்த நிலமை நமது நாட்டுக்கு ஏற்படுத்தபோகும் விளைவுகள் பற்றி என்ன கூறுகிறிர்கள்?
தோழர் டில்வின் சில்வா: இது மிக தெளிவானதோர் விடயமாகும். இலங்கை தொடர்பாக மட்டுமல்ல. உலகில் பல அபிவிருத்தியடைந்து வரும் வறிய மற்றும் பின்தங்கிய முதலாளித்துவ நாடுகளின் பொதுவான நிலமை இதுவாகும். இந்த நாடுகளை கடன் பொறியில் சிக்கவைத்து அந்நாடுகள் மீது அழுத்தத்தினை கொடுத்து தமது நோக்கத்திற்காக வழிநடத்தி, அந்நாட்டு வளங்களை சூறையாடுவதையே ஏகாதிபத்தியவாதிகள் செயற்படுத்தி வருகின்றனர். எமது நாட்டு நிலமைகளை பார்க்கும்போது இது பாரியதோர் பிரச்சினையாகும். 2009 மத்திய வங்கி அறிக்கைக்கு ஏற்ப இலங்கையின் அரச கடன் பளு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. 2008ம் ஆண்டு 3589 பில்லியன் ரூபாய் திருப்பி செலுத்தப்படாத அரச கடன் (உள்நாட்டு, வெளிநாட்டு) 2009ல் 4164.1 பில்லியன் ரூபாய்வரை அதாவது 16மூ ஆக அதிகரித்துள்ளது. அது 2010 மார்ச் மாதத்தில் 4240 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது. இந்த கடன் அதிகரிப்பானது தேசிய உற்பத்தியில் வீதத்தில் பார்க்கும்போது 2008ல் மொத்த அரச கடன் அளவை தேசிய உற்பத்தியுடன் ஒபப்pடுகையில் 81.4மூ ஆகும். அது 2009ல் தேசிய உற்பத்தியில் 86.2மூ வரை அதிகரித்துள்ளது. அதாவது எமது நாட்டு பொருளாதாரம் முழுமையாக கடன் மீது தங்கியிருப்பதென்பதாகும். அதனால் வருடாந்தம் கடனுக்கு வட்டியும் தவணை முறையில் செலுத்தப்பட வேண்டிய தொகை அதிகரிப்பதினால் அதை செலுத்துவதற்காக மீண்டும் கடன் பெற வேண்டிய நிலை ஏற்படுவதினால் எமது நாடு கடன் பொறியில் சிக்கியுள்ளது. உதாரணமாக கடந்த வருடம் அரச வருமானம் 72856 கோடி ரூபாவாகும் அந்த வருடத்தில் எமக்கு கடனுக்காகவும் வட்டி மற்றும் தவணை முறையில் செலுத்துவதற்கு 82568 கோடி ரூபாய் தேவைபட்டது. அதாவது அரச வருமானத்தைவிட வட்டி மற்றும் தவணை முறைக்கு செலுத்த தொகை அதிகமாக உள்ளது.
இந்த பொறியில் சிக்கியிருப்பதினால் எமக்கு மென்மேலும் கடன்பெற நேரிடுவதுடன் அந்த கடனுக்கு பின்னால் பல்வேறு பாதகமான நிபந்தனைகளும் வருகிறது. கடந்த காலத்தில் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 2.6 டொலர் பில்லியன் கடனை அங்கிகரித்தது. அதனுடன் பல நிபந்தனைகளையும் விதித்தது. அதில் ஒன்றுதான், இலங்கையில் வரவு செலவு பற்றாக்குறையை குறைத்தலாகும். அதன் விளைவாக வரிசுமை அதிகரித்தல் மற்றும் மானியங்களை வெட்டலும் செவ்வனே நடைபெறுகிறது. அண்மையில் ஜப்பான் யென் 39 பில்லியன் நிதியை இலங்கைக்கு ஒதுக்கியது. இதுபற்றிய தகவலை அறிவித்தவர் ஜப்பான் விஷேட தூதுவர் யசூசி அகாசியாகும். அதேவேளை அவர் ஜனாதிபதி மகிந்த வடக்குக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதற்கு தம்மிடம் இணங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார். கடன் மூலமாக சர்வதேச நிபந்தனைகளும், அழுத்தங்களும் வருவது இப்படியாகும்.
நியமுவா: தொழிலின்மை, வறுமை ஏழை பணக்காரன் பாகுபாடு அதிகரித்தல் போன்றவற்றின் மூலம் தெரிய வருவதாவது நாடு பின்பற்றிய பொருளாதார முறையின் தோல்வியாகும். இவைகளை உறுதிபடுத்துவதற்கு நீங்கள் முன்வைக்கும் விடயங்கள் என்ன?
தோழர் டில்வின் சில்வ: உண்மையில் கடந்த காலத்தில் உலகம் முழுவதிலும் பெருமையுடன் செயற்படுத்திய ஷநவ லிபரல்வாதம்| எனப்படும் சுதந்திர வர்த்தக பொருளாதாரம் இன்று உலகம் முழுவதிலும் தோல்வியடைந்துள்ளது. கடந்த செப்டம்பரில் உலக முதலாளித்துவத்தின் ஐக்கிய அமெரிக்காவிலிருந்து தொடங்கிய உலக பொருளாதார நெருக்கடி இன்னும் முடிவுறாமல் தொடர்கிறது. அப்பாரிய நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக பின்பற்றப்படும் நடவடிக்கைகள் ஷஷவேதனை மிக்க நடவடிக்கை|| கள் என இனங்கண்டுள்ளனர். அந்த வேதனை மிக்க நடவடிக்கைகள் உலக முதலாளித்துவ ஆதிக்கவாதிகள் தமது நாட்டினுல் பின்பற்றி வருகின்றனர். அண்மையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தாங்களது நாட்டில் வரவு செலவு பற்றாக்குறையை 3மூ த்தால குறைத்திருக்கிறது. அதன் விளைவுகளாக மக்கள் நிவாரணம் மற்றும் சம்பளத்தை குறைப்பதில் இறங்கியுள்ளது. ஒரு சில மேற்குலக நாடுகள் இப்போது 15மூ 20மூ வரையிலான சமபளத்தை குறைக்க தொடங்கியுள்ளது இப்போது அதற்கெதிராக மக்கள் வீதியில் இறங்கி போராட ஆரம்பித்துள்ளனர். இதன் காரணமாக உலக முதலாளித்துவம் பாரிய நெருக்கடிகளை சந்தித்து வருகிறது.
இந்த நிலமையின் கீழ் வேலையின்மை, வறுமை, ஏழை பணக்காரன்; பாகுபாடு பெருகியுள்ளது. இப்போதும் கூட குறிப்பாக ஒவ்வொரு நாளும் உலக மக்களில் 25.000பேர் பட்டினியால் இறக்கின்றனர். பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்கு ஒருவேளை சாப்பாட்டை உறுதிபடுத்த முடியாத நிலமையானது தற்போதய பொருளாதார முறையின் துஷடத்தனத்தையும் முடியாமையும் உறுதிப்படுகிறது. நாளொன்றுக்கு ஒரு அமெரிக்க டொலருக்கு குறைவான அதாவது 100 ரூபாவிற்கு குறைவாக வருமானத்தை உலக மக்கள் தொகையில் 88 மில்லியன் அதாவது கிட்டதட்ட ஒரு பில்லியன் மக்கள் ஈட்டுகின்றனர். இதன் மூலம் உலக ஜனத்தொகையில் 1ஃ6 பங்கினர் பட்டினியால் வாழுகின்றனர். அதேவேளை நாளாந்த வருமானமாக டொலர் மில்லியன் கணக்கில் சம்பாதிக்கின்ற பணக்காரர்களும் உள்ளனர். அந்த ஏழை பணக்கார பாகுபாடு மிக உயர்வானதாகும். முதலாளித்துவத்தின் கீழ் ஏழை, பணக்கார நாடுகளிடையே வருமானம் பிரிந்துபோகும் பாகுபாடு 1960ல் 30க்கு ஒன்று என்றடிப்படையிலேயே நிலவியது. அது 1994ல் 74க்கு ஒன்றாக உயர்ந்துள்ளதாக 2000 மனித அபிவிருத்தி அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. எனவே இவை அனைத்தும் கோடிட்டு காட்டுவது முதலாளித்துவம் சமூக முறையாக எவ்வளவு முன்னேறினாலும் முதலாளித்தின், நவ தாராளமயம் தோல்வி கண்டுள்ளது மட்டுமல்ல அநீதியானது நேர்மையற்றது என்பதாகும்.
இது மிகவும் பின்தங்கிய மற்றும் வளர்ச்சியடையாத நாடுகளான எம்போன்ற நாடுகளில் நிலமை படுமோசமாகும். எமது நாட்டில் உற்பத்தி வீழ்ச்சியடைகிறது. ஏற்றுமதி அதிகரிக்கிறது. அதன்போது எமது நாடு கடன் பொறியில் அகப்படுகிறது. அதன்பின்னர் மானியம் வெட்டப்படுகிறது. அதன்போது வறுமை சார்ந்த பிரச்சினைகள் அதிகரிக்கிறது. நெருக்கடி அதிகரிக்கிறது. அதன் விளைவாக ஜனநாயகம் இல்லாதொழிக்பபடுகிறது.
இலங்கை உற்பத்திகள் பற்றி சிறிய உதாரணத்தை எடுத்தால் இலங்கையில் தேயிலை உற்பத்தி 2008 லிருந்து 2009 ஆகும்போது 9.1மூஆல் குறைந்துள்ளதாக மத்திய வங்கி அறிக்கை குறிப்பிடுகிறது. இலங்கையில் நெல் உற்பத்தி 2008ல் 3875000 தொன்லிருந்து 2009 ஆகும்போது 36.52000 வரை அதாவது 223.000 மெட்ரிக் தொன்னால் குறைந்துள்ளது. சீனி உற்பத்தி 20மூ ஆல் குறைந்துள்ளது. அதன் விளைவாகவே இறக்குமதி அதிகரிக்கிறது. 2005ல் அரிசி 76000 மெட்ரிக் தொன்கள் இறக்குமதி செய்த எமது நாடு 2008ல் அரிசி 124.000 மெட்ரிக் தொன்கள் வெளியிலிருந்து கொண்டுவரப்படுகிறது. நிலமை இதுதான். ஆகவே இந்த பொருளாதார முறைமை தோல்விகண்டுள்ளதென கூறுவதற்கு மேலதிக உதாரணங்கள் எதற்கு?
நியமுவா: உங்களது கருத்திலிருந்து தெரிய வருவதாவது நவ லிபரல்வாத பொருளாதார முறைக்குப் பதிலாக மாற்று பொருளாதார முறையொன்று தேவையென்பதாகும். அதன் மூலம் மேற்கண்ட பிரச்சினைகளுக்கு தீர்வினைத் தேடுவது எப்படி?
தோழர் டில்வின் சில்வா: மிகத் தெளிவானது தற்போதய முதலாளித்துவத்துக்கு, நவ லிபரல்வாத பொருளாதாரத்துக்கு உலக வாழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாது போயுள்ளது. வயிற்றுக்கு சாப்பாடும், உடலுக்கு உடு புடவைகளும் பெற்றுக் கொடுக்க முடியாது. இளம் சமுதாயத்தினருக்கு வேலை வாய்ப்பை உறுதிபடுத்த முடியாது. அதனால் இதை மாற்றியாக வேண்டும். மாற்றியமைத்தாக வேண்டும். தற்போதய சமூக பொருளாதார நெருக்கடிகளை மேலோட்டமாக காண்போர் அதைப் பற்றி விபரிக்கும் பலர் தற்போதய சமூக முறையை பாதுகாத்துக் கொண்டு அதற்கான தீர்வினை தேடுகின்றனர். அது ஒருபோதும் செய்ய முடியாத ஒன்றாகும். அதாவது நாங்கள் கூறுவது சமூக நலநோம்புக்காக, மறுசீரமைப்பிற்காக போராட வேண்டாம் என்றல்ல. அதற்காக போராடுகின்ற அதேவேளை தற்போதய முறையை மாற்றி புதிய சமூக மாற்றத்திற்காக போராடுவது அத்தியாவசியமானதாகும். உண்மையில் தற்போதய நெருக்கடியின் ஷகாரணம்| முதலாளித்துவத்தின் முகாமைத்துவத்தின் பலவீனம், பொருளாதார வளர்ச்சியின் வேகம் குறைதல், மோசடி, வீண்விரயம் போன்ற சாதாரண விடயங்கள் மட்டுமல்ல. அப்படியான விடயங்களை சீர்செய்வதன் மூலமாகவோ ஆட்சியாளரின் முகத்தை மாற்றுவதால் இதற்ககு விடைகான முடியாது. ஐக்கிய அமெரிக்காவின் ஜோர்ஜ் புஸ்க்கு பதிலாக வந்த ஒபாமாவுக்கு அந்நாட்டு பிரச்சினைகளை தீர்க்க முடியாது போயுள்ளது போலவே, இலங்கையில் ராஜபக்ஷாவுக்கு பதிலாக வேறு முகத்தை கொண்டு வருவதன் மூலம் இவைகளுக்கு தீர்வுகான முடியாது. அதற்காக தெளிவாக சமூக முறையில் மாற்றம் தேவை. முதலாளித்துவத்துக்கு மாற்றீடு அல்ல மாற்று சமூக பொருளாதார முறையொன்று தேவை உதாரணமாக உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம், முகாமைத்துவம் மற்றும் ஊழல் மோசடியை நிறுத்துவதன் மூலமாக மட்டும் தற்பேதய நெருகடிக்கு தீர்வினை காண முடியாது. அது அனைவருக்கும் உற்பத்தியின் நன்மைகள் பங்களிக்கின்ற அனைவருக்கு நியாயமான முறையில் பகிரப்படும் முறையொன்று அவசியமாகும். அதை நிறைவேற்ற முடிவது நீதி நேர்மையின் அடிப்படையிலான சமூகமொன்றுக்கேயாகும். சோஷலிசம் என்று நாம் இதையே கூறுகின்றோம். குறுகிய தன்னலத்துக்குப் பதிலாக கூட்டுறவுக்கு முன்னுரிமையளிக்கப்படும், மோசமான தன்னலம் எனப்படும் ஐஸ் நீரில் மக்களை அமிழ்த்தாத புதிய விஞ்ஞான ரீதியானதும் மனதாபிமான சமூக முறையொன்று தேவைபடுகிறது. உலகம் எதிர்கொண்டுள்ள சகல பிரச்சினைகளுக்கும் உண்மையானதும் நிலையான தீர்வினை பெற்றுக் கொடுக்க முடிவது அவ்வாறான சமூக மாற்றத்தின் மூலமேயாகும். அது நிராகரிக்க முடியாத உண்மையாகும்.
நியமுவா: நாட்டில் புதிய நிலமைகள் தோன்றியுள்ளது. தேசியப் பிரச்சினையின் உள்ளடக்கம் மாறியிருக்கிறது. அரசாங்கம் நாட்டை கட்டியெழுப்பும் இலக்குக்கு பதிலாக அதிகாரத்தை மட்டும் கட்டியெழுப்பும் திட்டத்தில் இறங்கியுள்ளது. மக்கள் பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இந்த நிலமையின் முன்னால் ஜே.வி.பி வகிக்கும் பாத்திரம் என்ன?
தோழர் டில்வின் சில்வா: அது மிகத் தெளிவானது, எமது நாட்டின் சமூக மாற்றத்திற்காக மக்களை தெளிவுபடுத்தல், ஒடுக்கப்பட்ட சக்திகளை அணிதிரட்டுதல் மற்றும் போராடுதலே எமது பாத்திரமாக அமைகிறது. இன்று எமது நாட்டில் 14 மாதங்களுக்கு முன்னர் இருந்த நிலைமைகள் இப்போது கிடையாது. கடந்த 2-3 தசாப்தங்களாக இலங்கை அரசியலில் அரசியலை தீர்மாணிக்;கின்ற அதற்கு அழுத்தங்களை கொடுக்கின்ற பிரதான காரணியாக தேசியப் பிரச்சினை மேலோங்கியிருந்தது. இலங்கையில் பிரிவினைவாத இயக்கம் ஆயுத பாணியாக மாற்றமடைந்து ஏகாதிபத்தியத்தின் தந்திரேபாயத்திற்கு இறையாகி நாட்டை பிரிப்பதற்காக செயற்படுகையில் நாடு பிரிந்து துண்டாடப்படும் அச்சுறுத்தலை தோற்கடிப்பதற்காக செயற்பட எமக்கு நேரிட்டது, அது தவிர்க்க முடியாத ஒன்றாகும். மக்களின் ஒற்றுமைக்காக பாட்டாளி வர்க்கத்தின் ஒற்றுமைக்காக நாட்டை பிரிக்கும் அச்சுறுத்தலை தோற்கடிக்க வேண்டியிருந்தது. ஏகாதிபத்தியத்தின் நோக்கம் உபாயங்களை இலங்கை மண்ணில் வெற்றிப் பெறுவதை தடுப்பதற்காக செயற்பட வேண்டியிருந்தது. அதன்போது நாம் எமது கடமையை செய்தோம். அதில் தற்காலிக நன்மைகளை முதலாளித்துவ அரசாங்கம் பெற்றுக் கொண்டபோதிலும், நீண்ட காலத்துக்கு எமது நாட்டுக்கும் மக்களுக்கும் இடம்பெறவிருந்த பாதிப்பினை தற்காலிகமாகவேனும் தோற்கடிப்பதற்காக நடவடிக்கைகள் எடுக்கவும் அதன் பங்குதாரர்களாகவும் எமக்கு நேரிட்டது. வர்க்கத்தின் நன்மைக்காக நாம் அப்பணியை நிறைவேற்றினோம்.
கடந்த வருடம் மே மாதம் பிரிவினைவாத்தின் ஆயுத முன்னணி தோல்வியுற்று யுத்தம் முடிவடைந்தவுடன் நாட்டு அரசியலில் குறிபிட்டளவு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இன்னமும் தேசியப் பிரச்சினை தீர்க்கப்படாது உள்ளபோதிலும் அது இப்போது நிலைகொண்டிருப்பது பிரிவினைவாத ஆயுத இயக்கம் பலம் வாய்ந்ததாக இருந்த காலத்தில் இருந்த இடத்தில் இல்லை. இப்போது முதலாளித்துவ அரசாங்கம் யுத்தத்தை காட்டி தமது பலவீனத்தை மூடிமறைத்துக் கொள்ள முடியாது. அவர்கள் சமூக பொருளாதார பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக் கொடுத்தாக வேண்டும். ஆனால் அவர்களிடம் தீர்வு கிடையாது. அவர்கள் தோல்வியடைந்துள்ளனர், தற்போதய ராஜபக்ஷவின் ஆட்சி யுத்தம் முடிவடைந்த நிலமைகளை சாதகமாக கொண்டு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்குப் பதிலாக தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்குப் பதிலாக தமது குடும்பத்தை நிலைபெறச் செய்வதற்காகவும் பணத்தை சூரையாடி குவிப்பதற்காகவும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அதன் காரணமாக மக்களது பிரச்சினைகள் நாளுக்கு நாள் உயர்வடைகிறது. ராஜபக்ஷ அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை நாளுக்கு நாள் தகர்ந்து வருகிறது. இந்த நிலமைகளில் நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள சகல சக்திகளுக்கும், மக்கள் பிரிவினருக்கு தீர்வு அவசியமாகிறது. தற்போதய ஆட்சியின், தற்போதய முதலாளித்துவத்தின் ஒடுக்குமுறைக்கு உள்ளான தாங்களது ஒடுக்குமுறையிலிருந்து மீள்வதற்கு காரணங்களை தேடும் மக்கள் சகதிகளுக்கு உண்மையான கருத்தியல் மற்றும் அரசியல் தலைமைத்துவத்தினை பெற்றுக் கொடுத்து அவர்களை ஒன்றுதிரட்டி சமூக மாற்றத்திற்காக அர்பணிப்புடன் செயற்படும் பணியினை எமக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. எமது பிரதான பாத்திரம் அதுவாகும்.
தற்போதய நெருக்கடிக்கு தீர்வினை தேட முடிவது நபர்களை மாற்றுவதன் மூலமாகவோ முகத்ததை மாற்றுவதன் மூலமாகவே அல்ல. நிலவும் சமூக முறையினை உள்ளடக்கத்தில் மாற்றுவதன் மூலமாகவென மக்களுக்கு கற்றுக் கொடுத்து அவர்களின் அன்றாடப் பிரச்சினைகள் சிக்கல்கள் நிமித்தம் போராடி, ஜனநாயகம் மனிதவுரிமை, பொருளாதார நிவாரணங்களுக்காக பரந்தளவிலான மக்கள் சக்திகளை கட்டியெழுப்பி போராடி அச்சக்திகளை சமூகத்தின் பூரணமான மாற்றத்திற்காக வழிநடத்துவது எமது கடமையாகும். எமது பாததிரம் அதுவே. அதை மிகச் சிறப்பாக செய்வதற்கு நாம் எமது சக்திகளை இப்போது தயார்படுத்தி வருகின்றோம்.
தமிழாக்கம்
இராமலிங்கம் சந்திரசேகர்
ஜே.வி.பியின. மத்திய குழு உறுப்பினர்
ஜேவிபியின் அரசியல் பங்களிப்புத் தொடர்பான காத்திரமான மதிப்பீடு ஒன்று அவசியம். இனியொரு கூறுவது போல ஜேவிபி இனவாதக் கட்சி என்பதில் தமிழர் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.விமல் வீரவன்ச கூட ஜேவிபியின் உருவாக்கம் தான். இவர் இன்று மகிந்தவின் கொத்தடிமை.
ஜே.வீ.பி. பற்றிய காத்திரமான மதிப்பிடுகள் காலத்துக் காலம் பல்வேறு இடதுசாரிகளாலும் செய்யப்பட்டே வந்துள்ளன. தமிழில் நல்ல பல கட்டுரைகள் வந்துள்ளன.
1969இல் சண்முகதாசன் ஜே.வீ.பி. பற்றி முன்வைத்த மதிப்பீட்டிலிருந்து தொடங்கினால் ஜே.வீ.பி. ஒரு சிறுமுதலாளித்துவ பேரினவாதச் சாயல்களுடைய (மார்க்சியத் தோற்றம் காட்டிய) கட்சியாகத் தொடங்கி எப்படி இப்போது அப்பட்டமான பேரினவாதக் கட்சியாகியது என விளங்கிக் கொள்ளலம். விமல் வீரவன்ச போன்றோர் ஜே.வீ.பி.யின் சந்தர்ப்பவாத அரசியலின் தவிர்க்க இயலாத துணை விளைவுகள் என்பதும் விளங்கும்.
சிரிமாவைப் பயன்படுத்தலாம் என்ற LSSPயின் முட்டாள்தனமான மதிப்பீட்டுக்கும் மகிந்தவைப் பயன்படுத்தலாம் என்ற ஜே.வீ.பி.யின் முட்டாள்தனமான மதிப்பீட்டுக்கும் இடையே வேறுபாடு சிறிதே.
சிவா,
சண்முகதாசனின் இலங்கை வர்க்கப்போராட்டத்தின் தவறான முடிவு தான் ரோகண விஜயவீரவின் தோற்றம். தேசிய இனப் பிரச்சனையில் அவர் சார்ந்த கட்சியின் தவறுகள் தான் பிரபாகரனின் தோற்றம். இலங்கை மாவோயிஸ்டுகளின் தவறுகள் விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும். அவர்கள் தொடர்பான காத்திரமான மதிப்பீடு இன்றைய முக்கிய தேவை. நோர்வேயைச் சேர்ந்த சில தமிழர்கள் இவ்வாறான மதிப்பீடுகளை சில ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்திருந்தனர் ஆனால் முடிவுற்வில்லை.
சண்முகதாசனோ வேறெவருமோ தவறுகட்கு அப்பார்பட்டவரென்பதோ என் நிலைப்பாடல்ல. ஆனால் அவரது தவறுகள் மூலமே ஜே.வீ.பி. உருவாகி வளர்ந்த்தது என்பதும் பிரபாகரனின் தோற்றத்துக்குக் காரணமானது என்ற வாதங்கட்கான அடிப்படைகளை முன்வைத்தாற் பயனிருக்கும்.
மதிப்பீடுகளைச் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்தும் இன்னும் முடிவுறவில்லை என்பதே முதலில் விமர்சனத்துக்குரியதல்லவா!
” நீண்ட காலத்துக்கு எமது நாட்டுக்கும் மக்களுக்கும் இடம்பெறவிருந்த பாதிப்பினை தற்காலிகமாகவேனும் தோற்கடிப்பதற்காக நடவடிக்கைகள் எடுக்கவும் அதன் பங்குதாரர்களாகவும் எமக்கு நேரிட்டது. வர்க்கத்தின் நன்மைக்காக நாம் அப்பணியை நிறைவேற்றினோம்.”…
இந்த ஐயா எந்த வர்க்கத்தை பற்றி கதைக்கிறார் ? பெரும்பாலான சிங்களவர்கள் தமிழரை வேற்று கிரகத்து மனிதர்கள் என்ற ஓர் நினைப்பை இப்படியான இனவாதிகள் தான் உருவாக்கி கொடுக்கிறார்கள்.
“தேசிய இனப் பிரச்சனையில் அவர் சார்ந்த கட்சியின் தவறுகள் தான் பிரபாகரனின் தோற்றம். .என்கிறார் செங்கடல்
மாணவர் பேரவை ,பின் இளைஞர் பேரவை போன்றவற்றை சண்முகதாசனா உருவாக்கினார் ? புது கதையாக இருக்கிறது .?
” நோர்வேயைச் சேர்ந்த சில தமிழர்கள் இவ்வாறான மதிப்பீடுகளை சில ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்திருந்தனர் ஆனால் முடிவுற்வில்லை.”என்கிறார் செங்கடல்
யார் அந்த விமர்சகர்கள் ?