“கருத்துக் கூறிய ஒரே காரணத்திற்காக” புலி ஆதரவுக் காடையர்களால் இன்று (23.06.2011) பிற்பகல் ராஜ் என்பவர் மிருகத் தனமாகத் தாக்கப்பட்டுள்ளார். முப்பது வருட வன்முறைக் கலாச்சாரத்த்தின் அவமானகரமான குறியீடுகளாகத் திகழும் இந்தக் காடையர்கள் பிரித்தானியச் சட்டவரம்புகளைக் கூட மதிப்பதில்லை.
ஏழாம் திகதி ஜுன் மாதம் புலி இலச்சனை பொறிக்கப்பட்ட கொடியைப எமது போராட்டங்களில் உபயோகப்படுத்துவதன் அரசியல் பின்விளைவுகள் குறித்த விவாதம் ஒன்றில் கலந்துகொண்டு தனது கருத்துக்களைத் தெரிவித்த ராஜ் என்பவரே ராம் என்ற புலி ஆதரவளரும் செயற்பாட்டாளருமான ஒருவரால் தாக்கப்படுள்ளார். நியூ மோல்டன் பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட ராம் முன்னதாக பிரித்தானிய தமிழ் அமைப்பு ஒன்றுடன் தன்னை அடையாளப்படுத்தி அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருபவர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரித்தானிய நியூ மோல்டன் பகுதியில் காரை நிறுத்திவிட்டு வன்னியன் பூட் என்ற பலசரக்குக் கடையில் கொள்வனவு செய்யச் சென்ற ராஜை அங்கு தெருவில் நின்ற ஒருவர் அழைத்திருக்கிறார்.
முதலில் கடைக்கு முன்னால் ராஜ் ஐத் தாக்கிய ராமின், காடைத்தனத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக கடைக்குள் சென்றுள்ளார். அவ்வேளையில் தனது கைத்தொலைபேசியில் வேறு சிலரையும் அங்கு தாக்குதலுக்கு அழைத்த ராம், ராஜைத் தொடர்ந்து மிரட்டியுள்ளார். இரும்புக் கம்பி ஒன்றை எடுத்து கொலை செய்யப் போவதாகப் பயமுறுத்தல் விடுத்துள்ளார். பின்னர் சோடாப் போத்தல் ஒன்றை உடைத்து ராஜைக் கொலை செய்ய முற்படும் போது அங்கிருந்த பலர் அவரைத் தடுத்துள்ளனர்.
இதற்கிடையில் பிரித்தானியக் காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் அங்கு விரைந்துள்ளனர்.
போலீசாரைக் கண்ட ராமும் உம் பின்னதாக அவருடன் இணைந்து கொண்ட ஏனைய காடையர்களும் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
இலங்கையில் ராஜபக்ச குடும்ப அரசின் காடைத்தனத்திற்கும் பேரினவாத அரச வன்முறைக்கும் எதிரான செயற்பாட்டாளர்களின் கருத்துக்களை எதிர்கொள்ள முடியாத இலங்கை அரச கோளைகள் வன்முறையை மட்டுமே தமது ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர். அரச பயங்கரவாதிகளின் அதே வழிமுறையில், கருத்துக்களை எதிர்கொள்ள முடியாத காடையர்கள் தமது கையாலாகத் தனத்தை வன்முறையாக கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
தமிழ்ப் பேசும் மக்களின் ஒடுக்கு முறைக்கு எதிரான வீரம் செறிந்த விடுதலை போராட்டத்தை அதிகாரங்கள் சில மாதங்களில் இரத்தமும் சதையுமாக சிதைத்து, அப்பாவி மக்களின் இரத்ததை நந்திக்கடலோடு கரைத்த கோரத்தின் அவலக் குரல்கள் இன்னும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.
நியாயமான போராட்டம் இரவோடிரவகச் சாம்பலாக்கப்படதற்கு ஜனநாயக மறுப்பும், கொலைகளும், வன்முறைகளும் அவற்றை நிறைவேற்றும் காடையர்களும் பிரதான காரணங்களுள் சிலவாகும்.
முப்பது வருடப் போராட்டம் வன்முறையும், வக்கிரமும், முட்டாள்தனமும், பழிவாங்கும் உணர்வும், சுயநலமும் கொண்ட மனநோயாளிகளையும் எம்மத்தியில் உருவாக்கியுள்ளது. ராம் என்பவர் அந்த வன்முறைக் கலாச்சாரத்தின் முகப்பு.
ஒடுக்கும் இலங்கை அரச பாசிசத்தை வளர்க்கும் சமூகவிரோதச் செயல்களின் ஆரம்பமே ராம் போன்றவர்களின் காடைத்தனம்.
மக்கள் பற்றும், சமூக பிரக்ஞையும் கொண்ட அனைத்து ஊடகங்களும் இந்த வன்முறைக் கலாசாரத்தை அனைத்து வழிகளிலும் எதிர்க்க வேண்டும். ஜனநாயக விழுமியங்களையும், கருத்துரிமையையும், பாதுகாக்கத் தவறுகின்ற ஒவ்வொரு தடவையும் இன்னொரு முள்ளி வாய்க்காலை புலம் பெயர் நாடுகளிலிருந்து ஏற்றுமதி செய்யத் தயாராகிறோம். தேசிய விடுதலைப் போராட்டத்தையும் ஈழ மக்களின் உணர்வுகளையும் இன்னொரு தடவை சிதைக்க ஆரம்பித்துவிட்டோமா என அச்சம் ராமிலிருந்து ஆரம்பமாகிறது.
ராம் என்ற புலி ஆதரவாளரும் செயற்பாட்டாளரும் ஏன் கோத்தபாயா போடும் எலும்புத்துண்டை கடிப்பவராக இருக்கக்கூடாது…. ராஜ் என்பவர் ஏன் மகிந்தர் போடும் எலும்புத்துண்டை கடிப்பவராக இருக்கக்கூடாது…. இந்தக்கோணத்தில் இந்தப் பதிவும் ஆராயப்படவேண்டும். நானே பிரபாகரனின் அடுத்த வாரிசு, அண்ணன் தம்பி என்று ஆரம்பப்போராளிகளும் அடங்கியதாக கொடிபிடித்தவர்கள் பலரின் முகத்திரைகள் முள்ளிவாய்க்காலின் பின்பு வேகமாக கிழிந்து வருகிறது.
சிறீலங்காவில் அப்பாவி மக்களுக்கு எது நடந்தாலும் அது புலிதான், புலிதான்செய்தது என்ற கூச்சல் வானைப்பிளக்கும் இது சிங்கள அரச கலாச்சாரத்தில் ஒன்று. தற்போது புலிகளை அழித்துவிட்டோம் என்று சிறீலங்காவின் தலைவரான மகிந்தரே வாய்விட்டு சொல்லிவிட்டதால் இந்தக் கலாச்சாரத்தை அங்கு தொடரமுடியாது தவித்தாலும், அந்தக் கலாச்சாரத்தை எப்படியோ புலம்பெயர வைத்துவிட்டதாகவே இங்கிலாந்து நிகழ்வு வெளிப்படுத்தி நிற்கிறது… இது ஏனைய நாடுகளுக்கு பரவினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
இந்த வீரத்தை முள்ளிவாய்க்காலில் காட்டியிருக்கலாம்.கைகள் பின்னுக்கு கட்டப்பட்டு சுடபட்ட கேவலத்தை தான் உலகமே பார்த்ததே.அப்போ எங்கே போனது இந்த புறநானூற்று வீரம்.?
போரில் போரிடும் வலு குறைந்த தரப்பு வீரர்கள் உயிருடன் பிடிபடுவதும் சரணடைவதும் சாதரணமான விடயம். இதில் எந்தக்கேவலமும் இல்லை. நிராதயுதபாணிகளான இவர்களை கொல்வதுதான் தப்பு. இதுதான் சாதரண உலகநடைமுறை. இதை மறுக்கும் நீங்கள் பொதுமக்களை திட்டுமிட்டு கொல்வதும் பிணத்தை புணர்வதும்தான் மேன்மை மகிமையென நம்புகிறீர்களா! பிரித்தானியாவில் பொலிஸ் நீதிமன்றம் எனும் பக்கச்சார்பற்ற கட்டமைப்பு இருக்குத்தானே அவர்கள் வன்முறையாளரை தண்டிப்பார்கள். அதுவும் போதிய கண்கண்ட சாட்சிகள் இருப்பது வன்முறையாளரின் தண்டனையை உறுதிப்படுத்தும்.
//நிராதயுதபாணிகளான இவர்களை கொல்வதுதான் //
புலிகளால் கொல்லப்பட்ட தமிழர் யாவரும் ஆயுதங்குழுடனா இருந்தார்கள். அந்த்க்கொலைகெல்லாம் யார் யாரிடம் நீதி கேட்பது? அவையெல்லாம் கொலைக்ளில்லையா? எல்லோரும்துரோகிகளா? அவ்வாறு துரோகியானவ்ர்களை அ விற்கு அடுத்த எழுது தெரியதவ்ர்கள் சுட்டுக்கொல்லலாமா?
அதனையெல்லாம் கைகட்டி பார்த்து, கொண்டாட்டங்கள்நடத்தி
அதனை படமாக்கி விற்ரீர்களே. இதுவா உங்களின் தமிழரின் உருமைப்போராட்டம்? இப்போ இலங்கை அரசினை குற்ரம்
சொல்லி உங்களைத்தப்ப வைக்கவே. உங்களின் தலியீட்டால்தப்பப்போவது இலங்கை அரசேயாகும் புலிகளல்ல.
-துரை
அது யாராக இருந்தாலும் தப்புதான் ஆனால் உம்மைப்போன்றவா்கள் ஒரு தரப்பு தவறுகளை மட்டும் கூறிக்கொண்டிருப்பதன் காரணம் என்ன?
உங்கள் செயல் சிங்கள பேரினவாதிகளை நியாயப்படுத்த முயல்வதை உங்களால் உணரமுடியாமல் போவதேன்?
புலிகளால் எனது உயிர் நண்பா்களை இழந்தவனாகிய நானே எழுதாததை நீங்கள் எழுதுகிறீா்கள் காரணம் என்ன? பொது நியாயத்தை எழுதாத தமிழன் விலைபோனவனாகவே கருதப்படுவான்.
நீரும் ஒருதரப்பு (எதிரியின்) தவறினை மட்டுமே சுட்டிக்காட்ட விரும்புகிறீரே அன்றி மறுபுற (புலிகளின்) தவறுகளைச் சுட்டிக் காட்ட விரும்பவில்லையே……….!!!!
அப்படியாயின் நீர் யாருக்கு விலை போயுள்ளீர்…!!…??
புலிகளின் குறைகளை கூறும் போது பேரினவாதிகளை நியாயப்படுத்தவேண்டிய அவசியம் என்ன என்பதை உம்மால் விளக்கமுடியுமா?
அநேகமாக நீா் எனது பதிவுகளை பார்த்ததே இல்லை என்றே நினைக்கிறேன். நான் தமிழன் கூலிக்கு மாரடிக்கும் அற்பப்பிறவியல்ல நான் புலிகளை ஒருபோதும் ஏற்றுக்கொண்டவனல்ல அதேபோல,
எனக்கு சிறிசபா,உமா,பத்மநாபா,பாலகுமார் போன்ற அத்தனை தலைவா்கள் செய்த கொலைகளும் தெரியும் ஆதலால் உம்மைப்போல முட்டாள்தனமாக எழுதமுடியாது.
//போரில் போரிடும் வலு குறைந்த தரப்பு வீரர்கள் உயிருடன் பிடிபடுவதும் சரணடைவதும் சாதரணமான விடயம். இதில் எந்தக்கேவலமும் இல்லை. நிராதயுதபாணிகளான இவர்களை கொல்வதுதான் தப்பு.
சரி தான்.
புலிகள் சகோதரப் படுகொலை செய்த போது இதே போல் எத்தனையோ போராளிகள் சரணடைந்தார்கள். அவர்கள் கொல்லப் பட்ட போது நீங்கள் வெற்றிக் களிப்பில் இருந்த போது இந்த அறிவு வரவில்லையா?
குரு ,
உமது கருத்து மிகவும் பிற்போக்குத்தனமானது.
யாழில் இன்று அட்டகாசம் புரியும் இராணுவத்தினா் ஒரு காலத்தில் புலிகள் ஆனையிறவு முகாமை வீழ்த்திய பின்பு யாழ்ப்பாணத்தை பிடிக்கப்போகின்றார்கள் என்ற பயத்தில் மக்களிடம் காப்பாற்றும்படி கெஞ்சிய வரலாறும் உண்டு. தலைமைகளின் முட்டால்தனங்களை வைத்து உண்மையான வீரமுடன் போராடிய போராளிகளை ஒருபோதும் தப்பாக எடைபோடாதீா்கள், ஒருவனை கட்டிவைத்து சுடுபவா்கள் ஒருபோதும் வீரா்களாக இருக்கமுடியாது.
அப்படியாயின் புலிகள் வீரர்கள் இல்லையா?!!…எத்தனை பேரை மின் கம்பத்தில்க் கட்டி வைத்துத்தானே சுட்டுக் கொண்றனர். அப்பொழுது அவர்களின் வீரம் எங்கே போனது??…!!
நிச்சயமாக கோளைகளே,அதை புலிகள் மட்டும் செய்யவில்லை அத்தனை இயக்கங்களும் செய்தன ஆனால் உம்மைப்போன்றவா்கள் அதை எதிர்க்காமல் விட்டுவிட்டு இன்று கதைவிடுகிறார்களே அதுவும் கோளைத்தனமே.
ரெலொ பொபி, தாஸ் என்பவரை சுட்டதை நீா் அறிந்திருக்கவில்லையா அதுவும் கோளைத்தனமே.
இப்போது கேள்வி என்னவென்றால் இந்த கோளைத்தனமான செயல்களை புலிகள் செய்தவா்கள் ஆதலால் ராணுவம் செய்ததில்,செய்வதில்,செய்யப்போவதில் என்ன தவறென்றா கேட்கிறீா்கள்??
புலத்து பழைய புலிகளை கம்சா காசுகொடுத்து வாங்கி வன் முறையில் இறக்கி உள்ளார். அவர்களில் ஒருவராகவும் ராம் இருக்க முடியும். இதற்கு முன்னர் சில இணையத் தளங்களும் வன்முறையை உருவாக்க துணை போகின்றன. இவர்களில் பலருக்கு இந்த தளங்கள் இலங்கை தூதரகத்தோடு தொடர்பான கொம்பனிகளின் விளம்பரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த வன்முறையைக் கண்டிக்காத ஒவ்வொருவனும் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஹம்சாவின் ஆள்தான்
பின்னூட்டக்ககாரர்களே! கொஞ்சம் உங்களைத் திரும்பிப் பாருங்கள். எல்லாவற்றுக்கும் அரசாங்கம் புலிகளைக் காட்டடியது என்கிறீர்களே நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? நீங்கள் மகிந்தவைக் காட்டுகிறீர்கள்.
உங்களோடு வன்முறை இருப்பதை நீங்கள் உணரவில்லையோ? நீங்கள் வன்முறையை விதைக்காதவர்களாயிருங்கள் அதுவே போதும். ராம் ஒரு புலி அபிமானியாக இருந்தால் அவர் தனது கொடிக்கு எதிராக பேசுபவர் மீது கோபத்தை காட்டவே செய்வார். அவர் எழுத்தில் வன்முறையை விதைக்க முடியாதவராயிருக்கலாம்.
விதைத்ததை அறுவடை செய்தே ஆக வேண்டும்.
தெருச்சண்டியன்மார்கள் புலிவேசம்போடுகின்றார்களா அல்லது புலிகள்
தெருச்சண்டியர்களாக மாறிவிட்டார்களா? அல்லது எல்லோரும் ஒரே கூட்டம்தானா? தமிழரின் பணத்தைப்பறித்து தமிழன் வாழ்ந்தாலென்ன,
தமிழனை தமிழன் கொன்றாலென்ன மேற்குலகம் கவனமெடுக்காது.
இந்த லட்சணத்தில்
உருமை அரசியல்போராட்டம் வேறு. இறுதிநேரத்தில் எல்லாநாடுகழும் கைவிட்டதன் காரணத்தை இனியாவது உணர்வார்களா இவர்கள்?
தமிழர்,புலிகள் என்னும்போர்வைகளைப் போர்தே பலதிருட்டுக்கழும்,
துரோகத்தனங்கழும் உலகெங்கும் அரங்கேறுகினறனெ. இதனை ஒரு தமிழன் சொன்னால் அவ்ன் துரோகி. மேல்நாட்டவ்ர்கள் பிடித்து அம்பலமாக்கினால்
அதனைப்பற்ரி யாரும் பயத்திலும் வெட்
க
திலும் வாய் திறந்து பேசமட்டார்கள்.
இப்படியான ஒரு சதாயமாக வாழுவோரிற்கு அரசியல் உருமை,போராடமென்பதெல்லாம் எதற்கு?-துரை
லண்டன் மற்றும் பாரிஸ் இருந்து வெளிவரும் அச்சு, இண்டர்னெட் ஊடகங்களில் தொடர்ந்து கருத்தியல் வன்முறைக்கு ஆதரவாக மிக மோசமான கருத்து சுதந்திர மறுப்பை ஆதரித்து எழுதிவருகிறார் ஒருவர்.
இதை ஒரு இணையத்தளத்தில் வந்தது.
விலை போகும் ஆவணங்கள்
நாங்கள் எதைக் கேட்டோம்?
அந்த மனிதன் – இந்த மனிதன் – எந்த மனிதனும்கேட்பதைத்தான் நாமும் கேட்டோம்இ
அடித்தார்கள்… அடித்தார்கள் அண்ணனும் அடித்தான் தம்பியும் அடித்தான் அயலவனும் அடித்தான் அந்நியனும் அடித்தான்அவர்கள் அடித்ததை இவர்கள் பார்த்தார்கள்அநியாயம் என்றார்கள்இவர்கள் அடித்ததை அவர்கள் பார்த்தார்கள்அநியாயம் என்றார்கள்உடல்கள் இரத்தத்தில் தோய்வதைஆகாயத்தில் நின்றே பார்த்தார்கள்
குவிந்தது மனித உடல்கள்எண்களாய் ஒட்டிக்கொண்டது கணனிக்குள்இ7000 என முணுமுணுத்தார்கள்அவசரப் படாமலே ஆவணங்களை அடுக்கி வைத்தார்கள்இ
இன்று-நாங்கள் ஆயுதங்களைக் கைவிட்டதால்இஅவர்கள் ஆவணங்களை விற்கத் தயாராகிவிட்டார்கள்!
– றிஷா
இது போன்ற காடைத்தனங்களுக்கு எதிராக எடுக்கப் படும் சட்ட நடவடிக்கைகள் ராம் போன்ற காடையர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்.
இந்த ராம் என்ற காடையன் ராஜ் என்ற மாற்று கருத்துடயவனை தாக்கியதாக புலி ஆதரவாளன் ஒருவன்நிலைப்பாடு எடுப்பான் என்றால் அவன் மகா தவறிழைக்கிறான்
என்றுதான் அர்த்தம் கொள்ள வேண்டும்.
இந்த கருத்தை வன்முறையால் கையாளும் கலாச்சாரத்தை பிரித்தானியாவில் இனி யாரும் செய்ய துணியாதவாறு ராம் தனிமைபடுத்தபட்டு கடுமையாகாக தண்டிக்க படவேண்டும்.
புலிகள் ஈழத்தில் மட்டும் அல்ல புலம் பெயர் தேசங்களிலும் தமிழ் மக்களுக்கு எதிராக வன்முறையில் ஈடு பட்டார்கள். இதனை எதிர்க்க பலர் துணியவில்லை. ஏன்? பயமா? முதுகெலும்பு இல்லையா? இடதுசாரியம் பேசிக்கொண்டு மேற்குலகின் சட்டியை வழித்து நக்கும் இவர்கள் மேற்குலகில் சாதாரண மக்களின் உரிமைகளை பாது காக்க சட்டம் இல்லை என்கின்றனரா? இல்லை மேற்குலகிலும் புலிகளின் பாசிச ஆட்சி நடக்கின்றது என்கின்றனரா? குறைந்த பட்சம் புலிகளின் பெயரால் அல்லது இவர்கள் குறிப்பிப்பிடும் புலி காடையர்களால்?
நிகழ்த்தப்படும் வன்முறைகளை அந்த அந்த நாடுகளின் சட்ட வரன் முறைகளுக்கு ஏற்ப அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த முடியாமல் போவது ஏன்?
நாய்கள் ஓநாய்கள் பிற மிருகங்கள் எல்லாம் ஒன்றாய் சேர்ந்து கத்துகின்றன ஆனால் அவற்றின் நோக்கங்கள் வேறு அவ்வளவு தான். புலியை பாய்ந்து பாய்ந்து கடிப்பதுக்கு தான் இவர்களுக்கு இலாயக்கு புலிப் பாசிசத்தால் அல்லது புலிப் பாசிசத்தை காட்டி மகிந்தவின் பாசிசத்தை மறைக்கும் நாயுண்ணிகள் நாயையும் வாழவிடாது நாயை வைத்து மனிதரையும் வாழவிடாது மிக அகக் கொடிய பாசிஸ்ட்டுக்கள் இவர்கள். புலியின் வால் இவர்களுக்கு ஏன் இப்போதும் தேவைப் படுகிறது? புலியின் கொட்டை தொடக்கம் அனைத்து அவயங்களும் விற்று தீர்ந்து விட்டன அல்லது அறுத்து வீசப் பட்டன. இந்நிலையில் புலிவால் தான்
இவர்களின் வங்குரோத்து அரசியலுக்கு தேவையானது. வேறு என்ன இவர்களிடம் உண்டு எத்தகைய அரசியலும் அற்ற வீண் பிதற்றல் களுக்குள் உளறுவதை விட பிரபாகரனின் அரசியல் மேலானது. மலட்டுத்தனங்களில் இருந்து எதுவும் உற்பவிக்க முடியாது. லண்டனிலும் கனடாவிலும் இருந்து கொண்டு புலிகளுக்கு எதிராக பேசுவதன் மூலம் அடக்கி ஒடுக்கப் படும் இனங்களின் விடுதலை கிடைத்து விடாது
(இனவிடுதலை குறித்த நலன் இவர்களிடம் துளி அளவும் இல்லை) வெளிநாட்டு சாராயத்தில் (முதலாளித்துவ நாடுகளின்) மூழ்கி பூராயம் கதைக்கும் இவர்கள் ரஷ்ய சீனா, கிய்பா போன்ற நாடுகள் சென்று தமது மண்டையையும் வயிற்றையும் கழுவட்டும். இல்லாது விடின்
முன்னாள் சோஷலிச வாதி மனித உரிமை வாதி மகிந்தாவிடம் சென்று தமக்கே உரிய அரசியலை பேசுவது தான் நல்லது . எது சரியோ அது நடக்கட்டும்.
இது ராமின் தவறல்ல! அவரைத்துண்டுபவர்களின் தவறு. இதயமற்று இதயத்தின் பெயர் கொண்டு எழுதபவர்களின் தவறு! இதற்கு சணல் 4 ஆவணமும் ஒரு காரணம்! ஆத்திரமூட்டலை வளர்ப்பவர்கள் இருக்கும் வரை இந்த வன்முறையை ஒளிக்க முடியாது! யூலை கலவரம் தொடங்கியதும் ஆத்திரமூட்டலாலே. அதிர்வு ஈழநாதம் பிரித்தானிய தமழர் பேரலை போன்றவரர்களின் அறிவுகெட்ட அரசியல் புலம்பெயர் தமிழரையும் மோசமான இனவாதிகள் அக்குவதுடன் வன்முறை கொண்ட ஜனநாயக விரோதிகளாக மாற்றியுள்ளது. சனல் 4 ஆவணம் இன்று பல உண்மைகளை கொண்டு வந்ததாக பார்த்தாலும் ஒரு பக்க நியாயத்தையே சொல்கிறது. புலிகளால் பச்சை மட்டை முதல் துப்பாக்கி சூடு வாங்கியவர்களை அது நிராகரித்தது சனல் 4 தவறல்ல! பிரித்தானிய தமிழர் பேரவையின் தவறு. முதுகெலும்பற்ற அவர்களின் அரசியல் தவறு. இன்று இதனால் அரசியலில் வெற்றி பெற்றது மகிந்தாவே!
வன்முறைக் கலாச்சாரத்தால் நம் வாழ்வு வழி நடத்தப்படுகிறது,என்பதை இன்னமும் நீங்கள் புரிந்து கொள்ளவில்லை.
மேற்குலகின் சனநாயகத்திற்கும்,சட்ட நியதிகளுக்கும் சேவகம் செய்ய உங்களுக்கு ஈழப் போராட்டம் ஒரு கைப்பிடி.
நாலு முட்டாள்கள்,தங்கள் விளம்பரத்திற்காக,அர்த்தமற்ற வாதம் செய்வதும்,அடிபட்டுக் கொள்வதும்,எந்த எசமானர்களை திருப்திப்படுத்த என்பது வெளிப்படை.
இதில் நியாயம் பிளக்கிற இணையங்கள் எல்லாம் யாவாரத்திற்குத்தான் என்பதும் அடிப்படை.
மக்கள் எழுச்சியும்,சரியான தலைமையும் அற்ற இனத்தின் சிறிய விடயங்களைப் பெரிதுபடுத்தல்,பெரிய உதவிகளை நோக்கிய பயணந்தான்.
வீழ்ந்து போனதை வேடிக்கை பண்ணுகிற வீணர்களுக்கு வழி எதுவும் தெரியாது,
பழி சொல்வதைத்தவிர.
டங்குவார் ஜூலை கலவரம் J . R னால் நன்கு திட்டமிடப்பட்டு அதற்குரிய காடையர்கள் கூட்டமும் திரட்டப் பட்டு அப்போதைய விமானக்
கடத்தல் மன்னன் (ஓசி கொரியா என நினைக்கிறேன்)தலைமையில் தமிழர்களை தாக்க குழுவும் திரட்டப் பட்டது. தமிழர்களின் பொருளாதார இலக்குகள், தமிழர்களின் குடியிருப்புகள் என்பன திரட்டப் பட்டு விட்டன. திருநெல்வேலி தாக்குதல் சிங்கள காடையர் அரசுக்கு ஒரு சாட்டு மாத்திரமே. தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பு படுகொலை பற்றிய விபரம் அப்போதைய கொழும்பு மேயர் கணேசலிங்கத்திற்கும் (இவர் எனது உறவினர்) தெரிந்து இருந்தது பதவி மோகம் அடிமை புத்தி மேட்டுக்குடி விசுவாசம் என்பன இவ் இன அழிப்பு படுகொலையை தெரிந்து இருந்த அரச விசுவாச தமிழர்களை வெளி உலகிற்கு இதனை அம்பலப் படுத்த வேண்டும் என்ற மனம் வரவில்லை. இன்றும் சிங்கள பேரினவாதத்தின் எலும்பு துண்டுக்காய் அடக்கு முறைகளுக்கு துணை போகின்றவர்கள் போல்
அன்று அவர்களும் இருந்தனர். ஜூலை கலவரம் என்பது உண்மையில் பெரிய பாதிப்பை மலையாக வம்சாவளி உழைக்கும்
வர்கத்தையே பெருமளவில் பாதித்தது. டங்குவார் புலிகளில் உள்ள கோபம் அல்லது வேறு எதுன் காரணக்களால் வரலாற்றை திரிக்க வேண்டாம். சகலருக்கும் சொல்கிறேன் உங்களின் வியாபாரங்களுக்கு அடக்கப் பட்டு கொண்டிருக்கும் எங்கள் மக்களின் குரல் வளையை கடிக்க வேண்டாம். இதனால் உங்களின் குரல் வளையும் நெரிக்கப் படும் காலம் வெகு தொலைவில் இல்லை என எச்செரிக்கிறேன்.
very good