தமிழீழக் கோரிக்கை இந்திய ஒருமைப்பாட்டிற்கும் இறையாண்மைக்கும் எதிரானது என்று மத்த்ய அரசு அறிக்கை வெளியானதும் கருணாநிதி தனது டெசோ மாநாட்டின் உள்ளடக்கத்தையும் மாற்றியமைத்திருந்தார். பின்னதாக தமிழீழத்தைக் கைவிட்ட சந்தர்பவாதம் அம்பலமானதும், புதிய அறிக்கை ஒன்றை கருணாநிதி வெளியிட்டுள்ளார். தமிழீழம் என்ற குறிக்கோளைத் தான் கைவிடவில்லை என இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழ் நாட்டைத் தளமாகக் கொண்டு இலங்கையில் ஒடுக்கப்படும் தமிழ்த் தேசிய இனத்தின் தலைவிதியைக் கையில் எடுத்துக்கொண்டதாகக் கூறி, காட்டிக்கொடுத்தவர்களுள் முதன்மையானவராகக் கருணாநிதி கருதப்படுகிறார். 2009 மே மாதம் நடைபெற்ற இனப்படுகொலையின் போது கருணாநிதி எவ்வாறு ஒத்துழைத்தார் என்பதை இலங்கைப் பாதுகாப்புச் செயலர் நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டிருந்த போதும் இதுவரை கருணாநிதி அதற்கு மறுப்புத் தெரிவிக்கவில்லை.
கருனாநிதி புதிதாக வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்களின் உரிமைகளைக் கோரிப் பெறுவற்கும், போரினால் ஏற்பட்ட இன்னல்களைக் களைவதற்கும் என்ன நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது தான் ஆகஸ்ட் 12ம் தேதி சென்னை டெசோ மாநாட்டின், திட்டமாகவும், தீர்மானமாகவும் இருக்கும்.
மாநாட்டில் இத்தகைய தீர்மானங்கள் விவாதிக்கப்படுவதாலோ அல்லது நிறைவேற்றப்படுவதாலோ தமிழ் ஈழம் என்ற குறிக்கோளை திமுக கைவிட்டு விட்டதாக கற்பனை செய்து கொள்ள வேண்டாம் என்று நிருபர்களிடம் நான் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறேன். ஆனால், சில ஏடுகள் மற்றும் சில நண்பர்கள் தெளிவாக நான் அளித்த அந்தப் பேட்டியையே குழப்பம் என்று குதர்க்கவாதம் செய்வது, நாம் தமிழ் ஈழக் கோரிக்கையையே கைவிட்டு விட்டோம் என்பதைப் போல பேசுவதை பார்க்கும் போது, நமது கருத்தைக் கேலி செய்வதையோ வாடிக்கையாகக் கொண்டுள்ளவர்களிடமிருந்து நாம் வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது.
இந்த மாநாடு பற்றிய விளக்கங்களை அளிப்பதற்கு நான் கூட்டிய செய்தியாளர்கள் கூட்டத்தில், இந்த டெசோ மாநாட்டில் தனி ஈழம் கோரி வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்பு இருக்கிறதா? என்று கேட்டபோது, நான் விரிவாக அளித்த பதிலை மீண்டும் இப்போது நினைவூட்ட விரும்புகிறேன். அந்தப் பதில் வருமாறு :
தனி ஈழத்தைப் பற்றி கருத்து இருக்கிறதே தவிர, அதை இப்போதே அழுத்தந்திருத்தமாகச் சொல்லி, அதற்கான கிளர்ச்சிகளை நடத்துவதாக உத்தேசமில்லை.
ஏனென்றால் அங்கே நடைபெற்ற ஆயுதப் போராட்டத்திற்குப் பிறகு, ஆயுதப் போராளிகளை சிங்கள ராணுவம் அழித்து ஒழித்துள்ள இந்த நேரத்தில் எஞ்சியுள்ள இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பது, அவர்களின் வாழ்வாதாரங்களை வளப்படுத்துவது, அவர்களுக்கு போரினால் ஏற்பட்ட இன்னல்களைக் களைவது,
இவற்றில் எப்படியெல்லாம் நடவடிக்கை எடுக்கலாம் நாட்டம் செலுத்தலாம், ஆதரவு கோரலாம் என்பதற்காகத் தான் இந்த மாநாட்டைக் கூட்டி, அதிலே கலந்து கொள்கின்றவர்களின் அறிவுரை, கருத்துரை ஆகியவற்றையும் நாங்கள் முக்கியமாகக் கருதி, அவற்றின் அடிப்படையில் அமைதியான முறையில் அறவழியில் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது தான் இந்த மாநாட்டை நடத்துகின்ற எங்களுடைய நோக்கமாகும் என்று நான் தெளிவாகவே குறிப்பிட்டேன்.
தமிழ் ஈழம் இதுவரை எனது நிறைவேறாத கனவு என்று நான் அன்று சொன்னதை எப்போதும் சொல்வேன், இப்போதும் சொல்கிறேன். என்னுடைய நிறைவேறாத ஆசை அது தான். தனித் தமிழ் ஈழம் என்று முன்பு நான் சொன்னதை இப்போதும் சொல்வதற்கு தயங்கவில்லை. தனி ஈழம் ஒரு காலத்தில் அமையலாம். அதற்கும் ஒரு கால அவகாசம் வேண்டும் என்றும் நான் திட்டவட்டமாக என்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறேன்.
மன்னிக்கவும்…நித்திரை மயக்கத்தில் வானிலை அறிக்கையை அரசியல் செய்தி மாதிரி வாசிச்சுப்போட்டேன்.
karuna hi hi hi, nithy[money] hi hi hi ha ha ha ha ha. fox onru uuuuuuuuuuuu.
தலைவர் என்று பெயரெடுத்த கருனாநிதி, இன்று எதிர்கட்சித் தலைவராகக்கூட இல்லை. ஆனாலும் கட்சித் தலைவர் என்ற தோற்றம் மக்களை தடுமாறவைத்து விட்டில் பூச்சிகளாக விழவைக்கிறது. அதில் அறிவுள்ளோர், அறிவில்லாதோர் என்று வேறுபாடுகளையும் காணமுடியவில்லை.
அது சரி இவரோட வாரிசுகள் மகன்மார் மகள் பேரப்பிளைகள் ஆகியோரின் நிலைப்படுதான் என்ன. இவர் நீண்ட நாட்கள் இருக்கப்போவதில்லை. அவர்கள் தானே வருங்கால மன்னர்கள்.
வாரிசுகள் ஒன்றை ஒன்று காலை வாருவதில் காலத்தைக் கழிக்கும் என நம்பலாம்.
இந்த இடைவெளி ஒரு புதிய தலைவனைத் தோற்றுவித்து தமிழினத்தைத் தலைநிமிர்த்தி வாழவைக்கும்.
அந்த நம்பிக்கைக்கும் இடமுண்டு.