ஏ.9 வீதிக்கு கிழக்காக உள்ள முறிகண்டி, இந்துபுரம், சாந்தபுரம் பிர முறிகண்டி, இந்துபுரம், சாந்தபுரம், செல்வபுரம் பிரதேசங்களை உள்ளடக்கிய 4611ஏக்கர் நிலப்பகுதி படையினரின் பயன்பாட்டிற்காக அரசாங்கம் சுவீகரித்துள்ளதாக உத்தியோகப்பற்றற்ற முறையில் மக்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குளோபல் தமிழ் செய்திகள் இணையத் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கான பொதுமக்களின் சாட்சிகளையும் வெளியிட்டுள்ள இவ்விணையம் வளம் மிக்க இப்பிரதேசங்களை இராணுவக் குடியிருப்புக்களுக்காகச் சுவிகரிக்க முனைவதாகவும் கூறுகிறது.
கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளைப் போரின் பின்னான காலத்தில் சுவீகரித்து அங்குள்ள மக்களை அனாதைகளாக விரட்டியடித்திருக்கும் மகிந்த அரசு, கிளிநொச்சியை சிங்கள மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்கு எதிரான போராட்டங்கள் பரந்துபட்ட வகையில் மேற்கொள்ளப்படாவிட்டால் தமிழ்ப் பிரதேசங்கள் பல இராணுவக் குடும்பங்களின் நிரந்தர இருப்பிடங்களாக மாறும் அபாயம் காணப்படுகிறது. இன்று எரியும் பிரச்சனைகளில் இது அவசியமாகவும் அவசரமாகவும் அணுகப்படவேண்டிய ஒன்று.
கோத்தபாயா குத்தகைக்கு விட் பாமர மக்களீன் நிலங்கள்தான் கிடைத்ததோ? பழய குருடி கதவைத் திறவடி கதயாய் தமிழன் நிலைதான் தண்ணீரில் தள்ளாடும் படகாய் நகர்கிறது.
I dont think there is any thing surprise in this, not only in the North and east, but also in up country, govt is gradualy settling sinhalese in tamil area, Tamils have lost the war, due to tigers fault and arrogace, now we have to learn to live 2nd and 3 rd class citzizens, dont expect any thiing else