புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் போராடி வருகிறார்கள். டெல்லி உட்பட வட மாநிலங்கள் முழுக்க திவீரமாக இந்த போராட்டம் நடந்து வருகிறது,. இந்த போராட்டங்களில் முக்கிய தலைவராக இருப்பவர் ராகேஷ் திகைத். இவர் பாரதிய கிஷான் யூனியன் தலைவர். ஏற்கனவே குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தி உலகின் கவனத்தை ஈர்த்த நிலையில் அது தொடர்பாக பல நூறு பேர் கைதாகி சிறையில் வாடி வருகின்றனர்.
நேற்று ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில் ஐக்கிய விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் மகா பஞ்சாயத்து கூட்டம் நடந்தது. அதில் பேசிய ராகேஷ் திகைத், “எப்போது வேண்டுமென்றாலும் நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் டிராக்டர் பேரணியை அறிவிப்பேன். இம்முறை நாம் நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவோம். இதற்கான அறிவிப்பை நாங்கள் வெளியிட்ட உடன் நீங்கள் டெல்லியை நோக்கி புறப்பட வேண்டும். முன்னர் 4 லட்சம் டிராக்டர்கள் பேரணிக்கு வந்தது. இம்முறை 40 லட்சம் டிராக்டர்கள் பேரணிக்கு வர வேண்டும்.டெல்லி இந்தியா கேட் அருகில் உள்ள பூங்காவில் பயிர் செய்வோம். வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறும் வரை இந்த போராட்டத்தை முடித்துக்கொள்வதாக இல்லை மேலும் போராட்டங்களை திவீரப்படுத்துவோம்” என்று ராகேஷ் திகைத் அறிவித்துள்ளார்.
Thanks for this howling post, I am glad I detected this site on yahoo.