மியான்மார் பௌத்த தீவிரவாதிகள் முஸ்லிம்கள் மீது ஒழுங்கப்படுத்தப்பட்ட தாக்குதல்களை நடத்தியதில் மீண்டும் 100 பேர் வரையில் கொலைசெய்யப்பட்டனர். பல நூறு ஆண்டுகளாக மியான்மாரில் வசித்துவரும் முஸ்லீம்கள் மீதான தாக்குதலுக்கு மியான்மார் அரசபடைகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவு வழங்கி வருகின்றது. மேற்கு ஊடகங்கள் இது இரண்டு இனக்குழுக்களுக்கு இடையேயான மோதல் என்று செய்தி வெளியிடுகின்றன.
மியான்மார் பௌத்த தீவிரவாதிகள் முஸ்லிம்கள் மீது ஒழுங்கப்படுத்தப்பட்ட தாக்குதல்களை நடத்தியதில் மீண்டும் 100 பேர் வரையில் கொலைசெய்யப்பட்டனர். பல நூறு ஆண்டுகளாக மியான்மாரில் வசித்துவரும் முஸ்லீம்கள் மீதான தாக்குதலுக்கு மியான்மார் அரசபடைகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவு வழங்கி வருகின்றது. மேற்கு ஊடகங்கள் இது இரண்டு இனக்குழுக்களுக்கு இடையேயான மோதல் என்று செய்தி வெளியிடுகின்றன. முஸ்லீம்களின் குடியிருப்புக்கள் எரிக்கப்பட்டன. ரோகியா முஸ்லீம்களின் 2800 வீடுகள் எரிக்கப்பட்டதாக அரசின் உத்தியோகபூர்வ செய்திகள் தெரிவிக்கும் அதே வேளை நூற்றாண்டுகளாக அங்கு வாழும் முஸ்லீம்களை சட்டவிரோத குடியேறிகள் எனக் குற்றம் சுமத்துகின்றது. மியான்மாரிகளான முஸ்லீம்கள் மீதான தாக்குதல்களை மியான்மாரில் ஜனநாயகம் குறித்துப் பேசும் ஐக்கிய நாடுகள் நிறுவனமோ ஏகாதிபத்திய அரசுகளோ கண்டுகொள்ளவில்லை.
வன்னிப்படுகொலைகளின் பின்னர் புதிய பரிணாமத்தில் இன்னொரு இனப்படுகொலை மேற்கின் ஆதரவோடு மியான்மாரில் திட்டமிட்டு நடத்தப்படுகின்றது.