தமிழகத்தில் நிலவும் மின்வெட்டை கண்டித்து, இன்று தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகிறது.
சென்னையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். திமுக தலைமை செயற்குழு கூட்டம் கட்சி தலைவர் கருணாநிதி தலைமையில் கடந்த 13ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. இக்கூட்டத்தில், ‘வரலாறு காணாத மின்வெட்டை கண்டித்தும் இருண்ட அதிமுக அரசுக்கு எதிராகவும் 18ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்கள், நகர, ஒன்றிய பேரூராட்சிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சில்லறை வர்த்தகத்தில் முழுமையான அன்னிய முதலீட்டை ஆதரைத்து வாக்களித்து பல்தேசியக் கொள்ளைக்கு ஆதரவளித்தில் சில நாட்களில் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.