வேலாயுதன் தயாநிதி எனப்படும் தயா மாஸ்டர் மற்றும் வேலுப்பிள்ளை குமார் பஞ்சரத்னம் எனப்படும் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகிய விடுதலைப் புலி சந்தேக நபர்கள் குறித்த எதிர்வரும் விசாரணை நடவடிக்கைகளுக்குத் தேவையான சட்டமன்ற ஆலோசனைகள் கிடைக்கப் பெறாமையினால் அவ் வழக்கு, விசாரணைக்கு உட்படுத்தப்பட இயலா நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை குற்ற விசாரணைகள் நிலையத்தினால் கடந்த 25ம் திகதி கொழும்பு கோட்டை பிரதான நீதவானுக்கு முன்வைக்கப்பட்ட அறிக்கையின் படி இச் சந்தேக நபர்கள் இருவருக்கெதிராக நடத்தப்பட்ட விசாரணைகள் முடிவுக்கு வந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 29ம் திகதி ஓமந்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட மேற்படி சந்தேகநபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர். இது போலவே கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மகளீர் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழினிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.
தயா மாஸ்டர் மற்றும் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர் இப்பொழுது, விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆயுதக் கொள்வனவில் உதவியாக இருந்த குமரன் பத்மநாதன் (கே.பி) இனால் ஆரம்பிக்கப்பட்டுள்ள அரச சார்பற்ற நிறுவனமொன்றில் (NERDC) செயற்பாட்டார்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச மாஸ்டரை எப்போ விடுவீர்கள்?ஐ.நா நிபுணர் குழு அறிக்கையில் முக்கியமான ஒரு அம்சம் கண்ணை குத்தி விட்டது போலும்!/////களத்திலிருந்தோர் கள நிலைகளை உடனுக்குடன் வெளியுலகத்துக்கு தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்!அவர்கள் போர்?!முடிந்த பின் தடுத்து வைக்கப்பட்டு அன்று கூறியவை “பொய்”யென மறுத்துரைக்க நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்!இவ்வாறான “சாட்சியங்கள்”ஏற்றுக் கொள்ளப்படக் கூடியவையல்ல!//////////