தமிழ்நாட்டில் மாவோயிஸ்டுகள் அமைப்பின் பொதுச் செயலாளராக செயல்பட்ட விவேக் என் பவர் கியூ பிரிவு போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டார் இவர் இன்று மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து மாவோயிஸ்டுக்கள் இன்னும் கருத்துக்கள் எதுவும் தெரிவிக்கவில்லை.
தேனி மாவட்டம் பெரியகுளம் முருகமலை காட்டுப் பகுதியில் விவேக் துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்தார் என்று கூறப்படுகிறது.
விவேக் பற்றி விசாரித்தபோது அவர் பாலன், குமார், ஆனந்தன் என பல பெயர்களிலும், சத்யாமாரி என்ற பெயரில் மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த அவரது மனைவி பத்மாவும் சென்னை அண்ணாநகர் ஷெனாய் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
நேற்று காலை அவர்கள் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தயாராவதும் தெரிய வந்தது. உடனே கியூ பிரிவு போலீசார் அந்த வீட்டை முற்றுகையிட்டனர். அங்கிருந்த விவேக்கை கைது செய்தனர்.
இன்று காலை நீதிபதி ராஜ்குமார் முன்பு விவேக் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வருகிற 1-ந்தேதி வரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
பின்னர் விவேக் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.