கட்டு வேட்டை என்கிற பெயரில் மாவோயிஸ்டுகள் மீது இந்திய இராணுவம் நடத்தி வரும் தாக்குதலுக்கு மாவோயிஸ்டுகள் தொடர் தாக்குதல்கள் மூலம் பதிலடி கொடுத்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்னர் நடத்திய தாக்குதலில் 30-க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப்ஃ படையினர் பலியாக நேற்று பீகார் மாநிலத்தின் மேற்கு
சம்பரான் மாவட்டம் சிந்தாமணி கிராமம் அருகே வியாழக்கிழமை அதிகாலையில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் அந்த வழியாக வந்த சரக்கு எண்ணெய் ரயில் தடம் புரண்டடு தீப்பற்றி எரிந்தது. அந்த ரயிலில் இருந்த 14 டாங்கர்களின் எண்ணைய்களும் எரிந்து விட்டது. மாவோயிஸ்டுகளின் இந்த தொடர் தாக்குதல் மத்திய இந்தியாவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
வெடி மருந்து லாரி கடத்தல்.
சில மாதங்களுக்கு முன்பு டெட்டனேட்டர்களை ஏற்றிச் சென்ற லாரியை மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்றனர். அந்த லாரியை இன்று வரை கண்டு பிடிக்க முடியவில்லை. இந்நிலையில் புதன் கிழமை வெடிப்பொருட்கள் தயாரிப்பதற்காக இராணுவ முகாம் ஒன்றுக்கு லாரியில் எடுத்துச் செல்லபப்ட்ட அமோனியம் நைட்ரேட் பொருட்களை லாரியோடு கடத்திச் சென்று விட்டனர் மாவோயிஸ்டுகள். சுமார் 16.5 டன் எடையுள்ள அமோனியம் நைட்ரேட் அடங்கிய அந்த லாரியை ஓட்டி வந்த ஓட்டுனரை எதுவும் செய்யாத மாவோயிஸ்டுகள் அவரை வழியில் இறக்கி விட்டு விட்டு லாரியை ஓட்டிச் சென்று விட்டனர். மாவீயிஸ்ட் தேடுதல் வேட்டை என்னும் பெயரில் மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கையும் அதற்கு பதிலீடாக மாவோயிஸ்டுகள் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களாலும் மத்திய இந்தியாவில் கடும் பதட்டம் நிலவுகிறது.