மத்திய இந்தியாவில் பழங்குடி மக்களுக்காகப் போராடும் மாவோயிஸ் போராட்டத்தை ஒடுக்க பல வழிமுறைகளைக் கையாண்டு வருகிறது. இன்னொரு பக்கம் மாவோயிஸ் என்றழைக்கப்படும் கம்யூனிஸ்டுகள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைகளை உடைப்பதற்கான வேலைகளையும் செய்து வருகிறது. மாவோயிஸ்ட் மூத்த தலைவர்கள் போராளிகள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தி இந்திய ஊடகங்களும் இந்திய அரசு எடுத்த பிரச்சாரங்களும் இருந்த நிலையில் இப்போது சரணடையும் மாவோயிஸ்டுகளுக்கு பல சலுகைகளை அறிவித்துள்ளது இந்திய அரசு. இத்திட்டத்தின்படி ஆயுதங்களுடன் சரணடையும் மாவோயிஸ்டுகளுக்கு தலா ரூ. 1.5 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும். மாவோயிஸ்டுகள் சரணடைந்த உடன் இந்தத் தொகை அவர்களது பெயரில் வங்கியில் முதலீடு செய்யப்படும்.அவர்களின் விருப்பதற்கு ஏற்ப அவர்களுக்கு மூன்றாண்டுகள் தொழிற்கல்வி பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி காலத்தில் மாதம் ரூ. 3,000 வீதம் உதவித் தொகை அளிக்கப்படும்.பயிற்சியை முடித்து அமைதியான வாழ்க்கையை அவர்கள் தொடங்கும் போது வங்கியில் முதலீடு செய்யப்பட்ட பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம். மாவோயிஸ்டுகள் வங்கியில் உள்ள பணத்தை பெற தங்களது நடத்தைச் சான்றிதழை சம்பந்தப்பட்ட மாநில அரசு அதிகாரிகளிடம் பெற வேண்டும்.இந்த நிதியுதவி தவிர அவர்கள் ஒப்படைக்கும் ஆயுதங்களுக்கும் நிதியுதவி அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி ஏ.கே. 47, ஏ.கே. 56, ஏ.கே. 74 ரக துப்பாக்கி ஒவ்வொன்றுக்கும் ரூ. 25,000, ஆர்.பி.ஜி. துப்பாக்கிக்கு ரூ.3,000, ராக்கெட்டுக்கு ரூ. 1000, ரிமோட் கன்ட்ரோல் கருவிக்கு ரூ. 3,000, நாட்டு வெடிகுண்டுக்கு ரூ.1000, கண்ணிவெடிக்கு ரூ. 3,000, சிறிய ரக ஏவுகணைக்கு ரூ. 20,000, செயற்கைக்கோள் தொலைபேசிக்கு ரூ. 10,000 ஆயிரம் வழங்கப்படும்.