இந்திய மத்திய உள்துறை அமைச்சகத்தின் உள்நாட்டு பாதுகாப்பு இயக்குனர் ஆர்.கே.சுமன் என்பவர் எஞ்சியிருக்கும் புலிகளின் தலைவர்களும், உறுப்பினர்களும் மீண்டும் ஒருங்கிணைவதற்கு தமிழ் நாட்டிலும் இந்தியாவின் ஏனைய பகுதிகளிலும் முயற்சித்துவருவதாகத் தெரிவித்தார். மாவோயிஸ்ட் அமைப்புக்களின் உதவியுடன் இவர்கள் மீள் எழுச்சி பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். புலிகள் அமைப்பை காரணம் காட்டி மாவோயிஸ்ட்கள் மீது குறிவைக்கும் சுமன் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் நட்பு சக்தியாக மாவோயிஸ்டுகள் இருப்பதற்கான வாய்ப்புக்களைப் மக்களுக்குத் தெரியப்படுத்துகிறார். சுமனின் பொய் ஒரு தத்துவார்த் உண்மையை வெளிப்படுத்துகிறது.
இந்தியாவின் பாதுகாப்பிற்கும் இறையாண்மைக்கும் புலிகள் இன்னும் அச்சுறுத்தலாகவே இருந்து வருகின்றனர் எனத் தெரிவித்தார். இந்தியாவின் சில்லறை வணிகத்திலிருந்து எல்லா உற்பத்திகளையும் வழங்களையும் அன்னிய மூலதனத்திற்குத் தாரைவார்த்துக்கொடுக்கும் இந்திய அரசே நாட்டின் இறையாண்மைக்கும் பாதுகாப்பிற்கும் முதன்மையான அச்சுறுத்தல் என்பதை சுமன் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
இல்லாமல் போன புலிகள் இயக்கத்தை முன்வைத்து இந்திய உளவுத்துறையிலிருந்து இலங்கை அரச ஆதரவு லும்பன்கள் வரை நடத்தும் அரசியல் அருவருப்பானது.
இந்த பாடலை ஆர்.கே.சுமன் என்பவருக்காக டெடிக்கேர்ட் செய்கின்றேன்..
அல்லோ ஓணாண் நீங்க எங்கேயோ பாஞ்சிடிங்க எங்கேயோஒ…………….
மாவோயிஸ்டுகளின் அமைப்புக்கு இந்தியாவின் வழர்ச்சிஜை கட்டுப்படுத்த மேல்கத்தய நாடுகள் உதவிசெய்யள்ளாம் .மாவோயிஸ்டுகளின் அமைப்புக்கு எஜ்சி இருக்கும் புலிகளின் விசுவாசிகள் பரந்து இருக்கிறார்கள் மேல்கத்தய நாடுகளீள் .உண்மை இந்தியாவின் வழர்ச்சிஜை கட்டுப்படுத்துவதே மேல்கத்தய நாடுகளின் சதி
அண்ணா காஸ்..ரோ,வயித்தாலய்டிக்கிறதுக்கு குளுசை வேணுமெண்டு மொட்டையாய் கேட்ககூடாது நிப்பாட்டுறத்துக்கா அல்லது அட்டிக்கிறத்துக்கா என்று விளக்கமாய் கேட்டு வாங்கவேணும்.
இந்திய சமூக அரசியல் அமைப்பில் மாற்றம் வரும் வரை எந்த சிறுபான்மை இனத்திற்கும் விடிவு இல்லை.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தேவை தான், ஆனால் அது இந்திய சமூக, அரசியல் அமைப்பில் வளர்ச்சியை மாற்றத்தை கொண்டுவரக்கூடியதாக இருக்க வேண்டும். விடுத்து இன்று இருக்கும் இந்திய சமூக அரசியல் அமைப்பை, வளர்ப்பதட்க்காக , பாதுகாக்கவாக இருந்தால் அது பொருளாதார வளர்ச்சி மட்டுமே ஒழிய, இந்தியாவின் சமூகத்தின் வளர்ச்சி அல்ல.
அதாவது பொருளாதார வளர்ச்சியும் சமூகத்தின் வளர்சியும் சமாந்தரமாக ஆக இருக்க வேண்டும். இந்தியாவின் சமூக வழர்ச்சிஜை கட்டுப்படுத்துவதே மேல்கத்தய நாடுகளின் சதி.தவறான ,பலவீனமான மக்கள் விரோத போராட்டக்குழுக்களை மேற்கு,சீனா உருவாக்கி மக்கள் போராட்டங்களை மழுங்கடிக்கும்.,அதாவது இன்று இருக்கும் இந்திய சமூக அரசியல் அமைபிற்கு மறைமுக உதவி.