Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

மாவோயிசத்தின் பங்களிப்பு : சமீர் அமீன்

இனியொரு... by இனியொரு...
05/20/2012
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
4
Home பிரதான பதிவுகள் | Principle posts

ஐரோப்பிய மையமானதும் பாட்டாளிவர்க்க மையமானதுமான இரண்டாம் அகிலத்தின் மார்க்சியம், அன்றைய காலகட்டத்தின் கருத்தியலுக்கேற்ப, வரலாறு குறித்த ஒரு நேர்க்கோட்டுப் பார்வையையே கொண்டிருந்தது. அதன்படி, அனைத்துச் சமூகங்களுமே சோசலிசத்திற்கு அவாவுறும் தகுதியைப் பெறும் முன்பாக, முதலில் முதலாளித்துவ வளர்ச்சி என்னும் நிலைப்படியை அவைகள் கடந்தாக வேண்டும். இந்த முதலாளித்துவ நிலைப்படிக்கான விதைகள் காலனியத்தால் தூவப்பட்டுக் கொண்டிருந்ததாலேயே முதலாளித்துவம் ‘வரலாற்றுரீதியில் நேர்மறையானதாகக்’ கருதப்பட்டது.

ஆதிக்கம் செலுத்தும் மையங்களின் வளர்ச்சியும், ஆதிக்கம் செலுத்தப்படும் விளிம்புகளின் வளர்ச்சிக் குறைவும் உலகளாவிய முதலாளித்துவ விரிவாக்கத்தின் உள்ளார்ந்த விளைவுகளாக இருப்பதால், அவை ஒரே நாணயத்தின் இரு பக்கங்களைப் போலப் பிரிக்கவியலாதவை என்ற கருத்து அம்மார்க்சியத்திற்கு அந்நியமானதாய் இருந்தது.

ஆனால், முதலாளித்துவ உலகமயமாதலில் உள்ளார்ந்து இருக்கும் எதிர்த்துருவமாக்கல் என்பது – அதன் உலகளாவிய சமூக, அரசியல் முக்கியத்துவத்தினால் அது ஒரு முக்கியமான உட்பண்பாய் இருக்கிறது – முதலாளித்துவத்தைக் கடந்து செல்ல நாம் கொண்டிருக்கக் கூடிய எந்தவொரு திட்டத்திற்கும் சவால் விடுவதாக இருக்கிறது.

இந்த எதிர்த்துருவமாக்கல் உழைக்கும் வர்க்கங்களின் பெரும் பகுதியினரும், அதற்கும் மேலாக, உலக அமைப்பின் மையங்களாக நிலைகொண்டதால் வளர்ச்சி ஆதாயமடைந்த ஆதிக்க நாடுகளின் நடுத்தர வர்க்கங்களும் சமூகக் காலனியத்துக்குச் செல்லும்படியான சாத்தியத்தின் தோற்றுவாயில் இருக்கிறது. அதே நேரம், அவ்வெதிர்த்துருவமாக்கல் உலக முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக இயற்கையான, நிரந்தரமான கலகத்திற்கு விளிம்புகளை, சீன வழக்கின்படி,’புயற்பிரதேசங்களாக’ மாற்றியமைக்கிறது.

கலகம் என்பதே புரட்சியாகாது தான் ஆனால் புரட்சிக்கான சாத்தியத்துக்கு அது வழிவகுக்கிறது. அதே நேரம், அமைப்புமுறையின் மையத்திலும் முதலாளித்துவ மாதிரி அமைப்பை நிராகரிப்பதற்கான காரணங்கள் இல்லாமல் இல்லை. 1968 ஆம் ஆண்டை ஓர் உதாரணமாகக் காட்டலாம். ஒரு குறிப்பிட்ட காலத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் முன்வைக்கப்பட்ட ‘கிராமப்புறங்கள் நகரங்களை வளைத்து நிற்கின்றன’ என்ற கருத்தாக்கம் அக்காரணத்தாலேயே பயன்படுத்த இயலாதவாறு மிகவும் தீவிரத்தன்மை கொண்டதாய் இருந்தது.

முதலாளித்துவம் கடந்து உலகளாவிய சோசலிசம் நோக்கிய நிலைமாற்றத்தை நிகழ்த்துவதற்கான உலகளாவிய தந்திரம் என்பது, அமைப்புமுறையின் மையங்களிலும் விளிம்புகளிலும் நிகழும் போராட்டங்களுக்கு இடையிலான ஒட்டுறவை வரையறுக்க வேண்டியுள்ளது.

ஆரம்பத்தில் இரண்டாம் அகிலத்தின் கருத்தியலிலிருந்து தன்னை விலக்கிக் கொண்ட லெனின், ‘பலவீனமான கண்ணியில்’, ரஷ்யாவில் புரட்சியை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார். ஆனால் இந்தப் புரட்சியின் விளைவாக ஒரு சோசலிசப் புரட்சி அலையே உருவாகும் என்று எப்போதும் நம்பியிருந்தார். இந்த நம்பிக்கை பொய்த்துப்போனது.

பிறகு கிழக்குலகின் கலகங்களைப் புரட்சிகளாக மாற்றுவதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் ஒரு பார்வைக்கு அவர் வந்தார். ஆனால் அப்புதிய நிலைநோக்கை முறைப்படுத்தியது சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியும் மாவோவும் தான்.

ரஷ்யப் புரட்சி உழைக்கும் வர்க்கத்திடமும் தீவிரமான அறிவுஜீவிகளிடமும் நன்கு வேரூன்றியிருந்த ஒரு கட்சியால் வழிநடத்தப்பட்டதாகும். சீருடையணிந்த விவசாய வர்க்கத்தோடு – இது ஆரம்பத்தில் சோசலிசப் புரட்சிகரக் கட்சியால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டது – அக்கட்சியின் கூட்டணி இயல்பாகவே நடந்தேறியது. அதன் தொடர்ச்சியாகக் கொண்டுவரப்பட்ட விவசாயச் சீர்திருத்தம் ரஷ்ய விவசாயிகளின் நிலவுரிமையாளராகும் பழைய கனவை நனவாக்கியது. ஆனால் இந்த வரலாற்றுச் சமரசம் அதனுடைய வரையறைகளுக்கான விதைகளையும் தன்னகத்தே கொண்டிருந்தது:

எப்போதும் போல் சந்தையானது விதிக்கப்பட்டபடி அதன் இயல்பினாலேயே விவசாய வர்க்கத்தில் பிரிவினைகளை வளரச் செய்தது. குலாக்குமயமாதல் என்று இது பிரபலமாய் அறியப்பட்டது.

சீனப்புரட்சி ஆரம்பத்திலிருந்தே அல்லது 1930களில் இருந்தாவது, ஏழை மற்றும் நடுத்தர விவசாய வர்க்கங்களோடான ஒரு வலுவான கூட்டணியை உறுதிப்படுத்தும் அடித்தளங்களிலிருந்து உருவெடுத்தது. அதே போல, ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான போரும்கூட என்ற சீனப்புரட்சியின் தேசியப் பரிமாணம், கோமிண்டாங்கின் பலவீனங்களாலும் துரோகங்களாலும் ஏமாற்றமடைந்திருந்த பூர்சுவா வர்க்கங்களிலிருந்தும் பரவலாக ஆளெடுக்கும் வாய்ப்பை கம்யூனிஸ்டுகளால் தலைமையேற்கப்பட்ட முன்னணிக்கு வழங்கியது.

இவ்வாறு புரட்சிக்குப் பிற்பட்ட ரஷ்யாவிலிருந்து வேறுபட்டதொரு புதிய சூழ்நிலை சீனப்புரட்சியால் உருவானது. தீவிரமான விவசாயப் புரட்சி விவசாய நிலங்களில் தனியுடைமை என்ற கருத்தையே நசுக்கிவிட்டு அனைத்து விவசாயிகளுக்கும் விவசாய நிலங்களின்பால் சம உரிமைக்கான உத்தரவாதத்தை வழங்கியது.

இன்றுவரை, வியட்நாமைத் தவிர வேறு எந்த நாட்டிலும் இல்லாத அந்தத் தீர்மானகரமான சாதக அம்சம்தான் விவசாய முதலாளித்துவத்தின் அபாயகரமான வளர்ச்சிக்குப் பெரும் தடைக்கல்லாக இருந்து வருகிறது.

இந்தப் பிரச்சினையை மையமாகக் கொண்டே சீனாவின் இன்றைய விவாதங்கள் அமைந்திருக்கின்றன. ஆனால் வேறுவகைகளில் பார்க்கும்போது, கம்யூனிஸ்டுக் கட்சிக்குள் பூர்சுவா தேசியவாதிகளின் நுழைவு என்பது, ‘முதலாளித்துவப் பாதையாளர்கள்’ என்று மாவோவால் குறிப்பிடப்பட்டவர்களின் திரிபுகளுக்கு ஆதரவான கருத்தியல் ஆதிக்கத்தையும் தவிர்க்கவியலாமல் ஏற்படுத்தியது.

சீனப் புரட்சிக்குப் பின்னான ஆட்சி குறிப்பிடத் தகுந்த அளவிற்கும் மேலான அரசியல், பண்பாட்டு, பொருளியல் நிறைவேற்றங்களை – நாட்டைத் தொழில்மயமாக்கல், நவீன அரசியல் பண்பாட்டைத் தீவிரமயமாக்கல் போன்றவை – சாதனைகளாகக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், தீர்மானகரமான இரு நூற்றாண்டுகளுக்கும் (1750 – 1950) மேலாக நிலவி வந்த, சீனப் பேரரசின் துயரமான வீழ்ச்சியின் மையமாக இருந்த ‘விவசாயிகள் பிரச்சினைக்கும்’ மாவோயிசச் சீனம் தீர்வு கண்டது.

இன்னும் மேலாக, சோவியத் யூனியனின் மிகத் துயரகரமான பிறழ்வுகள் போல ஏதும் நேராதபடிக்கு மாவோயிசச் சீனம் இந்தப் பயன்களை அடைந்தது. பொதுக்கட்டுப்பாட்டாக்கம் என்பது ஸ்டாலினியத்தைப் போன்று கொலைபாதக வன்முறையால் நிர்ப்பந்திக்கப்படவில்லை. உட்கட்சி எதிர்ப்புகள் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடுவதில் கொண்டுபோய் விடவில்லை. டெங் ஒதுக்கப்பட்டு, பிறகு திரும்பினார்.

வருமானப் பகிர்வை ஈடிணையற்ற முறையில் விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலும், அவர்களுக்குள்ளும், அவர்களுக்கும் ஆளும் வர்க்கத்தினருக்கும் இடையிலும் ஒப்பீட்டளவில் சமமானதாக ஆக்கும் நோக்கம் என்பது விடாப்பிடியாகப் பின்பற்றப்பட்டது. இதில் சற்று ‘ஏறக்குறைய’ இருந்ததென்னவோ உண்மைதான்.

சோவியத் யூனியனின் வளர்ச்சித் திட்டமுறைகளுக்கு மாறான தேர்வுகள் மூலம் இந்தச் சமப்பகிர்வு முறைமைப்படுத்தப்பட்டது. இந்தத் தேர்வுகள் 1960களின் துவக்கத்தில் ‘பத்துப் பெரும் உறவுகள்’ என்று வடிவமைக்கப்பட்டன. இந்த வெற்றிகள் தான் 1980க்குப் பிறகு பின்-மாவோயிசச் சீனத்தின் பின்னாளைய வளர்ச்சித் திட்ட வெற்றிகளுக்குக் காரணமாய் அமைந்தன.

இந்தியாவிடமிருந்து வேறுபடும் சீனத்தின் இத்தன்மை – இந்தியா புரட்சியைக் கண்டிராத நாடு என்பதாலேயே இவ்வேறுபாடு – 1950லிருந்து 1980 வரை இந்தியாவும் சீனாவும் மேற்கொண்ட வேறு வேறு வளர்ச்சிப் பாதைகளை விளக்குவதில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றதாய் இருக்கிறது. மட்டுமல்ல, இன்னும்கூட எதிர்காலம் குறித்த வேறுபட்ட வாய்ப்புள்ள அல்லது சாத்தியமான நிலைநோக்குகளைத் தன்மைப்படுத்தும் நாடுகளை விளக்குவதிலும் முக்கியத்துவம் பெற்றதாய் இருக்கிறது.

சோவியத் யூனியனின் வீழ்ச்சியைத் தொடர்ந்து நிகழ்ந்ததைப் போன்ற அழிவுப்பூர்வமான அதிர்ச்சிகளை பின்-மாவோயிசச் சீனம் தவிர்த்துக் கொண்டு, அன்றிலிருந்து தன் வளர்ச்சியை புதிய முதலாளித்துவ உலகமயமாதலுக்கு உட்பட்டு தன்னைத் ‘திறந்துகொள்வதில்’ ஈடுபடுத்திக் கொள்ள முடிந்ததற்கும் இந்த மேற்சொன்ன வெற்றிகளே விளக்கமாய் இருக்கின்றன.

அதே நேரம், சீனாவின் நீண்டகால நிலைநோக்குகள் சோசலிசத்துக்குச் சாதகமாகவே செயல்படுமா என்ற பிரச்சினையை மாவோயிசத்தின் வெற்றிகள் ‘தீர்மானகரமாய்’ அல்லது ‘மாற்றியமைக்க முடியாத’ வகையில் தீர்க்கவில்லை.

முதற்காரணம், 1950 – 1980 காலகட்டத்தின் வளர்ச்சித் திட்டமுறை தன் ஆற்றலை இழந்துவிட்டது. வேறு பல விஷயங்களோடு சேர்த்து, கட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாக இருந்தபோதிலும்கூட, திறந்துவிடுதல் என்பது, பிற்பாடு நிகழ்ந்து வருவது காட்டுவது போல முதலாளித்துவத்தை நோக்கிப் பரிணமிக்கும் போக்குகளைத் தூண்டிவிடக்கூடிய அபாயத்தைக் கொண்டது என்றபோதிலும் தவிர்க்கவியலாததாகிப் போனது.

மேலும், சீனாவின் மாவோயிச அமைப்புமுறை முரணான போக்குகளை – சோசலிசத் தேர்வுகளை வலுப்படுத்தவும் அதே சமயம் பலவீனப்படுத்தவும் கூடிய – ஒருசேரக் கொண்டது என்பதும் ஒரு காரணம்.

இந்த முரண்பாடு குறித்த விழிப்புணர்வோடுதான், ஒரு ‘கலாசாரப் புரட்சியின்’ மூலம் சோசலிசத்துக்குச் சாதகமாகத் தடியை வளைக்கும் முயற்சியில், 1966லிருந்து 1974 வரை ஈடுபட்டார் மாவோ. ‘தலைமையகத்தைத் தகர்த்தெறியுங்கள்’ என்றார் மாவோ. ஆதிக்கப் பதவிகளில் இருக்கும் அரசியல் வர்க்கத்தின் பூர்சுவா அபிலாசைகளின் பீடம் அது! தன்னுடைய நடைமுறைத் திருத்தத்தை நிறைவேற்ற ‘இளைஞர்களிடத்தில்’ தன்னை நிலைநிறுத்திக் கொள்ளலாம் என்று மாவோ கருதினார் இந்த முடிவு தவறானது என்பதை நடதேறிய நிகழ்வுகளின் போக்கு காட்டியது.

கலாசாரப் புரட்சி கைவிடப்பட்ட உடனே, முதலாளித்துவப் பாதையை நாடிய கட்சிக்காரர்கள் தாக்குதலை மேற்கொள்ள ஊக்கம் பெற்றார்கள்.

நீண்ட கடினமான சோசலிசப் பாதைக்கும் இப்போது நடைமுறைப்படுத்தப்படும் முதலாளித்துவத் தேர்வுக்கும் இடையிலான போராட்டம் என்பது நிச்சயமாக ‘தீர்மானகரமாகக் காலாவதியாகி’ விடவில்லை. உலகில் வேறெங்கும் போலவே, முதலாளித்துவம் உருக்கொள்ளும் முயற்சிக்கும் சோசலிச நிலைநோக்குக்கும் இடையிலான முரண்பாடு என்பது நமது சகாப்தத்தின் உள்ளார்ந்த, நாகரிகங்களுக்கு இடையிலான முரண்பாட்டின் உள்ளடக்கமாகிறது.

ஆனால் இந்த முரண்பாட்டை எதிர்கொள்ளத் தேவையான முக்கியமான உடைமைகளை புரட்சியிலிருந்தும் மாவோயிசத்திலிருந்தும் சீன மக்கள் ஏராளமாய்ச் சுவீகரித்திருக்கிறார்கள்.

சமூக வாழ்வின் பல்வேறு தளங்களிலும் இந்த உடைமைகள் இயக்கப்பட்டு வருகின்றன. உதாரணமாக, அரசுக்குச் சொந்தமான விவசாய நிலங்களைப் பாதுகாப்பதிலும் அனைவருக்கும் விவசாய நிலங்களின்பால் உள்ள உரிமையைப் பாதுகாப்பதிலும் இந்த உடைமைகள் மிகத் தீவிரமாகத் தம்மை வெளிப்படுத்திக் கொள்கின்றன.

உலகமயமான முதலாளித்துவம் அல்லது ஏகாதிபத்திய விரிவாக்கத்தில் உள்ள பணயங்களை உறுதிப்படுத்தவும் அதில் உள்ள சவால்களை எதிர்கொள்ளவும் தீர்மானகரமான முறையில் மாவோயிசம் பங்களித்துள்ளது. இயல்பிலேயே ஏகாதிபத்தியத் தன்மையும் எதிர்த்துருவமாக்கும் தன்மையும் கொண்ட ‘உண்மையில் நிலவிவரும்’ முதலாளித்துவ விரிவாக்கத்தின் தவிர்க்கவியலாத மையம் மற்றும் விளிம்பு முரண்பாட்டை நமது பகுப்பாய்வில் மையப்படுத்திச் சோதிக்க மாவோயிசம் உதவுகிறது.

இவ்வாய்விலிருந்து ஆதிக்கஞ்செலுத்தும் மையங்கள் ஆதிக்கஞ்செலுத்தப்படும் விளிம்புகள் இரண்டிலும் சோசலிசப் போராட்டத்துக்குத் தேவையான படிப்பினைகளைக் கற்றுக்கொள்ளவும் மாவோயிசம் பங்களித்துள்ளது.

இந்தத் தீர்மானங்கள் ‘சீனப் பாணியில்’ ஒரு நேர்த்தியான சூத்திரமாகத் தொகுக்கப்பட்டுள்ளன : ‘அரசுகளுக்குத் தேவை சுதந்திரம்;. தேசங்களுக்குத் தேவை விடுதலை. மக்களுக்குத் தேவை புரட்சி’. அரசுகள், அதாவது ஆளும் வர்க்கங்கள் – உலகின் அனைத்து நாடுகளையும் சேர்ந்த ஆளும் வர்க்கங்கள் – வெறுமனே அந்நியச் சக்திகளின் கைப்பாவைகளாகவோ கட்டளைகளை நிறைவேற்றுபவர்களாகவோ இல்லாத போது, முதலாளித்துவ உலக அமைப்புமுறையைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் பொருட்டுத் தங்கள் தளத்தை விரிவுபடுத்திக் கொள்ளவும், செயல்படுத்தப்படும் பொருட்களாக இருக்கும் ஆதிக்கம் செலுத்தும் ஏகாதிபத்தியம் நிர்ப்பந்திக்கும் போதெல்லாம், ஒருதலைப் பட்சமான ஒத்துழைப்புக்குக் கீழ்ப்படிந்து போக விதிக்கப்பட்ட நிலையிலிருந்து உலக அமைப்பை உருவாக்குவதில் பங்கெடுப்பதன் மூலம், செயல்படும் மனிதர்கள் என்ற நிலைக்குத் தங்களை உயர்த்திக் கொள்ளவும் முயல்வார்கள்.

தேசங்கள், அதாவது முற்போக்காகச் செயல்படக்கூடிய ஆற்றல் பெற்ற வர்க்கங்களைக் கொண்ட வரலாற்றுப் பிரிவினர், விடுதலையை விரும்புவார்கள், அதாவது ‘வளர்ச்சியையும் நவீனமயமாதலையும்’. மக்கள், அதாவது ஆதிக்கம் செலுத்தப்படும், சுரண்டப்படும் பெருவாரியான வர்க்கங்கள் சோசலிசத்தை விரும்புவார்கள்.

நிலவும் உலகை அதன் அனைத்துச் சிக்கல்களோடும் புரிந்து கொள்வதையும், அதன் தொடர்ச்சியாய் செயல்பாட்டுக்கான பயன்தரும் திட்டமுறைகளை வகுப்பதையும் இச்சூத்திரம் ஏதுவாக்குகிறது.

முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்துக்கான ஒரு நீண்ட, மிக நீண்ட உலகளாவிய நிலைமாற்றம் குறித்த நிலைநோக்கில் இச்சூத்திரத்துக்கு இடமிருக்கிறது. அத்தன்மையினால், இது மூன்றாம் அகிலத்தின் ‘குறுகியகால நிலைமாற்றம்’ என்ற கருத்தாக்கத்திலிருந்து தன்னைப் பிரித்துக் கொள்கிறது.

————————————————————————————————-

மொழிபெயர்ப்பாளர் எஸ்.வி.உதயகுமார் சமூகவியலில் கலாநிதிப் பட்டம் பெற்றவர்.  நிர்வாகவியல் ஆலோசகராகத் தற்போது பணியாற்றி வருகிறார்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

சரத் பொன்சேகா திங்கட்கிழமை விடுதலை

Comments 4

  1. THAMILMARAN says:
    15 years ago

    சாதரண மனிதர் அசாதரணமாகச் சிந்தித்து அதில் சாதித்தும் காட்டி இருக்கிறார்கள்.மன்னராட்சிக் கொடுமைகளால் சனநாயகமும், சனநாயகத்தின் ஊழல்கள்,தவறூகள் கம்யூனிசமாகவும் மலர்ந்திருக்க வாய்ப்புகள் அதிகம் தமது கருத்தும் தமது நோக்கமும் நிறவேற தம்மையே தந்த இந்தச் சிந்தனையாளர் கெளரவிக்கப்பட வேண்டியோரெ.நம்மிடையே தோன்றீய யோகர் சுவாமிகள் நீ எதை நினைக்கிறாயோ அப்படியே ஆகிறாய் என்றூம் ஒரு பொல்லாப்பும் இல்லை, எப்போதோ முடிந்த காரியம் என நம்பிக்கை தருகிறார் நாம்தான் பிறரை திருப்திப்படுத்த நம்மை விற்றூக் கொண்டிருக்கிரொம்.

  2. thurai ilamurugu says:
    15 years ago

    பொதுவாக மார்க்சீய சிந்தனையாளர்கள் நடுவில் ஒரு கருத்து நிலவுகிறது. அது மார்க்சீயம் தேசீய இனங்களின் சுய நிர்ணய உரிமையை [ தன்னாட்சி உரிமை] அப்படியே ஏற்றுக் கொள்ளுகிறது என்பதாகும் இது உண்மைதான் ஆனாலும் தேசிய இனங்க்ளின் அனைத்து வகைப் போராட்டங்களையும் ஆதரிக்க வேண்டும் ;இல்லையென்றால் அவர் மார்க்கிஸ்ட்டே இல்லை என்ற அளவிற்கு சொல்லுவதில் பொருள் இல்லை தேசிய இனங்களின் போராட்ட்டம் [அது தன்னுரிமைக்கான போராட்டமாக இருந்தாலும் சரி அல்லது வேறு எதற்கான போராட்டமாக் இருந்தாலும் சரி} நிகராமையை நோக்கி நகர்வதாக இருந்தால் மட்டும் ஆதரித்தால் போதுமானது. பிறகு அவ்வகைப் போராட்டம் பழமை வாதத்தை முன்னிறுத்தி அல்லது மிகை மொழி உணர்வை தூண்டிவிட்டு மத ,இன பாசிச சக்திகளுக்கு இடம் கொடுக்கும் என்றால் அவற்றை ஆதரிக்க வேண்டிய தேவை இல்லை. உண்மையில் அவற்றை முழுமூச்சுடன் எதிர்க்கவேண்டியதே மர்க்சீய சிந்தனையாளார்களின் முதற் கடமை என்று எண்ணுகிறேன். மனிதனின் வாழ்க்கயை மேம்படுத்தாத எந்த போராட்டமாக
    இருந்தாலும் அதை ஆதிரிக்க வேண்டிய கடமை மார்க்சிஸ்ட்டுகளுக்கு கிடையாது. இதைக் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய தேவை இன்றைய தமிழ் நாட்டில் உள்ளது சிலர். “தமிழ் நாடு தனியாகப் போனால் ஈழத்திற்கு உதவி செய்யலாம் தமிழர் படையை அனுப்பி சிங்களவனைத் தோற்கடித்துவிடலாம் “என்று கருதியும் பேசியும் வருகின்றனர் இவை தவறான வாதங்களாகும் தனித்தமிழ் நாடு வேனண்டும் என்றால் அதற்கான தேவைகளை தமிழ் நாடிற்குள்ளேதான் தேட வேண்டுமே அல்லாது வெளி நாட்டுக் காரணங்களைத்தேடிக் கொண்டிருக்கக் கூடது. இன்னும் சிலர்” தமிழ் மொழி உலகின் முதன் மொழி’ செம் மொழி. பத்துக் கோடித்தமிழர்கள் உலகில் வசிக்கின்றனர் அவன் முன்னோர்கள் ராராச சோழனும் ராசேந்திர சோழனும் புலிக் கொடியின் கீழ் இந்தியவை ஆண்டார்கள்; இந்த் தொல் மரபிற்கு ஒரு தனி நாடு கட்டயாம் தேவை என்றும் பேசி வருகின்றனர் ஆனால் இது பொருந்தா வாதம் என்பது தெளிவாகத் தெரிகிறது. உலகில் எங்கும் ஒரு மொழி பேசுகின்றவர்களுக்கு ஒரு நாடு என்று இயங்கவில்லை இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் ஒரே மொழிதான் பேசப் படுகிறது. ஆனால் அவை தனி நாடுகளாகத்தானே இருக்கின்றன வளைகுடா நாடுகள் அனைத்திலும் அரேபிய மொழியே பேசப் படுகிறது ஆனால் அவை ஒரே நாடாக இல்லையா?
    இவைகளைச் சிந்திதுப் பார்ககவேன்டும் .
    மேலும் காவிரி , முல்லைப் பெரியாறு போன்ற நீர்ச் சிக்கல்களை முன்னிறுதிப் பார்தாலும் இது சரியான தீர்வாக இருக்குமா என்பது அய்யமே. ஒரே நாட்டில் அனண்டை மாநிலமாக இருக்கும் போது நீர் தர மறுக்கின்றவர்கள் தனி நாடக்ப் போனதும் எப்படி தண்ணீர் தருவார்கள் என்று எதிர்பார்க்கமுடியும்? தராவிட்டால் என்ன செய்வது? பல்லில்லாத அதிசயமான அய் நாவிடம் முறையிட முடியுமா?. முறையிட்டாலும் பலன் கிடிக்குமா? இன்றையா இந்தியாவில் தேசிய இனங்களைப் பற்றிய சிக்கல் முதன்மையானது என்பதில் அய்யமில்லை அதை எப்படித்தீர்ப்பது என்ப்தே முக்கியமானதாகும் குருட்டம் போக்கில் செயல் பட்டு தமிழ் நாட்டையும் இன்னொரு முள்வேலிக்குல் சிக்கவைப்பது அறிவுடமை ஆகாது.
    தேசீய இனங்களின் சுய நிர்ணய உரிமையை [ தன்னாட்சி உரிமை]மண முறிவுச் சட்டத்தை ஒத்தது ஆகும் . ஒரு பாதுகாப்பு கவசமாகும் . கணவன் , மனைவி இருவரும் ஒன்று பட்டு வாழ்வது இயலாது என்ற முடிவிற்கு வருவதற்கு முன் பலமுறை சிந்திக்க வேண்டும் . கூடி வாழ்தல் இயலாத செயல் என்ற முடிவிற்கு வந்த பிறகு மணமுறிவு பெறலாம் . ஆனால் மணமுறிவு எனது பிறப்புரிமை ; ஒருவர் எத்துணை முறை வேண்டுமானாலும் மணமுறிவு [ வவாகரத்து] பெறலாம் மறு மணம் செய்து கொள்ளலம் என்பது அறிவுடமை ஆகாது .
    சிலர் மாமேதை லெனின் அவர்களின் எடுத்துக் காட்டை காட்டி தேசீய இனங்களின் சுய நிர்ணய உரிமையை [ நிலை நிறுத்த முயலுவர் ஜார் மன்னன் ஆட்சியில் ரஸயப் பேரரசு தேசிய இனங்களின் சிறைச் சாலை யாக இருந்த்து உண்மைதான் . லெனின் அவர்களும் புரட்சிக்கு முன்னர் “தேசிய இனங்களின் தன்னாட்சி உரிமை பதுகாக்கப் படும்” என்பதை புரட்சியின் ஒரு திட்டமாக அறிவித்ததும் உண்மைதான் . அது போன்றே அவர் நடக்க வேண்டியும் இருந்த்து அப்போது அவர் தொழிலாளி வர்க்க நலனக்கு எது உகந்த்தது என்று கருதினரோ அதைத்தான் செய்தார். சோவியத் ஒன்றியத்தின் ஒரு மூலையில் ஒட்டிக் கொண்டிருந்த பின்லாந்து பிரிந்து போக வேண்டும் என்று கேட்டபோது அதன் உரிமையை மறுக்கவில்லை . ஆனால் சோவியத் இன் நெஞ்சுப் பகுதியில் இருந்த ஜார்ஜியா பிரிந்த செல்ல விரும்பிய போது அதனுடன் பேச்சு வார்த்தை நடத்தி அதனை சோவியத் ஒன்றியத்துடன் இருக்கும்படி செய்தார். தனக்கு அடுத்தபடியாக் [ லெனின் ரஸ்ய தேசிய இனத்தை
    சேர்ந்தவர் ] ஜார்ஜிய தேசிய இனதைச் சேர்ந்த ஜொசெப் ஸ்டாலின் வருபபடி ஏற்பாடு செய்தார் இது அந்த தேசிய இனமக்களின் முழு நம்பிக்கையைப் பெற்ரறுத்தந்தது . இவ்வாறு தேசீய இனங்களின் தன்னாட்சி உரிமையை முன்னெடுத்து செல்லும்போது அது உழைக்கும் மக்களின் நலனைப் பதுகாக்கும் வண்ணம் உள்ளதா என்பதை கவனத்தில் கொண்டே முடிவு செய்ய வேண்டும்

  3. Kumar says:
    15 years ago

    உண்மையில் நியாயமாக சுதந்திரம் கேட்டுப்போராடிய மக்கள் கூட்டங்களில் எந்த மக்கள் கூட்டம் மாக்சியவாதிகளால் அங்கீகரிக்கப்பட்டு சுதந்திரம் பெற்றது என்று யாராவது கூறமுடியுமா?

    முதலாளித்துவ நாடுகள் சுரண்டலை,சந்தையை நோக்கமாக வைத்து போராடும் மக்கள் கூட்டங்களின் சுதந்திரத்திற்கு ஆதரவு வழங்கினாலும் மாக்சியவாதிகளுடன் ஒப்பிடும் போது அவா்கள் மேலாகவே தெரிகிறார்கள் ஏனெனில் மாக்சியவாதிகள் பேச்சளவில் மட்டுமே இனங்களின் சுதந்திரத்தை வைத்துக்கொள்கிறார்கள் செயலில் அதற்கு முரண்பட்டே வந்ததை நாம் அறியமுடிகிறது.

    ஈழ விடுதலை இயக்கங்கள் பாசிஸ தன்மை கொண்டவை என்பதில் சந்தேகம் கிடையாது ஆனால் அதை மட்டும் காரணமாக வைத்து ஈழ மக்களின் போராட்டம் அா்த்தமற்றது என்ற மாயையை உருவாக்கி அதற்குள் ஒளிந்துகொள்ளக்கூடாது.

  4. Pingback: Indli.com
  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...