அயோக்கியர்கள் அணிந்துகொள்ளும் இறுதி முகமூடி தேசியம் என்பதை அழிவுகளின் பின்னர் நடைபெறும் மாவீரர் தினம் அழகாகக்ப் படம்போட்டுக் காட்டுகிறது. அரசியலற்ற வெற்றுத் தேசிய முழக்கத்தை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். இலங்கை பாசிச அரசின் உளவாளிகள், இந்திய அரசின் கொலைகார்கள், அமரிக்க உளவு வலைப்பின்னர் என்ற எது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தமிழ்ப் பேசும் மக்களின் ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டம் கூட இப்படித்தான் பயன்பாட்டிற்கு உட்பட்டது. இதற்கெல்லாம் புலிகள் மட்டும் காரணமாகிவிட முடியாது. இன்று அரசியல் குறித்துப் பேசுகின்ற நாம் அனைவரும் தான் காரணம்.
இரண்டு வேறுபட்ட குழுக்கள், மாவீரர் தினத்தை ஒழுங்கமைப்பதற்கு அவர்களிடையே ஏற்படும் மோதல்கள், அருவருக்கத்தக்க அவதூறுகள் எல்லாம் முடிவின்றித் தொடர்கின்றன.
பிணங்களை முன்வைத்து அரசியல் பிழைப்பு நடத்துகின்ற இந்தக் கூட்டங்கள் எமது போராட்ட வரலாற்றின் சாபக்கேடுகள்.
அரசியல் முரண்பாடுகள் கொண்ட ஆயிரம் குழுக்கள் ஒரே நோக்கத்திற்காக உருவாகலாம். அரசியல் கருத்து மோதல்களால் புதிய கருத்துக்கள் உருவாகலாம். மோதும் இரு குழுக்களிடையேயும் அரசியல் முரண்பாடுகள் கிடையாது. 80 களில் தீவிர ஆயுதப் போராகப் பரிணாமம் அடைந்த பெருந்தேசிய ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டங்களின் தோலிவியிலிருந்து கற்றுக்கொள்ள இவர்கள் தயாரில்லை. போராட்டம் விட்டுச் சென்றுள்ள வியாபார இடைவெளிக்குள் புகுந்து கிடைத்ததை எல்லாம் சுருட்டிக்கொண்டு ஓட்டமெடுக்கவே எஞ்சியுள்ள “தேசிய வியாபாரிகள்” காத்திருக்கின்றனர்.
இவை எல்லாம் ஒரு புறத்தில் நடந்தேற, மறுபுறத்தில் இலங்கை அரசு புலம் பெயர் மக்களின் போராட்ட உணர்வை அழிப்பதற்கு தம்மாலான அத்தனை வழிகளிலும் முயற்சிக்கின்றது.
இறந்துபோன, இல்லாமல்போன, சாம்பலாக்கப்பட்ட அனைத்துப் போராளிகளின் தினமாக வெற்றிக்கான அரசியலோடு மாவீரர் தினம் ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சித் தினமாக உருவாக்கப்பட்ட வேண்டும்.
உலகெங்கும் மக்கள் எழுச்சிகளைச் சந்திக்கும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதற்காகப் பெருமைப்படலாம்! முப்பது வருடப் போராட்ட அனுபவம் கொண்டவர்கள் என்பதிலிருந்தெ உலகை நோக்கலாம்!! அறுபது வருட இராணுவ ஒடுக்கு முறையை முகம் கொடுத்தவர்கள் என்பதற்காக எழுச்சி கொள்ளலாம். இவை அனைத்தையும் முன்வைத்தே உலக எழுச்சிகளின் முதன்மையான ஒன்றாக எம்மைத் தகவமைத்துக் கொள்ளலாம்!!!
ஆனால் துயர்கொள்ளும் வகையில் நமது சமூத்தின் அரசியல் தலைமை வியாபாரிகளின் கோரப்பிடியில் சிக்குண்டுள்ளது.
மாவீரர் தினம் பல ஆயிரங்கள் வருமானத்தை வழங்கும் என்பதே மோதலின் அடிப்படைகளில் ஒன்றாகும்.
“தேசிய வியாபாரிகளுக்கு” எதிரான போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட வேண்டும். அப் போராட்டம் இலங்கை அரசிற்குச் சார்பானதாக மாற்றமடையாமல் நகர்த்தப்பட வேண்டும். மாவீரர்தினம் போன்ற எழுச்சி நிகழ்வுகள் வியாபாரிகளிடமிருந்து விடுவிக்கப்படும் அதே வேளை புதிய பரிணாமத்தோடு ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சி நாளாக அது மாற்றமடைய வேண்டும்.
மாவீரர் தினத்தில் வியாபாரப் பொருட்களாகப் பயன்படும் பூக்கள், தீபங்கள், கொடிகள் போன்றவற்றைப் புறக்கணிப்பதிலிருந்து இந்த எதிர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்படலாம். வியாபாரிகளை வீட்டிற்கு அனுப்பலாம். புதிய எழுச்சி நாளையும் அதற்கான அரசியலையும் உருவாக்கும் ஆரம்பப் புள்ளியாக இது மாற்றமடைய வாய்ப்புண்டு.
புலம் பெயர் வியாபாரிகளுக்குப் பணம் சேர்க்கும் பொருட்களை மாவீரர் நாளில் புறக்கணிக்கும் போராட்டம் பிரச்சார இயக்கமாக முன்னெடுக்கப்பட வேண்டும்.
உலகிலேயே இனரீதியாக மிக கொடூரமாக ஒடுக்கப்படும் இனங்களில் ஒன்றாகிய எமது இனத்தின் விடிவிட்காகப்போராடிய போராளிகளை இந்த வியாபாரிகளை விட அதிகமாக யாரும் கேவலப்படுதிவிட முடியாது. இப்படியொரு வியாபரகூத்தை
ஆடுபவர்களை மக்கள்மத்தியில்இருந்துஅப்புறப்படுத்தவேண்டும் .இவர்கள் தங்களுக்குள், கே பி யின் அதரவுபிரிவு , இந்திய உளவுபிரிவின் திட்டத்தில் இயங்கும் பிரிவு என்று ஒருவரை ஒருவர் குற்றம்சுமத்தி பிரசாரம் செய்கிறார்கள். இவர்களில் யார் எவர் என்பத்தை மக்கள்
விரைவில் அடையாளம் கண்டு இருவரையும் வீட்டுக்கு அனுப்பவேண்டு
லும்பனை ஒத்தவர்களே புலம்பெயர் தேசத்தில் புலிகளின் பணமுகவர்களாக இருந்திருக்கிறார்கள். இதில் ஒரு சிலர் ஐயத்திற்திற்கிடமில்லாமல் சிலர் விதிவிலக்கா இருப்பார்கள்.
இந்த மாவீரர் நாளில்பணவு வரவு குறைவது 2009-மே மாததிற்கு பிறகு புரிந்து கொள்ளக் கூடியதே!
முந்திவந்தவர்கள் இனிவரப்போவதில்லை. வந்தவர்கள் இனி தட்சணை கொடுக்கமாலே திரும்பிப் போவார்.மாவீர் வருடாந்த நாள்களும் வரும் காலத்தில் மங்கி பொழிவிழந்து இருப்பிடம் இல்லாது போகும்…சில வேளை இன்னும் ஓர்ரிரு வருடங்களில்…..
கீரைக்கடைக்கும் எதிர்க்கடை போடல் அல்லது எனக்கு மூக்குப் போனாலும்,எதிரிக்கு சகுனப்பிழை நடந்தாச் சரி என்கிறதை கனகச்சிதமாய் “மாவீரர் நாள்” எடுத்துக் காட்டுகிறது.
மக்கள் எவ்வளவு தூரம் நம்புகிறார்கள் என்பது அவர்களுக்கானது;தமிழ் மக்கள் சரி,பிழை என்பதை தீர்மானிப்பதில் உறுதியானவர்கள் என்பதை கடந்த அறுவதாண்டுகளுக்கு மேலாக நிரூபித்திருக்கிறார்கள்.
மாற்றுச் சிந்தனை,தலைமை,நடைமுறை உருவாக்காதவர்கள்,
மாரித்தவக்கையாக மாறிக் கிடக்கிறார்கள்.
முதலில் இந்த “வைக்கல் பட்டடை நாய்த்தனத்தை” விட்டுவிடுங்கள்.
இயக்க ரீதியாக நலமடிக்கப்பட்டு வளர்க்கப்பட்டவர்கள்,புதிதுபுதிதாக வந்து,குளத்தைக் கலக்கி பருந்துக்கு இரையாக்குகிறார்கள்
தமிழ்களின் போராட்ட வழி என்ன என்பதை இனிமேல் ஆவது முன் வையுங்கள்.அங்கே உள்ள மக்கள் என்ன செய்ய வேண்டும் ,இங்கே உள்ள மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்குங்கள் .
நித்தி
இங்கே உள்ள மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்குங்கள் .
///// “தேசிய வியாபாரிகளுக்கு” எதிரான போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட வேண்டும். அப் போராட்டம் இலங்கை அரசிற்குச் சார்பானதாக மாற்றமடையாமல் நகர்த்தப்பட வேண்டும்
//மாவீரர் தினத்தில் வியாபாரப் பொருட்களாகப் பயன்படும் பூக்கள், தீபங்கள், கொடிகள் போன்றவற்றைப் புறக்கணிப்பதிலிருந்து இந்த எதிர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்படலா//
மாவீரர் தினத்துக்கு போகப்போகிறம் என்று அடம்பிடிக்கும் பொதுமக்களுக்கு இது சொல்லப்பட வேண்டும்.
தமிழினி அவர்களே… பொது மக்களாகிய நாங்களே எப்போ வரும் மாவீரர் நாள் என்று காத்துக் கொண்டு இருக்கும் எங்களை ..அடம்பிடிக்கும் மக்கள் என்று கூறுவது உமக்கே நல்லா இருக்கா…..
ரகு அவர்களே இறந்தவர்களை வைத்து வியாரம் நடத்தும் தினம் எப்போதுவரும் என்று உங்களைப்போன்றவர்கள் காத்திருப்பதைத்தான் தமிழினி அப்படி எழுதியிருக்கின்றார். எப்போ வரும் மாவீரர் நாள் என்று காத்துக் கொண்டு இருக்கும் உங்களைப் போன்றவர்கள் அடுத்தவன் பிள்ளையின் இறப்பை வைத்து சம்பாதிப்பதை ஊக்குவிப்பதை அப்படித்தான் கூறவேண்டும்.
உமது இக் கருத்கானது ஓட்டு மொத்த தமிழினத்தையே பாதிக்கின்றது ..
தேவன் ,அந்த “தேசிய வியாபாரிகள் ” யார் என இனம் காட்ட முடியுமா ? ஏனென்றால் இங்கே பல ரேடியோக்கள் ,வெப் சைட்டுக்கள் இயங்குகின்றன அவர்களை அடையாளம் காட்டுங்கள். ஆக்கபூர்வமான காரியங்களை செய்வோம்.
சரி இலங்கைல் உள்ள மக்கள் என்ன செய்யவேண்டும்.?
உதெல்லாம் காண்டக்காரர்.நாடி சோதிடர்,அல்லது மலையாள தெலுங்கு,கன்னட சாஸ்திரிகளிட்ட கேட்கிற கேள்வி. சும்மா தேவன் டூ விட்றதை கேட்கலாமே!
நெருஞ்சி எங்கு இருக்காரோ தெரியவில்லை. அவர் வாழும் இடத்தில் மனநோய் வைத்தியர்கள் இருப்பார்கள் என்பதை நம்புகிறேன். அப்படி இருப்பதைக் கூட அவதானிக்காமல் ஈழத்தமிழர்கள் அப்பாவிகளாக இருக்கிறார்கள் என்பதே என் துயர். ஈழத்தில் இருந்து பேசுகிற எனது உறவினர்கள் ஐரோப்பவில் இருப்பவர்களை விட புத்திசாலிகளாக இருக்கிறார்கள்.
(இனியொரு இணையத்தளத்தின் மின்னஞ்சலை அறிய முடியாதலால் கருத்துப் பதிவிற்காக அனுப்பியுள்ளேன்.விரும்பினால் தனிக் கட்டுரையாக வெளியிடலாம்)
வெற்றிக் களிப்பில் இலங்கை ஜனாதிபதியும் வெட்கங்கெட்ட புலம்பெயர் தமிழீழ விடுதலைச் செயல்பாட்டாளர்களும்.
புலம்பெயர் நாடுகள் சிலவற்றில் தமிழீழ விடுதலைப்புலி செயல்பாட்டாளர்கள் வெட்கங்கெட்ட மனிதர்களாகச் செயல்பட்டு மக்களை குழப்பி வருவதை அறிய முடிகின்றது.முள்ளிவாய்க்காலுடன் தமிழர் உரிமைப் போர் தோற்கடிக்கப்பட்டது,புலிகள் அழித்தொழிக்கப்பட்டார்கள் என்ற முடிவுடன் இலங்கையரசு தனது நடவடிக்கை நிறுத்திக் கொள்ளவில்லை.தமிழர் பகுதிகளில் இராணுவ மயப்படுத்தல்,புத்தவிகாரைகளை அமைத்தல்,மாவீரர் துயிலும் இல்லங்களை அழித்தல்,தமிழ் ஊர்களை சிங்கள ஊர்களாக மாற்றுதல் போன்ற தமிழர் மீதான அடக்குமறை இலங்கையில் தொடர்ந்த வண்ணம் இருக்க,தமிழர் அழிப்பிற்கெதிராக,அடக்குமறைக்கு எதிராக,இலங்கை ஜனாதிபதி உட்பட அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கெதிரான போர்க்குற்ற விசாரணை அது சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை துரிதமாக எடுத்து வருவதால் நெருக்கடிகளைச் சந்தித்த இலங்கையரசு உடனடியாகவே புலம்பெயர் தமிழர் மீதான சமூகக் கட்மைப்பின் மீது உளவியல் அணுகுமுறையில் பிரித்தெடுக்கும் முயற்சியை மேற்கொண்டது.இலங்கை அரசு இந்த உளவியல் போரை தொடங்குகிறோம் என்று சொல்லியே ஆரம்பித்தது.இதனை எத்தனை பேர் கவனத்தில் கொண்டார்கள் என்பது தெரியவில்லை.தமிழீழ கோட்பாடு நோக்கிய செயல்பாட்டுத் தளங்களில் முக்கியமான தமிழீழ விடுதலைப்புலித் தளத்தின் மீது இலங்கை அரசு மேற்கொண்ட நடவடிக்கையின் தாக்கம் புலம்பெயா நாடுகளில் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளமையை இன்று புலம்பெயர் தேசத்தில் புலிகள் அமைப்பு ஒன்றுக்கு மேற்பட்ட அமைப்பாக பிளவுபட்டுக் கொண்டிருக்கின்றநது.இதற்கு இலங்கையரசுதான் காரணம் எனச் சொல்ல முற்படுபவர்கள்,புலம்பெயர் தேசங்களில் புலிகள் தங்கள் நடவடிக்கைகளை வெளிப்படைத் தன்மையுடன் செய்தார்களா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.புலம்பெயர் தேசங்களில் இயங்கிய புலிகள் அமைப்பினரிடம் எந்தவொரு இராஜதந்திர நகர்வுகளுமே இருந்ததில்லை.அவர்கள் பணம் சேகரிப்பதில் காட்டிய ஆர்வத்தை அறிவுபூர்வமான நகர்வுகளில் காட்டவேயில்லை.போருக்குப் பின் புலம்பெயர் தேசங்களின் ஆட்சியாளர்கள் என்னென்ன சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்பதை இவர்களின் மிதமிஞ்சிய எல்லாம் எங்களுக்குத் தெரியும் என்ற அகங்காரம் தடுத்துவிட்டது.இந்த அகங்காரமே புலம்பெயர் தேசங்களில் உள்ள சில நாடுகளில்,இரண்டுபட்டு இரண்டு மாவீரர் நாள்கள் நடைபெறும் நிலையை எட்டியிருக்கின்றது. போர்க் காலத்தில் மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட நிதி எங்கே என்று கேட்கப்பட்டதன் எதிரொலியே இன்று இரண்டு மாவீரர் நாளுக்கான அடித்தளத்தை கோலியுள்ளது.இவர்கள் தம் மக்களிடம்கூட வெளிப்படைத் தன்மையுடன் இருக்கவில்லை.மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட பல இலட்சத்திற்கும் மேலான நிதி எங்கேயோ முடக்கப்பட்டவிட்டது என்ற சந்தேகம் மக்கள் மனங்ளில் விஸ்வரூபம் எடுத்து நிற்கின்றது.ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போலவும்,எரிகிற வீட்டில் பிடுங்கியது போலவும் நிதிப்பொறுப்பாளர்களில் சிலர் (எல்லாரும் அல்ல) கையாடல் செய்வதற்குரிய சூழல் அமைந்திருப்பதை புலம்பெயர் தமிழ் மக்கள் அவதானித்துக் கொண்டிருக்கின்றார்கள்.நீண்ட காலமாக பல தவறுகள் ஏற்பட்ட போதும் விடுதலைப்புலிகளின் தலைவர் மீது வைத்திருந்த நம்பிக்கை மிகந்த மரியாதையாலும்,மாவீரர்களின் தியாகத்தின் மீது கொண்ட அன்பாலும் புலம்பெயர் தமிழ்மக்கள் பொறுத்துக் கொண்டிருந்தார்கள் என்பதே உண்மையாகும்.பொதுமக்கள் காட்டிய விசுவாசத்தை செயல்பாட்டாளர்கள் காட்டவில்லை என்பதும்,அக்கறை உள்ளவர்களாக தம்மைக் காட்டிக் கொண்ட மாயத் தோற்றத்தை கொண்டிருந்தார்கள்(எல்லாரையும் அல்ல)என்பது வெளிப்படையாகிவிட்டது.இலங்கையரசின் வியூகத்திற்குள் இவர்கள் அகப்பட்டுவிட்டார்கள்.எந்தவிதமான ஜனநாயக இராஜதந்திர அணுகுமுறை எதனையும் இவர்கள் முன்னெடுக்கவில்லை.எங்கே பணம் என்றவர்களுக்கு கணக்குக் காட்டுவதால் இவர்களுக்கு என்ன பாதிப்பு.புலம்பெயர் தேசங்களில் உள்ள நாடுகள் தமிழரின் வெளிப்படைத் தன்மையையே ஏற்றுக் கொள்ளுகின்றார்கள்.தாயக மக்களுக்காக அவர்கள் நடத்தும் அமைப்புகள் பதிவு செய்யப்பட்டு முறையாக கணக்குகளை அரச நிர்வாகத்திற்கு காட்டுமாறு பல முறை சொல்லியிருக்கின்றார்கள்.இலங்கையரசின் ஊடுருவலும் இந்திய அரசின் ஊடுருவலும் இந்த இரண்டுபட்ட செலய்பாடுகளுக்குள் இடம்பெற்றுள்ளதா என்றும் சந்தேகப்பட வைத்துள்ளது.மாவீரர் நாள் அறிவித்தல்களை கிழிக்கும் அடவாடித்தனங்கள் ஏற்பட்டுள்ளதை அறிந்து பொதுமக்கள் கோபமும் கவலையுமடைந்துள்ளார்கள்.இலங்கையரசின் அரசியல் நிலவரம் புரிந்து இவர்கள் செயல்படுகிறார்களா என்பது ஐயத்துரியதாகவே இருக்கின்றது.மக்களுடன் உண்மைகளைப் பேசுவதில் இவர்கள் ஏன் தயங்க வேண்டும்.இன்று இலங்கையில் எடுக்கப்படும் ஜனநாயக முன்னெடுப்புக்களைச் சிதைப்பதற்கு தொடர்ந்தும் விடுதலைப்புலிகள் அமைப்பின் பெயர்களை பயன்படுத்துவதையோ,குறிப்பாக இந்தியாவில் இடம்பெறும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு புலிகளுக்கும் தொடர்பு உண்டென்று சொல்லுகின்ற பொய்ப் பிரசாரத்தை முறியடிக்க வேண்டுமெனில் உலக நாடுகளில் உள்ள புலி அமைப்புகளை கலைத்துவிடுவதாக பகிரங்க அறிவித்தல் விடுவதே புத்திசாலித்தனமானது.இதனால் புலிகளை மக்கள் நிராகரித்துவிட்டார்களா என்று கேள்வி எழுவதும், அப்படி இல்லை என்ற கேள்விகள் எழும்.இக்கேள்விகளும் சந்தேகங்களும் தொக்கி நிற்கும் போதே முழுமையான.எதை நோக்கி குற்றச்சாட்டு எழுகின்றதோ அந்த குற்றச்சாட்டு எழுகின்ற இடம் வெற்றிடமாகவே எப்பொழுதும் இருக்க வேண்டும்.விடுதலைப்புலி அமைப்பை கலைக்க மாட்டோம் என்ற பிடிவாதத்தை புலம்பெயர் நாடுகளின் புலிச் செயல்பாட்டாளர்கள் தொடருவார்களானால்,அவர்கள் தொடர்ந்தும் மக்களை ஏமாற்றுவதற்க தயாராகி வருவதாகவே நம்ப வேண்டி வரும்.மக்களுக்கு விளக்கம்தர வேண்டிய பொறுப்பு இரண்டுபட்டவர்களுக்குமே உண்டு.இரண்டுபட்டவர்கள் வெட்கி நிற்க நினைத்ததை சாதித்த வெற்றிக் களிப்பில் இலங்கையரசு இன்று.
-அவதானி
அவதானிக்கு கவனத்திற்கு வரவேண்டிய விஷயங்கள் இரண்டை கூறுவேன்.
ஒன்று: இரண்டும்கெட்டான் நிலையில் உள்ளது இலங்கை மட்டுமல்ல எமது தொப்புக்கொடி உறவுகளாக தமிழ்நாடு இந்தியா மட்டுமல்ல ஐரோப்பியநாடுகளும் அமெரிக்காவும் தான். யார் முதல் வீட்டுக்கு தீ மூட்டுவார்கள் என்பதை காத்திருக்கும் காலமிது.
இரண்டாவது இலங்கைமக்களுக்கு இல்லை ஈழத்தமிழர்களுக்கு நீண்டபெரிய கொடுரமான துன்பங்களை விளைவித்தவர்கள் புலம்பெயர் தமிழர்களே! இல்லையேல் இவ்வளவு இன்னல்களை இழப்புகளை எமது இனம் சந்திதிருக்க வாய்ப்பில்லை.
இந்த துன்பத்தின் தோற்றுவாய்க்கு காரணமாக இருந்தவர்களே திரும்பவும் துன்பத்தை வரவழைத்து ஈழத்திற்கு ஏற்றுமதிசெய்வதற்கு மண்டபங்களை திறந்து மாவீரர் நிகழ்வு நடத்துகிறார்கள். ஆகவே புலம்பெயர் தமிழர்கள் உணர்வுகளும் அர்பணிப்புகளும் அவர்களுக்கு போதும் போதும் என்றாகிவிட்டது.
ஆகவே அங்கிருக்கும் விதவைகள் போரில்-போரின்தாக்கத்தல் ஊனமுற்றவர்களுக்கு உதவிசெய்ய வேண்டுமென்றால் உங்கள் சக்கரநாற்காலிகளோ! உங்கள் மறுவாழ்வு திட்டங்களோ அவர்களுக்கு தேவையில்லை. அப்படி செய்தால் அவர்களின் வாழ்வை தொலைத்தது மாதிரி. அவர்கள் சந்ததியையே! கபளீகரம் செய்து விடுவீர்கள்.
உதவிசெய்வதாக இருந்தால் ஒன்று இருக்கிறது. இந்த பு.தமிழர்களின் அரசியல் உபதேசங்களை நிறுத்திக் கொள்வது. அவர்களின் வாயும் வயிறும் வாழ்வும்வெவ்வேறானவை. உண்மையில் அவர்கள் அரசியல் ஜீவன்கள் தான். அவர்கள் வெற்றி கொள்வார்கள். இதுவே தாங்கள் கவனத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய இரண்டு அம்சங்களாகும்.
இரண்டுபட்டார்கள் என்பது புலம்பெயர் தேசங்களில் இரண்டு பட்டு நிற்கும் புலிச் செயல்பாடுகளையே குறிப்பிட்டிருந்தேன்.இந்த இரண்டு பகுதியினரும் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.எனது கட்டுரை வடிவிலான இந்தப் பதிவு மக்களில் ஒருவனாக இருந்து எழுதப்பட்டதே.எனக்குள் இருந்த கோபமும் ஆதங்கமுமே இப்படி எழுத வைத்தது.
தமிழர்கள் தமது உரிமைக்காக அழுத்தமான தீர்க்கதரிசனமான பாதையை வகுக்க வேண்டுமென்றால் உலகநாடுகளில் உள்ள தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற பெயருடன் இயங்குவதை நிறுத்திவிட்டு;இவ்வமைப்பு கலைக்கப்பட்டுவிட்டதாக பகிரங்க அறிவித்தலை விடுவதே சமயோசித நடவடிக்கையாகும்.
இந்த கருத்தை முழுமையாக ஆமோதிக்கிறேன் அவதானி அவர்களே!.
முள்ளிவாய்க்காலுடம் முறியடிக்கப்பட்டது தமிழர்களின் உரிமைப்போராட்டமல்ல. ஹிற்லர் மாதிரியான பிரபாகரனின் அதிகாரப்போராட்டமே. அது அழிக்கப்பட வேண்டியது தான். ஏனெனில் பிரபாகரன் தமிழ்மக்களுக்கு பேச்சுச்சுதந்திரம், எழுத்துச்சுதந்திரம், கூட்டம்கூடும் சுதந்திரம், இடம்பெயர் சுதந்திரம் என்று எந்த சுதந்திரத்திரத்தையும் அனுமதிக்கவில்லை. தமிழ்மக்களுக்கு புலிகள் சொல்வதற்கு ஆமாம் போடும் சுதந்திரத்தை மட்டும் தான் வழங்கியிருந்தார். இதன்மூலம் பிரபாகரன் சிங்கள ஆட்சியாளர்களின் அடக்குமுறைக்கு எதிராக பொதுமக்கள் எழுச்சிகள், போராட்டங்கள் எல்லாவற்றையும் இல்லாமல் செய்து சிங்கள அடக்குமுறையாளர்களுக்கு உதவி புரிந்துள்ளார். இலங்கையிலும் சரி வெளிநாடுகளிலும் சரி புலிகள் பணத்திலும் பொன்னிலும் (நகையிலும்) தான் குறியாயிருந்தார்கள். புலிகளை அழித்த பின்பு சிங்கள இராணுவம் எவ்வளவு பெருந்தொகையான பணத்தையும் நகைகளையும் கைப்பற்றினார்கள் என்பதின்மூலம் இதை புரிந்துகொள்ளலாம். தாம் அழியும் முன்னர் இறுதி நேரத்திலும் அவர்கள் இவற்றை தமிழ்மக்களிடம் திருப்பி ஒப்படைக்க முன்வரவில்லை.
இப்போதான் மக்கள் வியாபாரிகளை கண்டு பிடித்து வீட்டிற்கு அனுப்ப வேண்டும் மாவீரப் பொருட்களை மக்கள் வாங்க கூடாது என மக்களை திடீரென நினைக்கிறார்கள். புலியிடம் இருந்து விலகுங்கள் ஆதரவு அளிக்காதீர்கள் என சொன்னவர்களையும் எழுதியவர்களையும் ஏன் நினைத்தவர்களையும் சாம்பலாக்கி விட்டு இந்த அறிவுக் கொழுந்துகள் இப்போ புலம்புகிறார்கள். முள்ளிவாய்க்கால் முடிந்து பிரான்ஸில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள மைத்துனன் சொன்னான். “நாங்கள் ஒரு நோட்டீஸ் ஒட்ட நினைத்தாலே ஆமிக்காரன் மோட்டார் சைக்கிளில் எமக்கு பின்னால் வந்து நிற்கிறான்.”
அது என்ன நோட்டீஸ் என்று கேட்டீர்களா இதயம்?
யேசு அழைக்கிறார் என்பதா? இல்லை தமிழீழம் தணியாத தாகம் என்பதா?? அல்லது போர்குற்றவாளியை பிடித்துச் செல்ல அமெரிக்க படை வருகிறது என்பதா???.
அந்த விபரத்தை அல்லவா நீங்கள் மைத்துனனிடம் முதலில்
கேட்டிருக்க வேண்டும். ஓடிப்போய் முதலில் அதை கேட்டு எங்களுக்கும் தெரியப் படுத்துங்கள்.
மட்டமான மனிதர்கள், மனிதர்களை பற்றி விமர்சிக்கிறார்கள்
சாதாரண மனிதர்கள், நிகழ்ச்சிகளைப் பற்றி விமர்சிக்கிறார்கள்
மகத்தான மனிதர்கள், கருத்துகளைப் பற்றி விமர்சிக்கிறார்கள்
“ஆடுகள் நனையுதென ஓநாய்கள் அழுகின்றன” சிறிலங்கா புலானாய்வாளர்கள் துணைஇராணுவ குழுக்கள் மாவீர்நாள் சிதைக்கப்படுவதற்கு வருந்துவதாக நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள்.
ஆடுகள் நனையுதென ஓநாய்கள் அழுகின்றன// /நனைந்தது எல்லாம் ஆடுகள் அல்ல(பசுதோல் போர்த்த புலிகளும் ஆடுகளுடன் சேர்ந்து அனுதாபம் தேடப் பார்குதுகள்) .
அழுவது எல்லாம் ஓநாய்கள் அல்ல (பசுதோல் போர்த்த புலிகளை அடையாளம் காண மறுக்கும் ஆட்டுக்குட்டிகளின் தாயாடுகளும் தான் )
இலங்கை அரசுக்கு எதிராக போராடுபவர்களையும் கருத்துச் சொல்பவர்களையும் புலிகளை வைத்து சேறடிப்பது இலங்கை அரசுக்கு இலகுவான வழிமுறை. போராட்டத்தை அழிப்பதற்கு புலி வேசத்தைப் பயன்படுத்துவது இலகுவான வழிமுறை. அதற்கு நிர்மலன் பொருத்தமான குறியீடு.
தமிழீழம் தணியாத தாகம் இபொங்கி எழுங்கள் என்ற நோட்டீசை தான் ஒட்ட நினைத்தார்களாம். அதே வேளை யுத்தம் முடிந்து எமது சொந்த ஊருக்கு வந்த உறவினர் தனது பகுதியில் மீள் குடியேற்றம் பூர்த்தியாகி விட்டது எனவும் தானும் தனது காணியில் குடியேறி விட்டேன் எனவும் ஆனால் தனது அயல்களில் வசித்த தனது நண்பர்களோ உறவினர்களோ இதுவரை திரும்பி வரவேயில்லை என வேதனையுடன் கூறினார். எல்லோரும் பொய் சொல்கின்றார்கள் எனவும் வன்னி யுத்தத்தில் நாற்பதாயிரம் பேர் அல்ல ஒரு லட்சம் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பது தனது கணிப்பீடு என தெரிவித்தார். இந்த அவலங்களின் காரணகர்த்தாக்களோ புலம் பெயர் தேசங்களில் எந்த குற்ற உணர்வும் இன்றி……..
அப்படியாயின் ஆமிக்காரன் மோட்டர் சைக்கிளில் கலைத்து வருவதில் தப்பில்லை. இல்லையேல் கப்பம் சுங்கவரி பிள்ளைபிடி கண்ணிவெடி விமானகுண்டு வீச்சு இடம்பெயரல்
இப்படியே நீண்டுகொண்டு ஈழத்தமிழினம் உலக்கை தேய்து உளிப்படியான கதை தான்.
முப்பதுவருட ஆயுதபோராட்டத்தில் உளிப்படியை யாவது நினைவாக விட்டுவிடுதலே சிறந்த தேர்வு.
சந்திரன் ராசா,
அப்பட்டமான இனக் கொலையாளிகளையும் சர்வாதிகாரத்தையும் வெளிப்படையாக நியாயப்படுத்தும் நீங்கள் அவமானகரமான வியாபாரி.
நீங்கள் சொன்னால் மட்டும் அது உண்மையாகி விடுமா? கோசலன். தமிழ்போலீசும் தமிழ்ஆமியும் மக்களிடம் அதிகாரம் செலுத்தாது என்று நம்புகிறீர்களே! அது அரசுகளின் பண்பு என்பதை நீங்கள் உணரும் வரை நீங்களும் இப்படி வங்குரோத்து தனமான விமர்சனங்களைத் தான் வைத்துக் கொண்டிருப்பீர்கள்.
சிங்களஆமியும் சிங்களபோலீசும் உயிருடன் “லைட்போஸ்ட்”லில் அடித்துக் கொல்லும் என்றால் தமிழ்போலீசும் தமிழ்ஆமியும் உயிருடன் தெருவில் போட்டுக் கொளுத்தும். பிணைப்பு சங்கிலியுடன் தீயில் உயிருடன் தூக்கிப் போடும்.
இதுவெல்லாம் எமது வாழ்நாளில் கண்ட சாட்சி. இதுயெல்லாம் தாங்கள் உணரமுடியாது இருக்கிறது அரசு பற்றிய அதிகாரத்தை தாங்கள் அறிய முடியாமல் இருக்கிற அறிவீனத்தாலேயே!
ஒருகட்டுரையை கிறுக்கிவிட்டால் நீங்கள் சிறந்த கருத்தாளர் ஆகிவிடமுடியும் என கனவு காணாதீர்கள்.
சிங்களவனின் எழம்புத்துண்டுக்கு நீரும் பலியாகி விட்டீரா
எது எப்படியோ விதனேடா வாதங்களை விட்டு அனைவரும் ஓன்றுபட்டு எம் இனம் அழிவதிலிருந்து பாதுகாக்க வழியைத் தேடுங்கள் ….நம்மவர்கள் வாய்ச்சொல்லில் வீரர்கள் .செயழில் (ஓருவரைத் தவிர) மற்றைய எல்லோரும் கோழைகளே……………………..
நீரும் உமது உறவுகளும் கொழும்பில் பாதுகாப்பாக இருக்கின்றீர் போலும்.. வட கிழக்கில் என்ன நடக்கின்ரது என்பதைப்பற்றியும்.எம் தமிழ் உறவுகள் படும் துன்பங்கள் பற்றியும் சற்று சிந்தித்துப் பாரும் சிங்களவனுக்கு வக்காலத்து வாங்காதயும்.
தேவன் ,சரி இலங்கைல் உள்ள மக்கள் என்ன செய்யவேண்டும்.?
.
தமிழ்களின் போராட்ட வழி என்ன என்பதை இனிமேல் ஆவது முன் வையுங்கள்.அங்கே உள்ள மக்கள் என்ன செய்ய வேண்டும் ,இங்கே உள்ள மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்குங்கள் ./
/ / இலங்கைல் உள்ள மக்கள் என்ன செய்யவேண்டும்.?/ யார் என இனம் காட்ட முடியுமா ? / நித்தி
! உங்கள் கேள்விகள் ஒரு மார்க்கமாக தானிருக்கிறது, உங்களிடம் சில வேலைத்திட்டங்கள் இருப்பது போல் தெரிகிறது . முன் வையுங்கள் .
நித்தி,
உங்கள் கேள்வியில் மிகுந்த நியாயம் உண்டு. இலங்கையில் வாழும் மக்கள் என்ன செய்யவேண்டும் என்பதை நாங்கள் இங்கிருந்து தீர்மானிக்க முடியாது. குறைந்தபட்ச்சம் நாங்கள் என்ன செய்யக் கூடாது என்றாவது தீர்மானிக்கலாம். இலங்கையில் நிலைமைகள் எவ்வாறு உள்ளது என அனுமானிக்கலாம். இலங்கையில் தமிழ்ப் பேசும் மக்கள் திட்டமிட்ட இனப்படுகொலைக்கும் இனச் சுத்திகரிப்பிற்கும் உள்ளாகிறார்கள். இராணுவ ஒடுக்குமுறைக்கு மத்தியில் வாழ்கிறார்கள். அப்படி ஒரு மனித கூட்டத்தால் வாழ முடியாது. அதனால் அவர்கள் தம்க்குத் தெரிந்த வழிகளில் போராடுவார்க|ள். அப்படி அவர்கள் போராடுவதை அண்மை நாட்களில் கண்டிருக்கிறோம். கிறீஸ் பூதத்தை அரசாங்கம் கட்டவிழ்த்துவிட்ட போது மக்கள் போராடினார்கள் அல்லவா?
அப்படி மக்கள் போராடுகின்ற போது அவர்களுக்கு பக்கபலமாக இருப்பது நாம் இங்கிருந்து செய்து முடிக்கவல்ல ஒன்று. இதனால் அவர்களின் போராட்டம் பலம்பெறும். அவர்களது போராட்டம் பலம் பெறுவதற்குரிய அத்தனை வழிமுறைகளையும் நாம் உருவாக்கலாம். எம்மைப் போல போராடும் பல ஆயிரக்கணக்கான குழுக்கள் நீங்கள் வாழும் நாடுகளிலேயே காணலாம். சிங்கள மக்கள் மத்தியிலேயே பலர் போராட முற்படுகிறார்கள். அவர்களை இணைத்துக்கொள்ள நாம் நிறையவே செயற்படலாம்.
வியாபாரிகள் என்ன செய்கிறார்கள்? போராடும் குழுக்களோடு சேராதிர்கள் என்பார்கள். இந்தியாவோடு அமரிக்காவோடு சேர்ந்து கொள்ளுங்கள் என்பார்கள். அவர்களுக்கு அதில் இலாபம் உண்டு. இப்போது உங்களுக்கு இன்னொரு வேலையும் வந்துவிடுகிறது. வியாபாரிகளை எதிர்கொள்ளவேண்டும். அதற்கான அரசியலை வகுத்துக்கொள்ள வேண்டும்.செயற்பட வேண்டும்.
இதே போல போராடும் சிங்கள மக்களோடு சேராதிர்கள் என்பார்கள். இதெல்லாம் போராடுவோரைப் பிரிக்கும் வேலை. ஆக இந்த வியாபாரிகளும் ராஜபக்சவும் ஒன்றல்லவா?
இலங்கையில் சிறைவைக்கப்பட்டிருக்கும் போராளிகளின் படத்தைத் தூக்கிக்கொண்டு தெருத்தெருவாக பெற்றவர்கள் அலைகிறார்கள். நாங்கள் அதற்காகப் போராடி இங்குள்ள அரசுகளுக்கு அழுத்தம் கொடுத்தோமா. அதற்காக அரசியலை கையில் வைத்திருக்கும் வியாபாரிகள் என்ன செய்தார்கள். ராஜபக்சவை தண்டிக்கிறோம் என்று சொல்லியே மூன்று வருடம் போய்விட்டது. நிலங்கள் அபகரிக்கப்படுகின்றனவே இதற்காகத் தானே இந்தியப் பழங்குடி மக்கள் போராடுகிறார்கள். இந்தியாவில் 40 வீதமான நிலத்தை மாவோயிஸ்டுக்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்களே அது எப்படி என்றும் அதற்கான அரசியல் என்பதையும் ஏன் ஈழ மக்களுக்கு சொல்லக் கூடாது.? இப்படிப் பல……………..
கோசலன், உங்கள் கருத்து இன்றைய காலத்தின் அவசியத் தேவையை வலியுறுத்தி நிற்பதை மறுக்க முடியாது. மாசேதுங்கின் புரட்சி தோல்விகண்டிருந்தால் அவருக்கும் இன்று பிரபாகரனின் நிலமையே ஏற்பட்டிருக்கும். தமிழர்கள் தங்களுக்கான ஒரு தலைமையை உறுதிப்படுத்தும்வரை எதுவுமே சாத்தியமில்லை.
கோசலன் தனது தவறுகளை திருத்திக்கொண்டு முன்வரக் கூடியவர். நீங்களோ நிர்மலனோ கரடி பிறை பார்க்க முடியாத அங்கயமைக்பை கொண்ட சிந்தனை வாதிகள்.
ஏன் உங்கள் கூட்டத்திடம் கோசலனையும் சேர்த்து முடிச்சு போட முனைகிறீர்கள் மகேந்திரா?.
நீங்கள் முன்னர் புலிகள் சிங்கள மக்களை படுகொலை செய்தபோது அதனையும் சேர்த்து புலிகளை ஆதரித்து பின்னர் கீலி,சிலேற்றர் மீது பழிபோட்டு திருந்தி(?) வந்த மாதிரியா ? வந்த வேகத்தில் மகிந்தவின் வேட்டிமடிப்புக்குள்ளை புரட்சியை தேடுகின்ற திருத்தமா ? ஐயா!
வணக்கம் சந்திரன்ராசா உங்கள் தலைவன் யாரென்று கேட்டிருந்தேன் இன்றுவரை பதிலில்லை. உங்களுக்கு தலைவன் இல்லையா அல்லது….. இல்லையா. நீங்கள் ஒரு தமிழன் என்றால் தமிழனாக வெளிப்படுங்கள்.
உங்கள் வணக்கம் எப்படிபட்டதாக இருக்குமென்பதை நான் அறிவேன். தலைவனை தேடி ஓடாதீர்கள். பரந்துபட்ட மக்களின் தேவைகளுக்கு எவன் வழிதேடுகிறானோ வழியை கண்டடைகிறனோ அவன்தான் மக்களின் தலைவனாக முடியும்.
உங்களின் அங்கலாப்பு புரிகிறது மகேந்திரா! உங்கள் மனத்திற்குள் கொழுத்துவிட்டெரிவது இனவெறியே! இனத்தின்பால் ஏற்பட்ட அக்கறை அல்ல. இல்லையேல் ஆயிரம் வருடங்கள் கூடிவாழ்ந்த முஸ்லீம் சமூகத்தை அவர்களின் பொருள்களை கொள்ளையடிக்கும் முகமாக வெளியேற்றும் போதே உங்கள் அடிமனத்தில் கோபங்கள் தனலாக கொதித்திருக்க வேண்டும். அப்படி இல்லையே! போன கிறிமிலக்காக இன்னொரு கிறிமினலை காத்திருக்கிறீர்கள். எங்கையும் அலைந்துலைய வேண்டாம் அந்த கிறிமினல்கள் தமது தோலை உரித்தெறிந்துவிட்டு வேறு ஒருமிருகத்தின் தோலை போர்த்துக்கிறார்கள்.அவர்கள் தான் தமிழ்தேசிய கூட்டமைப்பு.
அத்துடன் எனக்கு எந்த தலைவரையும் உங்கள் மோட்டு தனத்துடன் ஏற்றுக் கொள்பவன் அல்ல.
தமிழன் என்பதால் எனக்கும் என்யினத்தில் மேல் பற்றிருக்கும். ஏனெனில் என்தாயும் தமிழிச்சியே. என்தலைனை 1847 .ம் ஆண்டுகளில் இருந்து தொடங்குகிறார்கள். இதை மகேந்திரா உங்களால் புரிய முடிகிறதா?.
புலத்திலுள்ள தமிழர்கள் என்ன செய்ய வேண்டுமென உத்தரவிட தாங்களொன்றும் புலம்பெயர்தமிழர்களின் ஏக பிரதிநிதியல்ல. “இந்தியாவில் 40 வீதமான நிலத்தை மாவோயிஸ்டுக்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்களே” என வாய்க்கு வந்தபடி புழுகாதீர்கள். முடிந்தால் புள்ளிவிபரத்தை காட்டுங்கள். சிங்கள தோழர்களுடன் போய் புரட்சி செய்ய வேண்டமென யார் உங்களை தடுத்தது??? சிங்கள கைக்கூலிகள் ஈழத்தமிழர் போராட்டத்திற்கு வழிகாட்டுகளாம்!!
ஆமாம். நாங்கள் மட்டும்தான் (அதாவது கோயில்காரர்கள்) ஏக பிரதிநிதிகள். எங்கள் தேரை எரித்தாலும் நாம் மீண்டுவருவோம். நமது இந்துதமிழ் மக்கள் கலக்சனுக்கு கலங்காதபோது எமெக்கென்ன குறை.
கிரிமினல் செயலுக்கு தாங்கள் ஏக பிரதிநிதிதான். ஒத்துக்கிறேன்.
2009 மே மாதம் 19-ம் திகதிக்கு பிறகு இலங்கையில் 95 வீதமான கிறிமினல் குற்றவியல்கள் குறைந்து விட்டது என உங்களுக்கு தெரியாதிருந்தால் தாங்கள் திரும்பவும் முகமூடி போட்டு கிறிமினல் வேலையை ஆரம்பிப்பதற்கு முயற்சி செய்கிறீர்கள் என்பதாகவே அர்த்தப்படும் திரு நிர்மலன் அவர்களே!.
அண்ணை நிர்மலன்
உங்கடை கோயிலை இனி இந்த இடத்தில் நடத்த முடியாததனால்
நீங்கள் தான் கோயில் தேரை காப்புறுதிப் பணத்தை
பெறும் நோக்கில் எரித்ததாகவும் ஒரு கதை உலாவுது
மேலும் கோயிலுக்கு கும்பிட வரும் பத்தா’;களிடம்
உங்கள் தொல்லை தாங்க துடியவில்லை எனவும் மக்கள் முனுமுனுக்கிறார்கள்.
அதாவது புதிய கோயில் கட்ட காசு கேட்டு நச்சாpப்பதாக
//2009 மே மாதம் 19-ம் திகதிக்கு பிறகு இலங்கையில் 95 வீதமான கிறிமினல் குற்றவியல்கள் குறைந்து விட்டது //
கடந்த மூன்று வருடங்களில் மட்டும் 882 கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இக் கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் மேலும் தகவல் வழங்கிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,
குறித்த கடத்தல் சம்பவங்களில் 875 முறைப்பாடுகளுக்கு இலங்கை பொலிஸாரினால் தீர்வு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை இவ் ஆண்டு நவம்பர் மாதம் 22ம் திகதி வரையில் 247 கடத்தல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன
இவ் கடத்தல் சம்பங்களில் தனிப்பட்ட காரணங்களிற்காக கடத்தப்பட்ட முறைப்பாடுகளும் உள்ளடங்குகின்றன.
இச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 849 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிகளவான கடத்தல் சம்பவங்களிற்கு கப்பம் பெற்றுக் கொள்ளுதலே நோக்காக அமைகின்றன என அவர் மேலும் தெரிவித்தார்.
ஒளி என்று ஒன்று இருப்பதினால்தான் இருள் என்று ஒன்றை உணர்ந்து காண்பதற்கு முடிகிறது. ஒளி என்று ஒன்று இல்லாது அழித்துவிட்டால் எல்லாமே இருள்தான் அங்கு இருளுக்குள் இருள் வேறாக புலப்படாது. இதுபோன்றதே இன்றைய சிறீலங்காவின் நிலமை. நீதி அழிந்த மகிந்தவின் கிறிமினல் ஆட்சிக்குள் கிறிமினல் எப்படி வேறாக புலப்படும்?.
2009 மே மாதம் 19-ம் திகதிக்கு பிறகு தமிழர்களின் குரல்வளையை இராணுவத்தின் இரும்புப் பிடிக்குள் திருகி வைத்துக்கொண்டு தமிழர்கள் அமைதியாக உள்ளனர் என்று பரப்புரை செய்வதை சந்திரன்.ராசா மிகவும் ஆனந்தமாக வரவேற்று தன் கருத்தை வெளியிட்டுள்ளார்.
நான் கோசலனை விமர்ச்சிக்கவே இல்லை. ஆனால் கோசலன் தனது தவறுகளை திருத்திக்கொண்டு முன்வரக் கூடியவர் என எழுதவேண்டிய மர்மம் என்ன? சந்திரன்.ராசா, கோசலன் என்ற இருவரும் ஒருவரா? அல்லது இருவர்தானா? யார் மாறினாலும் நான் மாறமாட்டேன் என்று சந்திரன்.ராசா வலியுறுத்துகிறாரா?
தமிழிச்சிக்கு பிறந்ததினால் தமிழனாகிவிட முடியாது. தமிழனாக வாழ்தேனா? வாழ்கிறேனா? என்பதற்கு அவரவர் மனச்சாட்சியே பதில் சொல்லவேண்டும். ஒரு இனத்தை அழிப்பவனுக்கு எதிராக போராடுபவன் இனவெறியன் என்ற இன்றைய உலக வல்லரசுகளின் புதிய கோட்பாடுகளை சந்திரன்.ராசா மிகவும் ஆழமாக உள்வாங்கியுள்ளார் எனவும் தெரிகிறது.
.
இருளும் ஒளியும் தத்துவத்தை சிறீலங்கா அரசுக்கு எதிராகவும் புலிகளின் அடாவடித்தை தொடர்ந்து நடத்துவதற்கு எடுக்கும் உதாரணமும் சின்னத்தனமானது மட்டுமல்ல சிறுப்பிள்ளைத் தனமானதும் கூடா.
இருளும் ஒளியும் இந்த உலகத்திற்கு சொந்தமானது போலவே இங்கு தோன்றிய பிரச்சனைகளும் உலகப் பிரச்சனை ஊடாககவே அணுகப்படவேண்டும். இருளும் ஒளியும் தமிழ்மக்களின் பிரச்சளை ஊடாக புரியவைக்க முயல வேண்டாம். இது கொழும்பில் இருந்து யாழ்பாணத்திற்கு வருகிற பிளாஸ்ரிக் இடியப்படதட்டுகளுகளுக்கு முகமாலை சுங்கவரிபகுதில் வரிவிதித்ததிற்கு ஒப்பாகும்.
இது இப்படியே இருக்க: எந்த வகையில் 2009 மேமாதத்திற்கு பிறகு உங்கள் குரல்வளையை சிங்களயரசு திருகியது. கண்ணிவெடி வைத்தார்களா? போக்குவரத்தை தடைசெய்தார்களா? கப்பம் வரி வசூலித்தார்களா? அல்லது தமிழ்யறிவாளிகள் மதகுருமார்களை கொன்றார்களா??.
தமிழ்மக்களின் வலுவிழந்தவர்களை வாட்டியொடுத்து வதைத்ததே-குறிப்பாக யாழ்பாண மேட்டு குடிவரலாறு இது என்றும் தமது சமூகத்திற்காக குரல் கொடுக்க வில்லை. இதன் வழிவந்ததே தமிழர்கூட்டணி பிறகு புலி இன்று புலம்பெயர் நாடுகடந்த தமிமீழம். இது என்றுமே தமிழ்மக்களின் வலுமுள்ள ஆனால் நலிந்த இனமக்களுக்காக குரல் கொடுத்தது இல்லை. உதாரணம் சாதி அடக்குமுறை.மலையக மக்களின் வாழ்நிலை. ஆகவே இனவிடுதலை என்கிற பதம் இத்துடன் பொய்யாகி பொசிங்கிப் போகிறது என்பது இன்னுமா? புரியாமல் இருக்கிறது?.
அடுத்து கோசலன் என்பவர் வேறு சந்திரன்.ராஜா என்பவர் வேறு. இதனுடன் நீங்கள் உங்களுக்குரிய மந்தயறிவுடன் குழம்பிப் போகவேண்டாம். இன்றை காலகட்டத்தில் முற்போக்காக சிந்திப்பதற்கு சமூகவிஞ்யாணமே ஒரு கருவியாக இருக்கிறது. அது உங்களைப் போல் இனவெறி கொண்டு ஆடவில்லை. சமூகமுற்போக்கு பாத்திரத்தைதின் சூத்த்திரத்தை கோசலன் கற்றுண்டதாகவே அறிகிறேன் அவர் எழுத்திலிருந்து. அவர் தம்தவறை திருத்திக் கொண்டு முன்வருவதற்கு 99 வீதமான வாய்ப்புகள் அதிகம்.
இன்றுவரை இதுபொதுமென நினைக்கிறேன் மகேந்திரா!.
“தமிழ்மக்களின் வலுவிழந்தவர்களை வாட்டியெடுத்து வதைத்ததே-குறிப்பாக யாழ்பாண மேட்டு குடிவரலாறு. ஆகவே இனவிடுதலை என்கிற பதம் இத்துடன் பொய்யாகி பொசிங்கிப் போகிறது என்பது இன்னுமா? புரியாமல் இருக்கிறது?.” – சந்திரன் ராஜா
இனவிடுதலை போராட்டம் சமுக ஏற்ற தாழ்வுகளை களைந்து புரட்சிகரப் பாதையில் செல்லாது தனியே சிங்கள இனவாத அடக்கு முறையை ராணுவ வழிமுறையில் எதிர்ப்பதில் மாத்திரம் கவனம் செலுத்துவதில் புலிகள் உட்பட ஏனைய அரசியல் இயக்கங்களும் கவனம் செலுத்தின தமிழீழ போராட்டத்தின் தார்மீகம் இப்படித்தான் சிதைக்கப் பட்டது, விமர்சனக்களுக்கு உள்ளானது , அப்போராட்டம் அதன் புரட்சிகர விழுமியங்களை இழந்து போனது மறுப்பதற்கு இல்லை. இதன் காரணமாக பேரினவாத அடக்குமுறையின் கீழ் வாழமுடியும் என நிறுவ முடியாது. எந்த மேட்டு குடியின் முதுகையும் முறிக்க முடியாது என்றில்லை முறியுங்கள் நானும் பக்க பலமாக நிற்கிறேன். ஆனால் யாழ் மேட்டு குடியின் முதுகை முறிப்பதாக நினைத்து ஒடுக்கப் படும் தமிழ் இனத்தின் முதுகை சிங்கள பேரினவாதத்துடன் சேர்ந்து முறிக்க முற்பட்டால் அது எவ்வகையில் நியாயம்???????????
இனத்திற்கு இனம் எதிர்ப்பையும் மோதலையும் உருவாக்கி அழிவதை விட வர்க்கரீதியில் ஒன்றுபடுவதே ஒரேவழி! திரு ராகவன். அதற்கான காலங்களே இது.
வரப்போகும் வருடங்கள் மாதங்கள் இதற்கான பாதைகளை மேலும்மேலும் விரிவாக்கும்.
மேட்டுக்குடி வரலாறு என்பது தனது வாழ்வையும் புகழையும் அந்தஸ்தையும் உயர்த்தப்பாடு படுகிறானோ ஒழிய தனது இனத்தின்பால் கொண்ட கரிசரனையினால் அல்ல என்பதாக தான் அறிவியலும் விளக்கம் தருகிறது. அனுபவங்களிலும் கண்டுகொள்ளக் கூடியதாக இருக்கிறது.
மேட்டுகுடி சிந்தனை என்பது யாழ்படித்த வர்கத்திற்கு மட்டும் உரியதல்ல. சிங்களவர்களுக்கும் பொருந்தும். முழுமையாக சொல்வதானால் குட்டிமுதாலித்துவ சிந்தனையே!. திரும்பவும் உங்களை சந்தித்தில் மகிழ்ச்சியே
மேலும் குறைகளை சந்தேகங்களை கண்டால் துணிகரமாக வெளிப்படுத்துங்கள் ராகவன்.
முள்ளி வாய்க்கால் அவலம் முடிந்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன அங்கு என்ன நடந்தது , கே பி எவ்வளவு பணத்துடன் கம்பி நீட்டினார் போன்ற
விபரங்களில் சிலதையாவது புலிகள் எனச் சொல்வோர் வெளியிடலாம் அல்லவா ? இவற்றை வெளியிடுவதால் என்ன புலிகள் என்னத்தை இழக்கப் போகிறார்கள். இலங்கையில் மௌனமாக அல்லது மௌனமாக்கப் பட்ட முறையில் நடக்கும் தமிழ் இன அழிப்பை முன்னிறுத்தி போராட்டங்களை முன்னெடுப்பதை விடுத்து மாவீரர் naal தொடர்பில் மோதல் என்பது விசனமாகவும் பல
உள்கிடக்கினையையும் கொண்டிருப்பதாகவே கொள்ளமுடியும் ஒட்டு மொத்தத்தில் புலிகள் அமைப்பு விரும்பியோ விரும்பாமலோ இந்திய இலங்கை புலனாய்வு அமைப்புகளின் முழுமையான வலையில் விரும்பியோ விரும்பாமலோ ஒட்டி நடப்பது என்பது இயல்பாகவே நடந்து வருகிறது இதனை ஊகிக்க வேறு அறிவு தேவையில்லை. அவதானி, நித்தி இருவரும் கொண்டுள்ள கருத்துக்கள் நிதர்சனமானவை. போரின் வடுக்களில் பாதிக்கப் பட்ட மக்களுக்கோ அல்லது இன அழிப்புகளுக்கு எதிரான போராட்டங்களையோ முன்னெடுக்காது புலிகள் மாவீரர் பெயரில் பணம் சேர்ப்பது என்பது மகிந்த அரசுக்கு அல்லது இலங்கை அரசுக்கு அல்லது அவர்களின் நிகழ்ச்சி நிரலில் பணம் சேர்க்கப் படுகின்றதோ என்பதை நம்பித்தான் ஆக வேண்டும். ஏனெனில் கே பி இலங்கை அரசுக்கு பணம் கொடுத்தததை புலிகள் அம்பலப் படுத்த வில்லை மாறாக சிங்களவர்களே வெளிப் படுத்துகிறார்கள் ஆக மொத்தத்தில் முழுப் புலிகளுமே எங்கே செல்கிறார்கள்…………………….????????????????????????????????
“மாவீரர் தினம்” முடிந்து போயிற்று.அது பற்றிய விபரம்,வியாபாரம் பற்றி,யாரும் ஏன் மூச்சு விடுகிறார்களில்லை? நடத்தியவர்களும்,எதிர்த்தவர்களும் “கனவான் ஒப்பந்தம்” செய்து கொண்டு விட்டார்களா?