பெருந்தேசிய ஒடுக்குமுறை இலங்கையில் இராணுவ ஒடுக்கு முறையாகத் தீவிரமடைந்த 80 களில் அலையலையாக இளைஞர்கள் விடுதலை இயக்கங்களில் இணைந்துகொண்டார்கள். தமது வாழ்வு, எதிர்காலம், நிகழ் காலம் அனைத்துமே சிங்கள பேரினவாத்திலிருந்தும் பௌத்த மேலாதிக்கத்திலிருந்தும் விடுதலையடைவதே என ஒவ்வொருவரும் எண்ணினார்கள்.
ஒவ்வொடு காலையும் அழகாக விடிந்த நாட்கள் இருண்டு போயின. இராணுவச் சிப்பாய்களின் காலடி ஓசையில் விழித்தெழும் குழந்தைகள் கூட அவர்களை எதிரிகளின் ஏவல்கள் என அறிந்து வைத்திருந்ததனர்.
இந்த வேளையில் சரி ஏது தவறு ஏது என்று சரியாகத் தெரிந்துகொள்ளாதவர்கள் இராணுவத்திற்கு எதிராகப் போராfட என்று தமது சொந்த விருப்பு வெறுப்புக்களைக் கடந்து இயக்கங்களில் முழு நேர உறுப்பினர்களாக இணைந்து கொண்டார்கள்.
இந்த வேளையில் இயக்கங்களை அழித்து இளைஞர்களின் போராட்ட உணர்வை அழித்து வெற்று இராணுவ யுத்தமாக மாற்றுவதற்கு இந்திய அரசு இராணுவப் பயிற்சியை அறிமுகப்படுத்திற்று.
மிகவும் கோரமான சித்திரவதை உக்திகளை கற்றுக்கொடுத்த இந்திய இராணுவப் பயிற்சி ரெலோ(TELO), தமிழீழ விடுதலைப் புலிகள்(LTTE), ஈ.பி.ஆர்.எல்.எப்(EPRLF) ஈரோஸ்(EROS) ஆகிய இயக்கங்களுக்கு வழங்கப்பட்டன.
சமூக உணர்வும், மக்கள் பற்றும், மனிதாபிமானமும், போர்க்குணமும் மிக்க போராட்டக் குழுக்கள் வெறித்தனமும், மிருக உணர்வும், கோரமும் கொடூரமும் உடைய ஆயுதக் குழுக்களாக மாற்றம் பெற்றன. இந்திய அரசு தனது ஒவ்வொரு நகர்வுகளையும் கவனமாக மேற்கொண்டது.
பயிற்சி முடிந்து இரண்டு வருடங்களுக்கு உள்ளாகவே கோரமான ஆயுத மோதல்கள் இயக்கங்களிடையே தோன்றின. புலிகள் தவிர்ந் ஏனைய இயக்கங்கள் புலிகளால் அழிக்கப்பட்டன.
முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டது போன்றே ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஏன் கொல்லப்படுகிறோம் என்றுதெரியாமலேயே கொல்லப்பட்டனர்.
தியாகிகளான போராளிகள்
இங்கு புலிகளாகட்டும், புலிகளால் அழிக்கப்பட்ட ஏனைய இயக்கங்கள் ஆகட்டும் இவர்களின் தமது இளமைப் பருவத்தின் அத்தனை ஆசா-பாசங்களையும் இழந்து தெருவிற்கு வந்து போராடிதெல்லாம் தமது சொந்த நலன்களுக்காக அல்ல.
எவ்வளவு ஊதியம் தருவார்கள் என்று எண்ணியா இயக்கங்களில் இளைஞர்கள் இணைந்துகொண்டார்கள்? தம்மைச் சூழவர உள்ள சமூகம் ஒடுக்கப்படுகிறது என்று உணர்ந்துகொண்டவர்கள் அந்த ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடவே இணைந்துகொண்டார்கள்.
கடந்த அரை நூற்றாண்டில் மிகக் குறுகிய காலப்பகுதியில் எந்த வகையான பிரதிபலனையும் எதிர்பார்காமல் முழுநேர அரசியலில் இவ்வளவு தொகையில் இணைந்து கொண்டவர்கள் வடகிழக்கு இளஞர்கள் மட்டும்தான்.உலகத்தில் வேறு எந்தப் பகுதியிலும் இதனைக் காணமுடியாது.
எமது சமுகம் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகளை சமூகத்திற்குத் தாரைவார்த்துக் கொடுத்திருக்கிறது.
வாழ்ந்திருக்க வேண்டிய இவர்களில் எவரும் துரோகிகள் என்று யாராவது கூற முனைந்தால் அவர்கள் மனிதகுல விரோதிகள். எமது சமூகத்தின் சாபக்கேடுகள்.
இவர்களில் யாரையாவது தவிர்த்து மாவீரர் தினம் என்ற ஒரு நிகழ்வு நிகழுமானால் அதுவே சமூகத்தைத் திட்டமிட்டுக் கூறுபோடும் நிகழ்வாகும். ஒற்றுமை ஒற்றுமை என்ற வரிக்கு வரி எதையோ சொல்கிறார்கள், ஒற்றுமைக்கு சாவுமணி அடிப்பதற்கு என்றே, முப்பது வருட அழிவுகளின் பின்னரும் பிரிவினையைத் தூண்டுவது என்பதே குறித்த சிலருக்கான மாவீரர்தினம்.
மாவீரர்தினம் இரண்டாகப் பிளவுற்று நடைபெறுகிறது என அங்காய்ப்பவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். போராளிகளைப் பிளவுபடுத்துவதிலிருந்தே அது கருவுற்றது என்பதே அது. வெறுமனே குறித்த அடையாளங்களை மட்டுமே வைத்துக்கொண்டு ஒடுக்கப்படும் மக்களின் போராட்டத்தை ஒரு அங்குலம் கூட நகர்த்த முடியாது.
மக்களுக்கான போராட்டம் என்பது மனிதாபிமானத்தின் அடிப்படையிலிருந்தே ஆரம்பமாக முடியும். மனிதர்களை மனிதர் நேசிப்பது அதன் முதற்படியாக அமையும் போது ஒரு சமூகத்தை ஒத்துக்கிவைத்துவிட்டு சடங்கு செய்து சம்பாதிக்க முயலும் குழுக்கள் இலங்கை அரச ஒடுக்குமுறையாளர்களுக்கு எந்த வகையிலும் குறைந்தவர்கள அல்ல.
போராளிகளை இழந்த குடும்பத்தினர் ஏனைய போராளிகளின் வலியை உணர்ந்தவர்கள் அவர்கள் ஏனைய இயக்கப் போராளிகளையும் அங்கீகரிக்கக் கோருவது தாம் இழந்தவர்களுக்கு செய்யும் மனிதாபிமானக் கடமையாகும். மாவீரர் தினத்தை ஏற்பாடுசெய்து பணம் திரட்டிக்கொள்ளும் ஏற்பாட்டாளர்களைப் போன்று அவர்கள் கோரமான உணர்வுகளைக் கொண்டவர்களாக இருக்க மாட்டார்கள்.
வியாபாரிகளுக்கு எதிரான போராட்டம் அவர்களிடமிருந்தே முளைவிடும்.
***
அழிக்கப்படும் தமிழ் மக்களும் மாவீரர் பணச்சடங்கும்
இலங்கை ராஜபக்ச பாசிச அரசு, எந்த அரசால் பிரதியிடப்பட்டாலும் இனப்படுகொலையைத் தொடராமல் இலங்கை அரசியல் நகராது.தமிழ் மக்கள் ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராடும் மக்கள் கூட்டத்தின் அங்கம் என்பதே முதலாவது தற்பெருமை. அதற்காக அவர்கள் ஆயிரம் தடவை பெருமைப்பட்டுக்கொள்ளல்லாம். போராடுவதற்கான வாய்ப்பு உலகமக்கள் எல்லோருக்கும் உடனடியாகக் கிடைத்துவிடுவதில்லை. அந்த ஒடுக்குமுறையின் கோரத்தால் அது ஏற்படுத்திய அனர்தங்களால் புலம் பெயர்ந்தவர்கள், இறந்து போன தியாகிகளை முன்வைத்து அவர்களின் நினைவு நாளை எழுச்சியாக மாற்றாமல் சாவு வீடாகக் கொண்டாடுவதும், அவர்களைக் கடவுள்கள் ஆக்கிவிடுவதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதா?
இலங்கையில் இனப்படுகொலையின் பின்னர் இனச்சுத்திகரிப்பு திட்டமிட்டு நடத்தப்படுகின்றது. பெண்களை இராணுவ ஆட்சியின் பாலியல் கருவிகளாக மாற்றும் வேலைத்திட்டத்தை இலங்கை அரசு ஆரம்பித்துவிட்டது.
நிலப்பறிப்பு, பாலியல் வன்கொடுமை, பௌத்த மத ஆதிக்கம் போன்ற பல நடவடிக்கைகளுக்கு ஊடாக தமிழ்ப் பேசும் மக்களின் தனித் தன்மை துவம்சம் செய்யப்படுகின்றது. முள்ளிவாய்க்காலில் மக்கள் மீதான போர் இன்று வேறு வடிவங்களில் பேரினவாத அரசினால் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது.
மாவீரர் தினம் மட்டுமல்ல ஒவ்வொரு நிகழ்வுகளும் இந்த ஒடுக்குமுறைக்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்தப்பட வேண்டும். அது அதன் ஏற்பாட்டாளர்களின் நல்வாழ்விற்காகப் பயன்படுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.
குர்தீஷ் மக்களின் தியாகிகள் தினம் புரட்சிகரமாக உலகின் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் தினமாக பிரித்தானியாவில் மட்டுமல்ல உலகின் அனைத்து நாடுகளிலும் நிகழ்த்தப்படுகிறது. உலக நாடுகள் அனைத்தும் குரூரமான ஒடுக்கு முறை பிரயோக்கிக்கும் நிலையிலும் அவர்களின் போராட்டம் வெற்றியடைந்ததன் அடிப்படை இதுவே.
மாவீரர் சடங்கு அனைத்துப் போராளிகளதும் இழப்பாக, புரட்சிகர நிகழ்வாக உலகின் மனிதாபிமானிகளுக்கும், ஜனநாயக முற்போக்கு சக்திகளுக்கும் அறிவிக்கப்படும் நிலை உருவாக வேண்டும். பணம்படைத்த பல்தேசிய நிறுவனங்களும், ஏகாதிபத்திய நாடுகளும் கூட்டம்போட்டு கூத்தடிக்கும் விலையுயர்ந்த மண்டபங்களிலிருந்து அது வெளியேற்றப்பட்டு தெருவிற்கு வர வேண்டும்.
போராளிகளை விதைத்த குடும்பங்களைச் சார்ந்தோர் இதனைப் புரிந்து கொள்வார்கள்.
***
பிரபாகரன்
ஒரு மனிதனை அதிலும் போராளியை நேசித்தோமானால், நாம் செய்ய வேண்டிய முதலாவது கடமை அந்தப் போராளியிடமிருந்து கற்றுக்க்கொள்வதும் அதனை எதிர்கால சந்ததிக்கு கற்பிப்பதும் தான். ஒரு மனிதன் விமர்சிக்கப்படுவதனூடாகவே தூய்மையடைகிறான். நாம் எம்மைச் சார்ந்தவர்களை விமர்சிக்க மறுத்தால் அதனை எதிரிகள் குற்றச்சாட்டாக முன்வைப்பார்கள். ஒரு போராளியை விமர்சிக்க மறுத்து அவனைக் கடவுகளாக மாற்றுதல் என்பது அப் போராளிக்குச் இழைக்கும் துரோகமாகும்.
பிரபாகரனை நேசிப்பதாகக் கூறும் ஏற்பாட்டாளர்கள், பிரபாகரன் கடவுளுக்குச் சமானம் எனக் கூறும் ஒழுங்கமைப்பாளர்கள், பிரபாகரன் இன்னும் உயிருடன் வாழ்கிறார் என்ற இந்த நூற்றாண்டின் கேலிக்கூத்தான பொய்யை கட்டவிழ்த்துவிடுகிறார்கள். மக்களின் பணத்தில் சுகபோக வாழ்க்கை நடத்தும் சிலர் பிரபாகரன் வந்ததாலே பணத்திற்குக் கணக்குக்காட்டுவோம் என்கிறார்கள். இதற்காகவே இறந்துபோன பிரபாகரனை இன்னும் உயிர்பிழைக்க வைத்திருக்கிறார்கள்.
சரி தவறு என்பதற்கு அப்பால் தனது வாழ் நாள் முழுவதையும் போராட்டத்திற்கே அர்பணித்த பிரபாகரனை அனாதைப் பிணமாய் அஞ்சலி கூட இல்லாமல் அழித்துவிட்டார்கள். நான்கு வருடங்களை தொலைத்த பின்னரும் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தாத மாவீரர் தினம் எவ்வளவு நயவஞ்சகத் தனமானது! மாவீரர் தினத்திம் உச்சபட்ச அருவருப்பு இதில் தான் தங்கியுள்ளது!!
தமது குடும்பத்தின் இளம் சந்ததியைப் போராட்டத்திற்காக அர்ப்பணித்தவர்கள் மாவீரர் தின ஏற்பாட்டாளர்களின் திருட்டுத்தனத்தைப் புரிந்துகொள்வார்கள்.
****
யார் துரோகிகள்
குண்டுச் சன்னங்களைச் சுமந்துகொண்டு வளரும் இளம் சிறார்கள் வன்னியிலிருந்து வளர்ந்து வருகிறார்கள். நாளை போராட்டத்தின் முன்னோடிகளில் இவர்கள் நிச்சயமாக கோடிட்டுக் காட்டப்படுவார்கள். இவர்களுக்கு தவறான பாதையையும் வியாபார அரசியலையும் நாம் முன் உதாரணமாக விட்டுச் செல்ல முடியாது.
எதையாவது விமர்சித்தால் இலங்கை அரச கைக்கூலி, துரோகி என்றெல்லம் கூறுகின்ற கேவலமான அரசியல் இன்னும் தொடர்கிறது. மாவீரர் தினத்தை விமர்சித்தால் கூட ‘துரோகத்தைப் ‘ பரிசாகத் தருவதற்கு அதனை முன்வைத்துப் பணம் சேர்க்கும் வியாபாரிகள் காத்திருப்பார்கள்.
மாவீரர் தினத்திற்குத் தயாராகும் புலம் பெயர் மக்கள் இந்தக் கேள்விகளையும் சுமந்து செல்வார்கள்.
இவ்வளவு நடந்த பிறகும் பிரபாகரனை உயிருடன் இருப்பதாக கூறுபவர்கள்
அவரின் முன்னைய இருப்பை கேள்விக்குறியாக்குவதுடன். அவரை இழிவு படுத்துகிறார்கள்.
thamilan tamilana or dummilana.
பிளவுக்குட்பட்ட “மாவீரர்” மகத்துவம்!
கோசலனது இக்கட்டுரையானது (மாவீரர் தினம் – இன்றும் அனாதைப் பிணமாய் பிரபாகரன் ) மிக நியாயமான கட்டுரைதாம்.என்றபோதும்,சிலவற்றைத் தொட்டுணர்த்துவதும் அவசியமானதில்லையா?
இயக்ககங்களைத் திட்டமிட்டு அராஜகக் குழுக்களாகவும்,இராணுவவாத அடியாட்படையாகவும் உருவாக்கிய அந்நியத் தேசங்கள் இறுதியில் ஒரு இனத்தையே அடிமைகொண்ட வரலாறாகவே”தமிழீழப் போராட்டம்” ஊதிப் பெருத்தது.அதன், எச்சங்கள் மீளமீள அதையே(துரோகி-தியாகி) தொடர்ந்து நயவஞ்சகமாகப் பணத்துக்குக் கொலை செய்யும் போது அதையே பெரும் விழாவாகவும் எடுத்துக் கொலைப்பட்ட பண பிணக்காளன் தியாகி ஆக்கப்படுகிறான்-மாவீரன் எனப் புகழப்படுகிறான்.
ஆனால்,பிரபாகரனது முழுக் குடும்பமுமே அழிக்கப்பட்டுச் சாம்பலாக்கப்பட்ட பின்னும் அந்த மனிதரை அநாதவராகவிட்டு ஒரு அரசியலை மிகவுயர்ந்த வியாபார நுணுக்கத்துடன் முன்னெடுக்கும் புலம் பெயர் புலிப்பினாமிகளைப் பின்னிருந்து ஆட்டிப்படைக்கும் இலங்கை,அந்நியத் தேச உளவு ஏஜென்டுகள்தாம் ஒரு மறைமுகமான விதேசிவாத அரசியலை மீளத் தகவமைக்கின்றனரென்று ஊகிக்கலாம்.இத்தகைய விதேசியவாத அரசியலைத் தொடரும் புலிப்பினாமிகள் தமது வருவாய்க்கு அத்தகைய அரசியல் குறுக்கே நிற்பதில்லையென்பதால் அதைத் தொடரவும்,அத்தோடிணக்கம் கொண்டு அதையே கடைப்பிடித்த மாண்டுபோன புலித் தலைமையைத் தொடர்ந்து உயிர் வாழவைத்துக்கொண்டிருக்கிறது.
எனவே,பிரபாகரன் தொடர்ந்து உயிர்வாழ்வது பணத்தைமட்டும் தமதாக்கும் முயற்சியாகக் குறுக்கமுடியாது.இதுள், பின்னப்பட்ட நலன்கள் பணத்தைத் தமதாக்குபவர்களுக்கிசைவானதாவிருப்பதால் அதன் பிரதான காரணிகளை நாம் மறந்துபோதல் ஆபத்தானது.
தமிழ்பேசும் மக்களது அடிமை வாழ்வைத் தொடர்ந்து நியாயப்படுத்தியும்,அவர்களைத் தமது பூர்வீக மண்ணிலேயே மிகச் சிறிய மக்கட் கூட்டமாக்கும் சிங்களக்குடிப்பரம்பல் மற்றும் பிரதேசப் பிரிப்புகளெனத் தொடரும் அரசியலுக்கு மாற்றான சிந்தனையும்,நியாயமான போராட்டப்பாதையும் தடையானது.
சரியான வழிகளைக் கண்டடையமுனையும் தேவைக்கானவொரு சூழலைத் திசைவழியை இல்லாதாக்க வேண்டுமானால் தொடர்ந்து அதே புலிப்பாணி விதேசியவாதமும்,இராணுவாதாப் பெருமிதமும் இருத்தி வைக்கவேண்டும்.மக்கள் தொடர்ந்து இத்தகைய திசைவழியில் தமது உணர்வுகளைத் தொடர்ந்து தகவமைக்கும்போது இதே புலிப்பினாமிகளது இருப்புத் தொடரமுடியும்.அங்கே,பிழையான பாதையும்,வியாபாரத் தந்திரமும் புலிவழியான போராட்டத் திசைவழியும் பெருமிதமாகத் தொடரும்போது இலங்கை அரசும்,அந்நியச் சக்திகளும் நிலத்தில் ஒரு இனத்தையே அடிமைகொண்டு அவர்களது இருப்பை வரலாற்றில் அழித்துச் சிங்களமயமாக்கப்படுகிறது.
இக்கட்டுரையாளர் முன்வைக்கும்”நல்லதோ கெட்டதோ”என்பது அந்நியச் சக்திகளது இன்றைய வியூகத்தைத் தொட மறுப்பதில் அல்லது அதைக் கவனத்தில் எடுக்காததில் ஒரு நியாயத்தைப் புலித் தலைமைக்கு வழங்குகிறது.அந்த நியாயமேதாம் தொடர்ந்தும் புலியினது அடியாட் படைச் சேவைiயும்,அதன் வழியான அந்நியச் சக்திகளது தொடரும் சதிகளையும் புலம்-நிலம் எனத் தொடர வைக்கிறது.
மீளவும்,நான் சொல்வது: புலியினது அனைத்து போராட்ட வழிமுறைகளும் ஆயப்படவேண்டும்.அதன் பாதகத்திலிருந்தே தொடருமிந்தச் சதிகளையும்,அந்நியச் சக்திகளது முகவர்கள் புலிவடிவிலும்,தேசியச் சக்திகள் வடிவிலும் ஏன் புரட்சிகாரர் தாமெனக்கட்சிகட்டி நடாத்தும் அந்நியச் சதி அரசியலிலும் புலம்-நிலமெனப் பின்னப்பட்ட இந்தச் சதியை முறியடித்து முன்னேறமுடியும்.
இதை மிக நுணுக்கமாகவுணரவேண்டுமானால் இன்றும் தொடருமிந்த இயக்கவாத மாயையும்,அதையே கருத்தியல் மனதாக்கி இளைஞர்களைத் தொடர்ந்த புலிவழித் தேசிய மாயைக்குள்ளும்,புலிவழியான போராட்டத் திசைவழிக்குள்ளும் தொடர்ந்து தள்ளி வரும் வீன் பல்கலைக்கழகத்துள் சிரைக்கும் பரணி கிருஸ்ணரஜனி[ http://www.facebook.com/parani.krishnarajani?ref=ts&fref=ts ] என்ற மனிதரின் திடீர் வருகையும், அவரது புலித் தலைமை வழிபாட்டையும்,அதை மேற்குலகத் தற்கவியலுக்குள் இணைத்தும்,சார்த்தார் போன்றரது இருத்தலியலுக்குள் வைத்து விளக்கியும் பிரபாகரனைத் தொடர்ந்து வழிபாடாக்க முனையும் சதியை ஒரு தனிப்பட்டவரது அறியாமையென எடுக்கமுடியுமா?புலியின் வீரதீர இராணுவவாதத் தாக்குதல்களைப் போராட்டத்தின் உச்சமெனவுரைக்கும் இராணுவவாதப் பிரமையானது ஒரு இனத்தை அழித்துக்கொண்டதைத் தொடர்ந்து மறைக்கும் நபர்களும்,அவர்களையொட்டிக் கருத்தாடும் ஒரு வலைப் பின்னலும் ஒருவிதமான மாயைக்குள் புலம்பெயர் சிறார்களைக் கட்டிவைத்துக் காயடிக்க முனைகிறது.இந்தக் கருத்தியலை உடைப்பதற்குமுன் நாம் இத்தகைய கருத்தியலைப் பரப்புப் பின்னிருந்தியக்கும் சக்திகளை இனம்கண்டாகவேண்டும்.அவர்ளே இந்தப் புலிப் பினாமிகளைப் பலகூறுகளாக்கிப் பின்னிருந்து ஒவ்வொருவரையும் இயக்குகிறார்கள்.அவர்கள் புரட்சிகரர் வடிவிலும் நமக்குள் இருக்கின்றார்ளென்பதை எவரும் மறுக்கவோ-மறைக்கவோமுடியாது!
எனவே,”மாவீரர்தினம்” இரண்டுபட்டதாற்றாம் நாம் பிளவு படுகிறோமென்ற காட்சிவடிச் சதியைக்கூட நமக்குள் ஓகோவெனப் புகழ்ந்து நயவஞ்சகம் புரியும் சோபாசக்தியென்ற அன்ரனிகூட நமக்குள்ளே நியாயவாத அரசியல் வகுப்பெடுப்பார்.தமிழ் மக்களுக்குள் இருந்த பல உள் முரண்பாடுகள்(சாதியப் பிரச்சனை,பெண்ணடிமை,பிரதேசவாதம்,மதவாதம்)அனைத்தும் தடீரெனக் கூர்மைப்படுத்தப்பட்டதும்,அதன்வழி தலித்தியத்தைப் புலம்பெயர் மக்கள் மத்தியில் பரப்புரைக்குட்படுத்தி மக்களைத் தொடர்ந்து கூறுபோட்ட தேவதாசன்-சோபாசக்திகள்,கிழக்கைப் பிரித்து மகிந்தாவின் தலைமையில் ஒரு அடியாட்படை மாகாணசபையை உருவாக்கிய பிள்ளையானையும்,சின்னமாஸ்டர் எனப்படும் ஞானத்தையும் திடீரென வாழவைத்தவர்கள் இந்த அந்நியச் சக்திகளது முகவர்கள்தாம்.இந்திய அரசினதும்,மேற்குலக-அமெரிக் உளவு நிறுவனங்களது முக்கோண வலைப் பின்னலில் இலங்கையானது தமிழ் மக்களைத் தொடர்ந்து சிறுபான்மையாக்கிக்கொண்டே தனது நியாயத்தைப் பெரும்பான்மைப் புள்ளியிலிருந்து உருவாக்குகிறது.
மாவீரர் தினக் கருத்தியல் மனதானது தொடர்ந்து பிளவுப்படும் புலிகளது பண நலன்களது தெரிவில்புலன்(ம்) பெயர்ந்தவர்கள் நொந்து நொடியாவதுகூடக் கூர்மைப்படுத்தும்போது அதே புலிவழியான வணுகுமுறைகள் இருத்தலுக்குட்படும்.அப்போது, தமிழர்கள் அதிலிருந்து மீண்டுவிடும் அபாயம் இல்லாது போகிறது.
தொடர்ந்து”மாவீரர்களுக்கு”மகத்துவஞ் செய்து பிழைப்பை-வியாபாரப் புத்தியைக் கருவாக்கி நகர்த்தும் ஒரு தலைமுறையானது, தமக்குத்தாமே மண்ணை வாரியிறைக்கும் ஒரு கூட்டம் நிலத்தில் விவேகமான அரசியலையா முன்னெடுக்கும்?
வியாபரிகளுக்கும் மக்கள் விடுதலைக்கும் என்ன சம்பந்தம்?அதே சம்பந்தமானது நமக்குள் தனது நடாத்தையைச் செயலாக்கும்போது புரட்சி பேசுகிறவர்கள் “அடிமட்டம்,மேல்மட்டம்” குறித்த பார்வையில் நமது”தமிழீழப் போராட்ம்” செய்த இயக்கங்களையும் அவர்களுக்குப் பின்னாலிருந்த பிழைப்புவாதிகளையும் ,அவர்களது இன்றைய தொடர் கண்ணியையும்”சரியோ தவறோ”என்று, ஒரு விதமான விட்டுக்கொடுத்தல்,மென்மையான மெதுவான வருடல் அரசியலைச் செய்யமுடியாது.
நமது மக்களில்பல இலட்சம் பேர்கள்அழிக்கப்பட்ட போராட்டப் பாதையைக் கறாராக ஆய்வதும்,அறிவதும்,மக்களிடம் உண்மைகளை விட்டுக்கொடுக்கமால் சொல்வதும் அவசியமானது.
திடீர் இணைவுகள்,அவசரமாக அதே மனதோடு மக்களை அணிப்படுத்துவதும் மீள அந்நியச் சக்திகளுக்கே அனுகூலமாவிருக்கும்.அதற்காகத்தாமே பல கோடி டொலர்களை இறைத்து அமைப்புகளை உருவாக்குகிறார்கள்.தமிழ்பேசும் மக்கள் விவேகமாகச் சந்திக்க முனையும் தருணமானது பல வடிவங்களில் இல்லாதாக்கப்படுகிறது.அதிலொன்று “மாவீரர்”மாயையும் தாம்!
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
25.11.2012
1. இலங்கை அரசோடு நேரடியாக இயங்குபவர்கள்.
2. பணத்தையும் சமூக இருப்பையும் தக்கவைத்துக் கொள்வதற்காக தேசியம் பேசுபவர்கள்.
3. புலிகள் வழியான தேசியத்தை எந்த விசாரணையும் இன்றி முன்னெடுத்து இலங்கை அரசுக்கும் அன்னிய சக்திகளுக்கும் இன்றும் துணை போகின்றவர்கள்.
என்ற மூன்று வகைகளுக்குள் எஞ்சியிருக்கும் புலிகளை உள்ளடக்கலாம். புலம் பெயர் நாடுகளில் மக்கள் இந்த மூன்று திசைகளுக்குள்ளும் இழுத்து கூறுபோடப்பட்டுள்ளர்கள். முதல் இரண்டு வகையினரும் சமூகத்திலிருந்து அன்னியப்படுத்தப்பட்டு இனம் காட்டப்பட வேண்டியவர்கள்.
மூன்றாவது வகையினர் சமூகத்தில் சரியான போராட்ட வழிமுறைகளோடு இணைத்துக்கொள்ளப்பட வேண்டியவர்கள். எதிர்காலத்தில் தவறான வழிகளிலிருந்து கற்றுக்கொள்பவர்களும், புலிகளின் ஏகாதிபத்திய இலங்கை அரச ஆதரவுப் போக்குகளுக்கும் இவர்கள் மிகப்பெரும் சவாலாக அமைவார்கள்.
முதல் இரண்டு வகையினரையும் மக்கள் முன் நிறுத்துவதற்கு இந்த மூன்றாவது அணியினரே மிக முக்கிய சக்த்தியாகக் கருதப்படுவார்கள். இவர்களிடம் சமூக அக்கறை உள்ள சக்திகள் பேசும் போது சரியான கருத்துக்கள் விதைக்கப்படும் போது இலங்கை இந்திய ஏகபோக அரசுகளுக்கு எதிரான மாபெரும் சக்தியாக மேலெழும். அதற்கான வேலைத்திட்டம் என்ன. அதனை எப்படி முன்வைக்கப் போகிறோம். இது தான் அடிப்படையான கேள்வி. இதனை ஒட்டு விவாதங்களை முன்வையுங்கள்.
‘பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்’ கதை தற்செயலானது தான். இந்திய இலங்கை அரசுகளின் கூட்டு சதியாக தான் இது நடந்தது. பிரபாகரன் இறப்புச் சேதி கேட்டு தமிழகம் கொந்தளிக்கும் நிலை வரக்கூடாது என்பதற்காக இந்திய இலங்கை கூட்டு சதிதான் இது. இந்தியாவில் இருக்கும் ரோ உளவு அமைப்பால் வளர்க்கப்படும் தமிழ் தேசிய வெறியர்கள் ஊடாக இந்தக் கதை கட்டிவிடப்பட்டது. பிரபாகரன் இறந்தவுடன் உண்மை வெளிவந்திருந்தால் தமிழகம் எரிந்திருக்கும். இந்தியா எங்கும் அந்த தீ பரவியிருக்கும். புலம் பெயர் நாடுகள் கொந்தளித்திருக்கும். இவற்றை எல்லாம் திட்டமிட்டு நிறுத்திவிட்டார்கள் இந்திய இலங்கை கூட்டு உளவுப்படைகள். இதே ‘பிரபாகரன் வாழ்கிறார்’ கதை தமக்கும் வாய்ப்பாக இருந்ததால் புலம் பெயர் யாவாரிகள் பயன்படுத்திக்கொண்டார்கள்.
சும்மா விசர் கதைக்க வேண்டாம், தலைவர் அவுஸ்த்ரெலியாவுக்கு பக்கமாக் உள்ள் தீவில் பயிற்சி கொடுக்கின்றார, மீண்டும் வந்து அடுத்த படைநடவடிக்கையை செய்வார்
Why does Inioru even bother to post this comment. There are Tamils who are golating the failure of their fellow Tamils as whole. I have never agreed with what Ltte did all the time but majority of Tamils were with them and who am I to disagree.
மாவீரனுக்கு ஏதடா மரணம் ? கொள்கையில் பிடிப்புக்கொண்டவர்கள் , இறந்தாலும் வாழ்கிறார்கள் என்பது வரலாறு. இன்றும் சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் உயிரோடு இருப்பதாக ஒரு சில மக்கள் நம்புகிறார்கள். அக்காலத்தில் ஆத்மாத்தமாக போராடி மனிதர்கள் சிலர் ! ஆகவே ஒருவன் மரணிப்பது, பெரிதல்ல ! அவன் லட்சியங்கள் மரணிப்பது கிடையாது. புலி எதிர்ப்பு வாதிகளும் இதனை அறியவேண்டும் . அறி தெளி துணி !
கண்ணா,
புலி எதிப்பு என்ற ஒரு கருத்தோ அரசியலோ கிடையாது. இதே போல தான் பார்ப்பனீயத்தை எதிர்த்தால் கூட முஸ்லீம் அடிப்படைவாதி என்றோ தலித்தியவாதி என்றோ முத்திரை குத்திவிடுகிறார்கள். இலங்கையில் இன்னும் ஒரு போராட்டம் சரியான வழியில் திட்டமிடப்பட வேண்டும். அதன் முதல்படி, பொய்களுக்கும் அநீதிக்கும்,மாயைகளுக்கும் எதிராகக் குரலெழுப்ப வேண்டும். இது ஆபத்தான காரியம் தான். ஆனால் வேறு வழி இல்லை.
கோசலன்< பொய்களுக்கும், அநீதிக்கும் , மாயைகளுக்கும் எதிராகக் குரல் எழுப்பிப் போராடவேண்டும் என் கிறீர், படு யதார்த்தமாக சிந்தியும், இதை எல்லாம் செய்யும் சர்வ வல்லமையுடையவராக யார் வர வேண்டும்.நீர் செய்ய முயல்வீரா, அல்லது என்னால்தான் முடியுமா, அல்லது கண்ணனால்தான் முடியுமா. ஓ..ஒரு வேளை இன்னுமொரு யேசு , ராமர் வருவார்கள் என்று கனவு காணச் சொல்கிறீரா. ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது. ஆனால், ஒன்று மட்டும் உண்மை, தமிழருக்கு ஒரு உரிமை பெற்றுத தரக் கூடிய வல்லமை தேசியத் தலைவருக்கு இருந்தது. கேடு கெட்ட மோட்டுத் தமிழினம் அவரை சரியாகப் பயன் படுத்த தவறி விட்டது. இனி இந்த ஜென்மத்துக்கும் யாரும் வர மாட்டினம். சும்மா கற்பனை வளர்க்காதீர்கள்.தேசியத் தலைவரையும், புலிகளையும் பற்றி எழுதித்தான் வயிறு வளர்க்கணுமா, பிரபல்யம் தேடணுமா?????
பெரும்பான்மையான தமிழர்களின்(majority of Tamils) கேடுவான மோட்டுத்தனத்தை அகற்றுவதே தமிழரின் விடிவின் முன்நிபந்தனை என்று விளக்கிய தமிழனிட்கு வாழ்த்துக்கள். இன்று நாம் தமிழர்களின் கேடுவான மோட்டுத்தனத்தை அகற்ற உறுதி பூணுவோம்.மீண்டும் எழுவோம்.
.
.
மோட்டுத்தனத்தை அகற்றி, முதலில் எமக்குள் இருக்கும் குழுவாததிட்கு எதிராக போரரடி ஒன்றிணைந்து, சிங்கள பௌத்த பேரினவாத அரசிலிருந்து விடுதலை பெற உறுதி பூணுவோம்.
think positve
இன்று ஏற்றும் அத்தனை தீபங்களும் பெரும்பான்மையான தமிழர்களின்(majority of Tamils) கேடுவான மோட்டுத்தனத்தை அகற்றட்டும்.இதுவே மாவீரர்களிட்கு நாம் செய்யக்கூடிய அதியுச்ச மரியாதை ,அவர்களின் கணவை நனவாக்கும்.
First and foremost use of words like “motuthanam” will already put people off. You sound like conservatives in the US who want to treat the common man as ignorant. Contrary to this the common man is far better informed of the realities than the elites who try to preach them. It is strange that you say VP was not supported by the majority of Tamils. People were with him all the time. Everyone knows that he made some major blunders towards the end that culminated in the downfall in the end. As much as he is creditted for all the successes the responsibilty of the failures also rest with him and him only.
motuthanam” will already put people off./// this is very positive thinking. therefore could you please correct following thamizhan’s statement?: ஒன்று மட்டும் உண்மை, தமிழருக்கு ஒரு உரிமை பெற்றுத தரக் கூடிய வல்லமை தேசியத் தலைவருக்கு இருந்தது. is this correct? or கேடு கெட்ட மோட்டுத் தமிழினம் அவரை சரியாகப் பயன் படுத்த தவறி விட்டது. or this thamizhan’s statement is correct?
I could see you would disagree with thamizhan on” வல்லமை தேசியத் தலைவருக்கு இருந்தது “. then tell me: why thamizhan is saying this ” வல்லமை தேசியத் தலைவருக்கு இருந்தது”? and why was VP supported by the majority of Tamils ?
எமது தேசிய தலைவருக்கு , விளக்கு வைத்து நீங்கள் சாதிக்க நினைப்பது என்ன ? மக்களின் நம்பிக்கை இங்கே பல விதம் ! எதனையும் ஏற்றுக்கொள்ள மக்கள் தயார் நிலையில் இல்லையே தேழர் கோசலன் அவர்களே. நம்பிக்கை தான் வாழ்க்கை ! காற்று இல்லாமல் நீங்கள் உரிவாழ முடியாது ! ஆனால் அந்தக் காற்று எங்கே இருக்கிறது என்று உங்களால் விரல் சுட்டி காட்ட முடியுமா தோழரே ? இல்லை அல்லவா ! ஆனால் இருக்கிறது. அது தான் இதுவும் ! இதுவரை காலமும் ஈழத்தில் நடந்த போரில் முதன்மையானதும், நேர்த்தியான போரையும் நடத்திய புலிகள் மட்டுமே. அவர்கள் இன்றி எமது பிரச்சனையை உலக அரங்கில் ஏறியிருக்கவே முடியாது. எனவே அவர்களை தூற்றுவதை நிறுத்திவிட்டு, விடுதலைக்காக உழைப்போமே !
//குண்டுச் சன்னங்களைச் சுமந்துகொண்டு வளரும் இளம் சிறார்கள் வன்னியிலிருந்து வளர்ந்து வருகிறார்கள். நாளை போராட்டத்தின் முன்னோடிகளில் இவர்கள் நிச்சயமாக கோடிட்டுக் காட்டப்படுவார்கள். இவர்களுக்கு தவறான பாதையையும் வியாபார அரசியலையும் நாம் முன் உதாரணமாக விட்டுச் செல்ல முடியாது.//kowsalan
இன்று மாவீரர்நாள். தமிழர்களின் உன்னதமான நாள். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டிருக்கும் தமிழினத்தை தட்டி எழுப்பி விடுதலையை நோக்கிப் போராடவைத்து தங்களை விதையாக்கிய புனிதர்களின் நாள். விதைகள் இன்று முளைவிட்டு தமிழர் வாழும் இடங்கள் எங்குமே ஒளிர்வதைக் காணலாம். முளைவிடும் காலத்தில் பூச்சி, பூரான், பல்லி, ஓணான் போன்ற சிறிய பிராணிகளே முளைகளை தின்று ஏப்பம்விட முயலும்போது பெரிய மிருகங்களைப்பற்றிச் சொல்லத் தேவையில்லை. ஆனாலும் இவற்றை எல்லாம் கடந்தும் முளைகள் பயிராகி பயன்தருவதுதான் உலக நியதி. தமிழினம் விடுதலை அடைவதும் உறுதி. இதற்கெல்லாம் அடித்தளம் அமைத்த அந்தத் தலைவன் பிரபாகரனை வாட்ட நினைப்பவர்கள் எந்த நெருப்பிலிட்டும், சுட்டும் வாட்டலாம். அவன் தமினத்தின் சங்கு, சுடச் சுட ஒளிர்வான். அவன் அநாதையல்ல இன்று மாவீரர்களுக்கு ஏராளமானோர் தீபமேற்றலாம். ஆனால் இதயசுத்தியுடன் தீபமேற்றும் ஒவ்வொரு தமிழரும் பிரபாகரனே.
thevan
Posted on 11/27/2012 at 11:25 pm
motuthanam” will already put people off./// this is very positive thinking. .
.
could you please correct following thamizhan’s statement?: .
.
ஒன்று மட்டும் உண்மை, தமிழருக்கு ஒரு உரிமை பெற்றுத தரக் கூடிய வல்லமை தேசியத் தலைவருக்கு இருந்தது. is this correct? .
.
or.
.
கேடு கெட்ட மோட்டுத் தமிழினம் அவரை சரியாகப் பயன் படுத்த தவறி விட்டது. this thamizhan’s statement is correct?
.
.
I could see you would disagree with thamizhan on” வல்லமை தேசியத் தலைவருக்கு இருந்தது “. .
.
then tell me: why thamizhan is saying this ” வல்லமை தேசியத் தலைவருக்கு இருந்தது”? and why was VP supported by the majority of Tamils ?
I am not here to interpret the thinking of the majority, I can only tell what I felt. Using such deragatory terms only takes people away from your ideas. I am also not here to solve your if then else problem here. All what I can tell is that VP started to slip away from the realties of the changing world, you can expect only so much from the West and I think we failed to capitalize on that. Once they found that VP was playing games with them they too chaged their game. And also keeping out the Indians ( from VP side ) away from any negotiations did not help. They might not have participated but it was only a gesture of good will. And one last thing VP was a one man show and did not want listen to any sound adice. He couldn’t have been an expert on everything, war, economics, etc. etc.
Mustang!! I agree with your comment at 12.01am. MustangGT///I have never agreed with what Ltte did all the time but majority of Tamils were with them and who am I to “disagree” ///.I disagree on your “disagree” by chnaging to “”””””agree”””””””””.
THEVAN: I have never agreed with what Ltte did all the time but majority of Tamils were with them and who am I to”””” “agree”””” with majority of tamils. And We should and our duty to encourage them to see the reasons for VP’s blunders. Majority of the tamils who were with them are not willing to come out of their COMA due to their believe in VP and the GROUPISM. Most of them are all genuine PRO TAMILS Pro Thesiaym,and lost their love ones for our struggle. but blinded by VPism or LTTEism or GROUPISM. this is also played a big part for MAY 09.Unconditional support for VP
Again you make the same mistake by using the word coma, I guess you are not going to learn from your errs. Good luck to you bud.
Good to see that you agree with my point,but not with the termi used. “COMA” it would be nice, if you could correct my point/sentence.. “”Majority of the tamils who were with them are not willing to come out of their COMA due to their believe in VP and the GROUPISM”” my limited english knowledge asked me to use that word COMA. plz correct that or rearrange
இங்கிலாந்துக்கு அயர்லாந்து, இலங்கைக்கு ஈழம், தமிழீழம் மீண்டும் எழும்!
* ஏகாதிபத்தியவாதிகள், இந்திய-சீன பிரதேச மேலதிக்கவாதிகளின் போட்டிக் களமாக இலங்கையை மாற்றுவதை எதிர்ப்போம்!
* ஈழத் தமிழின அழிப்புக்கான இந்திய-இலங்கை ஆளும் வர்க்க கூட்டணியை முறியடிப்போம்!
* தமிழீழ விடுதலைக்கு ஆதரவாக அணிதிரள்வோம்!
* உலகத் தொழிலாளர்களே ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்றுபடுவோம்!
நண்பர் ஒருவர் சொன்னது “பூனை இல்லாத வீட்டில் எலி புகுந்து விளையாடும் என்பது உண்மைதான். இரடி பூனை வரட்டும் எல்லா எலிக்கும் இருக்கு ஆப்பூ”
0 0
பங்கு போட்டுக்கொள்ள பண்டமல்ல, விடுதலை வேட்கையின் வீரியமே மாவீரர் ஈகம்!
தமிழரின் தாயக விடுதலைக்கான பயணமானது புதிய உலக ஒழுங்குக்கு அமைய வடிவங்களை மாற்றியமைத்து நெறி பிறழாது இலக்கு நோக்கி பயணிக்கவேண்டிய இன்றைய சூழலில், எதிரியானவன் எம்மையும் எமது இலட்சியத்தையும் பலவீனப்படுத்துவதற்கு மிகத்துல்லியமான செயல்திறன் வாய்ந்த உத்திகளை பயன்படுத்துகின்றான்.
இவற்றை புரியாது எம்மில் பலர் அவனது செயற்பாட்டிற்கு துணை போவது மிகவும் வருந்தத்தக்கது. இந்நிலை மாறி காத்திரமான கருத்துருவாக்கம் ஒன்று ஏற்பட வேண்டுமென்ற வேணவாவில் இப்பத்தி பிரசுரமாகின்றது.
எதிரிகளை அழிப்பதற்கு சாம, தான, பேத, தண்டம் என நான்கு வழிமுறைகள் உன்ளன. சிறிலங்கா அரசு இதில் கடைசி இரண்டையும் மிக நேர்த்தியாகக் கையாண்டு வருகிறது. ஒரே கல்லில் இரு மாங்காய்கள் என்று கூறும் விதத்தில் பரிதியின் (ரீகன்) படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளது.
இப்படுகொலை தொடர்பாக செய்தி வெளியிட்ட அரசு சார்பான ஊடகங்கள் புலிகளின் இரு பிரிவினருக்கிடையிலான மோதலே இது என அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டன.
உள்நாட்டில் இடம்பெற்ற நீதி அமைச்சின் செயலாளர் மீதான தாக்குதல், லலித் – குகன் உள்ளிட்ட பல்வேறு நபர்களின் கடத்தல், நல்லூர் பிரதேச சபைத் தலைவர் வசந்தகுமார், மற்றும் அளவெட்டியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீதான தாக்குதல்கள், உள்ளூராட்சி சபைக்கான புதிய கட்டட மாற்றம், சொந்தக் காணியில் மீண்டும் மீளக் குடியமரக்கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டோர் மீது கழிவு ஒயில் வீசப்பட்ட சம்பவங்கள் எல்லாவற்றையும் இனந்தெரியாதோரே மேற்கொண்டதாகக் குறிப்பிட்ட இவ் ஊடகங்கள் பிரான்ஸில் நடைபெற்ற இச்சம்பவத்தில் மட்டும் குற்றவாளிகள் இன்னார் என குறிப்பிட முடிந்தது எவ்வாறு?
இன்று நேற்றல்ல நீண்ட காலமாகவே மித்ர பேத வழிமுறையை அரசு மேற் கொண்டு வருகிறது. 1986 – 1987 காலப்பகுதியில் ” தமிழீழத்தின் குரல் ” என்ற வானொலி மூலம் இயக்கங்களுக்கிடையே பரஸ்பரம் சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக செய்திகளை வெளியிட்டு வந்தது.
இதன் மூலம் போராட்டம் மீதான சலிப்பை ஏற்படுத்தி கணிசமானோரை போராட்ட அரங்கிலிருந்து வெளியேறும் சூழலை உருவாக்கியது. வடமராச்சியில் மேற்கொள்ளப்பட்ட ” ஒப்பரேசன் லிபரேசன் ” நடவடிக்கையின் போது மக்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என அதே வானொலி அறிவுறித்தியபோதுதான் அதனை இனங்கண்டனர் எம் மக்கள்.
இந்திய இராணுவம் நிலைகொண்டிருந்த காலத்திலும் இதே வழிமுறையில்தான் தமிழ் இளைஞர்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. கிளிநொச்சி பழைய வைத்தியசாலை முன்பாக இருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த சங்கரியின் இல்லத்தில் ஈ .என் .டி.எல் .எப் வினராலும், யாழ் அசோகா ஹோட்டலில் தற்போதைய யாழ் எம் . பி சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலும், மட்டுநகரில் வாவிக்கரை சாலையில் தற்போது தமிழ்தேசியத் கூட்டமைப்பின் பணிமனையாக இயங்கிவரும் இல்லத்தில் தற்போது மாகாணசபை உறுப்பினராக விளங்கும் இரா .துரைரத்தினம் தலைமையிலும் ஈ . பி .ஆர் .எல் .எப் வினரால் தமிழரின் உயிர்கள் பலியிடப்பட்டன.
1990 யில் ராஸிக் குழு, பிளாட் போன்றவையும் தொடர்ந்து கப்பம் கோரி பிள்ளையொன்றைக் கடத்திய வழக்கில் மதுரைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த டக்ளஸ் குழுவினரும் தமிழினப் படுகொலைக்கென்றே களமிறக்கப்பட்டனர்.
மட்டக்களப்பை பொறுத்தவரை சத்துருக்கொண்டான் படுகொலை, பண்டாரியா வெளியில் கப்டன். லக்ஸ்மனை கழுத்து வெட்டி படுகொலை செய்தமை ஆரையம்பதியில் திருமதி.பூரணலச்சுமி சின்னத்துரை, வர்த்தகர் தம்பிராசா, அவரது மகன் குருகுலசிங்கம், மகள் மலர் உட்பட எழுவரின் படுகொலைகள் போன்றவற்றுக்கு டெலோவின் உதவியை நாடியது அரசு அதேபோல வவுனியாவில் புளொட்டின் மலர்மாளிகை படுகொலைகள் பிரசித்தம்.
இதன் பின்னர் சமாதான காலத்தில் பேச்சுவார்த்தைக்கென வெளிநாடு சென்ற கருணாவுக்கு திறமையான முறையில் வலை விரித்தது அரசு ” உங்களைப்போல ஒரு தளபதி எங்களோடுடிருந்தால் எங்களது இராணுவம் எங்கேயோ போயிருந்திருக்கும்” என்று குழையடித்ததில் ஆள் விழுந்து தான் போனார்.
பிரபாகரன் தான் ஒன்று. நாங்கள் எல்லோரும் சைபர்கள் இந்த சைபர்கள் ஒன்றுக்கு பின்னால் இருந்தால்தான் அவற்றுக்கு பெறுமதி ஒன்றுக்கு முன்னால் எத்தனை சைபர்கள் போட்டாலும் வேலையில்லை என்பதைப் புரிந்து கொள்ளாமல் அவர் செய்த கூத்துகள் பகிரங்கமானவையே.
பின்னர் கோடரிக்காம்பாகி அவர் தமிழின அழிப்புக்குத் துணைபோனதும் எவரும் மறக்க முடியாதவை. வட கிழக்கு உட்பட அனைத்துத் தமிழ் மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே தலைவராக பிரபாகரன் விளங்கினார். இராணுவ ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தார். இன்று இரண்டுமே வெறுமை நிலையில், எனினும் மாவீரர்களின் தியாகங்களை கௌரவப்படுத்தலாவது எஞ்சியிருக்கவேண்டும் என மாவீரர்களின் பெற்றோராகிய நாம் எதிர் பார்க்கிறோம்.
பிரான்சைப் பொறுத்தவரை ஏற்கெனவே நாதன், கஜன் ஆகியோரைப் பலியெடுத்தது சிறிலங்கா அரசு. ஏவியது அரசு என்றாலும் அதில் அம்பாக இருந்தது தமிழ்க் கரங்களே. இப்போதும் அதே மண்ணில் பருதியின் படுகொலை நிகழ்ந்துள்ளது.
1983 ஆண்டு முதல் விடுதலைக்காக இவர் ஆற்றிய பணிகள் மறக்க முடியாதவை. குறிப்பாக மன்னார் மாவட்ட மக்களின் நெஞ்சத்தில் நிறைந்தவர் இவர். நாயாற்று வெளியில் விக்ரரை இலக்கு வைத்துக் காத்திருந்தது சிறிலங்கா இராணுவம் வழமையாக ஜீப்பின் முன் பக்கம் இருந்து பயணம் செய்யும் அவர் அன்று முன்சென்ற மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்தார்.
பதுங்கியிருந்த இராணுவத்தை அவர் கடந்து சென்றார். பின்னால் வந்த ஜீப்பின் மீது படையினர் தாக்குதல் நடத்தினர். விக்டர் வழமையாக உட்காரும் இடத்தில் அமர்ந்திருந்த ரோஸ்மன் என்ற போராளி வீரச்சாவை எய்தினார். தொடர்ந்து மோதல் ஆரம்பமானது, அச் சமயம் ரீகன் மடுவில் தனது அணியினருடன் தங்கியிருந்தார். சண்டை ஆரம்பமானதை அறிந்த அவர் தனது அணியினருடன் ஓட்டமாகவே விரைந்தார்.
துப்பாக்கிகள் குண்டுகளுடன் சுமார் 25 கிலோ மீற்றர் ஓடி வருவதென்றால் இலேசான விடயமா ? இவர்கள் வந்து சேர்வதற்கிடையில் படையினர் ஓட ஓட விரட்டப் பட்டுவிட்டனர். ஆயினும் எமது ஒரு அணிக்கு ஆபத்து என்றால் அடுத்த அணி துடித்த அந்த காலங்கள் என்றும் உணர்வு பூர்வமானவை. இன்று ரீகனை படுகொலை செய்தது எமது பொது எதிரியே. ஆனால் அதனை எம்மில் ஒரு பகுதியினர் மீது பழிபோட்டு தமிழரைக் கூறுபடுத்த முனையும் சிறிலங்கா அரசின் முயற்சிக்கு நாம் பலியாகக் கூடாது.
எமது மாவீரர் பட்டியலின் இறுதிப்பெயராக ரீகனின் நாமமே இருக்கட்டும். பிள்ளைகளும் இழந்தவர்கள் என்ற வகையில் வகையில் மாவீரரின் பெற்றோராகிய எமது உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டுமென புலம்பெயர் தமிழர்களை வேண்டுகின்றோம்.
தமிழன் ஓரணியாக நின்று மாவீரர்களை போற்றினான் என்ற நிலை மீண்டும் உருவாக வேண்டும் இரத்தமும் சதையுமாக நடைபெற்ற இந்தப் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. ஆனாலும் எமது பிள்ளைகளின் தியாகங்கள் அர்த்தமற்றுப் போய் விடக்கூடாது. அதனைப் பெறுமதியாக்குவது உங்கள் கையில் தான் உள்ளது.
எங்கள் பிள்ளைகள் களத்தில் போராடும் போது இவ்வாறு பிரிந்து நின்று மாவீரர் நாளை அனுஷ்டிப்பீர்கள் என எண்ணவில்லை. இழந்த எம் பிள்ளைகளின் பெயரால் கேட்கிறோம், சுடரேற்றும்போது அருகருகே நின்ற மாவீரர் குடும்பங்களைப் பங்கு போடாதீர்கள்.
போராட்டத்தை நேசிக்கும் நடுநிலையாளர்கள் மாவீரர் நாளைப் பொறுப்பெடுக்கவேண்டும். இதற்கான முயற்சிகளை காசி ஆனந்தன், நெடுமாறன், திருமதி அடல் பாலசிங்கம் போன்றோர் முன்னெடுக்க வேண்டும். இந்த மாவீரர் நாளில் அது முடியாமல் போனாலும் அடுத்த நாளிலிருந்து இதற்கான முயற்சிகள் மேற் கொள்ளப்படவேண்டும்.
2013 ஆண்டு மாவீரர் நாளாவது பழையபடி ஒரே இலக்குடன் நடைபெறட்டும். அதுதான் நீங்கள் எங்கள் பிள்ளைகளுக்கு செய்யும் கௌரவம். அந்த வகையில் மாவீரர் நாள் உறுதியெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கின்றோம்.
தாயாக விடிவிற்காய் தமது உடல் பொருள் ஆன்மா என அத்தனையும் ஆகுதியாக்கிய மான மறவர்களின் பெற்றோர் உரித்துடையோர் சார்பாக தயாளன்
http://tamilwin.com/show-RUmqzBRaNUmx0.html
மாவீரர்களை ஈன்றளித்த மாண்புமிகு அன்னை தந்தையரின் குரலாக ஒலிக்கும் தயாளன் அவர்களே உங்கள் எதிர்பார்ப்புகளை இன்றைய தலைமுறையின் தமிழர்களால் நிறைவேற்றித் தருவதற்கு முடியாது போகலாம். ஆனாலும் வருங்காலத் தலைமுறை நிச்சயம் நிறைவேற்றித் தரும். தருவதற்கான ஏற்பாடுகளை சிங்களம் மிகுந்த வீரியத்தோடு படைகளையும், பிக்குகளையும் முன்நிறுத்திச் செய்துவருகின்றது.
I am tired of reading the comments but it is realy worth