மாவீர்களும்… விற்பனர்களும்…
(இக்கட்டுரை வன்னி இறுதிப் போர்… பெரும் போர்… நடந்து அடுத்த வருடம் எழுதப்பட்டது…
இக்கட்டுரை எழுதி மூன்று வருடங்கள் கழிந்தாலும்… இன்றும் அமரர் பிரபாகரனை மாவீரராக்கி… வடமாகான மக்களின் வாக்குகளை எடுத்தவர்கள் இருக்குமிடத்தும்…
முள்ளி வாய்க்காலில் தான் சத்தியப்பிரமாணம் எடுப்போம் என்று சூளுரை விடுப்பவர்கள் இருக்குமிடத்தும்…
வேலுப்பிள்ளை பிரபாகரனின் இறுதி நாட்களில் கப்பல் வருகிறது… கப்பல் வருகிறது… வெளிநாட்டில் இருந்து உதவி வருகிறது… வெளிநாட்டில் இருந்து உதவி வருகிறது… என்று மாயைக்குள் உள்ளாக்கியது மாதிரி…
இன்றும் புலம்பெயர் தேசங்களில் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்றும்… அதற்காக இந்தியாவில் இருந்து பிள்ளைகளை வெளிநாட்டில் பாதுகாப்பாக வைத்திருக்கும்… இளைஜர்களை கவிதைகள்… மேடைப்பேச்சுக்களிநூடாக… உசுப்பேத்தி.. பலிக்கடாவாக்கிய… காசி ஆனந்தனின் முகப்புரையுடன்… அமரர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தமிழீழத்தை நோக்கிய கைகாட்டலுடன்… கூடிய… முகப் படத்துடன்… “வருவோம் தாய்மண்ணே” என்று திரும்பவும் மக்களை மாயைக்குள் உள்ளாக்க…
10 பாடல்களுடன் வெளிவந்திருக்கும் CD மூலம் விற்று பணம் பண்ணுபவர்கள் இருக்குமிடத்தும்…
மாவீர் தியாகங்களை வியாபாரமாக்கியும்… மீண்டும் போராடம் தொடங்கிறது… என்றும் பல வழிகளில் பணம் பண்ணுபவர்கள் இருக்குமிடத்தும்…
இன்றும் இக்கட்டுரை காலத்தின் தேவையை ஒட்டி பொருந்தும் என்ற நோக்கில் மீள் பிரசுரிக்கப்படுகிறது…இதுமட்டுமல்ல… போரின் பின்னர் வன்னியின்…கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட மக்களை சந்தித்தவிடத்து… அவர்களின் நிலையை அறிந்தவன் என்ற நிலையிலும்… சிறுவர் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளரின் அறிக்கையின்படி… குறிப்பாக அம்பாறை, மட்டக்களப்பு, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மொனராகலை, நுவரெலியா, பதுளை மாவட்டங்களில் சிறுபராய கர்ப்பிணிகள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் குறித்து அதிகளவில் பதிவாகியுள்ளன.
இதன்பொருட்டு அந்தந்த பிரதேசங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டு உரிய தரவுகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புத் திணைக்கள பணிப்பாளர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட சிறுவர்களின் கல்விக்கான உதவிகளுக்கு இதுவரை சுமார் 3 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதில் பார்த்தால்… போர் நடைபெற்ற அம்பாறை, மட்டக்களப்பு, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் சிறுபராய கர்ப்பிணிகள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகளவில் பதிவாகியுள்ளன.இதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்… இவர்கள் எமது… இனம்… எமது உறவுகள்… எதிர்கால சந்ததிகள்…
நடைபெற்ற போரிற்கு நேரடியாகவோ… மறைமுகமாகவோ… நாம் எல்லோரும் பங்களித்துள்ள நிலையில்…. இன்று எமக்கு பெரும் கடப்பாடு உண்டு…
பல வழிகளிலும்… பல இழப்புக்களினூடே… நொந்து போயிருக்கும் மக்களை திரும்பவும் மாவீரர் ஆக்காதீர்கள் …பலிக்கடா ஆக்காதீர்கள் … – அலெக்ஸ் இரவி)
மாவீர்களும்… விற்பனர்களும்…
மாவீரர்கள் நினைவு கூறப்படவேண்டியவர்களே, ஆனால் விற்பனைக்குரியவர்கள் அல்ல…!!!
ஈழத்தமிழ் மக்களின் உரிமைகளுக்கான போராட்டம் தொடங்கிய காலத்திலிருந்து பல உயிர்கள் தியாகங்கள் செய்து, வீரகாவியம் படைத்து எம்மை விட்டு துறந்தும் இன்றும் எத்தனையோ பெற்றோருக்கு தம் பிள்ளைகளின் உயிர் அகன்ற உடல்களை பார்க்கவோ… அவர்களின் நினைவு கல்லறை பார்க்கவோ கிடைக்காமல் தம் துயரை தம்மினுள்ளே அமிழ்த்தி… துயரும் வேளை, புலம் பெயர்ந்த நாடுகளிலோ பரநாட்டியம் பயிலும் தம் பிள்ளைகளின் நடனத்தை மேடையேற்றி பார்ப்பதற்கும்… ஓர் மாவீரர் திருவிழா…!!!
தாயகத்தில் பாடசாலைக்கு சென்ற பிள்ளை வீடு திரும்பாமல் விடுதலை என்னும் பிள்ளை பிடித்த கூட்டத்தால் கூட்டிச்சென்று வயிற்றில் குண்டை கட்டி குற்றுயிராக்கப்பட்ட வேளை… புலம் பெயர்ந்த நாடுகளிலோ பாடசாலை செல்லும் பிள்ளைகளை தவறான வழியில் வழிநடத்தி வளரும் சமுதாயத்தை மரமண்டையக்குவதர்க்கு… ஓர் மாவீரர் திருவிழா…!!!
தாயகத்தில் தாம் பெற்ற பிள்ளைகளின் சம்பாத்தியத்தை காணாமல்… தம் புருஷர்களின் சம்பாத்தியத்தை காணாமல்… பிள்ளைகளின் தாய்மார்… கணவனை இழந்த விதவைகள் துன்பத்திலும்… துயரத்திலும்… பாதுகாப்பில்லாமல்… ஏழ்மையில்… ஏங்கித் தவிக்கும்போது… புலம் பெயர்ந்த நாடுகளிலோ BMW… INFINITI… LEXUS… ஓடுவதற்கும் பட்டாடைகள் உடுத்துவதற்கும் மாவீரர் பெயரால் விழாவெடுத்து வருவாய் தேட… ஓர் மாவீரர் திருவிழா…!!!
மாவீரர்கள் நினைவு கூறப்படவேண்டியவர்களே, ஆனால் விற்பனைக்குரியவர்கள் அல்ல…!!!
புலம் பெயர் நாடுகளில் மாண்ட பினாமி வீரர்களே… 2008 மட்டும் மாவீரர் கணக்கு சொல்லி மாவீரர் திருவிழா எடுத்தவர்களே… 2009 இலிருந்து கணக்கு எங்கே…???
நாற்பதினாயிரத்திர்க்கு மேற்ப்பட்டவர்களை மாவீரர்களாக்கிய… நாற்பதினாயிரத்திர்க்கு மேற்ப்பட்ட குடும்பங்களை மாவீர குடும்பம் என்ற நாமத்தில் அழித்த… மகா மாவீர புருஷனிற்கு மாவீர் பட்டம் எங்கே…???
தன்னை மகா மாவீரனாக்காமல் தப்புவதற்கு நாற்பதினாயிரத்திர்க்கு மேற்ப்பட்ட அப்பாவி குழந்தை… கர்ப்பிணித் தாய்மார்கள்… முதியோர்…என்று கிளிநொச்சி தொடக்கம் முள்ளிவாய்க்கால் மட்டும் நாலாம் கட்ட போர் என்று பலி கொடுத்த… மகா மாவீர புருஷனிற்கு மாவீர் பட்டம் எங்கே…???
தன்னை சூரிய தேவனாக காட்டுவதற்கு பற்குணம், மைக்கேல் தொடக்கம் தோழர் சுபத்திரன், பாறுக் தோழர் வரை நாலாயிரத்திற்கு மேற்பட்ட மண்ணுக்காகவும்… மக்களுக்காகவும்… தம்மை அர்ப்பணித்த தோழர்கள் மட்டுமல்லாமல்… சகோதரி ரஜனி தினரகம, செல்வி தொடக்கம் சரோஜினி யோகேஸ்வரன், மகேஸ்வரி வரை எமது தாய் நாட்டின் தாய்க் குலத்தை பலி எடுத்த… மகா மாவீர புருஷனிற்கு மாவீர் பட்டம் எங்கே…???
மண்ணை மீட்கும் போர்… தாயக விடுதலைக்கான போர் என்று தன்னை தானைத் தலைவனாக நிலை நிறுத்தி… மண்ணுக்காகவும்… மக்களுக்காகவும்… தம்மை அர்ப்பணித்தவர்களின் நாமத்தால் மாவீர் உரை என்று ஓர் உரை வாசிக்கும்… மகா மாவீர புருஷனிற்கு மாவீர் பட்டம் எங்கே…???
நாலு பேர் என்று தொடக்கி… நாற்பது பேராக பண்ணையில் பயிற்சியெடுத்து… நாலாயிரம் பேராக அந்நிய மண்ணில் பயிற்சியெடுத்து… நாற்பதினாயிரம் பேரை மாவீரராக்கி… மேலும் நாற்பதினாயிரம் பேரை நாற்பது நாட்களில்… தான் சயனைட் விழுங்காமல் தன் உயிரை காப்பற்றுவதற்க்காக பலி கொடுத்து… நாலு இலட்சம் பேரை தம் மண்ணிலேயே உடுத்த உடைகளுடன் முள்ளுக்கம்பிகளுக்குள் அகதிகளாக்கி… எண்ணிலடங்காத ஆயிரக்கானவர்களை அங்கவீனர்களாகி… குழந்தைகளை அனாதைகளாக்கி… தாய்மாரை விதைவைகளாக்கி… தன் குடும்பத்தையே… தன் குடும்பத்தின் மனைவி பிள்ளைகள் நாலு பேரையும் காப்பாற்றமுடியாமல்… பலி கொடுத்த… மகா மாவீர புருஷனிற்கு மாவீர் பட்டம் எங்கே…???
மாவீரர் திருவிழா நடாத்தும் மாவீர மானிடர்களே…??? மகா மாவீர புருஷனிற்கு மாவீர் பட்டம் எங்கே…???
மண்ணுக்காகவும்… மக்களுக்காகவும்… தம்மை அர்ப்பணித்த தோழர்கள்… தியாகிகளாகட்டும்… வீர மக்களாகட்டும்… எழிமைக்கும்… உறுதிக்கும் இலக்கணமாக இருந்து அரசு இராணுவ இயந்திரத்தால் படுகொலை செய்யப்பட்ட தோழர் கனகுலசிங்கம் தொடக்கம்… வீர வணக்க பட்டியலிடாமல் இன்றும் காந்தியம், வங்கம் தந்த பாடம் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கும் தோழர் சந்ததியார் மட்டுமல்லாமல்… இனவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட டாக்டர் இராஜசுந்தரம், அரபாத்… என்று முகம் தெரியாமல் மண்ணுக்காகவும்… மக்களுக்காகவும்… தம்மை அர்ப்பணித்த… பட்டியல்களில் அடங்காத அனைவரும் தியாகிகளே…! வீரமறவர்களே…!! மாவீரர்களே…!!!
என்று எம்மண்ணில் மரணித்தவர்கள் அனைவருக்கும் ஒருமித்து பாகுபாடில்லாமல் நினைவுகூறுகிறோமோ, அன்றுதான் எம்மை ஓர் இனம் என்று இலங்கை அரசு தொடக்கம்… உலக இன மக்கள் வரை அங்கீகரிப்பார்கள்…!!!
மாவீரர் திருவிழா நடாத்தும் மாவீர மானிடர்களே…!!!
உங்களால்… உங்களின் தீர்க்கதரிசனமில்லாத போராட்டத்தால்… மண்ணுக்காகவும்… மக்களுக்காகவும்… தம்மை அர்ப்பணித்த/ தங்களால் படுகொலை செய்யப்பட்ட சக போராளிகளை… அரசியல்வாதிகளை… நினைவுகூர பக்குவப்படுங்கள்…!!!
மாவீரர் திருவிழா நடாத்தும் மாவீர மானிடர்களே…!!!
உங்களால்… உங்களின் தீர்க்கதரிசனமில்லாத போராட்டத்தால்… மண்ணுக்காகவும்… மக்களுக்காகவும்… தம்மை அர்ப்பணித்த மாவீரர் குடும்பங்களிற்கு உதவிகளை செய்யுங்கள்…!!!
இனியொரு விதிசெய்வோம்…! என்று இனியும் நீங்கள் திருந்தாவிடில், நீங்கள் மானிடர்களே அல்ல…!! திருந்துங்கள்…!!!
மாவீரர்களை விற்காதீர்கள்…!
விற்பனர்களே…!! மாவீரர்களை விற்காதீர்கள்…!!!
இத்தனை பேரையும் பலிகொடுத்துவிட்டு தலைவன் தப்பி உயிர் வாழ்கின்றான் என்றால் அத்தலைவன் இனி என்ன மசிருக்கு நமக்கு!
நமக்கு எண்டு ஒன்னோட எங்கள ஏன் சேத்துக்கிறே ?
mm u r very correct.
‘நமக்கு’ என்பது சொந்த மூளையை பயன்படுத்தி சிந்திப்பவர்களை குறிப்பது, நீங்கள் சொல்லும் “எங்கள்” என்னும் அறிவிலிகளுக்கு அல்ல.
As he always said he was not caught alive. Now General Sarath Fonseka – December 1950 – can start unloading the military matters.
This is man is from BCO, they use the word as Masir !
ஆற்றாமையால் உளறும் இந்த கட்டுரையாளரை இல்லை காட்டுரையாளரை மன்னிப்போமாக!
வெறும் காழ்ப்புணர்ச்சியை முன்னிலைப்படுத்தி தானும் ஏதோ எழுதியதாக நிறைவடையட்டும்.
இந்த லட்சண்தில் மறு பிரசுரம் வேறு.
முதலில் உலக வரலாற்றையும்,எமதான புறச் சூழலையும் புரிந்து கொள்ள முயற்சிக்கவும்.
நன்றி.
அமரர் வேலுப்பிள்ளை பிரபாகரனை மாவீரராக்கி… வடமாகாண முதலமைச்சரான.. விக்கி மாமா மாவீரர் தினமான இன்று 27 ஆம் திகதி புதன்கிழமை வடமாகாணக் கல்வி அமைச்சரின் அலுவலகத்தில் முள்ளி வாய்க்காலில் சத்தியப்பிரமாணம் எடுக்க அறிக்கை விட்டவர்களின் சமூகம் இல்லாமல் கல்வி அமைச்சர் த. குருகுலராசா, விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் சமூகத்துடன்… மரக்கன்றுகளை நாட்டி வைத்தார்…
இதே நேரம்… வடக்கில் இடம்பெயர்ந்த நிலையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட குடும்பங்களில் உள்ள சிறுவர்கள், போஷாகின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.
மீள்குடியேற்றம் செய்யப்பட்ட குடும்பங்களின் பிள்ளைகளின் போஷாக்கை அதிகரிக்க வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கவிருப்பதாகவும் ஜப்பான் கூறியுள்ளது.
சிறுவர்களுக்கு போஷாக்கு மிக்க உணவுகளை வழங்கும் நோக்கில் ஜப்பானிய அரசாங்கம் 282 மில்லியன் ரூபா செலவில் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் ஊடாக உலக உணவுத் திட்டம் மேற்கொண்டு வரும், வடபகுதி பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்துடன் இணைத்து மேற்படி வேலைத்திட்டத்தை முன்னெடுக்க ஜப்பான் தீர்மானித்துள்ளது.
அத்துடன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இந்த திட்டம் முன்னெடுக்கப்படும் என கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும் … மாவீரர் தினமான இன்று பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. யான சீ. யோகேஸ்வரன் யுத்த காலத்தில் உயிரிழந்தோர் மற்றும் கொல்லப்பட்டோருக்கு தமது கண்ணீர் அஞ்சலியை சமர்ப்பிப்பதாக அஞ்சலியை செலுத்தினார்…
மாவீர் இல்லங்களில் நெருப்பு எரிகிறதோ இல்லையோ கூட்டமைப்பினரின் வீட்டில் நல்ல காற்று அடிக்கிறது…
Tamil Nadu Police have thwarted attempts made by Sri Lankan refugees to commemorate LTTE martyrs at the Chenkalpattu refugee camp on Tuesday (26).
A special police team stormed the camp and demolished the commemorative stone and removed all decorations put up in yellow and red inside the camp premises, reports from Chennai said.
The Special Chenkalpattu Camp, which houses around 100 Lankan refugees, was also thoroughly searched by the special police team, which had banned the commemoration.
The Sri Lankan refugees who had made arrangements for the commemoration chanted slogans against the Tamil Nadu Police and the Government of Chief Minister J. Jayalalithaa, for interrupting the commemoration ceremony.
Police officers responding to the Chenkalpattu Lankan refugees, said they would not be allowed to commemorate LTTE cadres as the outfit is proscribed in India, sources said.
The learned doctor and his raw language, reflects the background !
மக்குகளா
‘கூறப்பட’ அல்ல…. ‘கூரப்பட’.
தலைப்பில் வருவதையும் திருத்தும் உரிமை அந்த ஆ! சிரியருக்கு 🙂 இல்லையா?