கருத்தை கருத்தல் வெல்ல முடியாதவர்களின் சர்ந்தர்ப்பவாத அரசியலை தோலுரித்துக் காட்டும் வண்ணம் அண்மையில் எனக்கு நடந்த தாக்குதலை மையாமாக வைத்து ஒரு சில இணயங்கள் தமக்கு வேண்டிய அரசியலை எனது பெயரை பாவித்து செய்கின்றனர்.
இவ்வாறான அரசியல் போக்கையும் அனாகரீகனமான செய்றபாட்டையும் நான் கண்டிப்பதுடன் அவர்களது செய்திகள் அறிக்கைகள் மீதான மறுப்பறிக்கையை முன்வைக்கின்றேன்.
எனக்கு என்ன நடந்தது என்பதை முதலில் நான் கூறியாகவேண்டும். தீபம் தோலைக்காட்சியில் புலிகளின் கொடியை ஊhவலங்களில் பிடிப்பது சரியா தவறா என்ற விவாதத்தில் கலந்து கொண்ட நான் எதோட்சையாக தேசம் நெற் ஆசிரியரில் ஒருவரும் இலங்கை அரசு சார்பாளருமான கொன்சன்ரைனுக்கு அருகாமையில் அமர்ந்தோன்.
உண்மையில் அவ்விவாதத்தை அவதானிப்பீர்கள் ஆனால் ஆதில் ஓருவர் இந்தியா சார்புதன்மை கொண்டவரும் மற்றவர் புலிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தியவரும் ஒருவர் இலங்கை சார்பு அரசில் கொண்டவரும் நான்காவதாக நான் மாற்றுக்கருத்தை கொன்டவனாகவும் இருந்தோம். இதில் இலங்கை சார்பு தன்மை கொண்டவரின் அருகாமையில் இருந்ததால் நான் இலங்கை சார்பானவன் என்ற பார்வை முட்டாள் தனமானது. அத்தகைய பார்வையை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
புலம் பெயர்ந்த காலத்தில் இருந்தே மற்றுக் கருத்துக்காக புலம் பெயர் நாடுகளில் குரல் கொடுப்பவர்களில் நானும் ஒருவன் இக்காலத்தில் ஈழபூமி என்ற பத்திரிகையை வெளியிட்டும் அதன் பின் உயிர்ப்பு, தமிழீழ மக்கள் கட்சி,……….. இயங்கிவரும் என்னை அரச ஆதரவாளர் என்று தேசம் நெற்றில் ‘புலிகளின் வால்கள் நியூமோல்டன் பகுதியில் சண்டித்தனம்’ என்ற கட்டுரையில் விடுதலைப் புலிகளை கடுமையாக விமர்சித்து சிறீலங்கா அரசுடன் இணைந்தே தமிழ் மக்களின் உரிமைகளுக்குப் பரிகாரம் தேட வேண்டும் என்ற கருத்துப்பட ரி கொன்ஸ்ரன்ரைன்இ எஸ் வாசுதேவன்இ வி சிவலிங்கம்இ என் கங்காதரன்இ ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்இ சஞ்சீவ்ராஜ் (குட்டி) ஆகியோர் மாறிமாறி கலந்து கொள்கிறார்கள். எனக் குறிப்பிட்டதன் மூலம் என்னை இலங்கை அரசு சார்பானவர் என்று கருதப்படுவதை வன்மையாக கண்டிப்பதுடன் இவ்வசனத்தை நீக்குமாறு தேசம் நெற்றுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது அதையும் அவர்கள் பொருட்படுத்தியதாக தெரியவில்லை.
கொன்சன்ரைனும் ஜெயபாலனும் தமது அரசியலை எனது பெயரில் திட்டமிட்டு தினிக்கிறார் மாற்றுக் கருத்தாளர்களை சிதைக்கும் முயற்சியாகவே நான் கருதுகின்றேன்.
நட்புடன்
குட்டி
Why you published this tell me ?
இனி புலி அல்லது அரசாங்கம் என்ற இரன்டும் தான் இப்போதைக்கு இருக்க்கு. குட்டியின் கருத்து எடுபடாது. ஒன்றில் அரசை ஆதரி அல்லது புலியை ஆதரி
im upset!
சஞ்ஜீவ்ராஜ்,முதலலில் ஒன்றைக் குறித்துக்கொள்ளுங்கள் : எவர் பக்கத்தில்-எங்கு(அண்மையில்-அருகாமையில்)அமர்ந்திருப்பதல்லப் பிரச்சனை.
இலங்கையை ஆளும் பாசிச அரசுசார்பாகக் குரல் கொடுப்பவரது எந்தக் கருத்தையும் நீங்கள் குறுக்கு விசாரணை செய்யவேயில்லை.
மாற்றுக் கருத்தாளர் புலிக்கொடியை எதிப்பதிலிருந்து தேங்க முடியாது!
தமிழ்பேசும் முழுமொத்த மக்கட்டொகுதிக்கும் எதிரான திசையில் கொன்ஸ்சன்ஸ்ரையின் கருத்துக்கட்டும்போது-தமிழ்பேசும் மக்களது இருப்பைக் கேள்விக்குட்படுத்தும்போது, நீங்கள் பார்வையாளராக இருப்பதென்பது அச் சந்திப்பில் அதை ஆமோதிப்பதான பார்வையையையே பார்வையாளருக்கு வழங்கும்.
அஃது மட்டுமல்லாது,தமிழ் இனத்தின் விடிவை நோக்கிச் சிந்திப்பவர்,அத்தைய நிகழ்வில் மௌனித்திருக்கவும் முடியாது!
உங்களால் எப்படியிருக்க முடிந்தது?
வெறுமனவே மாற்றுக் கருத்தெனச் சொல்லிவிடுவதால் “மாற்றுக்கருத்து” ஒடுக்குமுறைக்குள்ளாகும் மக்களுக்குச் சாதகமாக இயங்குவதில்லை!
புலிக்கொடிக்கு எதிர்ப்பிடுவதிலிருந்து, சிங்கக் கொடியினது குறியீட்டுத்தாக்குதல் குறித்து விவாதிருக்கவேண்டும்.
அது, குறித்த நீண்ட மௌனம் எதன் பொருட்டு?
சிங்கக் கொடியை சிலாகித்த கொன்ஸ்சன்ஸ்ரையின் இறுதியில், தமிழ்பேசும் மக்களுக்கு வரலாறு,பண்பாடு,இல்லையெனும் தோரணையில் சிங்களவர்களே காலனித்துவத்தை எதிர்த்ததெனவும் கூறுவதிலிருந்து, நீங்கள் மெனத்தில்…
வரலாறென்பது தனிநபர் திருத்தலாக முடியாதுதானே?ஏதோ சொல்லுங்கோ…
ஸ்ரீரங்கன்
சிறிலங்கா அரசபயங்கரவாதம் தன்மீது சுமத்தப்பட்ட நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையிலான தமிழின அழிப்பு குற்றச்சாட்டுக்கு புலம்பெயர்ந்த விடுதலைப்புலிகளும் தமிழ் தேசீய உணர்வாளர்களுமே காரணம். புலிகளை ஆயுதரீதியில் தோற்கடித்தது போல் தமிழ் தேசீயத்திற்கெதிரான சர்வதேச பரப்புரை யுத்தத்தை பகிரங்கமாக அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதிதான் தீபத்தில் சிறிலங்கா அரசபயங்கரவாதத்தின் ஊடகச்சிப்பாய்கள் முன்னெடுக்கும் புலிக்கொடியெதிர்ப்பு பரப்புரை இதில் ராஜ்ம் ஒருபங்காளி.( கொன்ஸ்ரைனுக்கு அருகிலிருந்தபடியால் அல்ல சிறிலங்கா அரசபயங்கரவாதத்தின் புலிக்கொடியெதிர்ப்பு பரப்புரையை முன்னெடுத்தபடியால்) இந்தவிடயத்தில் ராஜ்ன் வாக்குமூலத்தை காட்டிலும் கொன்ஸ்ரைனின் வாக்குமூலத்தில் உண்மையிருப்பதற்கான சந்தர்ப்பம் அதிகம். எனெனில் தானொரு சிறிலங்கா அரசபயங்கரவாத ஆதரவாளன். அதன் மூலம் தன்னுடன் சேர்ந்த 5 வரினதும் பரப்புரை அரசபயங்கரவாத ஆதரவானது என்பதை வெளிப்படையாக சொல்கிறார்.அதை இன்றுவரை ராஜ் தவிர்ந்த எவருமே மறுக்கவில்லை. ராஜ் தனது தமிழ்தேசீய கபட முகம் அம்பலமாச்சே என்ற கையேறு நிலையில்தான் “இதில் இலங்கை சார்பு தன்மை கொண்டவரின் அருகாமையில் இருந்ததால் நான் இலங்கை சார்பானவன் என்ற பார்வை முட்டாள் தனமானது. “என்று சொல்லி அடுத்தவரை முட்டாளாக்கிறார்.
தமிழ்தேசீய ஒற்றுமையை விரும்பும் ஒருவர்!. தற்போதுள்ள நேரகாலம் தெரியாது! சிறிலங்கா அரசபயங்கரவாதத்தின் அவசர அவசியத் தேவையான. பரப்புரையை முன்னெடுக்க முன்வரமாட்டார். “காற்று வீசும் போது மாவை விற்ப்பதும் மழையடிக்கும் போது உப்பு விற்பது யதார்த்தமான காரியமல்ல.” அதை அடுத்தவர் யதார்த்தமென நம்பவும்மாட்டார்.
நிர்மலன் உங்களுக்கு எப்போ காலம் வரும் மக்களை சுயமாக சிந்திக்கவிட. அதைவிட அவர்களுக்கு சொல்ல வேண்டிய செய்திகளை எப்போ சொல்ல போகிறீர்கள்.நீங்கள் எந்த அமைப்பை சார்ந்திருக்கிறீர்கள் பல அமைப்பில் என்றால் எத்தனை அமைப்புகள் பல அமைப்பெனில் பல கருத்துக்களை கொண்டதாகவிருக்கும் அப்படியாயின் நீங்கள் அரசியல் அரசியல் தரகரா?
“காற்று வீசும் போது மாவை விற்ப்பதும் மழையடிக்கும் போது உப்பு விற்பது யதார்த்தமான காரியமல்ல.” அதை அடுத்தவர் யதார்த்தமென நம்பவும்மாட்டார்.// இது நிர்மலனின் முத்துக்கள். தம்மையறிமாலேயே உண்மையை கூறிவிடும் தருணங்கள். உங்களை போலவே எல்லோரும் வியாபாரநோக்கோடு எது விற்கக்கூடிய சரக்கு என்று கடைவிரிப்பவர்கள் என்று எண்ண தலைப்படலாமா?
இணையத்தளங்கள் குறிப்பாக தேசம்நெற்றின் போக்குகள் தொடர்பாக விழிப்படைய வேண்டும். எந்த விடயம் பரபரப்பாகின்றதோ அதை வைத்து தமது லாபங்களை உருவாக்கி கொள்வதில் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள். கொஞ்ச நாள் டக்ளசோடு தேனிலவில் தேசம் நெற் இருந்தது. பின்னர் கூல் அவர்களுக்கு ஒளிவட்டம் கட்ட முயன்றது. இப்போது மக்களை கொன்று தள்ளிய கொடூரன் மகிந்தாவை குளிர வைக்கவும் அதன் மூலம் தங்கள் தொழில் பணம் செல்வாக்கு இவற்றை வளர்த்துக் கொள்ளவும் வேடமிட்டு சுற்றுகின்றனர். கொஞசமும் மனசாட்சியில்லா மனிதர்கள். குடியேற்றம் வறுமை நிராதரவு விபச்சாரம் என மக்கள் சிதைந்து கொண்டு வரும் இக்காலத்தில் அதை உருவாக்கிய சிங்களப் பேரினவாதத்தை ஆதரிக்க வேண்டுமாம்! புலிகளை விட நுணுக்கமான தந்திரசாலியான இவர்களிடமிருந்து தமிழினம் எவ்வாறு தப்பிப் பிழைக்கப் போகின்றதோ?
தேசம்நெட்டில் வந்த ஒரு கருத்து.
”
எரிகிற பிரச்சனைகளை விட்டு, எவரின் சொற்படியோ விவாதங்களை நடத்துகிற பேடிமைத்தனந்தான், விளைவுகளை வியாபாரமாக்குகிறது.
இன்று தமிழ் மக்களின் விடிவுதான் முக்கியமே தவிர புலிக்கொடியா அல்லது சிங்கக்கொடியா என்பதல்ல.
கொடிகளை முன்னிறுத்தி விவாதம் செய்தவர்கள் தம்மை விளம்பரப்படுத்திக் கொள்வதுடன் மட்டுமல்ல, தமிழ் மக்களின் போராட்டத்தை பின்தள்ளவும் முயல்கிறார்கள். இங்கே அடிபடுபவர்களும், பிடிபடுபவர்களும் ஒரு நிலையற்றவர்கள்; விலை போனவர்கள். கருத்துக்களைக் கத்தரித்து, மறுத்து, சண்டித்தனம் பண்ணுகிற இணையங்கள், சனநாயக நியாயம் பிளக்கிறது, மிகப்பெரும் வேடிக்கைதான். ” kovai on June 24, 2011 12:41 pm
//குடியேற்றம் வறுமை நிராதரவு விபச்சாரம் என மக்கள் சிதைந்து கொண்டு வரும் இக்காலத்தில் அதை உருவாக்கிய சிங்களப் பேரினவாதத்தை ஆதரிக்க வேண்டுமாம்! புலிகளை விட நுணுக்கமான தந்திரசாலியான இவர்களிடமிருந்து தமிழினம் எவ்வாறு தப்பிப் பிழைக்கப் போகின்றதோ?//ethayam
கொன்ஸ்ரைனும் அவரது 4 கூட்டாளிகளும் தமது பின்புலத்தை மற்றும் சிறிலங்கா அரசபயங்கரவாத சேவையை செய்துகொண்டும் அதை வெளிப்படையாக சொல்லும் நேர்மையை ஆவது கொண்டிருக்கிறார்கள். ஆனால் ராஜ்ம் அவர்களின் அதே இழிசெயலை செய்துகொண்டு தானொரு தமிழ்தேசீயவாதியாக நாடகமாடுகிறார். “நெஞ்சில் உரமுமின்றி நேர்மைதிறனுமின்றி வஞ்சனை செய்வராடீ கிளியே வெறும் வாய்ச்சொல்லில் வீரராடீ ”
சிறிலங்கா அரசபயங்கரவாத ஊடகச்சிப்பாய் வி.சிவலிங்கமும். கொன்ஸ்ரைனின் வாக்குமூலத்திற்கு சார்பாக வாக்குமூலம் அளித்துள்ளார். ஆக ராஜ் ஒரு விலாங்கு என்பது தெளிவாகிறது. அதைவிட கிட்டுவிற்கு கிரனைட் எறிந்த தீப்பொறி குழுவிலும் இருந்துள்ளார். இந்நிலையில் வன்முறை பற்றி ராஜ்ம் அவரது “சிஞ்ஞ்சக்” கூட்டமும் பேசுவது ரொம்ப வேடிக்கைதான் போங்கள்.
//இனி புலி அல்லது அரசாங்கம் என்ற இரன்டும் தான் இப்போதைக்கு இருக்க்கு. குட்டியின் கருத்து எடுபடாது. ஒன்றில் அரசை ஆதரி அல்லது புலியை ஆதரி
//குரு
இப்பமாத்திரம் ஏதோ வாழுதமோ? ராஜ் உண்மையில் ஒரு நேர்மையான தமிழ்தேசீயவாதியாக இருந்திருந்தால். தீபமும் கொன்ஸ்ரைனும் தனது தமிழ்தேசீய நன்மை சார்ந்த(?) புலிக்கொடி நிலைப்பாட்டை சிறிலங்கா அரசபயங்கரவாத ஆதரவாக காட்டி வஞ்சித்துவிட்டனர். ஏமாற்றப்பட்டுவிட்டேன் என மனம் நொந்து தமிழ்தேசீயத்திடம் மன்னிப்பு கோரியிருந்திருந்தால் அதில் அவரது நேர்மைதனக் வெளிப்பட்டிருக்கும். அதைவிடுத்து அடுத்தவரை கேணயனாக்கும் ராஜ் சொன்ன புத்திசாலிபதில்(?) ”இதில் இலங்கை சார்பு தன்மை கொண்டவரின் அருகாமையில் இருந்ததால் நான் இலங்கை சார்பானவன் என்ற பார்வை முட்டாள் தனமானது. “
எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்:
எவை தேசியம் சார் கருத்துக்கள் ?
எவை தேசியத்திற்கு எதிரான கருத்துக்கள் ?
யார் யார் தேசியம் சார் மாற்றுக் கருத்தாளர்கள் ?
யார் யார் தேசியம் எதிர் மாற்றுக் கருத்தாளர்கள் ?
தேசியம் சார் மாற்றுக் கருதுள்ளோரை எவ்வாறு அணுகப் போகிறோம் ?
இவர்கள் பிறக்கும் போதே தேசியம் சார் மாற்றுக் கருத்துடன் தான் பிறந்தார்களா?
தேசியம் எதிர் மாற்றுக் கருதுள்ளோரை எவ்வாறு அணுகப் போகிறோம் ?
இவர்கள் பிறக்கும் போதே தேசியம் எதிர் மாற்றுக் கருத்துடன் தான் பிறந்தார்களா?
இவர்களை இப்படி மாற்றியதில் எம் பங்கு என்ன?
இவர்களை இப்படி மாற்றியதால் வந்த, வரக்கூடிய தீமைகள், நன்மைகள் என்ன?
யார் யார் தேசியம் சார் கருத்துக்கள் பேசி தேசியத்திற்கு எதிராக செயல் படுவோர் ?
யார் யார் தேசியம் சார் கருத்துக்களை பேசி தெரிந்தோ தெரியாமலோ தேசியத்திற்கு எதிராக செயல் படுவோர் ?
வன்முறையை கண்டிக்க இருக்கவேண்டிய தகுதிகள் ,நிபந்தனைகள் எவை?
அனைவரும் தெரிந்தோ தெரியாமலோ வன்முறையை ஆதரித்ததினால் வன்முறையை கண்டிக்க தகுதியற்றவர்களா?
வன்முறையை ஆதரிக்க இருக்கவேண்டிய தகுதிகள்,நிபந்தனைகள் எவை?
அனைவரும் தெரிந்தோ தெரியாமலோ வன்முறையை ஆதரித்ததினால் வன்முறையை ஆதரித்தேயாக வேண்டுமா ?
:
தமிழர் மத்தியில் ஏற்கன்வே பல ஆண்டுகளாக இருந்த மனித
உருமைமீறல்கள் தமிழரை தம் சொந்த மொழியை விட்டு
மாற்று மொழி கற்கவும், சமயங்கள் மாறவும் ஏன் தனது பிற்ந்த இடத்தை விட்டு ஓடவும் வழிவகுத்தன. இதற்கும் சிங்களவர்களா
காரணம்? தமிழ் தேசியம் பற்ரி பேசுவோர் ஆண்டாண்டு காலமாக
மீளாத்துயில் கொண்டார்களா? சுயநலம் கொண்ட
தமிழ் அரசியல் வாதிகள் தங்கள் பதைவிகளை காக்க வாக்குக் கேட்டார்களேதவிர
தமிழர்களை தங்கள் பிறந்த இடங்களில் வாழத்ததடையாக இருந்தசமூக பொருளாதரப் பிரச்சினைகளை எள்ளளவும் அணுகவில்லை. புலம்பெயர்நாடுகளில்
சட்டத்திற்கமைய சம அந்தஸ்துடன் வாழ வழிவகுக்கும் போது இங்கிருந்து தமிழ்தேசியம்பற்ரி உரக்கக்கத்துவதில் எந்த் பிரயோசனமுமில்லை. தவளை கத்தி பாம்பிற்கு இரையாவது போல் தான் முடிவு வரும்.-துரை
நல்ல அவல், நல்ல சந்தோசமயிருக்குமே துரைக்கு?
புலிகள் இறுதிக்கட்ட யுத்தத்தில் என்ன செய்தார்கள் என்பதையும் ஆதாரங்கயோடு சர்வதேசம் சொல்லுகின்றது. அதை இங்கு பலர் வசதியாக மறந்து விட்டு புலிகள் புலிக் கொடி எல்லாம் புனிதத்தின் மறு பிம்பங்கள் என காதில் பூ வைக்கிறார்கள். இதிலும் விசயம் உண்டு. மக்களிடம் சுருட்டிய கோடிக்கணக்கான பணம் இங்கு புலி என உறுமுபவர்களின் பைகளில் நிறைந்துள்ளது. அதை அவ்வளவு சுலபமாக இழக்க விடுவார்களா? அதனாலேயே இந்த வன்முறைகளையும் கருத்துக்கள் திரிப்பதையும் மேற் கொண்டுள்ளார்கள். தமிழ் தேசியம் தமிழதேசியம் என்று பிச்சைக்காரர்களையும் விபச்சாரத்தையும் அகதி வாழ்வையும் அழிவுகளையும் இலங்கை அரசின் துணையோடு தந்ததை தவிர இந்த புலிஅடியாட்கள் சமூகத்திற்கு என்ன செய்தார்கள்.
அரசபயங்கரவாதம் தன்மீது சுமத்தப்பட்ட நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையிலான தமிழின அழிப்பு குற்றச்சாட்டுக்கு புலம்பெயர்ந்த விடுதலைப்புலிகளும் தமிழ் தேசீய உணர்வாளர்களுமே காரணம்” இதில் இருந்து என்ன பிடுங்கப் போகின்றீர்கள்?
“”மாற்றுக் கருத்தாளர் புலிக்கொடியை எதிப்பதிலிருந்து தேங்க முடியாது!”” I agree100%