மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், மதுரையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பொ.மோகன்(60) வெள்ளியன்று மாலை சென்னையில் காலமானார்.
அன்னாரது இறுதி நிகழ்ச்சி சனிக்கிழமை (31.10.2009) மாலை 5மணியளவில் மதுரை தத்தனேரி மயானத்தில் நடைபெறுகிறது.
இடதுசாரி கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட பொ.மோகன் இந்திய மாணவர் சங்கத்தில் தம்மை இணைத்து கொண்டு தனது அரசியல் பணியை துவக்கினார். 1973ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மேலப் பொன்னகரம் காஸ்ட்ரோ கிளையில் தனது அரசியல் பயணத்தை தொடர்ந்தார்.
சோசலிஸ்ட் வாலிபர் முன்னணியில் செயல்துடிப்பு மிக்க ஊழியராக செயல்பட்ட பொ. மோகன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மதுரை மாவட்டச் செயலாளராக நீண்ட காலம் பணியாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நகரச் செயலாளராகவும் பின்னர் மதுரை மாநகர் மாவட்டச் செய லாளராகவும் பணியாற்றியுள்ளார்.
பொ.மோகன், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும், மதுரை மாநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றினார்.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சியின் முழுநேர ஊழியராக பணியாற்றினார். மதுரை அரசு மருத்துவமனையில் வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்காக பிரம்மாண்டமான மறியல் போராட்டத்தை நடத்தி காவல்துறையின் கொடூர தடியடி தாக்குதலுக்கு உள்ளானார். மேலும் மக்களின் பல்வேறு அடிப்படைப் பிரச்சனைகளுக்கான போராட்டங்களில் பங்கேற்று 52 நாட்கள் சிறையில் அவர் இருந்துள்ளார். கடந்த 1999ம் ஆண்டு மதுரை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பொ. மோகன், 2004ம் ஆண்டும் தொடர்ந்து மதுரை மக்களின் நல்லாதரவுடன் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பூச்சிபட்டியைச் சேர்ந்த பொன்னுச்சாமி-மீனாட்சி ஆகியோரின் மகனான பொ.மோகன் பி.ஏ.பட்டதாரி யாவார். இவர் 30.12.1949ம் ஆண்டு பிறந்தார்.
இவரது மனைவி பூங்காவனம் மதுரை மாநகராட்சி பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு பகத்சிங், வைகைராஜ், நேதாஜி என்ற மூன்று மகன்களும், பாரதி, கங்கா ஆகிய இரண்டு மகள்களும் உள்ளனர்.
கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டிருந்த பொ.மோகனின் உடல்நிலை மோசமடைந்ததையொட்டி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் வெள்ளியன்று மாலை காலமானார். அவரது உடல் சென்னையிலிருந்து மதுரைக்கு கொண்டு வரப்படுகிறது.
பொ.மோகன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக காலை மதுரை மகபூப்பாளையம் சர்வோதயாசாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைக்கப்படுகிறது. அங்கிருந்து மாலை 5 மணிக்கு பொ.மோகன் உடல் ஊர்வலமாக தத்தனேரி மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படுகிறது. அங்கு இறுதி நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மிகச் சிறந்த மக்கள் ஊழியர் தோழர்.மோகன் மறைவிற்கு எமது ஆழ்ந்த இரங்களும், அனுதாபங்களும்,
தமிழ்பாலா- நானும் மோகனும் 78,79 களில் மார்க்சீய அனைத்து இயக்கங்களிலும்,சோசலிஸ்ட் வாலிபர் முன்னணி என்று அமைப்பு இருந்தபோது ’வேலை கொடு இல்லை நிவாரணம் கொடு என்று மறியல் செய்து மதுரை ம்த்திய சிறையினில் சுமார் ஒருமாத காலம் அரசியல் கைதியாக இருந்தபோது இருந்த அந்த அரசியல் போராட்டத்தின் மலரும் நினைவுகள் என்கண்ணில் ஒளியாகிறது,அவரது கம்பீரமான பேச்சு,சுறுசுறுப்பு ,திறமை, நேர்மை, எளிமை அர்சியல் தெளிவு,திட்டமிட்ட அரசியல் இலக்கு,மார்க்சீயத்தின் மீது மாறாத காதல் இவையெல்லாம் வரும் தலைமுறை கற்றுத் தேர்ந்து மார்க்சீயத்தை இந்திய மண்ணிற்கேற்றவாறு நிர்மாணிக்க கவனமாக அடியெடுத்து வெல்ல வேண்டிய போராட்ட காலமிது! அவர் விட்டுசெனற பணியை நாமெல்லாம் முன்னெடுத்துசெல்வோம்! இங்குலாப் ஜிந்தா பாத்!
MANITHAM MARAINTHUVITTATHU. P.MOHANIN IZPPU EDUKATTA MUDIYATHATHU. ENATHU AZNTHA ANJALIYUM KUDUMBATHARUKKU EN ANUTHABANGAL.UM..VAZKZ MOHANIN PUKAZ.
மிகவும் எளிமையான நேர்மையான ஒரு சமூகபோராளியை இந்த சமூகம் இழந்துவிட்டது. அரசியல் வாழ்க்கையில் ஒரு திறந்த புத்தகமாக வாழ்ந்து மறைந்த தோழர் பெ.மோகன் அவர்களுக்கு வீரவணக்கம்
I HEARD OF MR MOHAN FROM KUMUDAM REPOTER. HIS DESIRE ALWAYS PEOPLE AND PEOPLE. VERY SIMPLE MAN UNLIKE VARATHARAJAN OR VIJAIKANTH.HE LOST THE LAST ELECTION BUT WASNT LOST IN OUR HEART.KAMALHASAN IS ATHIEST BUT WE DONT YET TO KNOW WHAT KIND OF ATHIEST HE IS BUT WE KNOW MOHAN IS THE TRUE PERSON.SADLY NICE PEOPLE LIFE ALWAYS VERY SHORT.
இந்திய கம்யுனிஸ்ட் கட்சியில் பல நல்ல தோழர்கள் இருந்துள்ளனர்.இப்போதும் இருந்து வருகின்றனர்.ஆனால் அக் கட்சிதான் கம்யுனிச பாதையில் இருந்து விலகி விட்டது.இதனால் இந்த நல்ல தோழர்களின் அர்ப்பணிப்புகள் யாவும் வீணாகி வருகின்றன.பொதுவாக இந்திய கம்யுனிஸ்ட் கட்சி தலைவர்கள் யாவரும் எளிமையானவர்கள்தான்.இதனை முதலாளித்துவ ஆதரவாளரான “துக்ளக்” ஆசிரியர் சோ கூட ஒப்புக்கொண்டுள்ளார்.அந்த வகையில் தோழர் மோகன் அவர்களும் எளிமையாகவும் மக்கள் எளிதில் அணுகக்கூடியவராகவும் இருந்துள்ளார்.ஆனால் அவர் கம்யுனிச கட்சியில் தொடர்ந்து செயற்பட்டதன் மூலம் உண்மையான கம்யுனிசத்திற்கு நேர்மையாக இருந்துள்ளாரா என்று கேள்வி எழும்புவதை தவர்க்கமுடியாதவாறு உள்ளது.
கொடைக்கானல் வெடிகுண்டு வழக்கு தொடர்பாக 1991ம் ஆண்டு மதுரை மத்திய சிறையில் நான் அடைக்கப்பட்டிருந்த வேளை அங்கு பணிபுரிந்த ஒரு கம்யுனிஸ் கட்சி ஆதரவாளரான சிறைக்காவலர் உதவியுடன் தோழர் மோகன் அவர்களுடன் இலங்கைப் பிரச்சனை தொடர்பாக அவர்களின் கட்சி நிலைப்பாடு குறித்து விவாதம் செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.ராஜீவ்காந்தி கொலையை அடுத்து மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் சிறையில் வைக்கப்பட்டிருந்த போராளிகளுடன் தொடர்பு வைத்திருக்க பலரும் அஞ்சிய நேரத்தில் மோகன் அவர்கள் என்னுடன் தொடர்பு வைத்தது மட்டுமல்ல எனக்கு தனது ஆதரவையும் தெரிவித்தார் என்பதை இந் நேரத்தில் நன்றியுடன் கூறக் கடமைப்பட்டுள்ளேன்.அவர் என்னை நேரில் பார்த்து உரையாடுவதற்காக சிறைக்கு வந்தார்.ஆனால் சிறை நிர்வாகம் அனுமதியளிக்க வில்லை.எனினும் என்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நாளை அறிந்து அன்று அதிகாலையில் வந்திருந்து காத்திருந்து அந்த சொற்ப நேரத்தில் என்னை பார்வையிட்டு பேசமுடியவில்லை என்றாலும் கூட தூரத்தில் இருந்து தனது கைகளை ஆட்டி அதரவு தெரிவித்தார்.நான் சிறைவைக்கப்பட்டிருந்த அத்தனை காலமும் தனது கட்சி பத்திரிகைகள் சஞ்சிகைகள் எனக்கு இரகசியமாக கிடைக்க ஒழுங்கு செய்திருந்தார்.நான் நக்சலைட் இயக்கங்களுடன் தொடர்பு உள்ளவன் என்று தெரிந்திருந்தும் அதற்காக நான் சிறைவைக்கப்பட்டிருக்கிறேன் என்று அறிந்திருந்தும் நான் அவர்களின் கட்சியின் நிலைப்பாடு குறித்து விமர்சனங்களை முன்வைத்திருந்தபோதும் கியுபிராஞ் உளவுப்படையினரின் நெருக்கடிகளுக்கு அஞ்சாது என்னை பர்க்க வந்து தனது ஆதரவை நல்கிய இந்த தோழர் மோகன் அவர்களின் எளிமையும் அர்ப்பணிப்பும் உண்மையிலே மறக்கமுடியாதது மட்டுமல்ல நன்றியுடன் நினைவு கூரவேண்டியது.ஆனால் அவர் எனது விமர்சனங்கள் தொடர்பாக அப்போதைய தனது கட்சி தத்துவ பொறுப்பாளரும் இன்றைய தலைவருமான தோழர் காரட் அவர்களிடம் விளக்கம் பெற்று தருவதாக உறுதியளித்திருந்தார். துரதிருஸ்டவசமாக வேலூர் சிறப்பு முகாமுக்கு நான் மாற்றப்பட்டதால் தொடர்புகள் தொடரமுடியாமற்போய்விட்டது.இலங்கைப்பிரச்சனை தொடர்பாக அவருடைய கட்சியின் பதிலை பெறமுடியாமற் போய்விட்டது.இந்திய கம்யுனிஸ் கட்சியால் தோழர் மோகன் போன்றவர்களின் பங்களிப்புகள் வீணடிக்கப்படுகிறதா அல்லது தோழர் மோகன் போன்றவர்களால் ஏன் கட்சியின் நிலைப்பாட்டை மாற்ற முடியாமல் உள்ளது போன்ற வினாக்களுக்கு யாராவது இந்திய தோழர்கள் பதில் அளிப்பார்களா?
BALAN STILL YOU
not under STATE. Raja & kanimozai karuna . PLEASE UNDERSTAND TAMIL OR / A ND DO AS //HUMAN