வரலாற்றையும் நாம் சார்ந்த சமூகத்தையும் அணுகும் போது அவற்றைப் புரிந்து கொள்ள முனையும் போதும் பல்வேறு சிக்கல்களும் குழப்பங்களும் ஏற்படுகின்றன. ஈழ விடுத்லைப் போராட்டத்தையே உதாரணமாகக் கொண்டால் தவறுகள் ஆரம்பத்திலிருந்தே நிறுவன மயமாகியிருக்கிறது என்ற கருத்தை ஐயர் முன்வைக்கிறார். நீதிக்கும் அநீதிக்கும், உண்மைக்கும் பொய்மைக்கும், சரிக்கும் தவறுக்கும் இடையிலான போராட்டம் என்பது எல்லா சூழ்நிலைகளையும் போலவே ஈழப்போராட்டத்திலும் நடந்திருக்கிறது. இங்கெல்லாம் உண்மை வெற்றிபெற வேண்டும் என்பது தான் சமூகப்பற்றுள்ள ஒவ்வொரு மனிதனதும் விருப்பு.
தனிமனிதர்களும் அவர்களது சிந்தனைகளும் மட்டும் தான் வரலாற்றைத் தீர்மானிக்கும் ஒரே காரணி என்று ஒரு சாரார் கூறுகின்றனர். அது தவறானது தனிமனிதர்களின் சிந்தனையைத் தீர்மானிப்பது கூட சமூகம் என்கிறது இன்னொரு வாதம். இந்த இரண்டாவது முறை தான் விஞ்ஞான பூர்வமான ஆய்வு முறை என்று அழைக்கப்படுகிறது.
விஞ்ஞான பூர்வமான இந்த ஆய்வு முறை கார்ல் மார்க்சால் தொகுத்து முன்வைக்கப்பட்டது. இதனையே மார்க்சிய ஆய்வுமுறை என்று சமூக விஞ்ஞானம் பெயரிடுகிறது.
மார்க்சியப் பகுப்பாய்வு முறை இரண்டு பிரதான கூறுகளைக் கொண்டது. பொருள் முதல் வாதம், இயங்கியல் என்ற இந்தத் தத்துவங்கள் உருவான போது சமூகம் குறித்த புதிய பார்வை உதயமானது.
வரலாற்றை, சூழலை, பொருள் முதல்வாத அடிப்படையில் புரிந்து கொள்ளல் என்பது சமூகம் குறித்த பொருள்முதல் வாதப் பார்வை. அவ்வாறு புரிந்துகொள்ளப்பட்ட சமூகத்தின் இயக்கத்தை, அதன் மாற்றத்தைப் பகுத்தாராய்தல் இயங்கியல் எனப்படுகிறது. நம்மைச் சுற்றியுள்ள சமூகம்நாளை எவ்வாறு மாற்றங்களை உடையதாக அமையும் என்பதை எதிர்வு கூறும் முறைமையே இயங்கியல். இந்த இரண்டையும் ஒருங்கு சேர்த்த ஆய்வு முறைமையே மார்க்சியப் பகுப்பாய்வு எனப்படுகிறது.
பொருள் முதல்வாதம் என்பது பொருளை முதன்மையாகக் கொண்டு பகுத்தாராய்தலைக் குறிக்கிறது. பொருள் என்பது சமூகத்தைக் குறிக்கிறது. நாம் வாழும் சமூகம் உற்பத்தி சக்திகளாலும் அவற்றிற்கு இடையேயான உறவுகளாலும் இவை தீர்மானிக்கும் சிந்தனைகளாலும் உருவாக்கப்பட்டுள்ளது. உற்பத்தி சக்திகள் என்பது மனிதன் உட்பட ஏனைய உற்பத்திக் கருவிகளை எல்லாம் குறிப்பிடும் பொதுச் சொல். உற்பத்தியில் ஈடுபடும் மனிதக் கூட்டங்களுக்கு இடையேயான சிக்கலான உறவுகளை உற்பத்தி உறவுகள் என்பர்.
16ஆம்நூற்றாண்டில் ஐரோப்பாவில் காணப்பட்ட உற்பத்தி உறவுகள் இன்றில்லை. அப்போதெல்லாம் பாரிய நிலச் சொந்தக்காரர்கள் ஆதிக்கத்தில் இருந்தனர். அவர்களை நிலப் பிரபுக்கள் என்றார்கள். அவர்களின் ஆதிக்கத்தில் இருந்ததானால்நிலப் பிரபுத்துவ சமூகம் என்றனர்.
அப்போது மக்கள்நிலைத்தோடு பிணைந்து வாழ்ந்தனர். அதற்கேற்ப அவர்களின் சிந்தனையும் அமைந்திருந்தது. விதவைகள் மறுமணம் செய்ய முடியாது, பெண்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்குக் கூட சுதந்த்திரம் இல்லை.நிலப் பிரபுக்களும், அதிக அளவில்நிலத்தைச் சொந்தமாக வைத்திருந்த மன்னர்களும் கடவுள் போலப் போற்றப்பட்டனர்.
தனிமனிதர்களின் இயல்புகளும்நன்நடத்தையுமே சமூகத்தைத் தீர்மானிப்பதாகவும் கடவுளின் கட்டளைப் படியே அனைத்தும் நடப்பதாக எண்ணிக் கொண்டனர். குறுநில மன்னர்கள் கதாநாயகர்களாகவும் சக்கரவர்த்திகள் கடவுளின் அவதாரமாகவும் போற்றப்பட்டனர்.
பின்னர் மனிதர்களின் தேவை அதிகரிக்க உற்பத்தி சக்திகள் வளர்ச்சியடைந்தன. இயந்திரங்கள் உருவாகின.நிலத்தோடு பிணைந்திருந்த மனிதர்கள் வீட்டிலிருந்து வெளியே வந்த்து தொழிற்சாலைகளை நோக்கி நகர்ந்தனர். புதியவற்றைக் கற்றுக்கொண்டனர். மன்னர்கள் கடவுள்கள் அல்ல எனப் புரிந்து கொண்டனர். இப்போது மூலதனத்தைச் சொந்தமாக்கிக் கொண்டு முதலிடுபவர்களே சமூகத்தில் பெரிய மனிதர்கள் ஆகினர்.
இன்று வரக்கும் இந்த தொழில் வளர்ச்சி பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டு வளர வறியநாடுகளை ஒடுக்கு அங்கு உற்பத்தி சக்திகளை வளரவிடாமல் தடுத்தனர்.
உற்பத்தி சக்திகளையும் உற்பத்தி உறவுகளையும் ஆதாரமாக முன்வைத்து மேற்குறித்தவாறே சமூகம் விஞ்ஞான பூர்வமாக ஆராயப்படுகிறது. இதற்கு மாறாக இன்னொரு வகையிலும் பிற்போக்குவாதிகளும் முட்டாள்களும் ஆராய்வார்கள்.
ஒரு பகுதியினர் எல்லாம் கடவுள் விட்ட வழி என்று மிக இலகுவாகக் கூறித் தப்பித்துக் கொள்வார்கள். இது தொழில் வளர்ச்சியடைந்த நாடுகளில் இலகுவில் எடுபடாமல் போகவே வேறு வகைகளில் பிற்போக்கு வாதிகள் முன்வந்தனர்.
வெள்ளை நிற மக்கள் மேலானவர்கள். அவர்கள் புத்திசாலிகள். இப்படி பல்வேறுவழிகளில் தம்மைநிறுவ முற்பட்டனர். இப்போதுநாம் சொல்லிக் கொள்கிறோமே, தமிழர்கள் மேலானவர்கள், அவர்கள் ஆளப்பிறந்தவர்கள் என்றெல்லாம்.. ஆனால் இது வரைக்கும் பொருளை அதாவது மையமாக வைத்து ஆராயும் மார்க்சிய முறையை எந்த ஆய்வாளரும் தவறு என்று கூறியது கிடையாது.
தேவை ஏற்படும் போதெல்லாம் மார்கிசிய ஆய்வு தான் சரியானது என்று அதன் எதிரிகளே வாக்குமூலம் வழங்குவார்கள். கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் பிரஞ்சு அதிபர், அவரது புதிய மனைவி, பாப்பாண்டவர், பிரித்தானிய ஆர்க் பிஷப், அமரிக்கப் பொருளாதார வல்லுனர்கள் எல்லாம் மார்க்சிய வழிமுறை சரியானது என பொது வெளியில் கூறிவிட்டார்கள்.
இதனை இன்னமும் தவறு என்று சொல்கின்ற பிந்தங்கிய சமூகங்கள் பல உலகில் வாழ்கின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை. தமது சொந்த நலனுக்காக எமது சமூகத்திலும் விஞ்ஞான பூர்வமான முறைகளை நிராகரிப்போர் பலர் வாழ்கின்றனர்.பொருள்முதல்வாத ஆய்வின் வழியாகச் சமூகத்தைப் புரிந்து கொண்டாலே அது எவ்வாறு சிந்திக்கிறது செயற்படுகிறது என்பவற்றையும் புரிந்து கொள்ள முடியும்.
பொருள் முதல்வாத்தின் பிரதான கூறுகள்:
1. பொருள் என்பதே அடிப்படையானது கருத்து என்பது பொருளால் தீர்மானிக்கப்படுவதே என்று கூறுகிறது.
2. சமூக ஒழுக்கம், சட்டம், நீதி, வழமை போன்ற அனைத்துமே பொருளைப் பிரதிபலிப்பனவாகும்.
உதாரணமாக மன்னர் காலத்தில் நீதியானது எனக் கருதப்பட்ட பல விடயங்கள் இன்றைய சமூகப் பொதுப் புத்தியால் அநீதியானதாகக் கருதப்படுகிறது. அன்றைய பொருள் இப்போது மாற்றமடைந்து விட்டது.
3. சமூக வாழ்க்கை தீர்மானிக்கும் சிந்தனை முறை வளர்ச்சி பெறுகிறது. அதன் வளர்ச்சியின் ஒரு புள்ளியில் அது சமூகத்தின் மீது(பொருளின் மீது) ஆதிக்கம் செலுத்துகிறது. அது பொருளை மாற்றும் வலிமை பெறுகிறது. இவ்வாறு தாம் சமூகமாற்றம் நிகழ்கிறது.
உதாரணமாக பிரபாகரன் என்ற தனிமனிதனின் சிந்தனையைத் தீர்மானித்த சமூக வாழ்நிலை என்பது என்ன என்பதை அய்யரின் “ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்” என்ற ஆவணம் ஆராய முற்படுகிறது. இதுவரை பிரபாகரனைக் கடவுள் என்ற என்றும் புனிதமானவர் என்ற எல்லைவரை நகர்த்திய ஒரு சாராரும், கொலைகாரன் என்று என்று தூற்றிய மறுசாராற்கும் இடையே பிரபாகரனின் சிந்தனையத் தீர்மானித்தது எது என்ற பகுப்பாய்வை அய்யரின் கட்டுரையில் காணக்கூடியதாக உள்ளது.
ஒரு அரசின் இராணுவம் மக்கள் தொடர்பிலிருந்து தனிமைப்படுத்தி கொலைசெய்வதற்குத் தயாராக முகாம்களில் சிறைவைக்கப்பட்டிருக்கும். இதனூடாக அரசு மக்களுக்கு எதிரான வன்மமான சிந்தனையை இராணுவத்தின் மத்தியில் உருவாக்கும். இராணுவம் சார்ந்த சமூகம் என்பது பெரும்பாலும் முகாம்களாகவே அமைவதால் அது தீர்மானிக்கும் சிந்தனை மக்கள் சார்ந்ததாக அமைவதில்லை.
ஈழ விடுதலைப் போராட்டத்தில் பொதுவக மக்களிலிருந்து தனிமைப்பட்ட இயக்கங்களே பெரும்பாலும் உருவாகியிருந்தன. இருப்பினும் எல்லா விடுதலை அமைப்புக்களிலும் அரசியல் பிரிவு என்ற மக்களோடு தொடர்புடைய ஒரு பகுதியும் காணப்பட்டது. அரசியல் பிரிவுப் போராளிகளின் சிந்தனை முறை என்பது இராணுவப் பிரிவோடு ஒப்பிடும் போது மக்களுக்கு எதிரான தன்மை குறைவானதாகவே காணப்பட்டது.
அவர்கள் வாழும் சமூகச் சூழல் என்ற பொருள் தீர்மானித்த சிந்தனை முறை இராணுவப்பிரிவின் சிந்தனை முறையிலிருந்து வேறுபட்டதாக அமைந்திருந்தது இங்கு அனுபவரீதியாகக் காணப்படக் கூடிய பொருள்முதல் வாத உதாரணமாகும்.
மார்க்சியப் பகுப்பாய்வு முறையை பொதுத் தளத்தில் அறிமுகம் செய்வதற்கான முயற்சியின் முதல் பகுதி இது. இதனைச் செழுமைப்படுத்தும் பொறுப்பை மார்க்சியத்தைப் புரிந்து கொண்டவர்களிடமும், கேள்விக்குள்ளாக்கி கற்றலை ஆழப்படுத்தும் பொறுப்பை வாசகர்களிடமும் ஒப்படைக்கிறேன்.
Published on: May 30, 2010 @ 23:32
வளரும்…
நட்புடன் கோசலன் அவர்களுக்கு….த
ங்கள் முயற்சி வரவேற்க்கத்தக்கது….எனது மார்க்சிய அறிவு என்பதும் முதலாவது நுhனிப்புல் இரண்டாவது பழமையானது…ஆகவே மார்க்ஸிய ஆய்வு தொடர்பாக எனது கருத்தை முன்வைப்பதில் சிறிது தயக்கம் இருக்கின்றது…இத் தயக்கத்துடனைனே எனது கருத்தொன்றை முன்வைக்கின்றேன்….
நீங்கள் கூறிவது மார்க்ஸிய பார்வையில் சரியானது என்றே புரிந்துகொள்கின்றேன்…
ஆனால் எனது கேள்வி என்னவெனில்….சமூகங்களை மார்க்ஸிய பார்வையில் பகுப்பாய்வு செய்வர்களின் பிரக்ஞை நிலை பற்றியதே எனது அக்கறை…..ஏனனில் தாங்கள் அளிக்கும் விளக்கத்தின்படி சமூகத்தை மார்க்ஸிய ஆய்வாளர் புற நிலையில் இருந்தே பார்க்கின்றார்….விஞ்ஞான வழிமுறையான ஆய்வுக்கு புற நிலையாக நின்று விடயங்களை அவதானிப்பதே சரியானது…ஆனால் குறிப்பிட்ட ஆய்வாளரின் பிரக்ஞையின்மையின் அடிப்படையில் அவர் முன்வைக்கும் கருத்துக்கள் அல்லது பார்வை வித்தியாசமானதாக இருக்கும்….இரண்டாவது சமூகத்தை பெறும் பொருளாக மட்டும் பார்க்க முடியாது…ஏனனில் சமூகம் என்பது மனிதக் கூட்டம் ஒன்றுக்கு இடையில் நடைபெறும் உயிருள்ள உறவுச் செயற்பாடு…இநத மனிதா;களில் உளவியல் மற்றுமு; பிரக்ஞைநிலை இந்த உறவை பலவேறு வகைகயில் ஆதிக்கம் செய்கின்றது…என்பது கடந்த காலங்களில் புரிந்துகொள்ளப்படவில்லை என்றே நினைக்கின்றேன்….இது தொடா;பாக எனது கட்டுரையை வாசிக்க…”பிரக்ஞை – தனிமனிதர் – அமைப்புத்துறை – அரசியல்”….hவவி://றறற.யறயமநபெைெயறயசநநெளள.ழசப/….
நன்றி மீராபாரதி
//இவ்வாறு தனிமனிதர்களையும் அவர்களது சிந்தனையும் மட்டும் தான் வரலாற்றைத் தீர்மானிக்கும் ஒரே காரணி என்று ஒரு சாரார் கூறுகின்றனர். அது தவறானது தனிமனிதர்களின் சிந்தனையைத் தீர்மானிப்பது கூட சமூகம் என்கிறது இன்னொரு வாதம். இந்த இரண்டாவது முறை தான் விஞ்ஞான பூர்வமான ஆய்வு முறை என்று அழைக்கப்படுகிறது.//
இது முட்டையில் இருந்து கோழியா கோழியில் இருந்து முட்டையா என்பது போன்றதே. சமூகமே தனிமனிதனின் சிந்தனைக்கு வித்திடுகின்றது அதே நேரம் தனிமனிதன் சமூக நிர்மாணத்தில் ஒரு கூறாகின்றான். இயக்கங்களுக்குள் உந்துதலாய் இருந்து தனிமனித தூய்மைவாதம் சமூகத்தில் முதன்மைப்படுத்தப்பட்ட ஒன்று என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அது கற்பொழுக்கமாகட்டும் ஏனைய பழக்கவழக்கங்களாகட்டும். அதன் அடிப்படையிலேயே நன்நடத்தை சமூக அங்கீகாரம் உருவாகின்றது. என்னுமொரு தளத்தில் சாதிய ஏற்றதாழ்வுகள் இவ்வாறான நன்நடத்தை தனிமனித தூய்மைவாதத்தில் மேலதிக ஆதிக்கத்தை உண்டாக்குகின்றது. எமக்குள்ளான ஏற்றுக்கொள்ளமை மனப்பான்மை பிடிவாதக்குணம் என்பதும் சாதி மத பிரதேசவாரியாக வளர்க்கப்பட்ட ஒரு இயல்புநிலையாக இருக்கின்றது. ஒவ்வொரு தனிமனிதனது இந்தக் குணத்துக்கும் சமூகம் வித்திடுகின்றது. எமக்குள்ளான மோதல்கள் தொடக்கம் ஐக்கியப்படமுடியாத மனநிலை என தொடரும் ஏற்றுக்கொள்ளாமையின் அடிப்படை சாதி மத பிரதேசவாத வேறுபாடுகள் அடிப்படையில் தேற்றுவிக்கின்றது. நீண்டகாலமாக எமது சமூக உறவுகள் பொருளை மையப்படுத்தி பிணைந்தும் கருத்தில் வேறுபட்டும் நிற்கின்றது. அதாவது எத்தகைய சாதி மத பிரதேசவாத ஏற்றதாழ்வுகள் இருந்தபோதும் அதனடிப்படையில் ஒவ்வொரு தொழிலும் ஏற்றதாழ்வுள்ளதாக இருந்தபோதும் அதன் பெறுபேறுகள் அவசியமாகின்றது. சிகை அலங்காரம் செய்ய ஒருவன் வேண்டும் துப்பரவு செய்ய ஒருவன் வேண்டும் விவசாயம் செய்ய ஒருவன் கடற்தொழில் செய்ய ஒருவன் கள்ளுசீவ ஒருவன் என சமூகம் இணைகின்ற அதே நேரம் கருத்து ரீதியாக ஏற்க மறுக்கின்றது. மிக மோசமாக மறுக்கின்றது. அடிமை நிலையை பிரகடனப்படுத்துகின்றது. இங்கே ஏகாதிபத்தியம் சுரண்டல் பல அடுக்கு நிலைகளாக பரந்து கிடக்கின்றது. இவற்றை உடைத்துக்கொண்டு தேசியவாதம் வெற்றிபெற முடியாது என்பதே யதார்தமாக நாம் காண்கின்றோம்.
நண்பர்களுக்கு வணக்கம்………
என்னைப் பொருத்தவரை….மனிதர் உருவாக்கியதே இந்த சமூக அமைப்புமுறை அதனுள் ஆதிக்கம் செலுத்தும் ஆணாதிக்க அதிகார படிமுறைகள் மற்றும் சித்தாந்தங்கள்…..ஆனால் பிரச்சனை என்னவெனின்….இந்த சமூக அதிகார நிறுவனங்களும் அதை ஆதிக்கம் செய்யும் சித்தாந்தங்கள் கருத்தாக்கங்கள் என அனைத்தும் மனிதகளை மீள வழிநடாத்துகின்றன….மனிதரகள் அதன்வழி பின் தொடர்வதற்கு காரணம் தனிமனிதா;களது பிரக்ஞையின்மை….இத் தனிமனிதா;களின் கூட்டு பிரக்ஞையின்மைதான் மனிதர்களை மந்தைக் கூட்டங்களாக எதோ ஒரு தலைமையின் பின ;கேள்வி ஏதுவும் இன்றி பின்தொடர வைக்கின்றது….
அதாவது மனிதர் ->சமூகம் —>>>சித்ததாந்தம்—->>>>>மனிதர் என ஒரு சுற்றில் மீள மீள் சுற்றிவருகின்றது….இந்த இயக்கத்திலிருந்து இதிலிருந்து ஒவ்வொரு மனிதரும் வெளிவருவதற்கு அவரவரது பிரக்ஞை நிலை உயர் நிலைக்கு வளர்க்கப்படவேண்டும்….இல்லையெனில் முழுமையான சுதந்திரம் என்பதும் விடுதலை என்பதும் கனவே…..
இரண்டாவது பிரச்சனை மார்க்கிய பார்வையில் இநத இயக்கத்தைப் பார்ப்போர் இதிலிருந்த வெளிநிலையில் பார்த்தாலும் அதாவது தாக்கவியல் அடிப்படையில் பார்த்தாலும் அவர்களது பிரக்ஞையின்மையானது அவா;கள் தம்மையும் புற மனிதரையும் சமூகத்தையும் அதன் சித்தாந்தத்தையும் புரிந்துகொள்வதில் தாக்கத்தை செலுத்தும் இதற்கு மாறாக பிரக்ஞையான ஒரு மனிதர் பார்ப்பது மேற்குறிப்பிட்டவரிலிருந்து வேறுபடலாம்….ஆகவே ஒரு கூற்றை நாம் வாசிக்குமு; பொழுது ;அக் கூற்றை கூறியவரின் பிரக்ஞைநிலை தொடா;பாகவுமு கவனம செலுத்தவேண்டியவர்களாக உள்ளோம்…
நன்றி மீராபாரதி
நட்புடன் மீராபாரதி,
உங்கள் கட்டுரையக் கவனமாகப் படித்த பின்னர் இந்த உரையாடலை மீண்டும் ஆரம்பிக்கிறேன். சமூகம் அது சார்ந்த வாழ்நிலை ஆகியன தான் மனிதனின் உணர்வுகளைத் தீர்மானிக்கின்றன. 100 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மனிதனின் சிந்தனை இன்றில்லை. அவ்வாறு மாற்றமடையும் மனிதனின் சிந்தனை சமூகத்தின் மாற்றத்தில் செல்வாக்குச் செலுத்துகிறது. இவ்வாறு பிரக்ஞைபூர்வமான உணர்வு சமூகத்தின் யதார்த்த சூழலால் தீர்மானிக்கப்படுகிறது என்பது ஒரு புறமும் உணர்வு சமூகத்தின் மீது செல்வாக்குச் செலுத்துகிறது என்பது மறுபுறமுமாக இவை இரண்டுக்கும் இடையிலான ஒரு இயங்கியல் தொடர்பு ஏற்படுகிறது. இங்கு இறுதியில் தீர்மானிக்கும் சக்தியாக புறச் சூழலே காணப்படுகிறது. சமூகப்புறச் சூழல் மற்றும் பிரக்ஞை ஆகியவற்றுக்கு இடையேயான முரண்பாடு ஏற்படுத்தும் வளர்ச்சி சமூகத்தை மாற்றும் மனிதர்களைக் கூடத் தோற்றுவிக்கிறது.
இவ்வாறான மனம், பிரக்ஞை ஆகியவற்றிற்கும் பொருளுக்கும் இடையேயான இயங்கியல் குறித்து இயங்கியல் பற்றிப் பேசும் வேளையில் இன்னும் ஆழமாக ஆராயலாமே. கணிதக் குழுமங்கள் போன்ர இயற்கை விஞ்ஞான நிறுவல்களை இதற்கு உதாரணமாகக் கூறுபவர்கள் உண்டு. – கோசலன்
இரண்டாவது விடயம் எந்தவொரு அடக்குமுறைக்கு எதிரான போராட்டமும் தோற்றகப்போவதில்லை…வேண்டுமானால் கால அளவு வேறுபடலாம்…..ஒரு போராட்டம் தோற்பதற்கு காரணம் அடக்குமுறையாளர்களின் பலம் மட்டுமல்ல அடக்கப்டுகின்றவர்களின் பலம் ஒற்றுமை நடைபெறும் நிகழ்வுகளை விரிவாக புர்ந்துகொள்ளும் தன்மை என பன்முகத் தளங்களின் பன்முகத்தன்மை கொண்ட பார்வையைக் கொண்டிருந்தால் மட்டுமே வெற்றி சாத்தியமானது….பிரக்ஞையுடன் முன்னெடுக்கும் பொழுது இந்த வெற்றியானது படைப்பாற்றல் கொண்ட ஆரோக்கியமான ;வெற்றியாக இருக்கும்…..இதற்கு சமூக மாற்றத்தில் அக்கறையுள்ள ஒவ்வொரு தனிமனிதரும் திறந்த மனதுடன் முழுமையான ஈடுபாட்டுடன் உழைக்கவேண்டியவர்களாக இருக்கின்றார்கள்…
ஆனால் அவ்வறான ஒரு தன்மையை மாற்று ஒன்றை தேடிப் பயணிக்கின்ற “இனியொரு” நண்பர்களிடமும் இவரகள் போனற ஒரோ நோக்கத்துடன் செயற்படுகினற் பிற ;நண்பர்களிடம் கூட காண முடியாத போது மற்ற மனிதர்களிடம் எப்படி ;எதிர்பார்ப்பது….
மேலும் இந்தக கட்டுரைக் கான பின்னுட்டத்தைப் பாருங்கள் ஆக ;இரண்டு பேர் மட்டுமே ;பின்னுட்டம் இட்டுள்ளோம்….இதில் பல அக்கறையுள்ளவர்கள் பின்னுட்டம் இடுவதில்லை என்பது வேறுவிடயம் ….ஆனால் இதேநேரம் இக் கட்டுரை ஒரு புலி எதிர்ப்புக் கட்டுரையாகவே அல்லது புலுp சார்புக் கட்டுரையாகவோ அல்லது சாமியார் ஒருவரின் காம களியாட்டம் தொடர்பாகவோ இருந்தால் பின்னுடடங்கள் ஆகக் குறைந்தது 20தையாவது தாண்டியிருக்கும்……இவ்வாறன பின்னுட்டங்கள் பொதுவாக கூட்டு பிரக்ஞையற்று ஒரு எதிர்வினை செயற்பாடாக எழுதப்படுபவை மட்டுமே..இப்படித்தான் இவர்களது செயற்பாடுகள் ஒவ்வொன்றுமு; இருக்கின்றன…இதற்கு மேலு; இந்த தனிமனிதா;களிடம் எதுவும் எதிர்பார்க்க முடியாது..என்பது தான் நிலைமை….ஆகவே சமூகத்தை மாற்றுவதற்கு முதல் அல்லது மாற்றுவதற்காக செயற்படும் அதேவேளை ஒவ்வொருவரும் தம்மை மாற்றுவதிலும் தம் பிரக்ஞையை வளா;ப்பதிலும் அக்கறை கொண்டால் மட்டுமே நாம் உறுதியாகவுமு; சாpயான வழியிலும் பயணிக்கமுடியுமு;….நன்றி… மீராபாரதி ….
நட்புடன் கோசலன் அவர்களுக்கு…..
தங்கள் பதிலுக்கு நன்றிகள்….அதேவேளை தங்கள் பதிலிலும் சில கேள்விகள் எழுகின்றன…ஏனனலில் சிலவற்றுடன் உடன்படமுடியவில்லை……
முதலாவது…..
“சமூகம் அது சார்ந்த வாழ்நிலை ஆகியன தான் மனிதனின் உணர்வுகளைத் தீர்மானிக்கின்றன.” என நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள்…உடன்படுகின்றேன்….ஆனால் பிரச்சனை என்னவெனில்…ஒரு மனிதாpல் ஏற்படும் உணர்வுகளுக்கான காரணங்கள் அம் மனிதரின் புற உலகில் மட்டும் இல்லையே….மாறாக அக் குறிப்பிட்ட மனிதரின் கடந்தகால அக அல்லது சுய அடக்குமுறையினாலும் இந்த உணர்வுகள் எழுதவற்கு வாய்ப்புகள் இருக்கின்றன….இந்த உணர்வுகளில் எந்த உணர்வு தொடர்பாக குறிப்பிட்ட மனிதார் பிரக்ஞையாக இருப்பார் என்பது நாம ;கவனிக்கவேண்டிய ஒரு முக்கியமான விடயம்…சமூகத்தில் எந்தவிடயம் மேலாதிக்கம் செலுத்துகின்றதோ அந்த உணர்வு சார்ந்த இம். மனிதாரும் பயணிப்பார்….அதாவது கூட்டுணர்வின் பின்னால் பிரக்ஞையற்று பயணிப்பார்…..இதனால் தான் மனிதா;கள் தனியாக இருக்குமு; பொழுது குறிப்பிட்ட பழக்கவழக்கங்களையுமு; குழுவாக இருக்கும் பொழுது மே;ற்குறிப்பிட்டதற்கு மாறான ஒரு பழக்கவழக்கத்தையுமம் பிரக்ஞையற்றுமேற்கொள்வார் ….உதாராணமாக குழு மோதல்கள்…..மேலும் ஒரு மனிதர் புற சுழநிலையால் பெற்ற உணா;வின் அடிப்படையில் முன்னெடுக்குமு; செயற்பாடுகளை அவரது அக உணர்வுகள் பாதிக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. கஉதராணமாக பிரபாகரனிடாம காணப்பட்ட தன்னிலை ;சாhந்த தாழ்வு அல்லது உயர்வுச் சிக்கல்…ஆகவே ஒரு மனிதாpன் உணா;வுகளை அக மற்றுமு; புற ;மூழல்கள் தீர்மானிப்தற்கு வாய்ப்புகள் இருக்கின்றன…இநத உணா;வுகள் தொடா;பாக ஒருவா; பிரக்ஞையற்று இருப்பாராயின் அவரது செயற்பாடுகள் பிரக்ஞையற்றது மட்டுமல்ல ஆரோக்கியமற்ற படைப்பாற்றல் இல்லாத வெறும் எதிர்வனை ;செயற்பாடாக மட்டுமே அமைவதற்கு சாதியங்கள் உண்டு…புலிகளின் போராட்ட வழிமுறை இதற்கு நல்ல உதாரணம ;என உணர்கின்றேன்…
இரண்டவாது விடயம்…..”100 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மனிதனின் சிந்தனை இன்றில்லை. அவ்வாறு மாற்றமடையும் மனிதனின் சிந்தனை சமூகத்தின் மாற்றத்தில் செல்வாக்குச் செலுத்துகிறது.” தொர்பானது….நீங்கள் கூறுவது பாதியளவே உண்மையானது என நினைக்கின்றேன்….ஆம் 100 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதரின் சிந்தனை இன்றில்லை ஆனால் அன்று வாழ்ந்த மனிதாpன் மீது; இருந்த சமூக சித்தாந்தத்தின் ஆதிக்கம் இன்றுவரை தொடர வாய்ப்பிருக்கின்றது…உதாரணமாக தங்களது பின்னுட்டத்திலும் பரமாவின் பின்னுட்டததையும் ஒரு தரம் கவனியுங்கள் ….நமது எழுத்ததுக்களில் எவ்வளவு இலகுவாக ஆணாதிக்க சிந்தனையின் சொற்றகள் நம் பிரக்ஞையின்மையினால் ஆதிக்கம் செலுத்துகின்றன என..(உதாரணமாக மனிதன் என பாவிப்பது)….ஆனால் நீங்கள் கூறுவீர்கள் பிரக்ஞையுடன் தான் இநத பின்னுட்டத்தை எழுதினேன் என….இது ஒரு உதாரணம் மட்டுமே இப்படி பல விடயங்கள் அதாவது 100 ஆண்டுகள் அல்ல 1000 ஆண்டுகள் கடந்த விடயங்கள் கூட இப்பொழுது நம்மை; ஆதிக்கம் செய்யலாம்….இதை; உளவியல் அடிப்படையில் கூட்டு பிரக்ஞையின்மை எனக் கூறுவர்..உதாரணமாக ;எல்லாளன் சங்கிலியன் தொடர்பக தமிழ் பேசும் மனிதா;களிடம் இருக்கின்ற ஆதிக்கம் செலுத்துகின்ற கருத்தாதிக்கங்கள்..மற்றும் பிரபாரனை எந்தக் கேள்வியுமின்றி ஏற்று அவரை சூpயக ;கடவுளாக காணும் நிலைகள் என்பன…இன்னுமோரு உதராணம் சோவியத் மனிதா;கள் மிக ;இலகுவாக மீணடும் இயேசுவிடம் அடைக்கலம் புகுந்ததந்கு காணரம் நடைமுறை சமூக மூழல ; மடடுமல்ல….பல்லாண்டுகால சித்தாந்தங்கிள் ஆதிக்கம் அவா;களது கூட்டு பிரக்ஞையின்மையில் இருந்தது தான் என உறுதியாக கூறலாம்…ஆகவே இந்த ஆதிக்கம் தொடர்பாக நாம் பிரக்ஞையா இருந்தால் மட்டுமே நீங்கள் கூறும் இரண்டாவது ;விடயமான மாற்றமடையுமு; மனிதரின் சிந்தனை சமூகத்தில் ஆதிக்கம் செலுத்த முடியும்….அதாவது கூட்டு பிரக்ஞையின் மூலம் சாதியமாக்கலாம்…இதற்கு அடிப்யைடாக அமைவது தனிமனித பிரக்ஞையின் முக்கியத்துவம் …நன்றி மீராபாரதி
மீராபாரதி,
பொதுவான சமூகம் சார்ந்த ஒரு விடயத்தைத் தவிர குறிப்பான சில சூழ்நிலைகளும் கூட மனித சிந்தனையைத் தீர்மானிப்பதாக அமைவதாக நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். அதுகூட சமூகம் சார்ந்த்தாகத் தான் அமைகிறது என்பது எனது கருத்து. நீங்கள் குறிப்பிடும் பிரபாகரனின் தாழ்வுச் சிக்கல் குறித்த விடயத்தையே மறுபடி நோக்குங்கள். ஐரோப்பா போன்ற முன்னேறிய ஒடுக்கப்பட்ட சூழலில் பிரபாகரன் போன்ற தனிநபர்கள் உருவாகியிருக்க வாய்ப்பில்லை.
எனக்குத் தெரிந்த ஒரு சிறிய சூழ்நிலையைக் கூறுகிறேன். ஐரோப்பிய நாடுகளில் சில இஸ்லாமியப் பெண்கள் புறச் சூழலின் தாக்கமின்றி வீடுகளில் பூட்டிவைத்து வளர்க்கப்படுகிறார்கள். அவர்கள் சமூகத்தை பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தமது எதிர்னிலையிலேயே நிறுத்துகின்றனர். அவர்களின் சிந்தனைக்கும் சமூகத்திற்கும் இடையிலான முரண்பாடு பகை முரண்பாடாகவே காணப்படும். அங்கு வளர்ச்சி இல்லை. தாழ்வுச் சிக்கல்களைக் கொண்ட வேறுபட்ட மனிதர்களாகவே அவர்கள் வளர்ச்சியடைகிறார்கள்.
இவ்வாறான ஒரு சூழ்னிலைக் கைதி போலவே பிரபாகரனும் வளர்ந்திருக்கிறார். 17 வயதிலிருந்து உற்பத்தியோடு அது நிர்ணயம் செய்யும் சமூகத்தோடோ அவர் தொடர்புடையவராக இருந்ததில்லை. அவருக்கும் சமூகத்திற்கும் இடையேயான இயங்கியல் தொடர்பு சூன்யமாகவே இருந்தது. அதற்கான ஆரம்பமும் இறுதியும் எங்கும் காணப்படவில்லை. ஆக, குறிப்பான சூழ்நிலைகளும் கூட பொருள் சார்ந்த ஆய்வு முறையினூடாக முடிவிற்கு வரமுடியும்.
தவிர, மேற்கு நாடுகளில் சமூகம் குறித்துப் பேசுகின்ற பெரும்பாலானோர் தாம்சார்ந்த ஐரோப்பிய உற்பத்தியின் முரண்பாடுகளோடு தொடர்பற்றதாக மாற்றியமைக்காட்டிருக்கும் ஏகாதிபத்தியச் சூழலில் வாழ்கிறார்கள். அவர்கள் சமூகத்தோடு கலந்து விடுவதில்லை(assimilate) . ஆக, ஒரு விசித்திரமான மனோநிலை கொண்ட உதிரி லுமன்களாகவே வாழ்கிறார்கள். பல சந்தர்பங்களில் இவர்கள் ஆபத்தானவர்கள்.
மீராபாரதி,
பொதுவான சமூகம் சார்ந்த ஒரு விடயத்தைத் தவிர குறிப்பான சில சூழ்நிலைகளும் கூட மனித சிந்தனையைத் தீர்மானிப்பதாக அமைவதாக நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். அதுகூட சமூகம் சார்ந்த்தாகத் தான் அமைகிறது என்பது எனது கருத்து. நீங்கள் குறிப்பிடும் பிரபாகரனின் தாழ்வுச் சிக்கல் குறித்த விடயத்தையே மறுபடி நோக்குங்கள். ஐரோப்பா போன்ற முன்னேறிய ஒடுக்கப்பட்ட சூழலில் பிரபாகரன் போன்ற தனிநபர்கள் உருவாகியிருக்க வாய்ப்பில்லை.
எனக்குத் தெரிந்த ஒரு சிறிய சூழ்நிலையைக் கூறுகிறேன். ஐரோப்பிய நாடுகளில் சில இஸ்லாமியப் பெண்கள் புறச் சூழலின் தாக்கமின்றி வீடுகளில் பூட்டிவைத்து வளர்க்கப்படுகிறார்கள். அவர்கள் சமூகத்தை பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தமது எதிர்னிலையிலேயே நிறுத்துகின்றனர். அவர்களின் சிந்தனைக்கும் சமூகத்திற்கும் இடையிலான முரண்பாடு பகை முரண்பாடாகவே காணப்படும். அங்கு வளர்ச்சி இல்லை. தாழ்வுச் சிக்கல்களைக் கொண்ட வேறுபட்ட மனிதர்களாகவே அவர்கள் வளர்ச்சியடைகிறார்கள்.
இவ்வாறான ஒரு சூழ்னிலைக் கைதி போலவே பிரபாகரனும் வளர்ந்திருக்கிறார். 17 வயதிலிருந்து உற்பத்தியோடு அது நிர்ணயம் செய்யும் சமூகத்தோடோ அவர் தொடர்புடையவராக இருந்ததில்லை. அவருக்கும் சமூகத்திற்கும் இடையேயான இயங்கியல் தொடர்பு சூன்யமாகவே இருந்தது. அதற்கான ஆரம்பமும் இறுதியும் எங்கும் காணப்படவில்லை. ஆக, குறிப்பான சூழ்நிலைகளும் கூட பொருள் சார்ந்த ஆய்வு முறையினூடாக முடிவிற்கு வரமுடியும்.
தவிர, மேற்கு நாடுகளில் சமூகம் குறித்துப் பேசுகின்ற பெரும்பாலானோர் தாம்சார்ந்த ஐரோப்பிய உற்பத்தியின் முரண்பாடுகளோடு தொடர்பற்றதாக மாற்றியமைக்காட்டிருக்கும் ஏகாதிபத்தியச் சூழலில் வாழ்கிறார்கள். அவர்கள் சமூகத்தோடு கலந்து விடுவதில்லை() . ஆக, ஒரு விசித்திரமான மனோநிலை கொண்ட உதிரி லுமன்களாகவே வாழ்கிறார்கள். பல சந்தர்பங்களில் இவர்கள் ஆபத்தானவர்கள்.
மார்க்சியம், அதுகுறித்த கருத்தாடல்கள் ஆய்வுகள் என்பன எல்லாம் இவர்களைப் பாதிப்பதில்லை. அன்டர்சன் கூறுகின்ற தொலை தூர தேசியவாதம் என்பது இதன் ஒரு வெளிபாடு தான்.
சீரியசான கட்டுரைகளிற்குப் பின்னூட்டங்கள் அருகியிருப்பதன் காரணங்களில் இதுவும் ஒன்று. தவிர, பின் – உலகமயமாதல் சூழலின் சமூகப் புறநிலை யதார்த்தம் குறித்தும் ஆராயபடவேண்டும்.
மார்க்சியம், அதுகுறித்த கருத்தாடல்கள் ஆய்வுகள் என்பன எல்லாம் இவர்களைப் பாதிப்பதில்லை. அன்டர்சன் கூறுகின்ற தொலை தூர தேசியவாதம் என்பது இதன் ஒரு வெளிபாடு தான்.
மூன்றாவது விடயம்….
“சமூகப்புறச் சூழல் மற்றும் பிரக்ஞை ஆகியவற்றுக்கு இடையேயான முரண்பாடு ஏற்படுத்தும் வளர்ச்சி சமூகத்தை மாற்றும் மனிதர்களைக் கூடத் தோற்றுவிக்கிறது. ”
….உண்மையிலையே நான் ஒரு சிக்கலை உணர்கின்றேன்….எனது புரிதல்களில் தவறு இருக்கின்றதா…அல்லது பிறர் தவறாகப் புரிந்திருக்கின்றார்களா என்று புரியவில்லை…..எனது கட்டுரையென்றில்….”பிரக்ஞை-கோட்பாடு-செயற்பாடு-ஏதிர்கால அரசியல்” (பார்க்க – அரசியல் என்ற பிரிவில்….hவவி://றறற.யறயமநபெைெயறயசநநெளள.ழசப/) ….பிரக்ஞை என்பது என்ன?
இந்தக் கேள்விக்கு வீயூகம் சஞ்சிகையானது பின்வருமாறு எழுதுகின்றது. “பிரக்ஞை என்பது முதலில் தான் யார்இ எப்படிப்பட்ட நிலைமைகளின் கீழ் செயற்படுகிறார்இ என்ன விதமான நடவடிக்கைகளைஇ என்ன நோக்கத்திற்காக மேற்கொள்கிறார் என்பது பற்றிய தெளிவான சிந்தனையைக் கொண்டிருப்பதாகும்.” எனவும் அரசியலில் சமூகமாற்றத்திற்காக எவ்வாறு சமூகத்தை தர்க்கடிப்படையில் பகுப்பாய்வு செய்து “அரசியல் திட்டம் மற்றும் மூலோபாயம் தந்திரோபாயம்இ ஊழியர் கொள்கை” என்பவற்றை வரைவதே “உயர்ந்தபட்ச பிரக்ஞையின் வெளிப்பாடு” என குறிப்பிட்டுள்ளனர் (பக். 85).
இதற்கு எனது பதிலை முன்வைத்திருந்தேன்….ஆனால் ஏனோ தொpயவில்லை வீயுகம் சஞ:சிகையிடம் இருந்தோ அல்லது நந்தன் அல்லது ஜான் மாஸ்டரிடமிருந்தோ எனது கருத்துக்களுக்கு பதில் கருத்துக்களை இதுவரை நான் பெறவில்லை.. காணரம் நானறியேன். ..பிரக்ஞை என்றால் ;என்ன என்பதற்கு எனது பதிலாக…”எனது புரிதலிலும் பார்வையில் பிரக்ஞை என்பது தன்னையும் தனது சிந்தனையையும் மற்றும் சுற்றுசுழலையும்இ எந்தவிதமான சமூக சிந்தனைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் அப்பாற்பட்டுஇ முழுமையாக புரிந்துகொள்வதற்கு ஒரு அடிப்படையாக நம் உடலிலும் ஊளவியலிலும் இணைந்து ஏற்படும் ஒரு மாற்றம் அல்லது வளர்ச்சி என்று கூறலாம்.” என எழுதியிருந்தேன்….உங்களுடனான பிரக்ஞை தொடர்பான எனது முரண்பாடு என்னவெனில்…நீங்கள் கூறுவது போல் சமூக் புறசுழலுக்கும் பிரக்ஞைக்கும் இடையில் முரண்பாடு என்பதே தங்களுடனான எனது முரண்பாடு….என்னைப் பொருத்தவரை நாம ;பிரக்ஞையாக இருக்கும் பொழுது..சமூகப் புறச் சுழலில் நடப்பதை ஆழமாகப் புர்pந்துகொள்ளலாம்…நமது சிந்தனை சமூகப் புறச் சுழலால் பாதிக்கப்படலாம்..ஆனால் பிரக்ஞை பாதிக்கப்படாது…மறாக பாதிக்கப்பட்ட சிந்தனை தொடர்பாக பிரக்ஞையாக இருக்கலாம்….ஆகவே புறச் சுழலுக்கும் பிரக்ஞைக்கும் இடையில் முரண்பாடு ஏற்படாது…மாறாக சமூகப் புறச் சுழலிலும் நமது சிந்தனையுPலும் ஏற்படும் முரண்பாடு தொடர்பாக நமது பிரக்ஞை அல்லது பிரக்ஞையின்மை நிலையைப் பொருத்து அந்த முரண்பாடுதொடர்பான நமது பொரறுப்பான பதில் அல்லது எதிர்வினை இருக்கும்…நாம் பிரக்ஞையாக இருக்கும் பொழுது அம் முரண்பாட்டின் பன்முகத்தன்மையையுமு; அனத் மூலத்தையுமு; ஆழத்தையுமு; உணா;ந்து புர்pந்து கொள்ள முடியும ;என நம்புகின்றேன்….அவ்வாறு நாம பிரக்ஙையாக இருக்கும் பொழுது மட்டுமே நாது நோக்கத்திற்காக தொpவு செய்து முன்வைக்கும் நமது சொற்கள் ஏற்கனவே நம்மை ஆதிக்கம் செய்யும் சமூக ஆதிக்க சொற்களாக கருத்துக்களாக இருப்பதற்கு வாய்ப்பிருக்காது…அல்லது எதிர்விளைக் கருத்துக்களாகவும் இருக்காது..மாறாக நடைமுறைச் சுழலுக்கு ஏற்ற வகையில் புதிய சொற்கள் சிந்தனைகள் பிறப்பெடுக்கும்….இவ்வாறான சிந்தனைகளே கடந்த காலத்திலிருந்து தம்மை முறித்துக்கொண்டனவாக புரட்சிகரமான வையாக இருக்குமம் அல்லது மீண்டும் மீண்டும் மரபு மார்க்சிய வாதிகள் பயன்படுத்துவது போன்று மார்க்ஸினதும் லெனினனதும் மாவோவினதும் சொற்பதங்களையே மீண்டும் மீண்டும் பயன்படுத்துவோம்…இது பிரபாகரன் போன்றறோர் மீண்டும் மீண்டுமு; பயன்படுத்திய அவா;களது சமூக அதிக்கத்திற்கு உட்பட்ட கருத்துக்களைப் போன்றதாக வே இருக்கும்…இதனால் தான் நான் பிரக்ஞை என்பதை மிகவுமு; உறுதியாக மீணடமு: மீண்மு; வலியுறுத்ததுகின்றேன்..நாம் நம்மை பிரக்ஞைரீதியாக வளா;த்துக்கொள்ளவில்லயாயின் பழைய மாவையே மிண்டும் மிண்டும் நாமுமு; அரைக்கவேண்டி யிருக்கும் இப்படி ;அரைத்த மாவையே மீண்டுமு; அரைக்கின்றோம் என்பதை நமக்குப் பூpயவைப்பதே நமது பிரக்ஞைதான்….நன்றி ;மீராபாரதி……
மார்க்சியம் ஏன் மக்களிடம் சென்றடயவில்லை என்று நீங்கள் சிந்தித்ததுண்டா. ஐயா எளிய மொழியில் எழுதாதவரை எந்த சிந்தாந்தமும் எளிய மக்களைச் சென்றடையாது. புரியாத மொழிக்கு எப்படி பதில் சொல்வது.
எதுவுமே, புரியும் தேவையும் புரியும் ஆர்வமும் இருக்கும் போது தானாகவே புரியும்.
இந்தியப் பழங்குடிகள் புரிந்து கொள்ளத் தொடங்கி விட்டார்கள்.
நேபாள மக்கள் புரிந்துகொண்டுள்ளார்கள்.
புரிந்து கொண்ட இடமெல்லாம் பயனுற ஏதோ நடந்துள்ளது.
மேலை நாடுகளின் முதலாளிகளல் உலகை இன்னும் பல காலம் அடக்கி வைக்க இயலாது. அவர்களின் பின்னால் போகிறவர்களும் அதற்கு முதலே கைவிடபடுவார்கள்.
நட்புடன் கோசலன் அவர்களுக்கு….
.”ஒரு சூழ்னிலைக் கைதி போலவே பிரபாகரனும் வளர்ந்திருக்கிறார். 17 வயதிலிருந்து உற்பத்தியோடு அது நிர்ணயம் செய்யும் சமூகத்தோடோ அவர் தொடர்புடையவராக இருந்ததில்லை. அவருக்கும் சமூகத்திற்கும் இடையேயான இயங்கியல் தொடர்பு சூன்யமாகவே இருந்தது. அதற்கான ஆரம்பமும் இறுதியும் எங்கும் காணப்படவில்லை. ஆகஇ குறிப்பான சூழ்நிலைகளும் கூட பொருள் சார்ந்த ஆய்வு முறையினூடாக முடிவிற்கு வரமுடியும்.
”
….இவ்வாறான தங்களின் வாதம் மார்க்ஸிய குறுகியவாதம் என நீங்கள் உணரவில்லையா? நீங்கள கூறுவதுபோல் அனைத்துக்குமான காரணங்களை பொருள் சார்ந்த் ஆய்வினுடாக கண்டறிய முடியுமா?
அப்படியெனின். நீங்கள் கூறுவதுபோhல் ” உற்பத்தியோடு அது நிர்ணயம் செய்யும் சமூகத்தோடோ அவர் தொடர்புடைய” தலைவர்கள் சரியான புரிதலுடன் போராட்டத்திற்கான பாதையை வகுத்து சமூக மாற்றத்தை நிகழ்த்தமுடியுமா?
அப்படி முடியுமென நீங்கள் கருதினால் ஸ்டாலின் மாவோ பொல்பொட் என்பவர்கள் தவறிழைத்ததற்கு அல்லது அவர்களது பாதை தவறியதற்கு காணரம் என்ன? …..
நான் நினைக்கின்றேன் ஒன்று எனக்கு விளக்கமில்லாலிருக்க வேண்டும்…..அல்லது நான் புரிந்ததை என்னால் விளங்கப்படுத்த முடியாது இருக்கவேண்டும்…அல்லது நான் கூற முற்படுவதை மற்றவர்கள் ;விளங்க முடியாமலிருக்க வேண்டும். இது எது சாpயானது என்பது உ;ணமையாகவே நானறியேன்….இருந்தாலும் விவாதத்தை தொடருவோம்….உரையாடல் நம்மை ;தெளிவுறச் செய்யுமு; என்றே நம்புகின்றேன்…..இறுதியாக மீளவும் ஒன்றை முடிந்தளவு தெளிவுறக் கூறி நிறுத்துகின்றேன்….அதாவத ஒரு நிகழ்வு நடைபெறுகின்றது….இதானால் ஒரு மனிதாpடம் பாதிப்பு ஏற்படுகின்றது….இநதப் பாதிப்பால் அவர் உணா;வு நிலையில் மாற்றம் ஏற்படுகின்றது…இந்த உணா;வு நிலை ;மாற்றம் அவரை சிந்திக்க துண்டுகின்றது…சிந்தனையின் வெளிப்பாடாக ஏதோ ஒரு படைப்பு வெளியாகின்றது…இறுதுpயாக அது ;செய்ல் வடிவம ;பெறுகின்றது…..(நிகழ்வு….
—>>>>பாதிப்பு—->>>>>
உணர்வு—->>>>>>>
சிந்தனை—->>>>>
வெளிப்பாடு—->>>>>
செய்ல்….—->>>>>>அகம் .—-புறம்—->>>>)
ஒரு மனிதாpல் ஏற்படும் இநத நிகழ்வுகல் ஒவ்வொன்றிலு;ம் தீர்மானிக்குமு; சக்தியாக இருப்பது அகமும் புறமுமும் என்பதை நாம் ஆழமாகப் புரிந்துகொள்ளவேண்டியவர்களாக இருக்கின்றோம்…..அகம் எனும் போது…அவை இரண்டு வகையானகின்றன..
…ஒன்று நாம் எவ்hறு சமூகத்தைப் பார்க்கின்றோம் என்பது…அதாவது ன்ன கண்ணோட்டத்தில் பார்க்கின்றோம் என்பது…இக் கண்ணோட்டமானது நமது அறிவின் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றது….இரண்டாவது அகத்தில் ஏற்கனவே கடந்தகால நிகழ்வுகளால் அடக்குமுறைகாளால் சமூக கட்டுப்பாடுகளால் ஏற்ப்படுத்தப்பட்ட பாதிப்புகளின் கலவை …இதற்கு நான் ஏற்கனவே கூpயதுபோல் இன்றைய நாளிலிருந்து 1000 மட்டுமல்ல 2000 ஆண்டுகள் கடந்து செல்லக் கூடியதாக இருக்கலாம்…அதை நாம வெறும் மார்க்ஸயக் கண்டேணாட்டத்தால் மட்டும் பார்த்து விளங்கிக்கொள்ள முடியுமூ என்பது எனக்கு சந்கேமானததே?…..இதைப் புரிந்து கொள்வதற்கு நமது அகம ;தொர்பான அறிவும் இனத ;பன்முகத்தன்மையை புர்pந்துகொள்வதற்கு ஆகக் குறைந்ததது பெண்ணியம் தொடர்பான அறிவுமு நமக்குத் தேவைப்படுகின்றது என்றே நான ;கருதுகின்றேன்….
நன்றி மீராபரதி
…..(நிகழ்வு….
—>>>>
பாதிப்பு—->>>>>
உணர்வு—->>>>>>>—
->>>>>>அகம் .——->>>>>>-
—->>>>>>புறம்—->>>>
சிந்தனை—->>>>>
வெளிப்பாடு—படைப்பு ->>>>>
செய்ல்….—->>>>>>
நம்மிது அகமும் புறமும் நம்மீது எவ்வாறன பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்பது தொடா;பான ;பிரக்ஞை இருக்குமாயின் நமது சிந்தனை பிரக்ஞையற்ற சிந்தனையாகவும் இல்லாமல் எதிர்வினை செயற்பாட்டிற்கான சிந்தனையாகவும் இல்லாமல் புதிய ஒரு படைப்பாக நமது சிந்தனை வெளிவருவதற்கு சாத்தியமிருக்கின்றது….நான் நினைக்கின்றேன்….அகமும் புறமும் நம் சிந்தனை மீது ஏற்படுத்தும் பாதிப்பு தொடா;பாக நமக்கு பிரக்ஞை இல்லை என்றே கருதுகின்றேன்…இதானால் தான் பல சமூக நிழ்வுகள் மீள மீள நிகழ்கின்றன…..
நன்றி
மீராபாரதி
கட்டுரையைவிட, மீராபாரதி -கோசலனின் உரையாடல் புதிய பரிமாணத்துள் புகுந்துள்ளது. மீராபாரதியின், ‘கருத்து ஒருவரை பிரக்ஞை பூர்வமாக இயக்குகின்றதா ?’ என்பதும், எல்லாவற்றையும் புறநிலையே தீர்மானிக்கிறது என்கிற கோசலனின் கருத்தும் என்னுள்ளும் பல அக விவாதங்களை முன்பு உருவாகியிருந்தது. மாக்சிசவாதிகளாக இருந்து ஆத்மீகத்தின் மீது பற்றுக் கொண்ட பலர் , மீராபாரதியின் கருத்தியலைக் கொண்டவர்களாக இருந்ததை நான் கண்டிருக்கிறேன். இந்தக் கேள்வி அவர்களுடன் இருந்தது. ஆகவே அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
‘பொருள்முதல் வாதம் -இயங்கியல் ,இதிலிருந்து கட்டமைக்கப்படும் கூட்டுப்பிரக்ஞை அல்லது சமூகத்தில் நிறுவப்பட்ட கருத்தியல் , பின்பு சமூக இயங்கியலின் மையச் சக்தியாக மாறுவதால், அதுவே சமூகத்தை இயக்குகிறது . ஆகவே புறக்காரணி மட்டுமல்லாது , அகவயப்பட்ட சமூகச் சக்தியாக மாறிய கருத்தும் , சமூக இயங்கியலை தீர்மானிக்கின்றது’ என்கிற கருத்துமுதல் வாதப் பார்வையும் இருக்கிறது.
எனது பார்வையை பின்னர் எழுதுகின்றேன் .
நட்புடன் இதயச்சந்திரனுக்கு….
தங்கள் பின்னுட்டத்திற்கு நன்றிகள்….
முதலாவது பிரக்ஞை என்பது அல்லது அதை வளர்ப்பதற்காக முயற்சிப்பது ஆன்மிகம் எனக் குறுக்கிவிடவேண்டாம்… இது கீழக்கின் மெய்ஞானமானது மதங்களுடன் இணைந்திருப்பதால் ஏற்பட்ட ;விளைவு….
ஏவ்வாறு மேற்குலக விஞ்ஞான் புறவெளியை ஆராய்வதற்கு பிரித்தும் பகுத்தும் தர்க்கித்தும் ஆய்வு செய்கின்ற விஞ்ஞான முறையை முன்வைத்து செயற்பட்டடோதோ….
அதேபோல் தான் கீழக்கு அக வெளியை அறிந்து கொள்வதற்கு முழுமையான பார்வையை அதாவது பிரக்ஞைபூர்வமான பார்வை முன்வைத்து: செயற்பட்டது…
இவை ;இரண்டும் பண்புரீதியில் வேறு வேரானவை என்பதை கவனித்திருப்பீர்கள்….
இறுதியாக பிரக்ஞை என்பதை நாம் அனுபவ ரீதியாக அறிய முடியும்…அதற்கு சில வழிமுறைகள் உள்ளன..
விரைவில் “பிரக்ஞை: ஒரு அறிமுகம் – தனி மனித மாற்றத்திலிருந்து சமூக மாற்றத்திற்கு…” என்ற ஒரு நூலை வெளியீடும் வேலையில் ஈடுபட்டுள்ளேன்…
இது ஒரளவாவது பிரக்ஞை தொடர்பான அறிமுகத்தை தரும் என நம்புகின்றேன்…
நன்றி நட்புடன் மீராபாரதி
‘கருத்து ஒருவரை பிரக்ஞை பூர்வமாக இயக்குகின்றதா ?’ என்பதல்ல ;கேள்வி…
ஒருவர் பிரக்ஞைபூர்வமாக தனது கருத்துக்களை தெரிவு செய்கின்றாரா…தெரிவிக்கின்றாரா என்பதே முக்கியமானது…
நாம் வழமையாக பிரக்ஞையின்மையாகவே கருத்துக்களை தெரிவு செய்வதும் தெரிவிப்பதும் செயற்படுவதும் நடைபெறுகின்றது….
“அகவயப்பட்ட சமூகச் சக்தியாக மாறிய கருத்தும் இ சமூக இயங்கியலை தீர்மானிக்கின்றது’ என்கிற கருத்துமுதல் வாதப் பார்வையும் இருக்கிறது.”
இது ;ஒரு கருத்துமுதல் வாதப் பார்வையல்ல….கருத்திலிருந்து பிரக்ஞை என்பதை உருவாக்கவில்லை…..
வேண்டுமானால் பொருள் முதல் வாதம் போல…கருத்து முதல் வாதம ;போல….
இதனை சக்தி முதல் வாதம் என ;வேண்டுமானால் குறிப்பிடலாம்….
“இதிலிருந்து கட்டமைக்கப்படும் கூட்டுப்பிரக்ஞை அல்லது சமூகத்தில் நிறுவப்பட்ட கருத்தியல் இ பின்பு சமூக இயங்கியலின் மையச் சக்தியாக மாறுவதால்”
நீங்கள் இங்கு குறிப்பிடுவது உண்மையிலையே ;கூட்டுப் பிரக்ஞை அல்ல…அது கூட்டுப்பிரக்ஞையின்மை….
மனிதர்களி;ன் மனம் இருவகையான எண்ணங்களைக் கொண்டுள்ளது….
ஒன்று பிரக்ஞையின்மை…இது மேல் தளத்தில் இருந்து செயற்படுவது….
இரண்டாவது கூட்டுப் பிரக்ஞையின்மை…இது ;அடி ஆழத்திலிருந்து செயற்படுவது….
இவை; இரண்டுமே நமது உளவியலையும் எண்ணங்களையும் தீர்மானிக்கின்றன……
இதிலிருந்து ஒவ்வொரு மனிதரும் விடுதலை பெறுவதற்கு பிரக்ஞையை வளர்க்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்…
இதன் விளைவாகவே கூட்டுப் பிரக்ஞை என்பது உருவாகுவது சாத்தியமாகும்….
நன்றி மீராபாரதி