ஆன்றோரே சான்றோரே
பேரரறிஞர்களே மூதறிஞர்களே
கவிஞர்களே கலைஞர்களே
அரசு ஊழியர்களே
என் உயிரினும் உயிரான தமிழர்களே
நாம் சுவாசித்தது ஒரே காற்று
நாம் பேசியது ஒரே மொழி
நாம் நடத்தியது ஒரே பேரம்
நாம் விதித்தது ஒரே விலை
நாம் விற்றது ஒரே இனம்
காட்டிக்கொடுக்க நீண்டதும்
நம் ஒரே விரல்
நாம் செய்ததும் ஒரே துரோகம்
இம்மாபெரும் வரலாற்றை
நாம் சாதித்த ஓராண்டின் நிறைவைக்
கொண்டாடும்
விருந்துக்கு அழைக்கிறேன்
உலகே தமிழ் மண்ணில் திரளட்டும்
விரோதி வருடம்
சித்திரை ஐந்தாம் நாள்
வங்கக் கடல் தீவில்
சிங்கப் படைகள்
சில லட்சம் மக்களைக் கொன்றொழித்து
சீர்மிகு வரலாறு படைத்த
மாபலி நாளின்
மாண்பினைப் போற்றும் வகையில்
இச்சித்திரை மாதம்
பௌர்ணமி தினத்தில்
மனிதகுலமே கண்டிராத வகையில்
மாபெரும் விருந்து நடக்கிறது
அனைவரும் கலந்துகொண்டு
விருந்தினைச் சிறப்பிக்குமாறு அழைக்கிறோம்
அறுக்கப்பட்ட மென்முலைகள்போன்ற
இட்லியுடன் பிள்ளைக்கறி பிசைந்த
செவ்வரிசிச் சோறு
மதுவருந்தும் கவிஞர்களுக்கு மட்டும்
நுரை பொங்கும் செங்குருதியுடன்
மூளை வறுவல் வழங்கப்படும்
இதிலுள்ளவை தவிர்த்து
சிறப்புணவு தேவையெனில்
மூன்று தினங்களுக்கு முன்
எங்கள் கவனத்துக்குக் கொண்டுவந்தால்
தீவிலிருந்து
தனி விமானத்தில்
தருவித்துத் தர ஏதுவாக இருக்கும்
உலகச் சமூகமே வியந்து நிற்க
உலகத் தமிழர்கள் ஒன்றாய் நின்று
இப்பலி விருந்தைச் சிறப்பிக்கும்படி
கேட்டுக்கொள்கிறேன்.
இவ்விருந்தை வழங்குபவர்கள்
ஹைடு அண்ட் சீக் வேர்ல்டு விஷன்
ஹனி டியூ அண்ட் ஸ்பிரிங் பிரிவரிஸ்,
ஆன்ட்டி வார் அண்ட் பீஸ் ஹன்டர்ஸ்,
வேர்ல்டு நைட்ரோ கெமிக்கல்ஸ்,
இன்டர்நேஷனல் வார் கிரிமினல்ஸ் அசோஸியேஷன்.
குறிப்பு: தவிர்க்க இயலாத காரணத்தால் ஆங்கிலத்திலேயே அயல் நாட்டு நிறுவனங்களின் பெயர்கள் அச்சிடப்பட்டு உள்ளன. இதைப் பிழையாகக் கருதி தமிழ்ப் பற்றாளர்கள் விருந்துக்கு வராமல் இருந்துவிடக் கூடாது. இது எங்கள் அன்புக் கட்டளை!
(நன்றி-ஆனந்த விகடன்)
நிச்சயமான இந்தக் கவிதையை பெரியவர் சிவத்தம்பி படிப்பார் என நினைக்கிறேன். வெள்ளை உடை அணிந்து தமிழ் ஆசிரியார்களாகவும் மதிக்கத்தக்க அய்யாக்களாகவும் பார்த்த நமக்கு தமிழ் கற்றுக் கொடுத்தவர்கள். இப்படியான விருந்தும் ரத்த உணவு உண்ணச் செல்லக் கூடாது என்பதே விருப்பம்…. அதுதான் இன்றைய இலங்கை, இந்திய, கூட்டுப் பாசிசத்திற்கான எதிர்ப்புமாகும்.
ஒரு மாபெரும் மக்கள் படுகொலையை மறைக்க கருணாநிதி நடத்தும் விருந்தை சரியான தருணத்தில் அம்பலப்பத்தியிருக்கிறார்..
மாலதி……… இலக்கியவாதிகளும்,,, தமிழறிஞர்களும் நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டு கருணாநிதி வீடும் எலும்புத் துண்டுகளுக்காக அணி வகுத்து நின்று துரோகிக்கு பட்டுக் குஞ்சம் கட்டும் போது இவர்களின் முகத்திரையைக் கிழித்திருக்கிறார் மாலது வாழ்த்துக்களும் மரியாதை கலந்த வணக்கங்களும்….
great…super
சரியான கவிதை. கருணாநிதி கம்பனிக்கு என்ன பூரியப்போகுது?
தமிழினத் துரோகி மாலதிமைத்ரி,
செம்மொழி மாநாட்டை குழப்ப கிழம்பியிருக்கும் கூலிப்படையின் சதிதான் இந்த கவிதை.அன்று தண்டவாளத்தில் தலைவைத்து இன்று தமிழகத்தையே பெயர்த்தெடுத்துக்கொண்டிருக்கும் தமிழினத்தலைவனின் தியாகங்களை மறந்து இப்படி எழுதலாமா?தள்ளாத வயதிலும் தடுமாறும் நிலையிலும் ஈழத்தில் போர் நிறுத்தத்திற்காக காலை உணவுக்கும் மாதிய உணவுக்கும் இடையில் மாபெரும் உண்ணாவிரதம் இருந்த தலைவர் கூட்டும் மாநாட்டை கிண்டலடிக்கும் இக்கவிதையை வன்மையாய் கண்டிக்கிறேன்
இந்த லூசு கோமாளியின் உண்மையான முகத்தை அம்பலப்படுத்துகிறது இந்தக் கவிதை. இந்த கிழ போல்டு– 87-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். தமிழகம் முழுக்க ஆடம்பர விழா.. மக்களுக்கு மின் சாரம் இல்லை. இந்தாளுக்கு பாராட்டு விழா நடத்த அத்தனை மின்சாரமும் வீணடிக்கப்படுகிறது……… பெரியாரும் திராவிட இயக்கமும் தோற்றது கருணாநிதியிடமே
நானும் ஒரு ஈழத் தமிழன் என்ற முறையில் கடைசிவரை நம்பியிருந்தோம் இந்தக் கிழவன் ஏதாவது செய்வார் என்று……கை விரித்து விட்டாரே !!!! இன்று தமிழீழம் சின்னாபின்னாப்பட்டு சிங்களனின் போர்வைக்குள் சிக்கித் தவிக்கிறது…பார்த்தும் பாராமலும் கறுப்புக் கண்ணாடியோடு சிரித்துக்கொள்கிறாரே…
ஒட்டு மொத்த தமிழகமுமே தன்னைப் பாராட்டிக் கொண்டிருப்பது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார் இந்தத் துரோகி…………..தமிழுக்கோ தமிழனுக்கோ திராவிடனுக்கோ எதுவுமே செய்யாத இந்த கருணா வின் ஆட்டுக்குட்டிகள் இந்தாளை புகழ்ந்து தள்ளுகிறது……. வடிவேலுவின் வார்த்தைகளில் சொன்னால் வாங்குன காசுக்காக ரொம்பவே கூவிக் கொண்டிருக்கிறார்கள். அடத் தூ…….. நீயும் ஒரு மனிதனா?
தமிழகத்தில் சிலர் பரபரப்புக்காக யோனி, கூதி என்று கவிதை எழுதி அதை பெண்ணியக் கவிதை என்று வெளியிடுகிறார்கள். பெண்ணின் வேதனைகளைப் பேசுவதற்கு அந்த வார்த்தைகளை பிரயோகிப்பதில் தவறில்லை என்றாலும்…. மார்க்ஸிய ஆசான்களை இழிவு படுத்தும் லீனா போன்றவர்கள் பரபரப்புக்காக எழுதுகிறவர்கள்தான். ஆனால் ஆளும் வர்க்கங்களை அண்டிப்பிழைப்பவர்களாக இருக்கிறார்கள். ஒரு வரி கூட ஆளும் வர்க்கங்களை கண்டிக்காத லீனா மாலதி மைத்ரி போன்ற அரசியல் கவிதை எழுதும் பெண்ணிய போராளிகளிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.
தக்க சமயத்தில் கூர்மையான கவிதையை எழுதியிருக்கிறார் மாலதி மைத்ரி. ராஜாத்தி குறிப்பிட்ட பெரியவர் சிவத்தம்பி மட்டுமல்ல, பல பெரியவர்களை முகத்திலறைகிற கவிதை. நன்றி மாலதி மைத்ரி.
good poem to tamil politician idiot. they leads the situvation there this like. a poet can only explain what happening the truth. keep it up. with sorrow by tamilan
சரியான சூழலில் வெளிப்பட்டிருக்கிறது இக்கவிதை.
very thought provoking poem.A dynamite
the poem doesn not discredit kalainyar past action,but the present…..malathi becomes a public intellectual….keep it up..
சிறந்த அரசியல் கவிதை……… அதிகாரத்திற்கெதிராக உண்ம்களைப் பேசியிருக்கிறார் மாலதி வாழ்த்துக்கள்.
நுகர்வில் சுயமிழந்துபோன சமூகத்தின் இறுகிய மனத்தையும், வாழ்விருப்பின் மீதான கனிவில் ஏதும்செய்ய இயலாமல் உள்ளொடுங்கிப்போன மனிதத்துவத்தின் மரணத்தையும் போலிமைகளின் கானல்களையும் உரித்துக் காட்டி உயிர் கசியும் தருணங்களை உயிர்ப்பிக்கும் உயிர்க் கவிதை.
மாலதி மைத்ரியை வெறும் பெண்ணியம் மட்டும் வசதியாகப் பேசிக்கொள்ளும் கவிஞராகவே நினைத்திருந்தேன். மிகத் துணிவான கவிதை.
கவிஞனின் கம்பீரமான சுயமரியாதை கூட இல்லாத முத்துக்குமார், வைரமுத்து, சு.ப. வீரபாண்டியன் மற்றும் யச்சூரி போன்றோரை அம்பலப்படுத்தும் வரிகள்.
தமிழ் இலக்கியம் தமிழர்களின் அரசியல் உணர்வை தட்டியெழுப்பினாலன்றி நம்மிடம் அரசியல் விழிப்புணர்வு இனிச் சாத்தியமில்லை. காசு கொடுத்த அரசியல்வாதியை கண்டிப்பது மட்டுமின்றி, பல்லிளித்துக் கொண்டு உரிமையாகப் போய் கட்சிக்காரர்களிடம் கேட்டு காசு வாங்கிக்கொண்டு ஓட்டுப்போட்ட மக்களையும் பளாரென்று கன்னத்தில் அறையும் கவிதைகளும் வரவேண்டும்.
சமீபத்தில் பழ.கருப்பையா என்கிற அ.தி.மு.க பிரமுகர், கட்டுரையாளர் செம்மொழி மாநாட்டை எதிர்த்து பேட்டி கொடுத்ததற்காக வீடு புகுந்து தாக்கப்பட்டார். உடமைகள் நொறுக்கப்பட்டன. “எங்க தலைவனை எதிர்த்து இந்த வாய்தானே பேசிச்சு?” என்று வாயிலேயே குத்தியிருக்கிறார்கள் ரவுடிகள். இதுதான் இன்றைய அதிகாரத்தின் கோரமுகம். மாலதி மைத்ரி அவர்களை பாதுகாப்பு கருதி கவனமாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
என் உயிர் மேல் ஆசை இல்லை ஆனால் என் தமிழ் மேல் ஆசை எதாவது எழுதி கெடுக்காத
வகையில் அமைந்தது உங்க கவிதை வாழ்த்தி பேச இது ஒன்ட்ரும் கவிதை அல்ல உள்ள குமுறல் எல்லாம் வல்ல இனறவனை வேன்டுகிறேன்
என் தமிழ் மக்கள் வாழ வழி தருவாயா இறைவா
தருகிறேன் மகனே,ஆனால் நீ நெற்றீயில் நீறூ பூசி உன்னை எனது பக்தனாய் காட்ட வேண்டும்.வெள்ளக்காரனாய் வேசம் கட்டி பம்மாத்து நாடகம் ஆடக் கூடாது செய்வாயா மகனே.