இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் எஸ்.எஸ்.பஜாஜ் இம்மாத இறுதியில் மின் உற்பத்தி தொடங்கிவிடும் என்றார்.
அணுசக்தி ஒழுங்குமுறை பாதுகாப்பு குழுவின் பரிந்துரையின் பேரில் யுரேனியம் எரிபொருள் நிரப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கூடங்குளம் முதலாவது அணு உலையில் நாளை மறுநாள் எரிபொருள் நிரப்பும் பணி தொடங்கும். 4.57 மீட்டர் நீளம் உடைய 163 எரிகோல்களிலும் எரிபொருள் நிரப்பப்படும். இப்பணிக்கு 2 வார காலம் தேவைப்படும்.
மேலும் எரிபொருள் நிரப்பும் பணியை பார்வையிட அணுசக்தி ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகளும் கூடங்குளம் வருகை தர உள்ளனர். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்திக்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெறுவதால் கூடுதலாக 2 ஆயிரம் போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையின் வடபகுதி, தமிழகதின் கரையோரப் பகுதிகளை அணுக் கதிவீச்சுக்கு அபாயத்திற்கு உள்ளாக்கவல்ல மனிதக் கொல்லியான அணு உலையை மக்களின் எதிர்ப்பிற்கு மத்தியில் இந்திய – தமிழக அரசுகள் இயங்கச் செய்கின்றன.
தொடர்புடைய பதிவுகள்:








இன்று நீ வாழ்வதற்காக நாளை உன் பிள்ளை சாகலாம் என்று சும்மாய் இருந்துவிட்டாய் தமிழ்நாடே!
So they are going ahead with the plan. Let us wish them well.