கோட்டே ஸ்ரீ நாகவிகாரையின் பிரதம விகாராதிபதி மாதுளுவேவ சோபித தேரர் பயணித்த காருடன் அதற்;குப் பின்னால் வந்த லொறியொன்று மோதி விபத்து நேர்ந்துள்ளது. இவ்விபத்து பிட்கோடடேயில் வைத்து நடந்துள்ளது. காருக்கு அதிக சேதங்கள் ஏற்பட்ட போதும் பதேரர் காயங்கள் எதுவுமின்றித் தப்பித்துள்ளார்.
சோபித தேரர் கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக சரத்போன்சேகாவின் விடுதலை வேண்டி விஷேட பிரார்த்தனை ஒன்றை தனது தலைமையில் ஏற்பாடு செய்திருந்ததுடன் அதற்காகப் புறப்பட்ட வேளையே இந்த விபத்து நடந்திருக்கிறது.
இந்த விபத்துப் பற்றிக் குறிப்பிட்ட சோபித தேரர், காலை முதல் விகாரைக்கு முன்னால் குறித்த லொறி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது, அது குறித்து அப்போது நான் சந்தேகப்படவில்லை. ஆயினும் எனக்கு தீங்கு இளைத்து எனது தலைமையில் இன்று நடைபெறவுள்ள பிரார்த்தனையைத் தடுப்பதற்கான சதித்திட்டமாக இந்த விபத்து இருக்கலாம் எனக் குறிப்பிட்டார்.
ஆயினும் சரத்போன்சேகாவின் விடுதலை வேண்டி மாதுளுவேவ சோபித தேரரின் தலைமையில் கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக விஷேட பிரார்த்தனை இடம்பெற்றது. இப் பிரார்த்தனையில் 300 பிக்குகள் வரையில் கலந்து கொண்டனர்.
அரசாங்கத்துக்குப் பிடிக்காதவார்களை இவ்வாறு தற்செயல் விபத்துப் போன்று திட்டமிட்ட விபத்துக்கள் மூலமாக தீர்த்துக் கட்டுவது அரசாங்கத்துக்குக் கை வந்த கலைதான். அதற்குப் பல உதாரணங்களைக் கூறலாம்.
ஏற்கெனவே ஜனாதிபதி ஊடகப் பிரிவில் கடமையாற்றிய அஷ்ரப் அலீ என்பவரும் அரசாங்கத்தின் சந்தேகப் பார்வைக்கு உள்ளாகியிருந்த நிலையில் காரில் பயணிக்கையில் ஒரு லொறியில் மோதுண்டு கார் பலத்த சேதமடைந்திருந்தது. அதிர்ஷ்டவசமாக அவர் காயங்களின்றித் தப்பியிருந்தார்.அவரது காருக்கு முன்னால் ஒரு இராணுவ லொறி வழியை மறித்து நிற்க பின்னால் வந்த ஒரு லொறி அவரது காரை முட்டித் தள்ளியிருந்தது. கொஞ்சம் நிதானம் தவறியிருந்தால் அவர் அன்றைக்கே காலி. ஏதோ தப்பித்துக் கொண்டு விட்டார். அதன் காரணமாகத் தான் இன்றைக்கு அவார் உயிர் தப்பி நாட்டை விட்டோடி தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருப்பதாக கேள்வி.
நாளை மாதுளுவாவே சோபித தேரரும் கூட நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்படலாம். இலங்கையில் பலமான எதிர்க்கட்சி இல்லாத நிலையில் சர்வதேசமாயினும் தலையிட்டு இவற்றைக் கண்டிக்க முன் வரக்கூடாதா? ராஜபக்ஷவின் காட்டுத் தர்பார் ஆட்சிக்கு முடிவு கட்டும் பணியில் பூனைக்கு மணி கட்டப் போவது யார் என்பது தான் தொரியவில்லை.
பறக் ஒபாமாவின் ஆசியோடு கோத்தபாயா ஆட்சி நடத்தும்போது இப்படியான “அரசியலுக்கு” முடிவே இல்லை. இனி சிங்கள மக்கள் கொதித்தெளுந்த்தால்தான் இந்த காட்டான்களின் கும்மாளத்திற்கு ஒரு
முடிவு வரும். கொதித்தெளுவார்களா சிங்களவர்?
“பாவம்” அமெரிக்கா இந்திய சீன பொருளாதார வல்லரசுப் போட்டிக்குள் சிக்குண்டு வழிதெரியாது வாயை மூடிக்கொண்டு இருக்கிறது.