கட்டுரையாளரின் கருத்து இனியொருவின் கருத்தல்ல; விவாத நோக்கில் பதிவிடப்படுகிறது.
ஈழத் தந்தை செல்வா அவர்கள் பொ¢யாரைச் சந்தித்து ஈழ மக்களின் விடுதலைக்காக (தமிழ் ஈழம் அமைவதற்காக அல்ல; ஒருங்கிணைந்த இலங்கையில் தமிழர்களின் உரிமைகள் நசுக்கப்படாமல் இருப்பதற்காக) உதவி செய்யும்படி கேட்ட பொழுது “நாமே இங்கு இந்திய பார்ப்பன அரசுக்கு அடிமைகளாக இருக்கிறோம். ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு எப்படி அய்யா உதவ முடியும்?” என்று தமிழகத் தமிழர்களின் இயலாமையைக் கூறினார். அதாவது நாம் பார்ப்பனர்களின் அடிமைகளாக இருக்கும் வரை நம்மால் யாருக்கும் உதவ முடியாது என்று தெளிவாகக் கூறினார்.
இன்று ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்யப் புறப்பட்டு இருக்கிறவர்கள் பார்ப்பன அடிமைத் தளையில் இருந்து விடுபட்டு விட்டார்களா? அல்லது பொ¢யா¡¢ன் கருத்தை மறுக்கிறார்களா?
பெரியாரின் கருத்தை மறுப்பது என்றால், அது இரு விதங்களில் இருக்க முடியும்.
(1) நாம் ஒன்றும் பார்ப்பனர்களுக்கு அடிமைகள் இல்லை; சுதந்திரமாகத் தான் இருக்கிறோம் என்றும்
(2) ஈழத் தமிழர் நலப் போராட்டத்திற்கும் பார்ப்பன அடிமைத் தளையில் இருந்து விடுபடுவதற்கும் சம்பந்தம் இல்லை; இன்றைய சூழ்நிலையிலேயே போராடி வெற்றி பெற முடியும் என்றும் இரு விதங்களில் வாதங்களை வைக்க முடியும்.
இன்றைய சூழ்நிலையில் போராடி வெற்றி பெற முடியும் என்று கூறுபவர்கள், இந்திய மக்களில் 80%க்கும் அதிகமானவர்கள் இலங்கை அரசுக்கு எதிராகவும் ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவான நிலையையும் கொண்டிருந்த / கொண்டிருக்கும் பொழுது, அதீதப் பெரும்பான்மை மக்களின் உணர்வுகளுக்கு எதிராக இந்திய அரசு எவ்வாறு செயல்பட முடிந்தது / முடிகிறது? அதுவும் இலட்சக் கணக்கான தமிழ் மக்களைக் கொன்று குவிப்பதற்கு உதவியும் வழிகாட்டுதலும் அளிக்க இந்திய அரசினால் எப்படி முடிந்தது? அதிகார மையங்களில் 90%க்கும் அதிகமாகப் பார்ப்பனர்களும், மிகுந்த சொற்பமான இடங்களிலும் ஆசையினாலோ அச்சத்தினாலோ பார்ப்பனர்களுக்கு அடிபணிபவர்களும் மட்டுமே இருப்பதால் தான் இவையெல்லாம் முடிகின்றன என்று தோன்றவே இல்லையா? இப்படி இருக்கையில் பார்ப்பன அடிமைத் தளையில் இருந்து விடபடாமல், இன்றைய சூழ்நிலையிலேயே போராடி வெற்றி பெற முடியும் என்பதற்கு ஏதாவது முகாந்திரம் இருககிறதா?
“அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை; நாம் பார்ப்பனர்களுக்கு அடிமைகளாக இல்லை, அதிகார மையங்களில் பொதுப் போட்டியில் தேர்வு பெறும் திறமைசாலிகள் தான் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். மற்ற சமூக மக்களில் திறமைசாலிகள் இல்லாவிட்டால், அதற்குப் பார்ப்பனர்கள் என்ன செய்ய முடியும்?” என்று நினைக்கிறீர்களா?
இது பார்பப்னர்கள் நம் மீது சுமத்தி இருக்கும் கருத்தியல் வன்முறை. மனிதர்களை எந்த ஒரு அடிப்படையில் குழுக்களாகப் பி¡¢த்தாலும், அனைத்து குழுக்களிலும் மிக அதிகமான திறமை உடையவர்கள் முதல் மிகக் குறைவான திறமை உடையவர்கள் வரை இருக்கவே செய்வார்கள் என்பது மறுக்க முடியாத இயற்கை நியதி. ஆகவே பார்ப்பனர்களிலும் மற்ற வகுப்பு மக்களிலும் திறமையானவர்களும் திறமைக் குறைவானவர்களும் இருக்கவே செய்கிறார்கள். இது பகவத் கீதை, மனு ஸ்மிருதி, பராசர ஸ்மிருதி முதலிய இந்து மத சாஸ்திரங்கள் அனைத்திலும் வெளிப்படையாகவே ஒப்புக் கொள்ளப்பட்டு உள்ளது. நாமும் நமது அனுபவத்தில் இவ்வுண்மையை உணராமல் இருக்க முடியாது. அப்படி என்றால், பொதுப் போட்டி (open competition) முறையில் அனைத்து வகுப்பு மக்களலிலும் உள்ள திறமைசாலிகள் தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்க வேண்டும் / தேர்ந்து எடுக்கப்பட வேண்டும் அல்லவா? அப்படி இல்லாமல் பார்ப்பனர்களே தேர்ந்து எடுக்கப் படுகிறார்கள் என்றால், அம்முறையில் அயோக்கியத்தனம் பின்னிப் பிணைந்து உள்ளது என்று உறுதிப்படவில்லையா?
பார்ப்பனர்களில் திறமைக் குறைவானவர்கள் இருக்கும் பொழுது, பார்ப்பனர்கள் மட்டுமே தேர்ந்து எடுக்கப் பட்டால், திறமைக் குறைவானவர்களும் தேர்ந்து எடுக்கப் படுகிறார்கள் என்பது உறுதி ஆகிறது அல்லவா?
இவ்வாறு, திறமை இருந்தாலும் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் தேர்ந்து எடுக்கப் படாமல் இருப்பதும், திறமை இல்லாவிட்டாலும் பார்ப்பனர்கள் தேர்ந்து எடுக்கப் படுவதுமான நிலை நடப்பில் இருக்கும் பொழுது மற்ற வகுப்பு மக்கள் பார்ப்பனர்களுக்கு அடிமைகளாகத் தான் இருக்கிறார்கள் என்பது உறுதியாகத் தொ¢கிறது அல்லவா? ஆகவே உங்கள் வாதம் தவறு என்று பு¡¢கிறதா
இந்த அடிமைத் தளையை எப்படி உடைப்பது? அதிகார மையங்களில் பார்ப்பனர்கள் மட்டும் அன்றி, அனைத்து வகுப்பு மக்களும், மக்கள் தொகையில் அவரவர் எண்ணிக்¨யின் விகிதத்தில் தேர்ந்து எடுக்கப் பட்டே ஆக வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்த வேண்டாமா? அவ்வாறு அதிகார மையங்களில் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் பார்ப்பன அயோக்கியத்தனங்களைத் தவிடு பொடி ஆக்கும் அளவு எண்ணிக்கையில் இருந்திருந்தால் / இருந்தால், இந்திய அரசு இலங்கை அரசின் அடக்கு முறைகளுக்குத் துணை போயிருக்க / போக முடியுமா?
இவ்வளவு சிந்தனைகளயும் ஒன்று திரட்டி, இரத்தினச் சுருக்கமாகப் பொ¢யார் கூறியதைச் சிறிதும் மனதில் கொள்ளாத மாணவர்களின் போராட்டம் எதவரை செல்ல முடியும்?
உணர்ச்சி வேகத்தில் போராடுவதோடு, அறிவு பூர்வமாகவும் சிந்திப்பது தேவை அல்லவா?
அதிகார மையங்களில் பார்ப்பன ஆதிக்கச் சிந்தனைகளை உருத்தொ¢யாமல் அழிப்பதற்குத் தேவையான அளவிற்கு ஒடுக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையை அதிகா¢ப்பதற்கும், கருத்தியலில் உறுதி பெறுவதற்குமான போராட்டத்தைத் தொடங்குவது அவசியம் அல்லவா? இப்படிச் சொல்வது வேறு எல்லா வேலைகளையும் மூட்டை கட்டி வைத்து விடச் சொல்வதாகப் பொருள் அல்ல. ஏல்லாவற்றையும் விட, பார்ப்பன ஆதிக்க ஒழிப்பிற்குத் தான் முன்னு¡¢மை கொடுக்கப்பட வேண்டும் என்று தான் பொருள். இப்போராட்டத்தைத் தொடங்கினாலே நம்மிடையே உள்ள, நமக்கு எதிரான சக்திகள் வெளியே தொ¢ய ஆரம்பித்து விடும். அவர்களைக் களை எடுத்து விட்டால், புதிய வேகத்துடன் போராட்டங்களை எடுத்துச் செல்ல முடியும்.
திரு ராமியா அவர்களுக்கு
தமிழக மாணவர்கள் போராட்டம் நடத்துவது தங்களை விடுவித்துக் கொள்ள அல்ல.இப்போது அவர்கள் குரல் கொடுப்பது ஈழத்தமிழர்களுக்காகவே.!!!
பார்ப்பனீயம் என்பதே” மற்றவனை விட நானே உயர்ந்தவன் ” என்று சொல்வது தான்.இந்த சரக்கு நன்றாக உள்வாங்கப்பட்டதால் தான் இன்று தமிழகத்தில் சாதி கலவரங்ககள் நடை பெறுகின்றன என்பதை நீங்கள் மறுக்க முடியுமா? பார்ப்பனர்கள் விசத்தை இறக்கி விட்டு இன்று வேடிக்கை பார்க்கிறார்கள் என்பதை நீங்கள் மறுப்பீர்களா?
அதனால் தான் இன்று மாணவர் போராட்டத்தை திசை திருப்ப நினைப்பவர்கள் ” தேவர் ” சிலையை உடைக்கிறார்கள். இந்த விதமான் திசை திருப்பல்கள் முக்கிய பிரச்சனைகள் வரும் பொது நடைபெறுகின்றன.
ஆனால் எந்த பார்ப்பானும் சாதிக்கலவரங்ககளில் இப்போது ஈடுபடுவதில்லை.பார்ப்பானால் நசுக்கப்படுகின்றோம் என்று சொல்லும் ” வீர மறத் தமிழர்களே ” இந்த காரியங்களை செய்கிறார்கள்.!!
இதைத் தான் இலங்கையில் சிங்களவனும் செய்கிறான்
நன்றி, திரு.பாலன் அவர்களே!நீங்கள் கூறுவதைத் தான் நானும் கூறுகிறேன். தமிழக மாணவர்கள் தங்களை விடுவித்துக் கொள்ளப் போராடவில்லை. தாங்களே விடுவிக்கப் படாத நிலையில் மற்றவர்களுக்கு எப்படி உதவப் போகிறார்கள் என்பது தான் பிரச்சினை.
//பார்ப்பனீயம் என்பதே” மற்றவனை விட நானே உயர்ந்தவன் ”// இல்லை நண்பரே! பார்ப்பனியம் என்பது மற்றவர்களை விட நாங்களே உயர்ந்தவர்கள் என்ற பிடிவாதம் தான். பார்ப்பனர்கள் ஒட்டு மொத்த சமூகத்திற்காக சாதி வெறியுடன் இருப்பார்கள். மற்றவர்கள் தங்கள் சொந்த நலனுக்காக சாதி வெறியுடன் இருப்பார்கள். சொந்த நலனை விட ஒட்டு மொத்த சமூக நலனே பார்ப்பனர்களுக்கு முக்கியம். ஒட்டு மொத்த நலனை விட
சொந்த நலனே மற்றவர்களுக்கு முக்கியம். நீங்கள் கூறும் மற்ற விஷயங்களும் இக்கருத்தியலிலேயே அடங்கி விடும். இதிலிருந்து விடுபட வேண்டுமானால் மற்ற எல்லா விஷயங்களை விட பார்ப்பன அடிமைத் தளையில் இருந்து விடுபடுவதை முதல் வேலையாகக் கொள்ள வேண்டும்.
மாணவர்களின் போராட்டம் ஈழத் தமிழர்க|ளுக்கு எதையும் தராது. ஒன்றைக் கவனியுங்கள், போராட்டம் வந்ததுமே சீமானில் இருந்து மே17 வரை ஈழத்துகாக மட்டுமே போராடுவோம் மற்ற எல்லாவற்றையும் கண்டுகொள்ள மாட்டோம் என்று உல்டா விட்டவர்கள் எல்லாம் அம்பலத்துக்கு வந்த்து விட்டார்கள், புலம் பெயர் சுயநலவாதிகள் மெளனமாகிவிட்டார்கள்.
இது ஈழத் தமிழர்களுக்கு செய்த உதவி தான்.
நியாயமான கேள்விகளை கட்டுரை எழுப்புகிறது போல தெரிந்தாலும் சில சிக்கல்களும் உள்ளன.முதலில் தமிழீழம் கேட்டு கோரிக்கை வைத்தவர்கள் யார் என்று பார்க்க வேண்டும்.அவர்கள் எந்த பின்னணியில் அதை வைத்தார்கள் ? தமிழ் ஈழம் என்ற கோரிக்கை வைத்தவர்களில் 90 % சைவத்தையும் தமிழையும் கடுமையாக ஆதரித்தவர்கள்./ ஆதரிப்பவர்கள்.சைவத்தை கழித்தால் தமிழும் கழிந்து விடும்.அவர்கள் “நாவலர் ” பரம்à
��ரையில் இருந்து வந்தவர்கள்.
பெரியார் வைத்த நாத்தீக கருத்துக்கள்ளால் உள்வாங்கப்பட்டது தமிழக தேசியம் என்ற கருத்தாக்கம்.இன்று பெரியாரின் நாத்திக வாதத்தை கழட்டி விட்டாலும் கணிசமான அளவு தீ.மூ.காவினர் ,தாங்கள் பெரியாரின் வழி என்று ஒப்புக்காவது சொல்பவர்கள்.
இராமியா அவர்கள் பேசும் ” பார்ப்பனீய எதிர்ப்பு ” என்பதை புலம் பெயர்ந்த தமிழர்கள் எள்ளளவும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.இவர்கள் தான் அங்கிருந்த ” அவர்களை ” இறக்குமதி செய்து ” கோயில் வியாபாரம் ” நடாத்துகிறார்கள்.
” பார்ப்பனீய எதிர்ப்பு ” என்பதை கையில் எடுத்து தமிழக மாணவர்கள் போராடினால் இவர்களே [ இலங்கைத் தமிழர்களே] ” அவர்களுக்கு தேவையில்லாத வேலை தானே ” என்று சொல்லும் அபாயமாமும் உண்டு.
ஏனென்றால் ஈழத்தில் பார்ப்பனப் பாத்திரம் வகிப்பவர்கள் இவர்கள்.
சிக்கலான போராட்டம் தான்.நல்ல கருத்துக்களை அளித்த ராமியாவுக்கு வாழ்த்துக்கள்.
சிந்திக்கவும் வைக்கிறது.
புலம்பெயர் ஈழத் தமிழர்கள் பக்கா சுய நலம் பிடித்தவர்களாக தங்களைக் காட்டிக்கொண்டவர்கள். தாங்கள் சார்ந்தவர்கள் கொல்லப்பட்டால் மற்றவர்கள் போராட வேண்டும் என்று கேட்பார்கள். மற்றவர்கள் கொல்லப்படுவதை ஆதரிப்பார்கள். அமரிக்கா உலகம் முழுவதும் கொல்லும் போதும் அவர்கள் அமரிக்க ஆதரவாளர்கள். இந்திய அரசும் ஜெயலலிதாவும் கொலை செய்யும் போது தமக்கு நன்மை செய்வார்கள் என்று அவர
்களுக்கு ஆதரவளிப்பார்கள். சினிமாக் காரர்களோடு கூத்தாடுவார்கள் மற்றவர்களைப் போராட வேண்டும் என்பார்கள். இப்படி சுயநலமிகளாக தங்களைக் காட்டிக்கொண்டு தான் அன்னியப்பட்டு அழிந்து போகிறார்கள். புலம்பெயர் ஈழத் தமிழர்கள் இதை உணர்ந்து திருந்த வேண்டும் அல்லது அரசியலிருந்து ஒதுங்க வேண்டும். இவர்கள் இருக்கும் வரை நேர்மையான போராடுபவர்கள் ஈழப் போராட்டத்துக்கு ஆதரவளிப்ப�®
�ை எதிர்பார்க்க முடியாது.
புலம் பெயர் ஈழத் தமிழர்கள் என்றால் அவர்களைக் கட்டுப்பாட்டுகுள் வைத்திருக்கும் தலைமைகளை தான் சொல்கிறேன்.
ஈழத்தில் வாழுபவர்கள் அப்படி இருக்க மாட்டார்கள் என்பது தெளிவானது தான். புலம் பெயர் தமிழர்களை அமரிக்கா – இந்தியா போன்ற நாடுகள் இப்படியே இன்னும் சில வருடங்களுக்கு கையாண்டு ஈழத்தையே சிங்கள மயமாக்கி விடுவார்கள். இது தவிர்க்க முடியாதது.
கோவணம் கட்டுவது அவசியமானது! ஆனால் அதனை கட்டுவதும் கட்டாமல் விடுவதும் அவர் அவர் உரிமை, வணம் கட்டும் உரிமையை கோரியது முதலில் யார் சைவத் தமிழர்களே!.ஊத்தை கோமணம் கட்டலாம் தோச்சுக் கட்டலாம் ,சந்தையில் ரெடி மெட் கோமணம் வாங்கி கட்டலாம் ஏய் கட்டாமலும் விடலாம்! இப்ப என்னய்யா? ஈழத்தில் பார்ப்பானிய கோவணத்தை கட்டும் இவர்கள்.
முதலில்கோமண எதிர்ப்புபோராட்டக்க காரர்களை புலம் பெயர் நாட்டில்
இருக்கும் இவர்கள் தீவிரமாக எதிர்ப்பார்கள்.புலம் பெயர் தமிழர்கள் பக்க சுஜனலவாதிகள் தாங்கள் சுன்னத்துச் செய்ய மாட்டார்கள் மற்றவர்களை செய்யச் சொல்லுவார்கள். மற்றவர்களுக்கு செய்யும் போது சந்தோசப் படுவார்கள் . ஆகா அருமையிலும் அருமையான எதிர்வினைகள்
ஓ)! விவா(த) நோக்கில் கட்டுரை பதிவிடப்படுகிறது. ஏனென்றால் கோமணம் கட்டுவது தான் பிரச்சினையாச்சே! கட்டாயம் (ஓ)!! விவா(த) நோக்கு இருக்க வேண்டும்.
கட்டுரையைப் பதிவிட்ட இனியொரு ஆசிரியருக்கும், பின்னூட்டம் இட்ட நணபர்களுக்கும் நன்றி. இக்கட்டுரை இலங்கைத் தமிழர்களை நோக்கியோ, புலம் பெயர் தமிழர்களை நோக்கியோ எழுதப்பட வில்லை. இந்தியத் / தமிழகத் தமிழர்களை நோக்கி எழுதப்பட்டது.
திரு.பாலன் அவர்களே!
//பார்ப்பனீய எதிர்ப்பு ” என்பதை கையில் எடுத்து தமிழக மாணவர்கள் போராடினால் இவர்களே [ இலங்கைத் தமிழர்களே] ” அவர்களுக்கு தேவையில்லாத வேலை தானே ” என்று சொல்லும் அபாயமாமும் உண்டு.// “பார்ப்பன எதிர்ப்பு” என்பதைக் கையில் எடுப்பது, இலங்கைத் தமிழர்களை ஆதரிக்க வேண்டும் என்பதற்காக அல்ல. அது இந்தியத் / தமிழகத் தமிழர்கள் முதலில் தங்களை விடுவித்துக் கொள்ள. தங்களை விடுவித்துக் கொண�¯
�டால் அன்றோ பிறருக்கு உதவ முடியும்?
//ஏனென்றால் ஈழத்தில் பார்ப்பனப் பாத்திரம் வகிப்பவர்கள் இவர்கள்// பாரப்பனர்களின் பாத்திரத்தைப் பார்ப்பனர்கள் மட்டுமே வகிக்க முடியும். மற்றவர்கள் வகிக்கிறார்கள் என்பது பார்ப்பனர்கள் நம் மீது சுமத்தி இருக்கும் கருத்தியல் வன்முறை. எந்த ஒரு பார்ப்பனரும் இன்னொரு பார்ப்பனரை அவர் திறமைக் குறைவானவர் என்பதற்காக அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த வேலைக
ளைச செய்ய வேணடும் என்பதை ஒப்புக் கொள்ள மாட்டார். ஆனால் திரு.பாலன் குறிப்பிடும் ”இவர்கள்” தங்கள் சாதியினரைக் கீழே அழுத்துபவர்கள். இது பார்ப்பனிய குணம் அல்ல. உண்மையில் ”இவர்கள்” தாங்கள் அடைந்த உயர்வை அச்சத்தினாலோ ஆசையினாலோ பாதுகாத்துக் கொள்ள வழி தெரியாமல் விழிப்பவர்கள்.
திரு ராமியா அவர்களுக்கு
தமிழக மாணவர்கள் போராட்டம் நடத்துவது தங்களை விடுவித்துக் கொள்ள அல்ல.இப்போது அவர்கள் குரல் கொடுப்பது ஈழத்தமிழர்களுக்காகவே.!!!
பார்ப்பனீயம் என்பதே” மற்றவனை விட நானே உயர்ந்தவன் ” என்று சொல்வது தான்.இந்த சரக்கு நன்றாக உள்வாங்கப்பட்டதால் தான் இன்று தமிழகத்தில் சாதி கலவரங்ககள் நடை பெறுகின்றன என்பதை நீங்கள் மறுக்க முடியுமா? பார்ப்பனர்கள் விசத்தை இறக்கி விட்டு இன்று வேடிக்கை பார்க்கிறார்கள் என்பதை நீங்கள் மறுப்பீர்களா?
அதனால் தான் இன்று மாணவர் போராட்டத்தை திசை திருப்ப நினைப்பவர்கள் ” தேவர் ” சிலையை உடைக்கிறார்கள். இந்த விதமான் திசை திருப்பல்கள் முக்கிய பிரச்சனைகள் வரும் பொது நடைபெறுகின்றன.
ஆனால் எந்த பார்ப்பானும் சாதிக்கலவரங்ககளில் இப்போது ஈடுபடுவதில்லை.பார்ப்பானால் நசுக்கப்படுகின்றோம் என்று சொல்லும் ” வீர மறத் தமிழர்களே ” இந்த காரியங்களை செய்கிறார்கள்.!!
இதைத் தான் இலங்கையில் சிங்களவனும் செய்கிறான்
//தமிழக மாணவர்கள் போராட்டம் நடத்துவது தங்களை விடுவித்துக் கொள்ள அல்ல.இப்போது அவர்கள் குரல் கொடுப்பது ஈழத்தமிழர்களுக்காகவே.!!!// தங்களை விடுவித்துக் கொள்ளாமல் மற்றவர்களை எப்படி விடுவிக்கப் போகிறார்கள்? முடிவு மன நிறைவு அடைய முடியாதபடி அமையும் போது, தங்கள் ஆற்றல்கள் எல்லாம் வீணானதை அறிந்து மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாத நிலையில் வருத்தப்படலாம் என்று திட்டமிடுகிறார்களா?
//பார்ப்பனீயம் என்பதே” மற்றவனை விட நானே உயர்ந்தவன் ” என்று சொல்வது தான்// இல்லை நண்பரே! பார்ப்பனியம் என்பது “மற்றவர்களை விட நாங்களே உயர்ந்தவர்ககள் என்று சொல்வது தான்.“ அது தான் தாங்கள் கூறி இருக்கும் மற்ற விவரங்கள் உண்மையாக இருப்பதற்குக் காரணமாக இருக்கிறது.
தமிழக மாணவர்களின் போராட்டம்: வரலாற்று மீள் சூழற்சியா…? முன்னோக்கியதா…?
இன்று ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக தமிழகத்தில் நடைபெறுகின்ற மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டங்களை நாம் மதிக்கின்றோம். தமிழக மாணவர்களின் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் மதிப்பதுடன் புரிந்துகொள்ளவும் முயற்சிக்கின்றோம். இவர்களின் இந்த செயற்பாடுகள் எந்தவகையிலும் நகைப்புக்கும் எள்ளலுக்கும் உள்ளாக்கப்பட வேண்டியதல்ல. அவ்வாறு பார்க்கப்பட வேண்டியதும் அல்ல. ஆனாலà
� இந்தப் போராட்டம்இ இதற்குப் பின்னாலுள்ள அரசியல் மற்றும் இவற்றின் விளைவாக ஈழத் தமிழர்களின் விடுதலையில்இ வாழ்க்கையில் ஏற்படப்போகின்ற நன்மைகள் மற்றும் பாதிப்புகள் என்பன நிச்சயமாக ஆராயப்பட வேண்டியவை. இதை அடிப்படையாகக் கொண்டே சில குறிப்புகளை இக் கட்டுரை முன்வைக்கின்றது.
தமிழகத்தில் மாணவர்கள் நடாத்தும் போராட்டத்தினால் ஈழத் தமிழ் தேசத்திலிருந்து சிறிலங்கா இராணுவம் வெளியேறுவதுடன்இ அரசியல் கைதிகளின் விடுதலை செய்யப்பட்டும்இ ஈழத் தமிழ் மக்கள் தம்மைத் தாமே ஆளுவதற்கான உரிமையும் சுயநிர்ணைய உரிமையும் கிடைக்குமானால் அது விரும்பத்தக்கதே. இதற்குமாறாக இந்தப் போராட்டத்தின் விளைவுகளால் ஈழத் தமிழ் தேசம் மேலும் மேலும் ஒடுக்குமுறையை சந்�®
�ித்து தனது விடுதலையை முன்னெடுப்பதற்கான சகல வழிகளும் மூடப்படுமாயின் இப் போராட்டம் தொடர்பாக நாம் மீள் பரிசீலனை செய்யவேண்டும்.
/ மேலும் வாசிக்க… http://meerabharathy.wordpress.com/
Lets have a IQ test for the author and compare it with that of the average Iyers and Iyangars and decide if what he says is right ? BTW I am not one of them but I feel pretty confident I can beat the tripe out of this guy !
What will you achieve by this Mr.Gundu Balu? Let us assume that you win this bet; even then the fact that people with low level I.Q to high level I.Q are available in all communities is unaltered. Also the fact that all high positions are occupied by brahmins, which meeans that high level jobs are occupied by the low I.Q brahmins and other traitor brahmins who protect them is also unaltered.
Oh well my response was censored by the editor, I am sorry you can’t read it.
ஏம்பா ஐயரு பசங்களும் தமிழ்தானே, அது பிளவு இல்லியா? அத்திவாரமே சரியில்லைன்னா கட்டிடம் எங்கேய்யாநிக்கப்போகுது. இத எழுதுறவருக்கு ஐயர் அலர்ஜின்னா அவுரு சர்டெக்ஸ் போட்டுக்கணும் இங்கேயாவந்து எழுதிறது.
பார்ப்பனர்கள் தமிழர்களா இல்லையா என்று இங்கு பேசவில்லை. திறமைசாலிகள் அனைத்து சமூக மக்களிலும் இருக்கும் பொழுது பார்ப்பனர்கள் மட்டுமே உயர்நிலைப் பணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப் படுவதும், பார்ப்பனர்களில் உள்ள திறமைக் குறைவானவர்களை அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த வேலைகளைச் செய்வதில் இருந்து தப்ப விட்டு, சொகுசான வேலைகளைப் பெற முடிய வைப்பதுமான அயோக்கியத் தனமான விசை இந்நாட்டில் இருக்கிறது என்பது தான் குறிப்பிடப் பட்டு உள்ளது. இந்த விசையை உருத் தெரியாமல் அழித்த பிறகு தான் ஒடுக்கப்பட்ட மக்கள் தாங்கள் விரும்பும் மற்ற செயல்களைச் செய்ய முடியும் என்றும் கூறப்பட்டு உள்ளது. இதில் அலர்ஜி எங்கு வந்தது?
Why do you talk nonsense here, who said the people score well in your competitive exams do not get the jobs when they score well. You have to get out of your complex first, the world has changed and people have moved on except for a few like you.
கொள்ளு விதைத்துவிட்டு எள்ளு விளையவில்லையே என கவலைகொள்ளும் இனமாகவே தமிழின வாழ்வு தொடர்கிறது. தமிழர் தங்களைத் தாங்களே அடிமைப்படுத்துவதற்கான வர்ணாச்சிரம முறைகளையும், புராணங்களையும், இதிகாசங்களையும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு பாலர் வகுப்பிலிருந்து போதித்துவிட்டுப் பார்ப்பணரைச் சாடுவது வேடிக்கையானது. எல்லாவற்றையும் விட, தமிழன் தன்னைப் பாலர் பராயத்திலிருந்தே மாற்றிக்கொள்வதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டால் தமிழன் தமிழனாகத் தலைநிமிர்வான்.
நணபரே! தமிழர் தங்களைத் தாங்களே அடிமைப்படுத்துவதற்கான வர்ணாச்சிரம முறைகளையும், புராணங்களையும், இதிகாசங்களையும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு பாலர் வகுப்பிலிருந்து கற்றகு் கொடுப்பதைத் தடுத்து விட்டு அதிகார மையங்களில் நமக்குரிய பங்கைப் பெறப் போராட வேண்டுமா? அல்லது அதிகார மையங்களில் வலிமையான இடத்தைப் பிடித்த பிறகு பாடத்திட்டங்ளை மாற்ற முடியமா? எது முதலில் செய்யப்பட வேண்டும்?
சிறகை விரி பின்பு சிரி.
சிறகை விரிப்பதற்கு முன்பாக பறவை சிரிக்க முற்படுமானால் அதன் சிரிப்புச் சத்தம் அப் பறவையை உண்பதற்கு முற்படும் விலங்குகளுக்கும் கேட்கும். அத்தகய விலங்குகள் அருகே வரும்போது பறவை பறக்கமுடியாது விலங்குகளுக்கு உணவாகும். அதுபோலவே தமிழன் அடிமை விலங்கை உடைக்காது அதிகார இடத்தைப்பிடிக்க முயன்றால் எதிரிகள் அருகே வரும்போது அடிமை விலங்கு தப்பிக்க விடாது. அதுவும் தமிழன் தனக்குத்தானே அடிமை விலங்கை பூட்டிக்கொள்ள வைத்திருப்பது மிகவும் கொடுமையானது.
ஈழத்தமிழர் பிரச்சினைக்கு கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டம் பெரும் வெற்றி என்று சொல்லிக்கொள்ளலாம். ஆனால் உண்மை நிலவரம் வேறு. தமிழகத்தில் ஆயிரக்கணக்கில் இருக்கும் கல்லூரிகளில் ஒரு சிலவற்றில் மட்டும் மாணவர் போராட்டம் தலையெடுத்தது. அந்த கல்லூரிகளிலும் அனைத்து மாணவர்களும் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. (சென்னையில் மட்டும் 500 கல்லூரிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இத்தனை கல்லூரிகளில் இருந்து எத்தனை மாணவர்கள் போராட்டத்தில் பங்கெடுத்தனர்? வெகு சொற்பமே!). கலந்து கொண்ட மாணவர்களிலும் பெருவாரியானவர்கள் peer pressure காரணமாகத்தான் கலந்து கொண்டார்கள். அவர்களுக்கு ஈழத்தமிழர் பிரச்சினை பற்றி எதுவும் தெரியாது. மேலும் கடனை உடனை வாங்கி மிகுந்த கஷ்டத்தோடு பிள்ளைகளை படிக்க வைக்கிறோம். ஆனால் அவர்கள் போராட்டம் கீராட்டம் என்று அலைந்து தங்கள் வாழ்க்கையில் மண்ணைப்போட்டுக்கொள்கிறார்கள் என்று பல பெற்றோர்கள் அங்கலாய்த்துகொண்டதையும் காணமுடிந்தது. பல பெற்றோர்களுக்கு இந்த போராட்டம் வெறுப்பை தான் ஏற்படுத்தியது. நிறைய மாணவர்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டதை கேட்டு கை கொட்டி மகிழ்ச்சியோடு ஆர்ப்பரித்தார்கள். இதை நானே வேதனையோடு கண்டேன். இங்கே எங்கே இருக்கிறது ஈழ மக்களின் மீதான கரிசனையும் மனிதாபிமானமும்? கோவையை சேர்ந்த ஒரு பேராசிரியை, இந்த போராட்டம் பிரபாகரன் மகன் கொல்லப்பட்டதை கண்டித்து நடக்கிறது என்று தொலைப்பேசியில் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். தமிழகத்தில் இருக்கும் படித்தவர்களே ஈழ மக்களின் பேரழிவை இந்த லட்சணத்தில் புரிந்து வைத்துள்ளார்கள். சாதாரண மக்களை பற்றி என்ன சொல்ல?. இந்த போராட்டத்தை கம்யூனிச அமைப்புக்கள் தங்கள் கொள்கை வக்கிரத்துக்கு ஏற்ப வளைக்க முயற்சித்தன. கிறித்துவ அமைப்புக்கள் தங்கள் கொள்கை வக்கிரத்துக்கு ஏற்ப வளைத்தார்கள். திராவிட கட்சிகளோ இந்த போராட்டத்திற்குள் நுழைந்து ஆதாயம் அடைய முயற்சித்தன. ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கம். எதிர்காலத்தில் என்ன ஆகுமோ தெரியவில்லை.
ஆனால் இவற்றுக்கிடையில் சில விஷயங்களும் நடந்தன. அக்கிரகாரப்பண்ணை என்று அழைக்கப்படும் ஐ.ஐ.டி-க்குள் மாணவர்கள் ஈழ மக்களுக்காக பேரணியும் உண்ணாவிரதமும் நடத்தியது ஒரு பெரிய ஆச்சரியம். அந்த மாணவர்களுக்கு ஈழப்பிரச்சினை பற்றி அனைத்தும் தெரிந்திருந்தது. விஷயம் தெரிந்தவர்களை கூட்டி வந்து கருத்தரங்கமும் நடத்தினார்கள். மற்ற மாநில மாணவர்களின் ஆதரவையும் திரட்டினார்கள். ஒரிரண்டு நாட்கள் மட்டுமே நடந்தாலும் இது மிகப்பெரிய விஷயம். அவர்கள் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
இந்த போராட்டத்தின் போது இலக்கில்லாத பல விஷயங்கள் இடம் பெற்றன. தமிழீழம் தான் வேண்டும் என்று பதாகை வைத்திருந்தது. பிரபாகரனின் படத்தை தூக்கிக்கொண்டு திரிந்தது. இதெல்லாம் இந்த போராட்டத்துக்கான ஆதரவு தளத்தை மிகவும் குறுகியதாக்கிவிடும். அனைத்திந்திய அளவிலும் உலகளவிலும் ஈழ மக்களுக்கு ஆதரவு கிடைக்கவேண்டும் என்றால் மேற்கண்டவற்றை தவிர்க்க வேண்டும். கீழ் கண்ட இரண்டு விஷயங்களை மட்டும் பிரதானப்படுத்தவேண்டும்.
1. போரின் இறுதிக்கட்டத்தில் மனித உரிமை மீறல்களும் இனப்படுகொலையும் வக்கிரமாக நடைபெற்றன. சாதாரண பொது மக்கள் ஒரு லட்சத்தக்கும் மேல் கொடூரமாக கொல்லப்பட்டார்கள். இதற்கு சிங்கள படையினரும் அவர்களின் மிகுந்த உயர் மட்டத்தில் இருக்கும் அரசியல் தலைவர்களுமே பொறுப்பு. விடுதலைப்புலிகளும் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டனர். ஆனால் அவர்கள் இன்று இல்லை. கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனில் சர்வதேச அளவில் சுதந்திரமான போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். இப்போது சுதந்திரமாக அதிகாரத்துடன் வலம் வந்து கொண்டிருக்கும் போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
2. போர் முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகியும் எஞ்சி இருக்கும் தமிழர்களுக்கு பிரச்சினை தீரவில்லை. அவர்களின் நிலமும் வீடுகளும் ஆக்கிரமிக்கப்டுகின்றன. வழிபாட்டுத்தலங்கள் அழிக்கப்படுகின்றன. அவர்களின் அடையாளம் துடைக்கப்படுகிறது. வாழ வழியில்லாத இம்மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும். ஒரு காத்திரமான சுயாட்சிக்கு பண்ணாட்டு சமூகம் வழி வகை செய்ய வேண்டும். தமிழர் பகுதியில் ராணுவ மயமும் சிங்கள மயமும் அகற்றப்பட வேண்டும். இதற்கு பண்ணாட்டு சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேற்கண்ட இரண்டு விஷயங்கள் மட்டும் எப்போதும் முன்வைக்கப்பட வேண்டும். பிரபாகரனின் படம் அல்ல.
தமிழகத்தின் மெத்தப்படித்த அதிமேதாவிகளுக்கு கூட இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழருக்கும் அத்தீவின் வடகிழக்கில் பாரம்பரியமாக வாழும் ஈழத்தமிழருக்கும் இடையே உள்ள வேறுபாடு தெரியாது. இன்னொரு நாட்டுக்கு டீ எஸ்டேட்டில் வேலை செய்யப்போனவர்கள், பஞ்சம் பிழைக்கப்போனவர்கள் எப்படி தனி நாடு கேட்டு போராடலாம் என கேட்கிறார்கள். நான் உரையாடியவர்களில் மிகப்பெரும்பாலானோர் இம்மாதிரியான அறியாமையைத்தான் கொண்டிருக்கிறார்கள். ரொம்பவும் சலிப்பாக இருக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களும் (அனைவரும் அல்ல) இந்த விடயத்தில் இதே மாதிரியான தற்குறிகள் தான். எப்படிப்பட்ட வஞ்சகமும் அநியாயமும் ஈழ மக்களுக்கு நடந்திருக்கிறது என்பதை அறியாத மாணவர்கள் பல இடங்களில் சிரித்துக்கொண்டே குரல் எழுப்புவதையும் மறியல் செய்வதையும் புகைப்படங்களில் காண முடிந்தது. இத்தகைய அலட்சியமான செயல்பாடுகளுக்கு காரணம் அறியாமையே. இந்த அறியாமையை போக்கினால் ஒழிய ஈழத்தமிழர் விவகாரத்தில் தமிழக மக்களிடத்தில் குறிப்பாக மாணவர்களிடத்தில் மிகப்பெரிய மாற்றமும் விழிப்புணர்வும் வரும் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் இன்றைய மாணவர்கள் தான் எதிர்காலத்தில் பல்வேறு அதிகார அமைப்புக்களிலும் தொழில்களிலும் (உள்ளூரில் இருந்து உலகளவில்) பொறுப்பு வகிக்கப்போகிறவர்கள். அடுத்த தலைமுறைக்கு இந்த விடயங்களை கொண்டு போகிறவர்களும் இவர்கள் தான். ஆகவே தமிழகத்து மாணவர்கள் ஈழ விவகாரத்தில் அனைத்து விடயங்களையும் அறிந்தவர்களாக இருக்க வேண்டும். புரட்சிகர அமைப்புக்கள், விவரம் தெரிந்த மாணவர்கள், தமிழ் அமைப்பினர் ஆகியோர் ஈழத்தமிழர் வரலாறு, அவர்களின் யாழ்ப்பாண ராச்சியம் குறித்த வரலாறு, ஈழத்தமிழருக்கும் இந்திய வம்சாவழி தமிழருக்கும் உள்ள வேறுபாடு, பிரச்சினைக்கான காரணங்கள் ஆகியவற்றை மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கு விளக்கி அறிவூட்ட வேண்டும். பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் குறிப்பாக பேருந்துகளில் கல்லூரி மாணவர்கள் பொது மக்களுக்கு பிரச்சாரம் செய்ய வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேசுவது பொது மக்களிடம் நன்றாக எடுபடுவதை கண்டிருக்கிறேன். தமிழ் அமைப்பினர் ஒரு குக்கிராமத்தில் இருக்கும் ஒரு வீடு பாக்கியில்லாமல் பிரச்சாரம் செய்ய வேண்டும். அறிவியல் மிகவும் வளர்ந்துள்ள இக்காலத்தில் சாதனங்களை பயன்படுத்தி கருத்தரங்கம், கலந்துரையாடல், பிரச்சாரம் ஆகியவற்றை செய்யலாம். இப்போது போராடிய மாணவர்கள் பெரும்பாலும் சட்ட மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளையும் புலங்களையும் சேர்ந்தவர்களே. இது போதாது. இந்த போராட்டத்தில் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் ஏன் அதிகம் பங்கெடுக்கவில்லை? அவர்கள் தமிழர்கள் இல்லையா? அவர்களுக்கு மனிதாபிமான உணர்வு இல்லையா? கடின உழைப்புக்கும் நுண்ணறிவுக்கும் சொந்தக்காரர்களான அவர்களையும் இழுத்து வரவேண்டும். தமிழகத்தை சேர்ந்த புத்திஜீவிகளிடம் (மெத்தப்படித்த அறிவாளிகள், அரசு அலுவலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், தொழில் அதிபர்கள், பண செல்வாக்கு கொண்டவர்கள், மருத்துவர்கள், பொறியியல் வல்லுனர்கள், உயர்கல்வி பயிலும் மாணவர்கள், தமிழ் நாட்டிலிருந்து வெளிநாட்டில் குடியேறிய தமிழர்கள் ஆகியோர்) பிரச்சாரம் செய்து ஆதரவை அணுகி பெறுவதும் இன்றிமையாதது.
இன்றைக்கு புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் மேற்கத்திய நாடுகளில் பத்து லட்சத்துக்கும் கூடுதலான எண்ணிக்கையில் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் நன்கு படித்தவர்களாகவும் மிகப்பெரிய பதவிகளிலும் இருக்கிறார்கள். பலர் பெரும் பணக்காரர்களாக உள்ளார்கள். ஆகையால் தான் இந்தியா போன்ற பெரிய நாடுகளின் தடைகளையும் மீறி சிங்கள இனவெறி அரசுக்கு எதிராக இவர்களால் உலகளவில் லாபி செய்யவாவது முடிகிறது. இன்றைய உலகில் சாதாரண மக்கள் எத்தனை கோடி பேர் ஒன்றாக சேர்ந்து கொண்டு போராடினாலும் அதற்கு பலன் அவ்வளவாக இருக்காது. ஆனால் அறிவுஜீவிகளை அதிகம் கொண்ட ஒரு சிறிய இனம் உலகத்தையே கட்டுப்படுத்த முடியும். வெறும் ஒன்றரை கோடி பேர்களை கொண்ட யூத இனம் இதற்கு ஒரு உதாரணம். ஆகவே தமிழகத்தில் மிகுந்த ஆங்கில புலமையும் தமிழ் இன உணர்வும் கொண்ட திறமையான மாணவர்களை உருவாக்கவேண்டும். உலகெங்கிலும் தமிழர்கள் உயர் அதிகார பீடங்களை அலங்கரிக்க வேண்டும். அதற்கு ஏற்றாற்போல் நம் கல்வி முறையை மாற்றி அமைக்க வேண்டும். (ஐ.நா மனித உரிமை குழுவின் தலைவராக இருக்கும் நவநீதம் பிள்ளை அம்மையார் எனும் ஒரே ஒரு நபர் சிங்கள அரசுக்கு எத்தகைய நெருக்கடியாக மாறினார் என்பதை சொல்ல தேவையில்லை)
இலங்கை தமிழ்நாட்டை விட சிறிய நிலப்பரப்பு. சிங்களர்களின் எண்ணிக்கை வெறும் ஒன்றரை கோடி தான். ஆனால் தனி நாடும் இறையாண்மையும் இருப்பதால் வெறும் ஒன்றரை கோடி சிங்களர்களும் அவர்களின் அரசும் எட்டு கோடி எண்ணிக்கையில் உள்ள தமிழ் மக்களை துச்சமாக எண்ணி இன அழிப்பை மேற்கொள்ள முடிகிறது. இந்திய அரசும் தமிழ் நாட்டையும் தமிழர்களையும் உதாசீனப்படுத்தி விட்டு சிங்கள அரசை தாஜா செய்கிறது. தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடுகிறது. உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடினால் மட்டுமே உலகத்தின் கவனத்தை ஈர்க்க முடியும். தமிழகத்தில் இருக்கும் கட்சிகளிடையே இவ்விடயத்தில் புரிந்துணர்வும் கருத்தொற்றுமையும் தேவை. ஆனால் தி.மு.க என்னும் கட்சி இருக்கும் வரை தமிழக அரசியல் கட்சிகளிடையே ஒற்றுமை வருவது கடினம் என்றே தோன்றுகிறது. இவர்களின் ‘டெசோ’ சார்பில் நடந்த முழு அடைப்பே இதற்கு ஒரு உதாரணம். ஆளும் கட்சியின் ஆதரவு மறைமுகமாகவாவது இருந்தால் தான் இம்மாதிரியான போராட்டங்கள் முழு வெற்றியடைய முடியும். ஆனால் ஆளும் அ.தி.மு.க-வின் ஒப்புதல் இல்லாமல் கருநாநிதியாலும் அவரின் எடுபிடிகளாலும் அரசியல் ஆதாயத்துக்காகவே நடத்தப்பட்டது தான் இந்த டெசோ பந்த். இப்போது தமிழகத்தை உலுக்கிக்கொண்டிருக்கும் இந்த ஈழப்பேரழிவை முன்னிறுத்தி சுய ஆதாயம் தேட கருநாநிதி முயன்று வருகிறார். வரும் நாட்களில் இவரும் இவர் கட்சியும் எடுபிடிகளும் பல்வேறு போராட்டங்களையும் பித்தலாட்டங்களையும் முன்னெடுத்து தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற முயல்வார்கள். இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் தேர்தல் வருகிறதல்லவா? ஆகவே கொலைகாரனின் கூட்டாளியாக இருந்து ஆதாயம் தேடியது போதாதென்று பிண வீட்டிலும் ஆதாயம் தேடும் இந்த மாதிரியான திராவிட கட்சிகளிடம் தமிழகத்து மக்கள் வரும் நாட்களில் உஷாராக இருக்க வேண்டும். அது தான் இப்போதைய தேவை.
“அக்கிரகாரப்பண்ணை என்று அழைக்கப்படும் ஐ.ஐ.டி … “, I like that !
உலகிலுள்ள நாடுகளில் ஒரு அரசில் அங்கம் வகிக்க தயாராகும் கட்சிகள் தமது எண்ணங்களை நிறைவேற்றுவதற்கு ஆரம்பத்திலேயே பேரம் பேசத்தொடங்குவார்கள் இல்லையேல் காலப்போக்கில் மறைமுகமாக அ ழுத்தங்களைக்கொடுத்து தமது காரியங்களை சாதித்துக்கொள்ள முற்படுவார்கள் ஆனால் எதிர்மாறாக இந்தியாவில் மட்டுமே- குறிப்பாக தமிழ் நாட்டில்-வெறும் அமைச்சா் பதவிகளுக்காக நேரடியாக பேரம் பேசுவதும் மற்றய விடயங்கள் என்றால் உன்னோடு கோபம் உன்னோடு நேசம் என்ற குழந்தைகளின் மனோபாவத்தில் தாங்கள் அங்கம் வகிக்கும் அரசாங்கத்திற்கெதிராக உப்புச்சப்பற்ற உண்ணாவிரதம் இருப்பதும் பின்பு அவா்கள் ஏதாவது உறுதிமொழியை வழங்குவதும் எத்தனை காலங்களாக நடக்கின்றது.முதுகெலும்பற்ற தலைவா்களை காலங்காலமாக சுமந்து வந்த தமிழ் இனத்திற்கு எப்படி விமோசனம் கிடைக்கும்?. அத்தோடு நாம் பல பிரிவினைகளை உள்ளடக்கிய இனமாகும் அதன் மூலம் மனித நேயமற்ற கொடுமைகளை சரித்திரம் பூராகவும் புரிந்துள்ளோம் அதன் பழிவாங்கல்களையும் பலன்களையும் இப்போது உணரக்கூடியதாய் உள்ளது.
இலங்கையில் நிர்மூலமாக்கப்படும் தமிழ் இனத்தைக்காப்பாற்ற என்னைப்பொறுத்தவரை ஒரேயொரு வழிதான் உள்ளது. அது; புலம்பெயா்ந்த நாம் மறுபடியும் இலங்கையை நோக்கி இடம் பெயா்வது. சாத்தியமா?? இதை விட்டு பிராமணியை குறைகூறுவதால் எந்தப்பயனும் இல்லை.