இலங்கையின் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் திட்டமிட்டநிலப்பறிப்புநடைபெற்று வருகின்றது. இந்தநிலையில் மகிந்த ராஜபக்ச புதிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.
மாகாணசபைகளுக்கு காணி அதிகாரங்களை வழங்க முடியாது என ஜனாதிபதி, இந்தியாவிடம் தெளிவுபடுத்தியதாகக் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் உள்ளிட்ட ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பல கட்சிகள் காவல்துறை அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்படுவதனை விரும்பவில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
13ம் திருத்தச் சட்ட மூலத்திற்கு அப்பாலான தீர்வுத் திட்டம் என்பதன் மூலம் செனட் சபை உள்ளிட்ட தீர்வுத் திட்டத்தையே தாம் கருதியதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடமும் இந்தத் தீர்வுத் திட்டம் குறித்து தாம் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
திருமண வைபவமொன்றில் கலந்து கொண்ட போது நட்பு ரீதியாக ஜனாதிபதியும், கரு ஜயசூரியவும் இந்தக் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, செனட் சபையானது மத்திய அரசாங்கத்தையும் மாகாணசபைகளையும் இணைக்கும் ஓர் கருவியாக தொழிற்படும் என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மகிந்த என்ற பாசிச ” வேதாளம் ” திரும்பவும் இனவாத மரத்தில் ஏறிவிட்டது. இது எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால் மகிந்த திருந்தி விட்டார். தங்கத்தாம்பாளத்தில் வைத்து தமிழ்மக்களுக்குத் தீர்வைத்தருவார்.தை பிறந்த வழியோடு தமிழருக்கு மகிந்த வழி காட்டுவார் . இப்படி சிங்கள எசமானுக்கு விசுவாச அடிமையாய் குரைக்கும் தமிழர் விரோத எட்டப்பர் கூட்டம், இனி என்ன அடுத்து அறிக்கை விடுவது என்று றூம் போட்டு யோசிக்கட்டும்.( ஏற்கனவே ஒரு முறை பத்திரிகைகளில் ஒரு செய்தி வந்தது, இந்தியாவின் வற்புறத்தலில், தமிழ்மக்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட. காணி, பொலிஸ் அதிகாரம் வழஙப்படும் என்று. சிங்கள்த்தில்நம்பிக்கை இல்லாத பல தமிழர்களும் உண்மையில்நம்பித்தான் போட்டார்களாம் இதை கேட்டு.