மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் அவசியமில்லை என மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்த போது போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை ஒரு சிறிய நாடு என்பதனால் மத்திய அரசாங்கத்தின் கீழ் அதிகாரங்கள் காணப்படுவதில் தவறில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நாட்டின் சகல தமிழ் மக்களினதும் உரிமைகளை உறுதி செய்வதற்கு மாகாணசபை முறைமை ஒரு சிறந்த திட்டம் என்ற போதிலும், பொலிஸ் அதிகாரங்கள் அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களுக்கு சம உரிமைகளை வழங்குவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கில் சிங்கள மக்களை அரசாங்கம் மீள் குடியேற்றி வருவதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வீணாக குற்றம் சுமத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் எந்தவொரு மூலையிலும் காணிகளை கொள்வனவு செய்ய தமிழ் மக்களுக்கு உரிமை இருப்பதாக மீள் குடியேற்ற பிரதி பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார்.
இவன் ஒருத்தன் பைத்தியக்காரன் மாதிரி பேசிக் கொண்டு.
மன்னிக்கவும் தமிழ்மாறன். ஒருவேளை உங்களைத்தான் நீங்கள் திட்டிக்கொள்கின்றீர்களோ? என தவறாக எண்ணிவிட்டேன். பின்னர்தான் புரிந்தது நீங்கள் கருணாவை பற்றி கருத்துரைத்திருக்கிறீர்களென்று.
அவா்கள் மேலாதிக்கம் கொண்டவா்கள் அவா்களின் இடையில் அகப்பட்டவா்கள் நியாயம் என்று தாம் உணர்கின்றவிடயத்தைகூட சொல்ல முடியாதவா்களாகவே வாழவேண்டும் அதற்கு மேலாக இப்படி பேசுங்கள் என்று வேண்டப்பட்டால் மறுக்கவா முடியும் இதைத்தான் இமெல்டா சுகுமாரும் செய்கின்றார் இன்னும் எத்தனையோ!!!!
பாலஸ்தீனபிரச்சனையில் யெருசலேம் நகரமே தீா்வுக்கு தடையாக உள்ளதுபோல நமது பிரச்சனைக்கு காவல்துறையை கொடுப்பதா இல்லையா என்பதிலேயே பல காலங்கள் இழுத்தடிக்கப்படலாம்.
கருணா இல்லாதா ஊருக்கு வழி எதுக்கப்பா?
ஐயா இதை செய்தியாக்கி எமது பொன்னான நேரத்தை மண்ணாக்க முடியாது. கருணா ஒரு நவீன அடிமை.
எல்லாரையும் உன்னைப்போல முதுகெலும்பு இல்லாதவர்கள் எண்டு நினைச்சியோ துரோகி.தமிழருக்கு எது தேவை, எது தேவை இல்லை எண்டு சொல்ல நீ தேவை இல்லை எட்டப்பனே.நீ போட்டது நாய் வேசம், என்ன செய்ய நீ குரைத்துத் தான் ஆக வேண்டும்.நீ அமைப்பினுள் , தலைமைக்குத் தெரியாமல் செய்த கொலை , கொள்ளை,நிதி மோசடி, பெண் போராளிகள் மீதான வன்புணர்வு இப்படி எல்லாவற்றையும் மறைத்து, அழிக்கத்தானே நீ பிரதேசவாதம் பேசி ,பிளவை உருவாக்கி ஓடிப்போனாய். இப்படி எல்லாம் பேசிவிட்டு எப்படி காக்கையனே உன்னால் எம் மக்கள் முன்னால் வலம் வரமுடிகிறது. மானம், ரோசம்,சொரணை இல்லாத உணக்கு எல்லாம் எதுக்கு கோர்ட்டும்- சூட்டும் .அது இல்லாமலே நீ எம் மக்கள் முன் வா. உணக்கும் அது இருந்தும் இல்லாதது போல் தான். 50 வெள்ளிக் காசுக்கு யூதாஸ் , இயேசுவைக்காட்டிக் கொடுத்து , பின் மனம் வருந்தி தூக்கில் தொங்கியதுபோல்,நீயும் ஒருனாள் தூக்கில் தொங்கும், அல்லது தொங்கவிடப்படும் காலம் ஒருநாள்நிச்சயம் வரும் துரோகி-