முஸ்லிம்கள் ரமழான் நோன்பை அனுஷ்டித்து வரும் வேளையில், மஹியங்கனை நகரில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் அரபா பள்ளிவாசல் மீது நேற்றிரவு 11.20 மணியளவில் கற்களால் தாக்குதல் நடாத்தியதோடு, அங்கு பன்றி இறைச்சியையும் வீசியெறிந்துள்ளனர்.
அன்னிய உளவு நிறுவனங்கள் மற்றும் இலங்கை அரசு, குறிப்பாக பாதுகாப்புச் செயலரும் இனப்படுகொலையின் சூத்திரதாரிகளில் ஒருவருமான கோத்தாபய ராஜபக்ச வின் அனுசரணையுடன் உருவாக்கப்பட்ட பொதுபல சேனா என்ற அமைப்பு முஸ்லீம்களுக்கு எதிரான சிங்கள பௌத்த வெறியை வளர்த்து வருகின்றது. இத் தாக்குதலின் பின்புலத்தில் பொது பல சேனா என்ற அமைப்பே செயற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது. இலங்கையில் ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் ஒன்றிணைந்து சிங்கள தொழிலார்களையும் இணைத்துக்கொண்டு பேரினவாதப் பயங்கரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலைக்குத் வந்தாகவேண்டியுள்ளது. அரசோடு ஒட்டிக்கொள்ளும் பிழைப்புவாத முஸ்லிம் தலைவர்கள் இதற்கெல்லாம் கண்டன அறிக்கயோடு நிறுத்திக்கொள்கின்றனர்
தமிழ்ப்பேசும் மக்கள் மத்தில் குறிப்பாக எந்த அரசியல் இயக்கங்களும் அற்றுப் போயுள்ள நிலையில் ஒடுக்குமுறைக்கு எதிரான உழைக்கும் மக்களின் இயக்கம் அவசிய தேவையாகியுள்ளது.
It is still a local problem that the Sri Lanka Police can handle. There is now an organisation called, Transparency International. They have rated Sri Lanka Police quite high compared to others in other parts of the world. l