ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரஷ்யாவின் மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. நேற்று மாலை நடைபெற்ற வைபவமொன்றில் ஜனாதிபதி மஹிந்தவுக்கு இந்த கௌரவப் பட்டம் வழங்கப்பட்டது. உலக சமாதானத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்புக்காகவும் பயங்கரவாதத்தை முறியடிப்பதில் வெற்றியீட்டியமைக்காகவும் இவ்விருது வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்யாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இப்பல்கலைக்கழகத்தின் பொன்விழாவையொட்டி நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மகிந்தாவுக்கு டாக்டர் பட்டம் மற்றூம் ஆயுதம் வாங்கப் பணம் என்றூ ரஸ்யா அதிக்மாகவே செய்கிறது.சோழியன் குடுமி சும்மா ஆடாது என்னென்ன மர்மங்களே யார் அறீவார்.
ஆயுதம், பணம், ஒத்துழைப்பு, ஐக்கிய நாடுகள் சபையில் வக்காலத்து என்று எல்லாம் தந்தோம். சபாஷ் ராஜபக்சே, இந்தா உனக்கு தமிழனை கொத்து கொத்தாக கொன்று குவித்ததற்கு டாக்டர் பட்டம். இலங்கைக்கு எதிராக போர் குற்றம், மனிதஉரிமை மீறல் போன்ற பல குற்றச்சாட்டுக்கள் உலக நாடுகள் முன்வைத்துள்ள நிலையில் ரஷ்யா செய்த செய்துகொண்டு இருக்கும் மனிதஉரிமை மீறல்களை யாரும் தட்டிக்கேட்கக் கூடாது என தனக்கு எப்போதும் சார்பா வாக்களிக்க ஒரு உற்ற நட்பு நாடு இலங்கைதான் என்று இதன் மூலம் உலகிற்கு எடுத்து உரைத்துள்ளது.
கொலையாளிகளுக்கு கலாநிதிப் பட்டம் கொடுப்பது புதினமான விசயமல்ல.ஜோர்ஜ் புஷ் (1) ஈராக்கில் கொன்று குவித்ததற்கு, ரொரொன்ரோ பல்கலைக் கழ்கம் கலாநிதிப் பட்டம் கொடுத்தது.இதில் வேடிக்கை என்னவெனில் கம்யுனிசமும்,காபிடலிசமும் மூலதனம் பற்றிய பார்வையில் கால்மாக்சிடம் முழு மாக்ஸ் பெற்று விட்டார்கள்.
ரஷ்யாவில் இருப்பது கம்யூனிசமா?
20 வருஷமாக என்ன செய்துகொண்டிருந்தீர்கள்?
Rip Van Winkle கதை தெரியுமா?
நோண்டி எடுத்து சீண்டி விளையாட என் கருத்துகளா உங்களுக்கு கிடைத்தது? நீங்கள் உங்கள் அறிவையா அல்லது அறியாமையையா வெளிப்படுத்த முனைகிறீர்கள்? சிறுவர் கதையில் வரும் Rip Van Winkle இனது 20 வருசத்தை எடுத்து ரசியாவில் 20 வருஷத்தின் முன்புதான் கம்யூனிசம் அழிந்து போனதாக,பெரிய மனசுடன் கதை சொல்ல வருகிறீர்களா?மசாலா கைகளில் மட்டுமல்ல, மண்டையிலும் வேண்டும்.
//..20 வருஷமாக என்ன செய்துகொண்டிருந்தீர்கள்….//
ரஷ்யாவில் 20 வருடத்துக்கு முன்பு ஏதோ கம்மியூனிசம் இருந்த மாதிரி கதைக்கிறீர்கள்.
பட்டம் கொடுக்கும் பல்கலைக்கழகத்தின் பழைய வரலாறு (கம்யூனிச வரலாறு) தெரியுமா?
ரோஹன விஜவீராவின் விசாவை கான்சல் பண்ணியவர்கள் இப்ப்ல்கலைக்கழகத்தினர் (கம்யூனிச அரசு). ஏன் எனத்தெரியுமா? ரிப் வான் விங்கிள் ஆவது தண்ணியடிச்சு முழிச்சுப்பார்க்கும் போது 20 வருசம் லேற். ஆனால் எங்கள் மார்க்சியவாதிகள் தண்ணியடிச்சு வெறி மெத்திப்போய் விழிக்கமுடியாமல் கம்யூனிசம் தேடி அலைகிறார்கள்