அரச படைகள் மக்கள் மீது இராணுவ ஒடுக்குமுறையைப் பிரையோகிக்கும் போது அதற்கு எதிராக மக்கள் நடத்தும் தற்காப்பு யுத்தமே ஆயுதமேந்திய போராட்டமாக விரிவடைகிறது. ஆயுதப் போராட்டம் தவிர்க்க முடியாத சூழ்னிலைகளில் வேறு வழிகள் இல்லாத நிலைமையில் எழுச்சி பெறும் இதனையே இலங்கையில் வன்முறையாகக் காட்ட முற்படுகிறார்கள். குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் தலைவர்களும் இதனைச் செய்து முடிக்கின்றனர்.
இதுவரை காலமும் இயக்கங்களினதும், இராணுவத்தினதும் ஆட்சி அதிகாரங்கள் இருந்தபடியால் மக்களுக்கான நல்ல பணிகளை செய்ய முடியாமல் போய் விட்டதாகவும், இப்போதும் இந்த இயக்கங்களின் எச்ச சொச்ச ஆட்சி அதிகாரங்கள் இருப்பதாகவும், இந்த இயக்கங்கள் இருக்கும் வரைக்கும் மக்களுக்கான எந்த பணிகளையும் செய்ய முடியாதெனவும், இந்த நிலைமைகளை மாற்றி அமைத்தாலே நாடும் மக்களும் உருப்படும் எனவும், வடமாகாண முதலமைச்சர் என்று சொல்லப்படுகின்ற க.வி.விக்னேஸ்வரன் கூறினார்.
இதேவேளை இந்த இயக்கங்களே மல்லாகம் நீதிமன்றத்தை தீயிட்டு கொழுத்தியதாகவும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
வடமாகாணசபையின் ஏற்பாட்டில் நெடுங்கேணி பிரதேசத்தில் இன்று (17.10.2014) நடைபெற்றுவரும் நடமாடும் சேவையில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இந்த நடமாடும் சேவையில் கூட்டமைப்பின் வடமாகாணசபையின் அமைச்சர்கள் ப.சத்தியலிங்கம், பொ.ஐங்கரநேசன், த.குருகுலராஜா, பா.டெனிஸ்வரன் ஆகியோரும், வன்னி எம்.பிக்கள் செல்வம், வினோ, ஆனந்தன் ஆகியோரும், உறுப்பினர்கள் இந்திரராசா, தியாகராசா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
விக்கியின் பேச்சுக்கு மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் இவர்கள் அனைவரும் வாய்மூடி மௌனியாக இருந்தனர்.
வேறொருவரும் தூண்டாமலா ஆயுதந் தாங்கியது? உண்மையில் தன்னிச்சையாக ஈழம் பூராக பாதிக்கப்பட்ட தமிழர் சார்பாகவா இல்லை செருப்புத்தோல் இரத்தத் திலகம் எனப் பேய்க்காட்டிய அதிகார வர்க்கத்தின் சாதி அடக்குமுறையின் உச்சக் கட்ட ஓட்டுனர்களின் அடியாற்கள் சிலரின் உணர்ச்சி வசத்தாலும், மடமையாலும், பேய்க்காட்டப்பட்டமையாலும் -இல்லையா?!
எவ்வளவு தூரத்துக்கு அரச அடக்குமுறையின் உக்கிரந் தாங்கப் பட்டு வேறு வழிகளும் யுக்திகளும் மக்களை ஈடுபடுத்தி ஆராயப்பட்டன?
கொழும்பை மையப்படுத்தி வாழ நிர்ப்பந்திக்கப் பட்ட தீவு (அதாவது ஈழம்) முழுக்கப் பரந்த பெரும்பான்மைத் தமிழர் ஆயுதப் போராட்டத்திலிருந்து துண்டிக்கப்பட்டதன் பிற்புலம் என்ன?
…
இப்பேர்ப்பட்ட கேள்விகளின் பதில்களில் தெளிவு இருந்தமையாலும் ஒரு முன்நாள் நீதிபதி தனது மூலைச்சலவையின் வெளித்தோன்றலை அடிக்கடி வெளியேற்ற விட்டால் தானே இன்னும் பேய்க் காட்டி இன்னும் சிறிது காலத்துக்காவது வேலை வாங்கலாம் என்ற நரித்தனத்தாலும் ‘இவர்கள் அனைவரும் வாய்மூடி மௌனியாக இருந்தனர்’ எனத் தெரிந்து கொள்ளவும்.
மேலும் புதனன்று தொண்டமானாற்றில் வடபகுதிக்கான நீரியல் ஆய்வு மையத் திறப்பு விழாவில் தனது “சபையை” வைக்கோல் பட்டறை நாய் எனத் தூண்டிவிட்ட ஜனாதிபதியை விக்கினேஸ்வரன் நாய் பேய் என்று திருப்பி ஏசிய பொழுது நாட்டின் பிரதம நீதியரசர் நியமனம் பிழை என்றும் முள்ளிவாய்க்காலில் நடந்தவை சம்பந்தமாக கோத்தபாயவை மறைமுகமாக சுட்டிக் காட்டி ஜெனீவாவில் தான் விசாரணை என்றும் குறிப்பிட்டிருந்தமை பின்னர் சிறு பயத்தையும் ஏற்படுத்தியிருக்கலாம்.
புலத்தில் பாதுகாப்பான நிலையில் இருந்து கதைக்கக்கூடியனவும் ஸ்ரீலங்காவின் தற்போதைய பாரிய அரச பயங்கரவாதத்தின் பிடியில் சிக்குண்டு புலத்திலிருந்து நினைத்துப் பார்க்க முடியாத மனசஞ்சங்களுடன் கதறுவதையும் ஒப்பிடுவது பிழை. எனினும் விக்கினேஸ்வரரின் அண்மைய ஆயுதந் தாங்கிய முன்னாள் போராட்டக் குழுக்களுடன் இணைந்து முன்நகர்வது சிக்கலானது என்ற தொனியிலான அண்மைய உளரலோடு மனந்திறந்த பேச்சுக்களுக்கு இடம் விட்டுக்கொடுப்பது தான் சரி.
விக்கினேஸ்வரன் மேல் தனிப்ப்பட்ட முறையில் கோபம் காட்டுவது பிழை.
செருப்புத்தோல் , இரத்த திலகம் எல்லாம் செஞ்சட்டை , செங்கொடி , சுத்தியல் , அரிவாள் போன்றவற்றின் வழித்தோன்றல்தான், பரிணாம வளர்ச்சிதான் என்பதை புரிந்துகொண்டு பேசுங்கள் .
வம்புக்கு பொய்ச்-சோசலிசம் (சமத்துவம்) , பொய்ப்-புரட்சி எனப் பேசியோருக்கும் தமது அதிகாரவர்க்கத்து தவறான மேன்நிலைகளை பேணுவதற்காக சிங்கலவன் தோலால் செருப்புத் தைக்கவேண்டும் என பொய் வீரம் பேசியோருக்கும் பல தொடர்புகள் இருக்கலாம்.
ஆனால் வேறுபாடுகளேஅதிகம்.
தமிழ்ச்சமூகத்தில் அதிலும் யாழ் குடாநாட்டில் அன்று பொய்ச்-சமத்துவம் பேசியோருக்கு எப்போதும் உண்மையிலேயே சமத்துவம் கோருவோரின் பெருந்தாகம் சவாலாகவே இருந்தது.
பொய்யுரைத்தோரால் தீய வழிகளில் கையாளப்பட்டோரே ஆயுதப் போர் என்று பாய்ந்தடித்து இப்போ மண்கவ்வியும் விட்டனர். தமிழ்ச்சமூகத்தின் அதிவெட்கக்கேடான சாதியத் தாக்கங்களை அழிப்பதற்காக ஒரு சிறிதளவேனும் சோசலிச வாதிகள் அக்காலத்தில் முயன்றதை நாம் நினைவுகூற வேண்டும்.
தாங்கள் அடிக்கடி செருப்பு , தோல் , என பிதற்றி வருவதால் கேட் கிறேன் . இதனை யார் எப்போது எந்த இடத்தில் கூறினார்கள் என்று குறிப்பிட முடியுமா ?
ஒருவர் இன்னொரு இனத்துக்காரர் மேல் அவ்வாறு குறிப்பிடுவது போல்தான் வர்க்கப்புரடிசியாளர்கள் வர்க்கபேதம் பேசி இரத்த ஆறு ஒட வைத்தார்கள் .
விக்கினேஸ்வரன் ஆயுததாரிகளை இயக்கங்கள் எனக் குறிப்பிட்டு நீதிமன்றமொன்றின் எரிப்பு பற்றி பிதற்றுவதாக இருக்கலாம். அதற்கு விட்டுக் கொடுக்க வேண்டிய நிலையில் தான் தமிழர் உள்ளனர் என்பது எனது கருத்து.
உண்மையில் எப்படி ஆதிக்க வர்க்கம் தமிழ் மக்களை 60, 70 -களில் ஏமாற்றிப் பிழைக்க எத்தனியத்தது என்பது தெரியாதவராக இருப்பின் மங்கையர்க்கரசி அமிர்தலிங்கத்தின் தமிழ் இளைஞரை உசுப்பேத்திய சிங்களவரன் தோலால் செருப்புத்தைப்பேன் என்ற வரலாற்றுப் பதிவுகளை நோக்கவும். அச்சொற்பிரயோகத்துக்கு மறுப்புக்கள் தான் வருவதாக இருந்தால் பலராலும் வைக்கப்படும் அதே குற்றச்சாட்டை நோக்கவும்.
தமக்கான ஒவ்வொரு வாக்கும் தமிழீழத்துக்கான ஒவ்வொரு ஆணையாகும் அதற்கு முன்னராகவே உசுப்பேற்றி விட்டவன் சந்தர்ப்பவாத அரசியல் மேதாவி அமிர்தலிங்கம். அக்காலகட்டத்து சிங்கள இனவாதமும் தமிழர் மேலாக அதிகரித்து வந்த தாகுதல்க்ளும், ஏன் இனவழிப்பின் அடிக்கற்கள் பலவும் உணர்ச்சிகளை ஏற்றி விட உணர்ச்சி மேலிட்ட தமிழ் இளைஞர்களிடம் இருந்து இரத்தத் திலகம் பெற்று நாடகமாடினான் அமிர்தலிங்கம். இரத்தத்தால் திலகம் வைப்பது ஒரு சர்வசாதாரண அரசியல் ஆதரவு கோரும் வித்தையுமானது.
தமிழரசுக் கட்சி எத்தனையோ வழிகளால் திரிபுற்று இப்போது ஏதோ ஒரு கூட்டுறவுக்குள்ளிருந்து, மேலாதிக்கப் போக்குகளும் ஓரளவு ஒடுக்கப்பட்டு 13ஆம் திருத்தச் சட்டம் இந்தோ-லங்கா ஒப்பந்தம் என்று பாரத மாதாவின் சாரிக்குள் ஒளித்திருந்து ஏதோ சத்தமும் போடுகிறது. அதன் பிரதிபலனே விக்கினேஸ்வரன் என்பதையும் அறியவும்.
அதன் பின் இடதுசாரி அல்லது செஞ்சட்டை, செங்கொடி, சுத்தியல் , அரிவாள் என்பன இன்னொரு வழி வகை வந்தது என்பதையும் அதில் பல்வேறு நியாயங்கள் புதைந்திருப்பதையும் ஈழத் தமிழரிடையே இனித்தான் உண்மையான சமூக உணர்வுடன் உண்மையின் அடிப்படையில் சமத்துவ அரசியல் வருந்தருவாய் உதயமாகிவருவதையும் அறிக.
யார் இந்த விக்கினேஸ்வரன் திடீர் என்று முளைத்தவர் மக்களுக்காக முதலை கண்ணீர் வடிப்பதன் அர்த்தம் அடுத்த இலைக்சன் நகர்வை தாண்டியா??? அல்லது அவர்தம் விக்கினேஸ்வர சாமியை வழர்க்கவா ???? மிகப்பெரும் பலமைவாய்ந்த தமிழ் நூலகத்தை எரித்த ஜக்கிய தேசிய கட்சியுடன் கூட்டு செரப்போவது யார் ?????இவர்களுக்கு ஆதரவு கொடுப்பதை விட நேரடியாக தனி சிங்களம் மட்டும் தெரிந்த ஆதரவாழனுக்கு ஆதரவு கொடுப்பது மேல்.காரணம் அவனுக்கு ஒரு மொழியின் தாக்கம் தெரியும் .விக்கினேஸ்வரன் போன்றவர்கள் திருட்டு கூட்டனிக்கு மட்டுமே தகுதி உடையவர்கள் …..மொழி நமது அடையாளம் விக்கினேஸ்வரன் யார்???? பதவி மட்டுமே தீர்மாணங்கள் எடுக்க தகுதி உடையது .விக்கினேஸ்வரன் என்ற ஆசாமி எங்கிருந்தோ வரும் தகவ்ளுக்கு ஆமா சாமி போடும் நபர்
Vicky was elected by the people of NP knowing well who he was. It doesn’t matter when he entered politics. Politics is not only for those who had seniority or ancestors. It is definitely not for those living in the comfort of the West most of whom who have given up their rights to vote there. Let the people of NP decide who they want to govern them.