மலையக மக்கள் 150 வருடங்களுக்கு மேலாக இங்கு வசித்து வருகின்ற போதும் இதுவரை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கப்படவில்லை. மலையக சமூகம் தொடர்ந்து பின்தங்கியருப்பதற்கு இதுவே காரணம். எனவே, இவர்கள் ஒரு தேசிய இனமாக அங்கீகரித்துக் கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என என போராதனைப் பல்கலைக்கழக பொறியில் பீட பேராசிரியர் சிவசேகரம் தெரிவித்துள்ளார்.
பேராசிரியர் சிவசேகரம் எழுதிய ‘இலங்கை தேசிய இனப்பிரச்சினையும் தீர்வுக்கான தேடல்களும்” எனும் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றுகையிலேயே இக்கருத்தினை அவர் தெரிவித்திருக்கிறார்.
வெளியீட்டு விழாவில் தொடர்ந்து உரையாற்றுகையில், மலையக கல்வி மான்கள், புத்தி ஜீவிகள், சமூக நலன் விரும்பிகள் மலையகத்தைச் சார்ந்த ஏனைய தரப்பினருடன் இணைந்து இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், இதனை சாத்தியமாக்குவதற்கு மலையகத்தில் கல்வி வளர்ச்சி ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியம் எனவும் பேராசிரியர் சிவசேகரம் தெரிவித்துள்ளார்.
இனப்பிரச்சினை குறித்து முனைப்பான விவாதங்கள் முன்னெழத் தொடங்கியிருக்கிற ஒரு கால கட்டத்தில் பேராசிரியர் சிவசேகரம் இந்நூலை வெளியிட்டிருப்பதனாது காலப் பொருத்தம் மிக்கதொரு செயலாகும். இந்நூலை வெளியிட்ட புதிய மலையகம் அமைப்பினர் பணியும் விதந்து பேசவேண்டியதொன்றே.
இன்று வலுவடைந்துள்ள இனப்பிரச்சினை குறித்த வாதங்களுக்கு இந்நூல் ஒரு புதிய வலுவினை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு மேலெழுகிறது.
பேராசிரியர் அடையாள அரசியலை சில இடங்களில் எதிர்க்கிறார் சில இடங்களில் ஆதரிக்கிறார் ் அரசியல்வாதி ஆகிவிட்டாரோ?
சிவசேகரம் ஒரு பேராசிரியர் அல்லர்.
முடிந்தால் செய்தியில் திருத்தம் செய்யவும்.
http://www.pdn.ac.lk/eng/old/mechanical/menu/staff/acdemic%20staff.html
நன்றி …இனியொரு…..
மாங்கொட்டை மரமாகித்தான் தன்னை நீரூபிக்கிறது தன்னை மாங்கொட்டை எனும் நினைப்பிலேயே இருந்தால் அது மரமாகி இருக்கவே முடியாது மயூரன்.உங்கலுக்கு எல்லாம் இரத்தம் பார்த்தால்தான் அது சிவப்பு என்பது தெரியும்.
ஓ நான் பிழையாக எழுதிவிட்டேன், மன்னிக்கவும் என்று இவர் எப்போது சொல்வார் என் நாம் காத்து இருக்கிறோம்!
மயூரன்!>சிவசேகரம் ஒரு பேராசிரியர் அல்லர்!> இதை எதைக்கொண்டு சொல்கின்றீர்கள்?
படித்து எழுதிக் கிழித்ததை வைத்து. முடிந்த்தால் நீங்கள் திருந்தப்பாருங்கள் திருவாளர் …… , ….., மயூரன், ….,….,……
சி. சிவசேகரமே பல கூட்டங்களில் இவ்வாறு அறிமுகப்படுத்தப்படுவதை மறுத்திருக்கிறார் என்பதால் சொல்கிறேன்.
இந்த அறிமுகம் பல விதங்களில் சிக்கலானது.
ஒன்று உண்மையிலேயே அவர் தற்போது பேராசிரியர் அல்லர்.
இரண்டு தமிழ்ச் சூழலில் “பேராசிரியர்” என்று விளிப்பதன் பின்னாலுள்ள சமூக மனநிலை பிற்போக்கானது.
மயூரன் இங்கிலாந்தில் சேர் என்றூ பஸ் கண்டக்கருக்கு பட்டம் கொடுத்து இருக்கிறார்.அவர் சிரித்திப் பேசுவார் எனும் ஒரு காரணத்துக்காகவே.நீங்கள் எந்த உலகுக்காரர் என்றே புரியவில்லை.
திரு சிவசேகரம் அவர்களின் விளக்கம் கண்டேன். அவசரப்பட்டதற்கு மன்னிக்கவும்!
மலையக மக்கள் ஓர் தேசிய இனம்தான். இதற்கு தேடல்கள் முயற்சிகள் தேவையில்லை.
சொல்லத்தான் நினைக்கின்றேன் சொல்ல முடியாமல் தவிக்கின்றேன் என்று பயந்து போய் கிடக்கும் பலக் கோடி பேர் மத்தியில் சொல்லத் துணிந்து சொன்னதை செய்யும் தோழர் சிவசேகரத்தின் நுhல் வரவேற்கத்தக்கது நுhலிலே சொல்டலப்படாத கைதுகள் தொடர்பாக தோழர் இராகலைப்பன்னீரின் விமர்சனம் தொடர்பாக நுhலாசிரியர் பதில் தருவார் என்றும் நம்புகின்றேன்
காலத்திற்கு தேவையான புத்தகம் எல்லோராலும் வாசிக்கப் பட வேண்டிய புத்தகம்
மலையக மக்கள் ஒரு தேசிய இனம் தான் எனினும் அதனை உறுதிப்படுத்துவதற்கு மக்கள் மத்தியில் அத்தகைய நிலையை உறுதிப்படுத்த கடுமையாகப் போராட வேண்டும். தேசிய இனத்துக்குறிய பண்பாட்டை வளர்ப்பதற்கு வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் இது கடுமையான அதே வேளையில் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணியாகும்
என்னைப் பற்றிய பயனற்ற ஒரு விவாதத்தை நான் விரும்பவிலை.
நான் 1978 முதல் 1984 வரை பேராதனையில் இணைப் பேராசிரியராக (Associate Professor) இருந்தேன். புலம்பெயர்ந்து மீண்ட பின்னர் 1998இல் பேராதனையில் பேராசிரியரானது உண்மை. ஆனால் 2008இல் என் ஓய்விற்குப் பின், என் குறுகிய காலப் பணி காரணமாக, நான் ஓய்வு நிலைப் பேராசிரியராக்கப் படவில்லை.
எனவே பேராசிரியர் என என்னை விளிப்பது முறையாகாது.
அதனால், நான் அவ்வாறு என்னை அறிவிக்க வேண்டாம் என்று என்னைப் பேச அழைப்போரிடம் கேட்டுக் கொள்வதுண்டு.
இதுவரை என் வேண்டுகோள் மதிக்கப்பட்டே வந்துள்ளது.
என் துறைசாராத விடயங்கள் பற்றிப் பேசுகிற போது பிற கல்வித் தகுதிகளையோ பதவியையோ கூறிக் கொள்ளுவது தவறு என்பதும் என் எண்ணம். (அவ்வாறு கூறிக் கொள்ளுவது ஒரு வகையான ஏமாற்று என்பது என் கருத்து).
அன்பின் நிமித்தம் பட்டம் பதவிகளைக் குறிப்பிடுவோரை நான் குற்றங்கூறவில்லை. ஆயினும் உரிய முறையில் விளிப்பது அவர்கள் எனக்குக் காட்டக் கூடிய மேலான மரியாதையாகும். என் பெற்றோர் சூட்டிய பேர் போதுமானது.
என் கருத்துக்களின் பெறுமதி அக் கருத்துக்களில் உள்ளதே ஒழிய என் தகைமைகளில் இல்லை.
தயவு செய்து இதற்கு மேல் இது பற்றிப் பின்னூட்டமிடாதிருப்பது நன்று.
முதலில் ~ஜீவன்ராஜ் சொல்வதுபோல் மலையக மக்கள் தேசிய இனம்தான்>அறிமுகப்படுத்தல் என்பது அர்த்தமற்ற ஒன்று! அப்படித்தான் என்றால் இது சண்முகதாசன் காலத்து தவறின் தொடர்ச்சியே…..
திரு சிவசேகரம் அவர்கள் ஒரு மிக நல்ல கவி…அவர் ஏனோ அப்படி அறியப்படுவதில்லை. அவரின் அய்வுகள் என்னைக் கவர்ந்தவை அல்ல..ஒருவித இயங்கியலற்ற போக்ககு எப்பவும் தென்படும். தேசியங்கள் பற்றி ஒரு வித எதிர்ப்புண்ர்வுதான் அவரிடம் பலகாலமாகக் காணப்பட்டது..
சிவசேகரம் அவர்கள் மலையக மக்கள் பற்றிய (தேசிய இனம்) தன் நிலைமைகளை விளக்கவேண்டும். தங்களின் புத்தகத்தை வாசிக்காத காரணத்தினாலேயே இப்படி கேட்கின்றேன்.
தலைவர் ஆதவன் அவர்களுக்கு உங்கள் விலாசம் அனுப்புங்கள் புத்தகம் அனுப்புகின்றேன் அட்டனில் புத்தக வெளியீடு செய்த போது தங்களின் நன்பர்கள் வந்து புத்தகம் பெற்றார்கள் ஏன் அவர்கள் தங்களுக்கு புத்தகம் அனுப்ப வில்லையா?
அது இங்கு விளக்கக் கூடியளவு சுருக்கமான விடயமல்ல.
இங்கு அண்மைக் காலங்களில் விவாதங்கள் திசைதிருப்பப்பட்ட விதம் பற்றி அறிவேனாதலால், அவ்வாறு முயன்று மேலும் சில பயனற்ற விவாதங்களுக்கு வழிகோல விரும்பவில்லை.
ஓன்றை மட்டும் தெளிவாக்க முயல்கிறேன்:
20 ஆண்டுகட்கும் மேலாக மலையக மக்கள் ஒரு தேசிய இனம் என வலியுறுத்தி வந்திருக்கிறேன். என் உரையில் நான் சொன்னது அதைப் பொதுவாகவும் அரசாலும் எற்கப் படச் செய்ய வேண்டும் என்பதையே.
நான் வழங்கியது ஒரு சுருக்கமான ஏற்புரை மட்டுமே.
கிங்கிஸ்லி> தங்களின் முயற்சிக்கு மனமார்ந்த நன்றிகள். புத்தகத்தைப் பெறுவதற்கான ஒழுங்குகள் செய்துள்ளேன்!
is that that easy, then why \sri lankan tamils a national ehtnic could not win thir rights, then y sinhalese couldnot win their rights, what about muslims an ethnig group still mistreated by tamils and chased away,