உலகம் இரு மகா யுத்தங்களை சந்தித்தப்பிறகு அதிகம் பேசப்படுகின்ற, அண்மைய காலங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்த விடயமாக மனித உரிமைகள் மாறியுள்ளன.
இயற்கைச்சட்டம், இயற்கை நீதி, சனநாயக கோட்பாட்டின் வளர்ச்சி, தேசியரசுகளின் தோற்றம் என நாகரீகத்தினதும் அரசியல் கோட்பாட்டினதும் வளர்ச்சியினால் கொடுரமான ஆட்சி முறைமை ஏற்படவே மனித உரிமைகள் எனும் மனிதத்துவத்தினை பாதுகாக்கும் எண்ணம் வலுப்பெற்றது.
கிரேக்க காலத்துக்கு முற்பட்ட காலம் முதலே கொடுரமாக நடாத்தப்பட்டு வந்த ஆட்சி முறைகளின் கீழ் மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர் இடையிடையே நமது எதிர்ப்புக்களை காட்டியும் வந்துள்ளனர் ஸ்பாட்டகஸ் போராட்டம், 1215, 1688 கால போராட்டங்கள் 1789 ஐக்கிய அமெரிக்க, பிரான்சிய சுதந்திரப்போராட்டங்கள் உட்பட, 18ம் 19ம் நூற்றாண்டுகளிலும் அதற்கு முற்பட்ட காலங்களில் தோன்றிய எதிர்ப்பு எண்ணமும் ஏதோ ஒரு வகையில் உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டங்களே.
முதலாளித்துவ சமூகத்தின் தோற்றத்துடன் ஏகாதிபத்திய ஆட்சிமுறைமை மக்களை அடிமைப்படுத்தவும், அதன் ஊடாக தமது இலட்சியத்தை சாதித்துக் கொள்ளவும் முயன்றப்போது மக்கள் துன்பப்படத் தொடங்கினா.; பொறுக்க முடியாத கொடுமைகளுக்கு எதிராக மக்கள் எழவே உலகில் மனித உரிமைகள் பற்றிய பேச்சுக்கள் அடிப்படத்தொடங்கின. ஆயின் புராதன கம்யூன் சமூகத்தில் மனித உரிமைகள் மீறப்படவில்லை என மாமேதை மார்க்ஸ் கூறுகின்றார்
ஆக பொருள் முதல் வாதம், மூலதனத்தின் தோற்றத்துடனே உள்ளோர் இல்லோரையும், இல்லார் உள்ளோரையும் பகைத்துக் கொள்ள வேண்டிய மிக மோசமான சூழல் உருவானது.
இந்த பின்னணியில் தான் உலகில் நடக்கும் ஏகாதிபத்திய சனநாயக ஆட்சி முறைகளில் எல்லாம் மிகவும் மோசமான மனித உரிமை மீறல்கள் இடம் பெற்று வருகின்றன. (இவை) முதலாளித்துவ நாடுகள் மக்களுக்கு அரசியல் உரிமைகளை வழங்குவதாக பாசாங்கு காட்டி, சலுகைகள் வழங்க முனைந்தபோதே சர்வதேச நாடுகளுக்கு ஏற்புடையதான அனைத்துலக மனித உரிமைகள் சாசனம் தோன்றியது (UDHR 1948). இது முதலாளித்துவ கொள்கையை தக்கவைத்துக் கொள்ளும் ஒரு முயற்சி இதன் வழி மக்கள் அனைவரும் பயனடைய முடியாது எனக் கண்ட பின்பே மக்களுடைய மனித உரிமைகள் வெறுமனே அரசியல் உரிமைகள் மட்டுமின்றி பொருளாதார உரிமைகளையும் உள்ளடக்க வேண்டும் எனும் கருத்தேற்பு சோசலிச நாடுகளால் முன்வைக்கப்பட்டது இவ்வடிப்படையிலேயே 1966 இல் ICCPR உம் ICESCR உம் கொண்டவரப்பட்டன.
இவை இரண்டும் இரு வேறு கோணங்களில் தோன்றியவை என்றாலும் பிரித்து பார்க்கும் போது ஒன்றின் இடைவெளியை மற்றையதே பூரணப்படுத்த முடியும். சுதந்திரம் என்பதும், தேவைகள் என்பதும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையல்ல எனவே சுதந்திரம், உரிமை பற்றி ICCPR கூறினாலும் இவற்றுக்கு அடிப்படையிலான தேவைகளை பூர்த்தி செய்தல் தொடர்பாக ICESCR ஏற்பாடு செய்துள்ளது உதாரணமாக உண்பதற்கு உணவு தேடுவதே பெரும் பிரச்சினையாக, நாதியற்றுத்திரியும் ஒருவனுக்கு வாக்குரிமை இருந்து என்ன பயன்? இந்த பின்னணியில் தான் மனித உரிமைகள் பிரிக்கப்பட முடியாதவைகளாக கருதப்படுகின்றன.
இலங்கை அரசின் சமூக பொருளாதார கொள்கை, நடைமுறையினால் இலங்கையில் சிறும்பான்மையினராக வாழும் மலையக மக்களுடைய மனித உரிமைகள் பாதிக்கப்படும் விதத்தினையும், அதற்கான காரணங்களையும் இதை எவ்வாறு தடுக்கலாம் என்பது பற்றியும் எனது ஆய்வு கூற முனைகின்றது.
மலையக மக்களின் மனித உரிமைகள் மீறப்படுவது பற்றி ஆராய்வதற்கான காரணங்கள்
கி.பி 1820-1840 காலகட்டத்தில் இந்தியாவின் தென் மாநிலத்திலிருந்து இலங்கைக்கு தொழில் நிமித்தம் காலனியாதிக்க ஆங்கிலேயரால் அழைத்து வரப்பட்டவர்களே மலையக தமிழ் மக்கள். ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பனியும், ஆளுநரும் சேர்ந்து மலையக பிரதேசங்களில் பெருந்தோட்ட வர்த்தக பயிர் செய்கையை மேற்கொள்ள மனித வளம் கிடைக்கப் பெறாத சூழ்நிலையில் இலங்கையின் அப்போதைய குடிகள் (ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் கீழ் இருந்தவர்கள்.) ஆங்கிலேயர் அடிப்பணிந்து வேலை செய்ய இணங்காமையினால், வறுமை நிலையை பயன்படுத்தி அழைத்து வரப்பட்ட இனமே மலையக தமிழ் இனம்.
பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில், கொத்தடிமைகளாக அழைத்துவரப்பட்ட மக்கள் இடையில் கப்பல் மூழ்கியும் பயணத்தின் போது நோய்வாய்ப்பட்டு பலர் மாண்டும் மன்னாரை வந்தடைந்தனர். பின் நடையாக இலங்கையின் மத்திய பிரதேசத்திற்கு அழைத்து வரப்பட்டனர் தற்காலிக குதிரை லாயங்களில் தங்க வைக்கப்பட்ட இவர்கள் இன்று வரை ( அதையொத்த ) அதே வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர். 1931ம் ஆண்டு டொனமூர் சீர்திருத்தம் மூலம் வாக்குரிமை பெற்ற போதும் அது 1947, 1948 களில் கொண்டு வரப்பட்ட இந்திய பாகிஸ்தானிய ஒப்பந்தம், சிறிமா-சாஸ்த்ரி ஒப்பந்தம், பிரஜாவுரிமை சட்டங்களின் மூலமாக பறிக்கப்பட்டு பலர் 2003ம் ஆண்டு வரை நாடற்றவர்களாக வாழந்து வந்துள்ளனர்
1972ம் ஆண்டில் பெருந்தோட்டங்களை அரசாங்கம் பொறுப்பேற்ற போதும் பழைய விதமான கொத்தடிமை வாழ்க்கையும், சுரண்டலும், இன்னல்களும் இந்த மக்களை பொருத்த மட்டில் குறையவே இல்லை, அவர்கள் ஒரு தேசிய இனமாக கருதப்படவும் இல்லை.
உலகின் மிகவும் கொடுரமாக மக்களை நடாத்திய நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடங்கி இருக்கக்கூடிய அளவுக்கு மக்கள் உரிமைகள் மிக மோசமாக மீறப்பட்டன. இவ்வாறான கொடுமைகளிலிருந்தே மீண்டு வருவதற்கு முடியாத இனமாக வாழும் மலையக மக்களின் மனித உரிமைகளின் நிலை பற்றி நான் எடுத்தாராய தீர்மானித்தேன்
மனித உரிமை மீறல்கள்
UDHR, ICCPR, ICESCR உட்பட பல்வேறு உடன்படிக்கைகள் உள்ளப்போதும் மனித உரிமைகளை பேணிப்பாதுகாப்பது என்பது கடினமாக உள்ள நிலையில் இலங்கை அரசியலமைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை சர்வதேச பொருந்தனை, உடன் படிக்கைளுடன் சேர்த்து பொருட்கோடல் செய்துள்ளேன்.
Genocide Convention உடன் ICCPR இன் உறுப்புரை 27ஐ சேர்த்து வாசிக்கும் போது வாழும் உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையை அவதானிக்கலாம் அதே வேளை நேரடியாகவே ICCPR உறுப்புரை 6 ‘ஒவ்வொரு மனிதப்பிறவியும் பிரித்தெடுக்க முடியாத வாழும் உரிமையைக் கொண்டுள்ளனர் அது சட்டத்தின் பாதுகாப்புக்கு உரித்துடையது’ என்பதுடன் ஏதேட்சதிகாரமாக பறிக்கப்பட முடியாது’ என்கின்றது.
வாழும் உரிமை என்பது உடல் ரீதியான பாதுகாப்பு மட்டுமன்றி தனித்துவத்தை பேணுவதற்கு அத்தியாவசியமான மத, கலாசார, மொழி பாரம்பரியங்களின் பாதுகாப்பு கலாசார பொருளாதார வளர்ச்சிக்கு பாரம்பரியங்களின் பாதுகாப்பு கலாசார பொருளாதார வளர்ச்சிக்கு அவசியமான நிறுவனங்கள் உட்பட எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கும் கடப்பாட்டை அரசு கொண்டுள்ளது. இதற்காக அரசின் சகல துறைகளிலும் சிறுபான்மையினருக்கு போதுமான பங்களிப்பும், உச்ச வளங்களை பயன்படுத்தி அவர்களின் வளர்ச்சிக்கு அவசியமான சட்டவாக்க, நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
சிறுபான்மையினர்
· தனது தனித்துவத்தை பேணுவதற்கும், இன ஒழிப்பிலிருந்து பாதுகாப்பு பெறும் உரிமை
· உயிர் வாழ்வதற்கான தேவைகளை பெற்றுக் கொள்ளும் உரிமை
· பாரபட்சம் காட்டாமை, ஒதுக்கிவைக்கப்படாமை
· தனது சொந்த மொழியினை பயன்படுத்தும் உரிமை
· தனது பிரதேசம் தொடர்பாக தேசிய, பிராந்திய மட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்களில், சட்டவாக்கங்களில் பங்கு பற்றும் உரிமை
போன்ற விசேட உரிமைகளுடன் ஏனைய பொதுவான உரிமைகளை அனுபவிக்க உரிமைக் கொண்டள்ளனர்.
அரசின் தேசிய கொள்கை, நிகழ்ச்சித்திட்டங்கள் வகுத்தல் அமுல் படுத்தலின் போது சிறுபான்மையினர் நியாயமான நவன்களை பற்றி கவனம் செலுத்துதல் அவர்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்ளல் அரசின் கடமையாகும்(Art 5 Minority Declaration 1992) எமது அரசியலமைப்பில் சிந்தனை செய்யும் சுதந்திரம், தனது மனசாட்சி, மதத்தின்படி ஒழுகுவற்கு, பின்பற்ற உள்ள சுதந்திரம் சட்ட முரணாக கைது செய்யப்படாமலிருக்கும் உரிமை, சட்டத்தின் முன் சமமான பாதுகாப்பினை பெறவும், இனம், மதம், மொழி, சாதி, பால், அரசியல் கொள்கை பிறப்பு ஏனைய பின்புலத்தின் படி ஓரங்கட்டப்படாமலிருக்கும் உரிமை, எனும் அரசியல் உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன கருத்து வெளியிடும், தகவல் பெற்றுக் கொள்ளும் உரிமை, அமைதியாக ஒன்று சேர்வதற்கும், ஒருங்கு சேர்வதற்குமான உரிமை, தொழில் செய்யும் உரிமை, நடமாடும் உரிமை போன்றனவும் வழங்கப்பட்டுள்ளன இவை பொருளாதார உரிமைகளோடு தொடர்புடையன.
அரசியல் உரிமைகள் பொருளாதார தேவைகளை அடையக் கூடிய தகவல்களையும் கருத்துக்களினையும் தரக்கூடியன பொருளாதார உரிமைகள் மறுக்கப்படுவதனால் ஏற்படும் தீங்கு பாரதூரமானது. இந்தியாவில் 2/6 பங்கு மக்களின் பொரளாதாரம் மிகவும் மோசமானது அவர்கள் மீது சாதி வேறுபாடுகள், பொலிஸ் அவர்களை மோசமாக நடாத்துதல், வாக்குரிமை பறிக்கப்படல் (தலித்துக்கள்) இழிவான கொடூரமான நடத்துகை, பெண் சிசுக்கொலை, குழந்தைகளை விற்றல் எனும் மிகவும் கொடிய மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகின்றன.
இதே வேளை மத்தியகிழக்கு நாடுகளில் பொருளாதார அபிவிருத்தி காணப்பட்டாலும் அரசியல் உரிமைகள், சுதந்திரம் வழங்கப்படாமையானது பாரியளவிலான மனித உரிமை மீறல்கள் ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு பிராந்தியத்திற்கோ நாட்டிற்கோ பொருந்தக்கூடியதல்ல மாறாக எல்லா நாடுகளுக்கும், சமூக, அமைப்பு, இனத்திற்கும் பொதுவானதே.
இலங்கையில் மலையக மக்களின் உரிமைகள் மீறப்படுவதன் அடிப்படை அரசியல், பொருளாதார உரிமைகள் ஒழுங்காக வழங்கப்படாமையே இவர்களது உரிமை மீறல் பற்றி சர்வதேச மட்டத்திற்கு கொண்டு சென்றாலும் அதை மூடி மறைக்கும் திரையாகவும், சர்வதேசத்திற்கு கொண்டு செல்ல தடையாகவும் இலங்கையின் இனப்பிரச்சினை அரசாங்கத்தினால் பயன்படுத்தப்பட்டுள்ளது.
Bagawati C.J ‘உயிர் வாழும் உரிமை தனியானதல்ல பல உரிமைகளுடன் சேர்ந்தே அமைகின்றது’ என்றார் UDHR Article 3 – வாழும் உரிமையும், சுதந்திரம் பாதுகாப்பு பெறுவதற்கான உரிமையும் உண்டு இது பரிக்கபட முடியாது எனவும் ((Article 2) சட்டத்தின் முன் சமனாக பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் (Article 7)கூறுகின்றன. எனவே வாழ்வதற்கு தேவையான அனைத்து உரிமைகளையும், சுதந்திரத்தையும் கொண்டதே வாழும் உரிமை எனவே இது ஏனைய எல்லா உரிமைகளுடனும் தேவைகளுடனும் தொடர்புபடுகின்றது.
மலையக தமிழ் மக்களுக்கு முழுமையாக பிரஜாவுரிமை வழங்கப்படாமையாலும், பிறப்பு அத்தாட்சி, அடையாள அட்டைகள் இல்லாமையாலும் இவர்கள் அரசியல் உரிமைகள் பொருளாதார உரிமைகள் இழந்தவர்களாக உள்ளனர். குறைந்த நாட்கூலி அதிகரித்த சுரண்டல், போதியளவில் ஓய்வு வசதிகள் இன்மை, வேலை செய்யக்கூடிய சுமுகமான சூழல் இன்மை, தொழில் தளங்களில் பாதிப்பு ஏற்பட்டால் நிவாரணம் வழங்காமை, ஏமாற்றப்படுகின்றமை போன்ற பல தொழில் சார் பிரச்சினைகளை பொருளாதார ரீதியாக எதிர் கொள்கின்றனர்.
தொழில் செய்யும் உரிமை, தொழில் முயற்சியில் ஈடுபடும் உரிமை, என்பன போதியளவிலான உழைப்புக்கு ஏற்ற ஊதியம் பெறும் உரிமையையும் சேர்த்தே கருதும், ஆயின் இதற்காக போதியளவு தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்காமல் இருப்பதும், அரசாங்க நிர்வாக சேவைகளை பெருந்தோட்ட தனியார் தோட்ட முகாமைத்துவத்திடம் வழங்குவதும் மலையக தமிழ் மக்களின் உரிமை மீறப்படுவதற்கான படிகள்
வேலை இல்லையேல் பணம் கிடைக்காது, நிரந்தர வேலை இல்லாமலும், தொழில் உத்தரவாதம் இல்லாமலும், குறைந்த சம்பளத்துக்கான சுரண்டல் தொழிலில் இவர்கள் ஈடுபடுத்தப்படுவதனால் மக்களின் ஆயுள் குறைவடைந்துச் செல்கின்றது
ஓப்பீட்டளவில் மலையக மக்களின் ஆயுள் கடந்த இரு தசாப்தங்களுக்கு மேல் 60 வயதோடு நிற்க்கின்றமையும் ஏனைய இனத்தினருடைய ஆயுள் 70-75 வரை உயந்து காணப்படுகின்றமையும் இதற்கான சான்றாகும். இது அரசு மக்களின் வாழும் உரிமையை பேணுவதற்கு தவறியுள்ளது என்பதை கூறியுள்ளது
1820 காலப்பகுதியிலிருந்து வாழ்ந்து வரும் ஒரு சிறுபான்மை இன மக்களுக்கு காணி உரிமையோ, சொத்துரிமையோ இல்லை இவர்கள் சுயமாக இயங்க முடியாத Captive Workers ஆக நடாத்தப்படுகின்றனா.; தான் வாழும் வீடுகள் கூட சொந்தமில்லாமல் புதைப்பதற்கான மண் பகுதியையேனும் சொந்தமில்லாத மக்களாக இவர்கள் வாழ்கின்றனர். ஏனைய இன மக்கள் அனுபவிக்கும் இந்த உரிமைகள் மலையக தமிழ் மக்களுக்கு மறுக்கப்பட்டமை பாரபட்சமாகும். இதற்கு 99 வருட குத்தகை ரீதியில் பெரும் தோட்டங்களை தனியார் கம்பனிகளுக்கு வழங்கிய போதே மக்களையும் கொத்தடிமைகளாக வழங்கியமையே காரணம் (Under the Concept of Roman law)
தனது வசிப்பிடத்திற்கு முகவரி இல்லை, அங்கு மின்சாரம், நீர், உட்கட்டமைப்பு, வசதிகள் சீராக இல்லை இவற்றை பெற்றுக் கொள்ள தோட்ட முகாமையாளர் கடிதம், அனுமதி பெற வேண்டியுள்ளது. தோட்ட முகாமையாளர் தனியார் கம்பனியின் ஊழியர் அவர் எவ்வாறு அரசாங்க நிர்வாக கடமைகளை செய்ய முடியும்? தோட்ட முகாமையாளர் வாக்காளர் அட்டை விண்ணப்பம், வீடு கட்டுவதற்கான அனுமதி வழங்க (வேண்டிய) கூடிய அதிகாரம் கொண்டுள்ளார் இவ்விடத்திலே அவர் அரசாங்க முகவரா? அல்லது மக்கள் அவர்களின் அடிமைகளா? எனும் கேள்விகள் எழும்புகின்றன.
(ஆய்வுக் கட்டுரையின் அடுத்த பாகம் அடுத்தவாரம்…. )
It is very useful and informative. Problems of plantation workers have been ignored and undermined by various actors. This type of article is important and to be circulated to the Human Rights organisations, Community Base organisation and Civil Society because they are concern about the plight of the plation people. thank you for your effort.
Who did inherit the mantle of Chandrasekaran? Mano Ganeshan have a Front for the Western Province Tamils.
மலையகத் தமிழர்களின் சோகத்தைத் தொடர்ந்து கூறிக்கொண்டே இருக்கின்றோம். யாழ்ப்பாணத்தில் வேலைக்கு ஆட்கள் இல்லாத நிலையுள்ளது. வெளிநாட்டவரின் காணிகளை அரசாங்கம் கைப்பற்ற முயற்சிக்கின்றது. அப்படி அரசின் கைகளுக்குப் போவதனைவிட மலையகத் தமிழர்களை அழைத்து அங்கு குடியேற்றினால் அவர்கள் தமது பாட்டிலேயே வேலைசெய்வதுடன் பிள்ளைகளுக்கும் தரமான கல்வியைக் கொடுத்து முன்னேறிவிடுவார்கள். அது பற்றியும் நாம் சிந்தித்தால் எனஇன?
னாங்கள் அங்கு வர மாட்டோம், அதற்கான சூழ்னிலை இப்போது இல்லை
மீண்டும் அவர்கள் வீட்டு கூலிகளாகவும் தோட்ட கூலிகளாகவும் காணிக்காவலர்களாகவும்தான் பயன்படுத்தபடுவார்கள். மற்றும் அவர்களை அழைத்து வருவது என்ற வார்த்தையே தப்பு.
எதையும் பாதக நோக்கில் பார்க்க வேண்டாம். அப்போதைய யாழ்ப்பாணத் திமிர் பிடித்த சமூகம் இப்போ இல்லை. சிங்களவர்கள் அயலவராக இருப்பதைவிடத் தமிழர்கள் அயலவராக இருப்பதையே அவர்கள் விரும்புவார்கள். நீங்கள் கூறுவதுபோல் மலையகத்தமிழரும் இப்போ இல்லை. அவர்களின் கடின முயற்சிக்கு முன்னால் யாழ்ப்பாணத்தவர் தான் அவர்களுக்குக் கீழே வேலை செய்ய வேண்டியநிலை தோன்றும். தற்போதைய யாழ் தமிழர்கள் சோம்பேறிகளாய் விட்டனர்.
தாங்கள் சொல்வது தவறு, சமூக அந்தஸ்த்தில் என்னை விட கீழே இருக்கும் யாழ்ப்பாண தமிழர்கள், என்னை தங்களை விட கீழ் அந்தஸ்தில் இருப்பவராக கருதுவதைநன் பார்த்துள்ளேன், இங்குநான் யாழ் தமிழர் என்ரு கூறுவது வட மகாணத்தை சேர்ந்தவர்களை, யாழ் குடாநாட்டை மட்டும் அல்ல
சிறிலங்கா அரசபயங்கரவாத ஆதரவாளர்களை எந்த ஈழத்தமிழன்தான் மதிப்பான்! டக்ளசும் மாண்புமிகு சிறிலங்கா அமைச்சர்தான்! ஆனால் ஈழத்தமிழருக்கு அவர் ஒருஈனன்.
தவறுகள் எங்கும் இருக்கின்றன. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நாங்கள் எங்களு தவறை ஒப்புக் கொள்ளுகின்றோம். ஆனால் நீங்கள் திரும்பத் திரும்ப அதையே கூறிக்கொண்டிருக்கின்றீர்கள்.
சமூக அந்தஸ்த்தில் என்னை விடக் கீழே உள்ள……? அரோகரா அரோகரா இது என்ன கொடுமை சரவணா: அப்படி தாங்கள் என்ன ராJஅ வம்சமோ. அப்படி ஒரு வேளை தாங்கள் மைசூர்மகராஜா பரம்பரையோஎப்படி எல்லாம் றூம் போட்டு சிந்திக்கிறார்கள் 😀 🙂
எதையோ நினைத்து எதையோ அடித்துடைக்கிறீர்கள் உமா.
சற்று விளக்கமாகக் கூறுங்களேன்.
தங்களது தேசிக்கய் தலை தான் தான் மீன்பிடி பரம்பரை என்பதை மறந்து மைசூர் மகராஜா போல் எண்ணியது, பட்டு வேட்டிக்கு ஆசைப்பட்டு கோவனத்தை வென்றெடுத்த்து
திருநிர்மலன் அவர்கள் எனது கருத்துக்களுக்கு பதில் கூற முடியாமல் என்னை டக்ளசின் ஆள் என்று கூறுகின்றார், அவருக்கு எனது அனுதாபங்கள்
நானெங்கே உங்களை டக்ளசின் ஆள் என்றேன்.? ஏன்! ஈபிடிபி அமைப்பில் கூட அங்கம்வகிக்க முடியாதளவிற்கு ஒரு ஆளா தாங்கள்?
அவர்களாக வந்து குடியேறுவதற்கும் அழைத்து வருவதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது அதனை முதலில் புரிந்துகொள்ளுங்கள்
மலையக மக்கள் தொடர்பான இப்பிரச்சினைகளுக்கு பதில் 2011.12.31 திகதி வீரகேசரியை பாரக்க.
சிறந்த க்ட்டுரை மலையக மக்கள்; பொதுவுடைமை சித்தாந்த்தின் படி வழி நடத்தப்படும் ஒரு கட்சியாலும் ஒற்றுமை முன்னேற்றம் புதிய பண்பாடு ஆகியனவற்றை வென்றெடுக்கும் கலாசார செயற்பாடுகளை உறுதியுடன் முன்னெடுக்கும் அமைப்புகள் மூலம் மக்களை அணிதிரட்டி அவர்களது இருப்பை உறுதி செய்ய வேண்டியது உடனடி கடமையாகும்
மலையக தமிழ் மக்களுக்கு முழுமையாக பிரஜாவுரிமை வழங்கப்படாமையாலும்——- இதனை சற்று கட்டுரையாளர் விளக்குவாரா, மலையகத்தில் 77 க்கு பின்பு ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும் எழுதுவார் என்று எதிர் பார்க்கின்றேன்
As Professor Chandrasekaran suggested they will get a University, too. Minister Douglas Devananda may have a University of Wanni, Sri Lanka, in his mind. I was in Colombo when they walked Professor M. S. Mookiah back to Peradeniya. He is a Motta Vellalar.
சும்மா போங்கள் veeran, நீங்கள் படு கோமாளியான ஆள்தான்.
தங்களது பெயர் மாக்கனா அல்லது மொக்கனா
இந்த வீர் ஏன்? Maa = மா, ko = கோ, n = ன் (மாகோன்)
USA have invited 4 Members of Parliament as they want to make Colombo an important assignment for a political appointee like New Delhi, India.
மலையக தமிழருக்கு னீங்கள் இடம் கொடுக்கும் முன்பு வெளியேற்றிய முஸ்லிம்களுக்கு இடம் கொடுங்கள்,
இலங்கையில் தமிழர் தலைமைகளும் தமிழ் சிவில் சமூகமும், முஸ்லிம்களை ஒன்றிணைத்துச் செல்லவேண்டும் என்றும், வடக்கே யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீண்டும் யாழ்ப்பாணத்துக்கு வந்து தங்கள் வாழ்வைத் தொடங்க உதவ வேண்டும் என்றும் சுமார் 70 புத்திஜீவிகள் கையொப்பமிட்டு கோரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறார்கள்.
தமிழ் தேசிய கூட்டமைப்பும் அரசும் அரசியல் தீர்வு குறித்த பேச்சு வார்த்தைகளை நடத்திவரும் பின்னணியில் இந்த அறிக்கை வந்திருக்கிறது.
மாற்று மீடியா வடிவில் இயக்க
இந்த அறிக்கையின் காலப்பின்னணி குறித்து அதில் கையொப்பமிட்டவர்களில் ஒருவரான, நிர்மலா ராஜசிங்கம் அவர்கள் தமிழோசையிடம் பேசுகையில், தமிழர்கள் தாம் பெரும்பான்மை இனத்திடமும் அரசாங்கத்திடமும் என்ன எதிர்பார்க்கிறார்களோ, அதனை தம் மத்தியில் வாழும் சிறுபான்மை சமூகங்களுக்கு வழங்க அவர்கள் தயாராக இல்லை என்று கூறினார்.
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இன்னமும் போதிய உதவிகள் அரசாங்கத்தில் இருந்து கிடைக்கவில்லை என்கின்ற போதிலும், அவர்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்றும், ஆனால், முஸ்லிம்கள் அந்த சிந்தனை வட்டத்திலேயே இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2012/01/120106_nirmalaonmuslimrights.shtml
அவர் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.
இவர்கள் பறித்ததை திருப்பி கொடுத்தாலே போதும்
மிசன் செலவுல அமெரிக்காவுக்கு போயி ஒரு கத்தரிக்கா டிகிரியோட இலங்கைகு திரும்பி வந்து மிசனுக்கு நடுவிரலை காட்டிட்டு புலியாக இருந்து பின் பூனயாக மாறி இப்ப அவுங்கட மாமியாவீடு இங்கிலாந்தில இருந்திட்டு இதுவும் பேசுவாங்கோ இன்னமும் பேசுவாங்கோ.
ANRU MALAYAGA MAKALAI THIRUPY INDIAVUKU ANUPA GG.PONAMBALAM D.S.SENANAYA AVARGALIN KAI POMBAIYAKA SEYAL PATAR. APOLUTHA SELVANAYAGAM KOORINAR (INRU MALAYAGA MAKALUKU VILUNTA ADY NALAIKU ILANKAI THAMILARGALUKU VILUM ENRAVAR THEERKATHARISY.
Chandrika is cursing her father SWRD – 1956 – Dr. Colvin r de Silva.
ungal comments la irunthey theriyuthu ungal karuthukalil ootrumai illai yandru…..
muthalil nengal orumitha karuthudan seyal pada vendum….
adhu varai singgala kodi(flag) than srilangavil parrakum…
i am so sad about u people….