Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

மலையகப் பெண் அரசியல் கைதி சிறையில் மரணம் : மலையக அரசியல் கட்சிகள் மெளனம்

இனியொரு... by இனியொரு...
01/07/2013
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

புலிகளுக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டில் 1994ம் கைது செய்யப்பட்டு, நீண்ட காலம் வழக்கை எதிர்கொண்டு, தண்டனை வழங்கப்பட்டு, ஏறக்குறைய 19 வருடம் சிறைவாசம் அனுபவித்து, சிறையில் நீண்ட காலம் கடும் சுகவீனமுற்று, முறையான சிகிச்சை இல்லாமல், நேற்று பரிதாபமாக மரணமடைந்த, பதுளை லுனுகலை அடாவத்த தோட்டத்தை சார்ந்த காத்தாய் முத்துசாமி என்ற 68 வயது மலையக வயோதிப தமிழ் பெண்ணின் பரிதாப மரணம், அரசாங்கத்துக்கு உள்ளே இருக்கின்ற மலையக அரசியல் தலைமைகளின் கையாலாகாதனத்திற்கும், பொறுப்பின்மைக்கும் அடையாளமாக அமைந்துவிட்டது.

இவர்கள் அனைவரும் அரசாங்கத்துக்கு உள்ளே இருந்துகொண்டு, அரசாங்க பதவி வரப்பிரசாதங்களை அனுபவிப்பதை வேறு தவிர என்னத்தான் செய்கிறார்கள் என, இவர்களை காணும் இடமெல்லாம் தமிழ் மக்கள் கேள்வி எழுப்பவேண்டும்.

மட்டக்களப்பிலிருந்து புலிகளின் பொருட்களை பதுளைக்கு கொண்டு வந்தார் என்றும், புலிகளுக்கு தங்குமிடம் அளித்து உதவினார் என்றும் குற்றச்சாட்டப்பட்டு பதுளை லுனுகலை அடாவத்த தோட்டத்தை சார்ந்த காத்தாய் முத்துசாமி 1994 ல் கைது செய்யப்பட்டார் என அவரது மகன் கே. வரதராஜ் எனக்கு தெரிவிக்கிறார்.

அதற்காக காத்தாயிக்கு நீண்ட விசாரணைகளின் பின் தண்டனை வழங்கப்பட்டது. சிறையில் புற்றுநோய் காரணமாகவும், படுக்கை புண் காரணமாகவும் இந்த வயோதிப மாது கடும் உபாதைகளுக்கு உள்ளாகி இருந்தார். இதுபற்றி சிறை நிர்வாகத்துக்கு அறிவிக்கப்பட்டும், அவருக்கு உரிய மருத்துவம் வழங்கப்படாததில் அவர் நேற்று மருத்துவமனையில் இறந்துவிட்டார்.

மட்டக்களப்பிலிருந்து செயல்பட்ட புலிகளின் கிழக்கு மாகாண தளபதி இன்று அரசாங்க அமைச்சராக இருக்கிறார். இன்னும் பல கிழக்கு மாகாண புலி தலைவர்கள் இன்று அரசாங்கத்தின் செல்லப்பிள்ளைகளாக இருக்கிறார்கள்.

அரசாங்க சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிபாரிசின் பேரில், கொழும்பு நீதிமன்றத்தின் உத்தரவின் மூலம் புலிகளின் மகளிர் அணி தலைவி தமிழினி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு, இன்று புனர்வாழ்வு நிலையத்தில் மணமகள் அலங்கார பயிற்சி பெறுகிறார்.

ஆனால் புலிகளுக்கு உதவினார் என்ற பெயரில் கைது செய்யப்பட்டு தன் வாழ்நாளில் ஏறக்குறைய இருபது வருடங்களை சிறையில் கழித்துவிட்ட 68 வயதான இந்த மலையக தாய் சிறையிலேயே பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.

இந்த வயோதிப தாயிக்கு அவரது வயதை காரணம் காட்டி அல்லது அவரது கடும் உடல் நலக்குறைவை காரணம் காட்டி பொது மன்னிப்பை பெற்று தருவதற்கு அரசாங்கத்தில் உள்ள மலையக தமிழ் அரசியல்வாதிகளுக்கு முடியாமல் போய் விட்டது.

எத்தனையோ மலையக மற்றும் வட-கிழக்கு தமிழ் ஆண்களும், பெண்களும் தமது வாழ்நாளின் பெரும்பகுதியை சிறைகம்பிகளின் பின்னே கழித்து வரும் கொடுமை தொடர்பில், ஜனாதிபதியுடன் காத்திரமாக பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண, அரசில் உள்ள தமிழ் அரசியல்வாதிகளுக்கு இதுவரை முடியாமல் போயுள்ளது.

கடும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி தண்டனை அனுபவித்து வந்த பல சிறைக்கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். அதற்கான அதிகாரம் அவரிடம் உள்ளது. அதை யாரும் விமர்சனம் செய்ய முடியாது.

அனைத்து தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பை கேட்டு வாங்க முடியாவிட்டாலும்கூட, குழந்தைகளுடன் இருக்கும் பெண்கள் மற்றும் கடும் உடல் உபாதைகளுடன் நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்து வரும் கைதிகளுக்காவது பொது மன்னிப்பை பெற முயற்சி செய்ய வேண்டும். இதற்கு அரசில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் ஒன்றுபட்டு காத்திரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தமூலமே இந்த அரசில் இதனால்தான் அங்கம் வகின்றோம் என்று மக்களிடம் சொல்ல காரணம் கிடைக்கும். இதுவும் முடியாவிட்டால், எதற்கு இந்த அரசில் இருக்கிறீர்கள் என்ற கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியாது.

திவிநேகும மற்றும் 13ம் திருத்தம் தொடர்பில் அரசில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் கூட்டு சேர்ந்து கையெழுத்திட்டு ஜனாதிபதிக்கு மனு அனுப்புகிறார்கள். இன்று அரசு தலைமையின் அழுத்தம் காரணமாக, தமது நிலைப்பாடுகளை மாற்றிக்கொண்டு அரசுக்கு ஆதரவாக கைகளை உயர்த்துகிறார்கள்.

13ம் திருத்தம் போன்ற அரசியல் நடவடிக்கைகளை செய்ய முடிவிட்டாலும் பரவாயில்லை, தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் போன்ற மனிதாபிமான விவகாரங்களிலாவது அரசில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும் என நாடு முழுக்க வாழும் தமிழ் மக்கள் சார்பாக நான் கேட்டுகொள்கிறேன்.

மனோ கணேசன்

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
தமிழ்ப் பிரதேசத்திலிருந்து இராணுவம் வெளியேறக் கூடாது !? : ப.வி.ஸ்ரீரங்கன்

தமிழ்ப் பிரதேசத்திலிருந்து இராணுவம் வெளியேறக் கூடாது !? : ப.வி.ஸ்ரீரங்கன்

Comments 1

  1. Dr. Sri S. Sriskanda says:
    13 years ago

    Yea. Why are they silent?  Our guys want to play the Shrew and the Broom Stick Story all the time.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...