ஆயிரக்கணக்கான ஆயுதம் தாங்கியோர் பிலிப்பைன்சிலிருந்து கிழக்கு மலேசியாவில் அமைந்துள்ள சபா என்ற பிரதேசத்திற்குள் பயங்கர ஆயுதங்களுடன் உள் நுளைந்ததாக மலேசிய ஊடகங்கள் தகவல் தெரிவித்தன. எதிர்பாராத திடீர் தலையீட்டை நிகழ்த்திய ஆயிரக்கணக்கான ஆயுதம் தாங்கிய இஸ்லாமியத் தீவிரவாதிகளின் தலையீட்டைத் தொடர்ந்து மலேசிய விமானப்படைகளும், இராணுவமும் அங்கு அனுப்பிவைக்கப்பட்டது. பலர் கொல்லப்பட்டனர் அதேவேளை பலர் அருகிலுள்ள போர்னியோ தீவின் காடுகளுக்குள் நுளைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமரிக்கா உளவுத்துறையோடு தொடர்புடையதாகக் கருதப்படும் இஸ்லாமிய அமைப்பான மோரோ தேசிய முன்னணி என்ற பிலிப்பைன்சைத் தளமாகக் கொண்ட அமைப்பிற்கும் இத்தலையீட்டிற்கும் நெருங்கிய தொடர்ப்பிருப்பதாகக் கருதப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் தலிபான் இஸ்லாமிய அடிப்படை வாதிகளுக்கு அமரிக்க அரசாலேயே வளர்க்கப்பட்டது. ஆப்கான் தலிபான் பயங்கரவாதிகளுக்கு ஆயுதம் மற்றும் பண உதவிகளை வழங்கியதோடு மட்டுமன்றி நேரடியான ஆதரவுப் பிரச்சாரத்தையும் அமரிக்க அரசு மேற்கொண்டது. அமரிக்க ஜனாதிபதியான ரொனால்ட் ரீகன் தலிபான்களைத் தேசத்தின் தந்தைகள் என்று வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார்.
சிரியாவில் தலையிட்டுள்ள அல்கைதா பயங்கரவாதிகளுக்கு அமரிக்காவின் மத்திய கிழக்கின் செல்லப்பிள்ளையான சவுதி அரேபியாவின் ஊடாக அமரிக்கா ஆயுத மற்றும் பண வசதிகளை வழங்கியது. இப்போது அமரிக்க அரசு அட்ட்பூர்வமாக 60 மில்லியன் டொலர் பண உதவியை சிரியாவின் அல் கையீதா பயங்கரவாதிகளுக்கு வழங்கியுள்ளது. மலேசிய பயங்கரவாதத் தாக்குதலின் பின்புலத்திலுள்ள மோரோ தேசிய முன்னணி சவுதி அரேபிய அரச ஆதரவுடன் இன்று இயங்கி வருகிறது.
மீள முடியாத பொருளாதார நெருக்கடிப் பொறிக்குள் மாட்டிக்கொண்டிருக்கும் அமரிக்க அரசு மத்திய கிழக்கின் பின்னதாக தென்கிழக்கு மற்றும் தென்னாசிய நாடுகளின் வழங்களில் கவனம் செலுத்திவருகிறது.
மலேசியாவில் அல்கையீதா பயங்கரவாதிகளின் தாக்குதலை பல்தேசிய ஊடகங்கள் முற்றாகப் புறக்கணித்தன.
To the best of my knowledge Malaysia has the infra structure at the State and thwe Federal Level to handle problems like this