வன்னிப் படுகொலைகள் நடைபெற்ற வேளையில் அமரிக்கத் செய்மதிகள் அனைத்துக் கொலைகளையும் படம்பிடித்துச் சேமித்து வைத்துக்கொண்டன. பிரித்தானிய அரசு ஆயுதம் வழங்கிவிட்டு மனித் உரிமைகள் குறித்து அவ்வப்போது அறிக்கை விடுத்தது. உலகில் மனித உரிமையின் காவலன் என்று மார்தட்டிக்கொள்ளும் அமரிக்க சார்பு அடிமை நிறுவனமான ஐக்கிய நாடுகள் சபை இனப்படுகொலை குறித்த உண்மைகள் அனைத்தையும் திரட்டி வைத்துக்கொண்டு இலங்கை அரசுக்கு ஆதரவளித்தது. இலங்கையில் 2009ம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் இரகசிய அறிக்கையில் பல பகுதிகள் கறுப்பு மையினால் அழிக்கப்பட்டது.
இவை அனைத்தும் சில தனிமனிதர்களின் தவறுகள் அல்ல. அமரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் முன்கூட்டிய திட்டமிடலின் அடிப்படையிலேயே இவை நிகழ்தப்படுகின்றன.
லிபியாவில் வளங்களை மேற்கு நாடுகளின் பல் தேசிய வியாபார நிறுவனங்கள் ஆக்கிரமிப்பதற்காக ஊடகங்கள் அனைத்தும் இணைந்து மாபெரும் பொய்ப் பிரச்சாரத்தையே நடத்தி முடித்திருக்கின்றன.
இஸ்லாமிய அடிப்படை வாதிகளை உருவாக்கி அவர்களை உலகம் முழுவதும் உலாவவிட்ட ஏகாதிபத்தியங்கள் அதே அடிப்படைவாதத்தை முன்வைத்து மத்திய கிழக்கு நாடுகளை ஆக்கிரமித்து அங்கெல்லாம் இனப்படுகொலைகளை நடத்தியிருக்கின்றன. ஐ.நா இன் துணையோடு ஈராக்கில் லட்சக் கணக்கான குழந்தைகள் மருத்துவ வசதியின்றிக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
நான்கு வருடங்களின் பின்னர் மேற்கின் ஊடகங்கள் ஐ.நா இல் நடைபெற்றது தற்செயலான தவறு என்று புனைவுகளைக் கட்டவிழ்த்துவிடுகின்றன. இந்தியா, சீனா, மேற்கு நாடுகள் போன்ற அதிகார அமைப்புக்கள் அனைத்தும் இணைந்து நடத்திய இனப்படுகொலை சமரசமும் விட்டுக்கொடும் இல்லாத மக்கள் போராட்டத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்று கற்றுத் தருகின்றது.
உலகின் ஒடுக்கப்படும், போராடும் மக்களோடு இணைந்துகொள்வதன் ஊடாகவே விடுதலையை வென்றெடுக்க முடியும் என சொல்லித் தருகின்றது.
AS far as the Sri Lankan Tamils are concerned. Things are just starting to cookup only now at the UNO in New York, USA.