வன்னிப் படுகொலைகளின் பின்னர் இலங்கையில் நடைபெறும் இனச் சுத்திகரிப்பு வெறுமனே சிங்கள பௌத்த பேரினவாதம் என்ற நிலையைக் கடந்து புதிய வடிவங்கள எடுத்துள்ளது. வடக்கில் இராணுவத்திற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ சேவையாற்றும் சமூகம் ஒன்று உருவாகியுள்ளது. இராணுவத்தின் பாதுகாப்பு வன்முறைகளுக்கு அப்பால் அங்கு இராணுவப் பொருளாதாரம் ஒன்று கட்டமைக்கப்பட்டுள்ளது. மரக்கறி போன்ற உணவு உற்பத்தியில் ஈடுபடும் இராணுவம் சில்லரை வியாபாரத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமித்துள்ளது.
இராணுவம் விற்பனை செய்யும் மலிவு விலைப் பொருட்களோடு உள்ளூர் உற்பத்தியாளர்களுக்குப் போட்டி போட முடிவதில்லை. இதனால் வறிய விவசாயிகள் பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மத்தியதர வர்க்கத்தைப் பொறுத்தவரை இராணுவத்தின் மலிவு விலைப் பொருட்கள் ஒருவகையான வசதியை ஏற்படுத்துகிறது. இதனால் தான் இன்று ‘உரிமை பெற்றுத்தருவோம்’ என்ற சுலோகத்தோடு தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இராணுவம் முற்றாக வெளியேறத் தேவையில்லை என்று கூறுகிறது. இதற்கும் மேலாக நவீன வசதிகளுடன் இராணுவக் குடியிருப்புக்கள் வடக்கின் பல இடங்களிலும் முளைத்துள்ளன.
இது தவிர இன்று தேர்தலில் போட்டியிடும் அத்தனை தரப்பும் ஜால்ரா போடுகின்ற மேற்கு நாடுகளின் அரச சாரா நிறுவனங்களின் (NGO) அழிப்பு நடவடிக்கைகள் சமூகத்தை அவலத்தின் இருளுக்குள் அழைத்துச் செல்கின்றன. இவர்கள் இரண்டு வகையான திட்டங்களோடு வருகிறார்கள் ஒன்று நுண் பொருளாதாரம் (Micro Finance) என்பது. சிறு தொழில் தொடங்கும் நோக்கத்தோடு சிறிது சிறிதாக மீளச் செலுத்தக்கூடிய கடன் வசதிகளை ஏற்படுத்திக்கொடுகும் இவர்கள் வருமானத்தின் பெரும்பகுதியை மக்களிடமிருந்து பறித்துக்கொள்ளும் கந்துவட்டிக்காரர்கள். போரினால் அவலத்திற்கு உள்ளாக்கப்பட்ட மக்களிடமிருந்து இவர்கள் பிடுங்கிக்கொள்ளும் கொடூரம் அவர்களைத் தற்கொலை வரை அழைத்துச் செல்கிறது.
இரண்டாவது வகை அரச சார நிறுவனங்கள் ‘மக்களை சக்திமிக்கவர்களாக மாற்றுதல்(empowering people)’ என்ற திட்டங்களின் அடிப்படையில் எலும்புத்துண்டுகளை வீசியெறிகின்றன. அவற்றைப் பெற்றுக்கொள்ளும் மக்கள் அவ்வாறான உதவிப்பணத்திலேயே தங்கியிருக்கும் நிலை உருவாகின்றது. அரசுக்கு எதிராக அவர்கள் போராடுவதற்குப் பதிலாக அரச சாரா நிறுவனங்கள்(NGO) என்று அழைக்கப்படும் இந்த வெளி நாட்டு நிறுவனங்களிடம் பிச்சை கேட்கிறார்கள்.
மக்கள் தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டதும் இவர்கள் மூட்டை முடிச்சுக்களை கட்டிக்கொண்டு அங்கிருந்து வெளியேறிவிடுகிறார்கள். மட்டக்களப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பணத்தில் இயங்கிய இரண்டு உள்ளூர் நிறுவனங்கள் மக்களைக் கைவிட்டதும் மக்கள் தெருக்களில் பிச்சை கேட்கிறார்கள். திருட்டு, பாலியல் தொழில் வன்முறை என்பன அதிகரிக்கின்றன. அதுதான் அவர்களின் நோக்கமும் கூட. இவர்களில் ஒரு பகுதியினரை மிகவும் மலிவான கூலிக்கு புதிய பன்னாட்டு நிறுவனங்கள் வேலைக்கு அமர்திக்கொள்கின்றன. இந்த நூற்றாண்டின் அடிமைகளாக அவர்கள் வாழ நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.
அன்னிய நாடுகளின் உதவிகளைப் பெற்றுக்கொண்டோ அல்லது சுயாதீனமாகவோ இலங்கைக்குச் சென்று பிச்சை போட்டுவிட்டு மீண்டும் புலம் பெயர் நாடுகளுக்கே ஓடிவந்துவிடும் ‘குற்ற உணர்வு மன நோயினால்’ பீடிக்கப்பட்டிருக்கும் ஒரு கும்பலும் இவ்வாறான ‘உதவி’ களைச் செய்து வருகின்றது. இந்த உதவிகள் இனச்சுத்திகரிப்பைத் தீவிரப்படுத்துகின்றன.
இனவழிப்பை நடத்திய *ஏகபோக நாடுகளுக்கு எதிராகவும், ராஜபக்ச பாசிஸ்டுக்களுக்கு எதிராகவும், உலக மக்கள் மத்தியிலும் தமிழ் நாட்டிலும் பொது அபிபிராயத்தை ஏற்படுத்துவார்கள் என நம்பியிருந்த மக்களை அழித்தவர்களின் பொறிகளுக்குள்ளேயே பிச்சைக்காரர்கள் ஆக்கிவிட்டு அவர்களே தேர்தலில் வெற்றிபெறப் போவதாகவும் கூறுகிறார்கள்.
டக்ளசு தேவானந்தாவும், மகிந்தவும், ரனிலும், சம்பந்தனும், விக்கியும் ஆதரிக்கும் வங்கிகள் கூட இனச் சுத்திகரிப்பை கச்சிதமாக நடத்தி முடிக்கின்றன. இந்த மேல்தட்டு வர்க்கக் கும்பல் நாளந்தம் குந்தியிருந்து பியர் குடிக்கும் நண்பர்களான வங்கிகளின் முகாமையாளர்கள் ராஜபக்ச அரசின் நண்பர்கள்.
முன்னை நாள் போராளிகளுக்கும், வன்னி மற்றும் கிழக்கில் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஆட்டோ வாகனங்கள் உட்பட சிறு தொழில் தொடங்குவதற்காக வங்களில் கடன் வழங்குகின்றன. இவ்வாறன சில கடன் வசதிகளை அரச சாரா நிறுவனங்களே (NGO) ஏற்படுத்திக் கொடுகின்றன. தொழில் செய்வதற்காக வாகனங்களை வாங்கியவர்கள் சில மாதங்கள் வரை தாம் உழைத்தவற்றை வங்கிப் பணத்திற்கு வட்டியாக மட்டுமே கொடுத்து முடிக்கிறார்கள். வாழ்க்கைச் செலவுகளோடு ஒரு மாதம் வங்கிக்குப் பணத்தைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை என்றால் வங்களின் குண்டர் படைகள் வீடுகளுக்கு வந்து வாகனங்களை அபகரித்துச் செல்லும்.
ஒவ்வொரு வங்களும் குண்டர் படை நிறுவனங்களை வைத்திருக்கின்றன. பிரித்தானிய வங்கியான HSBC உட்பட அனைத்து வங்கிகளதும் குண்டர்படைகளுக்கு போலிஸ் படை துணையாகின்றது.
இதனால் உழைப்பையும் மேலதிக பணத்தையும் இழந்த மக்கள் கையேந்தும் நிலைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். விக்கியினதும் டக்கியினதும் நண்பர்கள் தான் இவர்கள். புலம் பெயர் நாடுகளிலிருந்து விடுமுறைக்கு வந்து அரைக் காற்சட்டையோடு அலையும் பணம் படைத்தவர்களுக்கு இது விளங்குவதில்லை. அவர்கள் பக்திமான் விக்கியின் விசிறிகள். மேட்டுக்குடிகளைப் பார்த்தே பரவசமடைந்த ஒரு கூட்டத்திற்கு மக்களின் அவலங்கள் ரெலஸ்கோப் சினிமா மட்டும்தான். சீமானைவிட மோசமானவர்கள் இவர்கள்.
இதை விட விக்கியும் டக்ளசுவும் ஆதரிக்கும் இந்திய நிறுவனங்கள், ஹோட்டேல்கள், உல்லாசப்பயண நிறுவனங்கள் ஆகியன இராணுவத்தின் துணையோடு நிலங்களை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. அமரிக்க, ஐரோப்பிய, சீன, ரஷ்ய நிறுவனங்களின் வகை தொகையற்ற ஆக்கிரமிப்பு ஆயிரக்கணக்கானோரை நிலமற்றவர்களாக்கியுள்ளது. இதனை அரசாங்கமும் விக்கியும் அவற்றின் புலம் பெயர் அடிமைகளும் அபிவிருத்தி என்கிறார்கள்.
தவிர, இலங்கையிலுள்ள கிரிமினல் அரசு வரிகட்டாத திருட்டுப் பணத்தைப் பதுக்குவதற்கான சொர்கபுரி. இந்திய, ஐரோப்பிய, ரஷ்ய, சீன மாபியாக்களும் நிறுவனங்களும் வரிகட்டாதா பெருந்தொகைப் பணத்தை இலங்கையில் முதலிட்டு அடிமைகளான மக்களை அரைக் கூலிக்கு சுரண்டிக் கொல்கின்றனர். ராஜபக்ச கும்பலுக்கு ஒரு சிறுதொகைப் பணத்தைக் கொடுத்துவிட்டு பெரும் பகுதியைப் பதுக்கிக்கொள்கிறார்கள். புலம் பெயர் நாடுகலிருந்து தமிழர்கள் பலர் இவ்வாறு இலங்கையில் பணப்பதுக்கலில் ஈடுபட்டமை செய்திகளாக வெளியாகின.
வறுமை தின்னும் மக்கள் வாழ்வதற்காக தமது பண்பாட்டுப் பெறுமானங்களைக் கூட விற்பனை செய்யத் தயாராகிவிட்டார்கள். பாலியல் தொழில் வன்னியிலும், கிழக்கிலும்ம் யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளிலும் வழமையான ஒன்றாகிவிட்டது.
இவற்றில் ஒரு சிறிய பகுதியையாவது தேர்தலில் வாக்குக் கேட்கும் கனவான்கள் பேசுகின்றார்களா? அவர்களால் முடியாது. ஏனென்றால் அவர்களின் நண்பர்களும் எஜமானர்களுமே அழிக்கிறார்கள்:.
பிச்சைக்கார சமூகத்தையும், ஊனமுற்றவர்களையும், பாலியல் தொழிலையும், போதைப் பொருளுக்கு அடிமையானஇளைஞர்களையும் இவர்களின் நண்பர்களே தோற்றுவிக்கிறார்கள்.
இவற்றுள் பல சிங்கள் மக்களையும் பாதிக்கின்றது. தமிழ்ப் பேசும் மக்களைப் பொறுத்தவரை அவர்களிடமிருந்து எதிர்ப்புக் குரல் வராமல் பேரினவாதத்தைப் பயன்படுத்தி மிரட்டுகிறார்கள் . சிங்கள மக்களைப் பொறுத்தவரை அவர்களிடமிருந்து எதிர்ப்பு வராமல் தமிழ் மக்களைக் காட்டுகிறார்கள்.
இவை நீண்டகாலத்திற்கு நிலைக்க முடியாது என்பது அதிகாரவர்க்கத்திற்குத் தெரியும், முழுவதையும் சுரண்டி அழித்து முடிக்க கால அவகாசம் தேவை. அதற்காகவே தேர்தல் போன்ற உக்திகளைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். விக்கி போன்றவர்களை முன்னிலைப்படுத்தி சட்டம் போட்டே எல்லாவற்றையும் முடித்துத் தரலாம் என்கிறார்கள், இதற்காக தமிழ்ப் பேசும் மக்களை உலக மக்களிடமிருந்தும், தமிழ் நாட்டு மக்களிடமிருந்தும் அனியப்படுத்துகிறார்கள்.
இந்தத் தேர்தலை ஏறெடுத்தும் பார்க்காமல் தம்மை இந்த அனைத்து ஓநாய்களிடமிருந்தும் தற்காத்துக்கொள்வதற்கான வழிமுறைகளைக் கண்டறிவதே ஒரே வழி. நீண்டகாலம் செல்லலாம் ஆனால் காலம் தாழ்த்துவது அதற்கான தீர்வல்ல. அழிவு!
the article exposes current sri lanka but no one cares about it, even marxists nationalists … fascists…..
மார்க்சிசமாவது மண்ணாங்கட்டியாவது, எல்லாம் வெறும் கண் துடைப்பு.
மனிதனை மனிதனாக நடாத்திய ஒரு மார்க்சிய கொள்ககளைக் கடைப்பிடித்து மனிதனை மனிதனாக நடாத்திய ஒரு அரசு சொல்லுங்க இதைச் சவாலாக எடுக்க தைரியம் இருக்கா ?
பாவம் மார்க்ஸ் தனது கொள்கைகள் ஆதிகார வெறிபிடித்தவர்களால் இப்படிச் சூறையாடப்படும் என அவர் நினைத்திருக்கவே மாட்டர்.
ஆனால் கம்யூனிச நடுகளில் 1000 ஆண்டுகள் சென்றாலும் அவர்கள் யாரை எப்படிக் கொண்றார்கள் என்பது தெரிய வராது .
பிரீடம் ஒவ் இன்பொரபோர்மேசன் போன்ற குற்றுயிர் ஜனனாயகத்தில் இருந்து நாம் மெலும் முன்னேற வேண்டும் அதுதான் ஸ்னொடனும் , மார்னிங்கும் , ஒரு சினொடனோ மார்னிங்கோ கம்யூனிச நாடுகளில் வெளிவரவில்லை காரணம் அங்கே மிக மிக மொசமான மனித உரிமை மீறல்கள் நடக்கின்றன .
இரன்டாம் உலகப் போரின் பின் மேற்குலக நாடுகள் காலனித்துவ கொள்கையை கைவிட ஆரம்பித்தார்கள். ரஸியா தான் பிடித்த கிழக்கு ஐரொப்பிய நாடுகளை 90 களில் தான் விட்டது .
போலந்து மக்களின் பிராடுத்தனம் பற்றி நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை .
சம உடமைக் கொள்கைக்கு நான் எதிரானவன் அல்ல ஆனால் சம உடமை என்ற பெயரில் மோசமான அடக்குமுறைதான் இது வரை நடந்திருக்கின்றது .
யாரங்கே மனிதனை மனிதனாக மதித்து ஆட்சி நடாத்தும் அல்லது நடாத்திய ஒரு சம உடமை நாடு சொல்லுங்கோ .
தனது அற்புதமான கருத்துக்கள் இப்படி துஸ்பிரயோகம் செய்யப்படும் என்று மார்க்ஸ் ஒரு பொழுதும் நினைத்திருக்க மாட்டார்.
பாவம் அந்த மனிதனும் கம்யூனிச ஆட்சிக்குள் விழுந்த மக்களும் .
ஆனால் கம்யூனிச நடுகளில் 1000 ஆண்டுகள் சென்றாலும் அவர்கள் யாரை எப்படிக் கொன்றார்கள் என்பது தெரிய வராது .
பிரீடம் ஒவ் இன்பொரபோர்மேசன் போன்ற குற்றுயிர் ஜனநாயகத்தில் இருந்து நாம் மேலும் முன்னேற வேண்டும் என்பதைல் மாற்றுக் கருத்துக் கிடையாது .அதுதான் ஸ்னொடனும் , மார்னிங்கும் , ஒரு சினொடனோ மார்னிங்கோ கம்யூனிச நாடுகளில் வெளிவரவில்லை காரணம் அங்கே மிக மிக மோசசமான மனித உரிமை மீறல்கள் நடக்கின்றன .
மேற்குலக குற்றுயிர் ஜனனாயகத்தில் கம்யூனிசம் என்றும் சொல்லும் நாடுகளை விட அதிக உரிமைகளை மக்கள் அனுபவிக்கின்றார்கள்.
இரண்டாம் உலகப் போரின் பின் மேற்குலக நாடுகள் காலனித்துவ கொள்கையை கைவிட ஆரம்பித்தார்கள். ரஸியா தான் பிடித்த கிழக்கு ஐரொப்பிய நாடுகளை 90 களில் தான் விட்டது .
போலந்து மக்களின் பிராடுத்தனம் பற்றி நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை .
சம உடமைக் கொள்கைக்கு நான் எதிரானவன் அல்ல ஆனால் சம உடமை என்ற பெயரில் மோசமான அடக்குமுறைதான் இது வரை நடந்திருக்கின்றது .
யாரங்கே மனிதனை மனிதனாக மதித்து ஆட்சி நடாத்தும் அல்லது நடாத்திய ஒரு சம உடமை நாடு சொல்லுங்கோ .
தனது அற்புதமான கருத்துக்கள் இப்படி துஸ்பிரயோகம் செய்யப்படும் என்று மார்க்ஸ் ஒரு பொழுதும் நினைத்திருக்க மாட்டார்.
பாவம் அந்த மனிதனும் கம்யூனிச ஆட்சிக்குள் விழுந்த மக்களும் .
He is still turning in his grave, it will stop only when the last commie criminal on this earth is gone.
‘இந்தத் தேர்தலை ஏறெடுத்தும் பார்க்காமல் தம்மை இந்த அனைத்து ஓநாய்களிடமிருந்தும் தற்காத்துக்கொள்வதற்கான வழிமுறைகளைக் கண்டறிவதே ஒரே வழி. நீண்டகாலம் செல்லலாம் ஆனால் காலம் தாழ்த்துவது அதற்கான தீர்வல்ல. அழிவு!’
பிரதாபன் சார் எல்லாத்தையும் சொல்லியிட்டீங்க, வழிமுறையைக் கண்டறிவதே ஓரே வழி என்டும் சொல்லிறீங்க. நீங்கள் நினைக்கின்ற அந்த வழிமுறையையும் சொல்லுங்க சார். வழிமுறை தெரியாமல்த்தானே தமிழினம் திசை கெட்டு, தறிகெட்டு திரியுதுகுள். பிளீஸ் சார் ஏதாவது ஒரு வழிமுறையை சொன்னீங்கள் என்டால் நாங்களும் அதைப்பற்றி யோசிக்கலாம் தானே. கெல்ப் பண்ணுங்க சார் தமிழனுக்கு. எவ்வளவு புத்திசீவியைப்போல கட்டுரை எழுதியிருக்கிறீங்கள். உங்களுக்கு வழி தெரியாது என்டால் நம்ப ஏலாது சார். விரைவில் எதிர்பார்க்கின்றேன். ராங்ஸ் சார்
பிரதாபன் சார் திரு காளமேகம் நல்ல பாடொன்று பாடியிருக்கின்றார் பொழிப்பு எழுதுவீங்களா? அல்லது அப்பீட் ஆகிடுவீங்களா?
////பிரதாபன் சார் எல்லாத்தையும் சொல்லியிட்டீங்க, வழிமுறையைக் கண்டறிவதே ஓரே வழி என்டும் சொல்லிறீங்க. நீங்கள் நினைக்கின்ற அந்த வழிமுறையையும் சொல்லுங்க சார். வழிமுறை தெரியாமல்த்தானே தமிழினம் திசை கெட்டு, தறிகெட்டு திரியுதுகுள். பிளீஸ் சார் ஏதாவது ஒரு வழிமுறையை சொன்னீங்கள் என்டால் நாங்களும் அதைப்பற்றி யோசிக்கலாம் தானே. கெல்ப் பண்ணுங்க சார் தமிழனுக்கு. எவ்வளவு புத்திசீவியைப்போல கட்டுரை எழுதியிருக்கிறீங்கள். உங்களுக்கு வழி தெரியாது என்டால் நம்ப ஏலாது சார். விரைவில் எதிர்பார்க்கின்றேன். ராங்ஸ் சார்—காளமேகம்//////
//ஆரண்ணை நீங்கள் அந்த இடது சாரி கொல்வின் ஆர் டி சில்வாவா அன்ட் கோவையா பாடுறியள்? என்ன கூலி தந்தாங்க ? 1972 குடியரசுச் சட்டத்தை இயற்றி இருந்த கொஞ்ச நஞ்ச உரிமையை வழங்கிய சோல்பரி அரசியல் அமைப்பின் 29 ஆவது பிரிவை இல்லாதொழித்த இடது சாரிகள் முதல் இன்று ராஜபக்சேயுடன் நிற்கும் இடதுசாரிகளையும் , பண்டாரநாயக்காவும் ஆரம்பத்தில் தன்னை இடதுசாரி என்றுதான் சொன்னார் என்பதையும் தெரியுமா ?//
பண்டாரநாயக்க ஏன், ஹிட்லரே இடதுசாரி என்று தான் தன்னைச் சொன்னார் பின்னர் தேசியவாதி என்றார். இவர்கள் எல்லாம் தவறிழைத்தார்கள் என்பதற்காக இடதுசாரியம் என்பதையும் தேசியவாதத்தையும் நிராகரிப்பது அரசியல் சூனியம் நண்பரே!
//அதுசரி உலகில் இடதுசாரிகள் நிர்வகிக்கும் அல்லது நிர்வகித்த ஏதாவது ஒரு நாட்டில் மேற்குலகில் உள்ள நோயாளி ஜனநாயகத்தை விட சிறந்த முறையில் மனிதனை மதிக்கும் பண்பு இருக்கா சொல்லுங்க ? யோ! “கன்” உலகில் உள்ள உங்கள் மொடல் இஸ்டேட் Model state எது ? ஓடாதையுங்க பதில் வேணும் இல்லாட்டில் கண்ட இடத்தில் துரத்தி துரத்தி கடிப்பேன் !!//
இங்கு இடதுசாரியம் என்பதும் சமூகத்தை அறிவியல்பூர்வமாகப் பார்ப்பதும் மொடல் போட்டு வியாபாரம் செய்ய மைக்ரோசொப்ட பிரச்சனை அல்ல நாங்கள் மனிதர்களையும் மக்களையும் பற்றிப் பேசுகிறோம். இருந்தாலும் உங்கள் அறிவுப் பசிக்காக சில மொடல்களைத் தருகிறேன். ரஷ்யாவிலும் சீனாவிலும் அவை முதலாளித்துவ நாடுகளாக மாறுவதற்கு முன்னர் உலகில் அதிசிறந்தத ஜனநாயகம் இருந்தது. அது உற்பத்திப் பொருட்களை எப்படி அதிக இலாபத்தில் விற்பது என்பதற்கான ஜனநாயகம் அல்ல. பெரும்பான்மை மக்களின் ஜனநாயகம். கம்யூன்களின் ஊடான தேர்த்தல் முறையும் பிரதிநிதிகளை தவறிழைக்கும் பட்சத்தில் உடனடியாகவே திருப்பியழைக்கும் ஜனநாயகமும் இருந்தது. இதைக்கண்டு மிரண்ட வின்ஸ்டன் சேர்ச்சில் இப்படிச் சொன்னார் ‘அரசியல்வாதிகள் எப்போதும் கூலி வேலைசெய்யும் முட்டாள்களால் அரசியல் நீக்கம் செய்யப்படலாம் என்ற பயத்தில் ரஷ்யாவில் வாழ்கிறார்கள். அதனால் சுயாதீனமாக முடிவெடுக்க முடிவதில்லை’
என்கிறார். பிறகு அதே சேர்ச்சில் ரஷ்யா சர்வாதிகார நாடு என்கிறார். பெரும்பான்மையான மக்களால் ஆழமான ஜனநாயகத்தால் தெரிவாகும் பிரதிநிதிகளைக் கொண்ட ஜனநாயகமா அல்லது சிறுபான்மை மக்களால் தெரிவுசெய்ப்படும் ஜனநாயகமா சிறந்தது? பிரித்தானியாவில் இப்போது 30 வீதமான மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர்களே ஆள்கிறார்கள். 70 வீதமானவர்கள் ஆட்ச்சிக்கு எதிரானவர்கள்.
இதனை மறைத்த பணம்படைத்த ஊடகங்கள் பொய்ப் பிரச்சாரம் செய்தன இதை நம்பிய உங்களைப் போன்றவர்கள் கம்யூனிசத்தில் ஜனநாயகம் இல்லை என்று அரசியல் சூன்யத்தனத்தோடு நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.
தவிர, மக்கள் போராடிய போது அவர்களுக்கு அதிக பணத்தையும் வசதிகளையும் கொடுத்து அவர்களை முடக்கிவைத்தார்கள் நீங்கள் சொல்லும் மேலை நாடுகளில்! அந்தப்பணம் அவர்களுக்கு எப்படிக் கிடைத்தது? பிரிதானியாவையே எடுத்துக்கொள்ளுங்கள் 46 வீதமான வரிப்பணம் வெளி நாட்டு வியாபாரத்தால் கிடைக்கிறதாம், அதனைக் கிண்டிப்பார்த்தால் தெரியும் நீங்கள் பிறந்த நாடுகளில் சுரண்டும் பணம் அதுவென்று. நீங்கள் இப்போது பார்த்துக்கொண்டிருக்கும் கொம்யூட்டரின் கனிமங்களை கொங்கோவில் மாபியாக் குழுக்களினூடாக எடுத்து மலிவான கூலியில் தயாரிக்கிறார்கள். 400 பவுண்ஸ் விற்பனை செய்யும் கொம்யூட்டருன் உற்பத்திச் செலவு 20 பவுண்ட்ஸ் மட்டுமே. இதற்காக இன்டெல் நிறுவனம் கொங்கோவில் ஆயுதக் குழுக்களுக்குப் பணம் வழங்குகிறது. உங்கள் மொழியில் மேற்கு நாடுகள் அங்கு ஜனநாயகத்தைக் கட்டமைக்கின்றன. எங்கள் மொழியில் கொள்ளையடிக்கின்றன.
காளமேகம்,
கட்டுரையாளர் தனது பதிலையும் முன்வைப்பார் என நம்புகிறேன். இனியொருவிலும் பல இணையங்களிலும் இனி என்ன செய்யவேண்டும் என்ற பல கட்டுரைகள் வெளியாகியுள்ளன. ஆனால் இணையங்களில் கட்சித்திட்டம் மாதிரி இவற்றை முன்வைக்க முடியாது. உங்களுக்கு மக்கள் மீது பற்றிருந்தால் ஒன்றைச் செய்யுங்கள். குறைந்தபட்சம் கருத்தியல் ரீதியான் தற்காப்பு யுத்தம் ஒன்றிற்குத் தயாராகுங்கள். இந்தியாவும் அதன் பங்களர்களான மேற்கும் ஒரு வழிமுறையைக் கையாள்கின்றன.
1. அழிப்பு நடத்துதல் 2. மக்கள் மீதன உளவியல் யுத்தம் நடத்தி அச்சத்தை உருவாக்குதல் 3. அச்சமடைந்த மக்கள் மத்தியில் இதைத் தவிர வேறு வழி இல்லை என்று தாம் சொல்வதை ஏற்றுக்கொள்ள வைத்தல். 4. தமது அடியாட்களை மக்கள் பிரதிநிதியாக்குதல். 6. அழிப்பை எந்த எதிர்ப்புமின்றித் தொடருதல்
இதை நீங்கள் புரிந்து கொண்டால் மக்களுக்குச் சொல்லுங்கள். அவர்கள் மத்தியில் நம்பிக்கை வளர்த்து திருடர்களை அம்பலப்படுத்துங்கள். இன்று இதற்கான வெற்றிடமே காணப்படுகிறது. இதை மக்கள் புரிந்துகொள்வார்களானால் அது சக்தியாக உருவெடுக்கும். 30 வருடங்களுக்கு மேலாக மக்களிடம் சொல்லப்பட்ட கருத்து அழிவுகளை ஏற்படுத்தியது என்று மக்கள் புரிந்துகொண்டுள்ளார்கள் ஆக அந்த வெற்றிடத்தை கொலைஞர்களோடு இணைந்து கொள்வதைத் தடுப்பதற்காவது பயன்படுத்துங்கள். நீங்கள் வெற்றிபெறுவது குறித்துப் பின்னர் சிந்திக்கலாம். குறைந்தபட்சம் அழிவுகளையாவது தடுத்து நிறுத்தலாம்.
////திருடர்களை அம்பலப்படுத்துங்கள். //// ஏதோ பெரிய இராணுவ இரகசியத்தை ஆராயயுற மாதிரி சொந்தப் பெயரில் எழுத மறுக்கும் திருடர்களை ஒழிப்பதில் இருந்து ஆரம்பிப்போம் . சரி பிழைகளுக்கு அப்பால் சொன்னதை செய்வேன் செய்வதைச் சொல்வேன் என நினைப்பவன் திருட்டுப் பெயரில் எழுத வேண்டிய அவசியம் இருக்காது . தனது கருத்தை உண்மையாகவே நெசிதால் திருட்டுப் பெயர் அவசியம் இருக்காது .
வெளியே வருவோம் . புரட்சி செய்வோம் என்பவர்கள் . முதலில் வெளியே வரவேண்டும் . ஆகக் குறந்தது சொந்தப் பெயரில் எழுத ஆரம்பிப்போம். நடக்குமா ?
ஒரு கருத்தை எழுதுவது யாராகவும் இருக்கலாம் என்பதன் குறியீடு தான் யரோ இல்லையே நித்தியானந்தன் என்ற பெயரை நிதி ஆனந்தன் என்று மாற்றி கருத்தைப்பற்றிப் பேசாமல் அரசியல் சூன்ய பேச்சுக்களில் ஈடுபட்டுவிடுவீர்களே!
என்னைப் பொறுத்தவரை நான் சந்திரமௌலி என்பவரின் இயல்புகளை விமர்சிப்பவராக இருந்தால் என்னை அடையாளப்படுத்திக்கொண்டுதான் வரவேண்டும். ஒளித்திருந்து கல்லெறியக்கூடாது. ஆனால் பொதுவான ஒருகருத்தைச் சொல்வதானால் நான் யாராகவும் இருக்கலாம். இங்கு என்னைவிட கருத்தே முக்கியம். தவிர கட்டுரையாளர்களில் சோளன் என்பவரைத் தவிர அனைவரும் தங்களது பெயர்களிலேயே எழுதியுள்ளார்கள் என்றே எண்ணுகிறேன்.
ஏதோ பெரிய இராணுவ இரகசியத்தை ஆராயயுற மாதிரி சொந்தப் பெயரில் எழுத மறுக்கும் திருடர்களை ஒழிப்பதில் இருந்து ஆரம்பிப்போம் . சரி பிழைகளுக்கு அப்பால் சொன்னதை செய்வேன் செய்வதைச் சொல்வேன் என நினைப்பவன் திருட்டுப் பெயரில் எழுத வேண்டிய அவசியம் இருக்காது . தனது கருத்தை உண்மையாகவே நெசிதால் திருட்டுப் பெயர் அவசியம் இருக்காது .
வெளியே வருவோம் . புரட்சி செய்வோம் என்பவர்கள் . முதலில் வெளியே வரவேண்டும் . ஆகக் குறந்தது சொந்தப் பெயரில் எழுத ஆரம்பிப்போம். நடக்குமா ?
நியாயமான காரனங்கள் இருந்தால் அன்றி கட்டுரையாளரின் புகைப்படமும் முழுப்பெயரும் தாங்கிதான் கட்டுரைகள் வெளியாகும் என தமிழ் ஊடகப்பரப்பு தீர்மானிக்க வேண்டும் .
அப்பொழுதுதான் , தாமரைகாருண்யன் என்று ஒரு கருத்தும் தர்மா என்று இன்னொரு கருத்தும் , நிதிப் பொறுப்பாளராக வேறு கருத்தும் தத்தர் என்று ஒரு கருத்தும் திரு என்று இன்னொரு கருத்தும் கனடா செய்வினை என்று ஒரு கருத்தும் , சண்முகம் , ஓணான் …..இப்பிடி எத்தினை ஐயோ ஐயோ …
ஒரு கருத்தை எழுதுவது யாராகவும் இருக்கலாம் என்பதன் குறியீடு தான் யரோ இல்லையே நித்தியானந்தன் என்ற பெயரை நிதி ஆனந்தன் என்று மாற்றி கருத்தைப்பற்றிப் பேசாமல் அரசியல் சூன்ய பேச்சுக்களில் ஈடுபட்டுவிடுவீர்களே!
என்னைப் பொறுத்தவரை நான் சந்திரமௌலி என்பவரின் இயல்புகளை விமர்சிப்பவராக இருந்தால் என்னை அடையாளப்படுத்திக்கொண்டுதான் வரவேண்டும். ஒளித்திருந்து கல்லெறியக்கூடாது. ஆனால் பொதுவான ஒருகருத்தைச் சொல்வதானால் நான் யாராகவும் இருக்கலாம். இங்கு என்னைவிட கருத்தே முக்கியம். தவிர கட்டுரையாளர்களில் சோளன் என்பவரைத் தவிர அனைவரும் தங்களது பெயர்களிலேயே எழுதியுள்ளார்கள் என்றே எண்ணுகிறேன்.
here is a guide line for a leader .
ஒரு சமூகத்தின் தலைவனாக இருப்பதற்கு விரும்பும் ஒருவர் பின்வரும் தகைமைகளைக் கொண்டிருக்க வேண்டும் அவை நீதி தேவன் குணாநிதி ஐயா விக்கினேஸ்வரனிடம் இருப்பதாக நான் உறுதியாக நம்புகின்றேன். அவையாவன,
————————————————————————————————————
1)
கண்ணியமானவனாக இருக்க வேண்டும். அதாவது, கருத்து எதுவாக இருந்தாலும் சொல்வதைச் செய்பவனாகவும் செய்வதைச் சொல்பவனாகவும் இருக்க வேண்டும் . எதிரியாயினும் அவனை நான் மதிப்பேன் .
————————————————————————————————————
2)
அதிகம் பிரசங்கித் தனம் அற்ற புகழ் விரும்பாத தன்னடக்கம் உள்ளவனாக இருக்க வேண்டும் .
————————————————————————————————————
3)
பட்டம் , பதவி , சுகங்களுக்காக தன்மானததை விற்காதவனாக இருக்க வேன்டும் .
————————————————————————————————————
4)
சமூகத்தில் ஒற்றுமையை வளர்க்க கூடிய முன் முயற்சிகளை மேற்கொள்ளக் கூடியவனாக இருக்க வேண்டும்.
————————————————————————————————————
5)
எல்லாதரப்பும் சொல்வதை உணர்சிகளுக்கு உட்படாமல் சுய கருத்துக்களுக்கு(EQ ) உட்படாமல் கேட்டு நடு நிலையான பாரபட்சமற்ற தீர்ப்பு வழங்கக் கூடியவர் என எதிரியும் , வழக்காளியும் ஏற்றுக் கொள்ளக் கூடியவராக இருக்க வேண்டும்.
————————————————————————————————————
6)
நீண்ட சிக்கலான விவாதத்தை அமைதியாக கேட்டு , படித்து உள்ளார்ந்த அர்த்தத்தை புரியக்கூடிய நுண்ணறிவு(IQ) படைத்தவனாக இருக்க வேண்டும்.
————————————————————————————————————
7)
எந்த தரப்பும் சொல்லும் பேசும் விடயங்களை புரிந்து கொள்ளக் கூடிய விடய தானத்துக்கு உட்பட்டதும் மட்டுமல்ல அதற்கு வெளியிலும் இணைந்த பொது அறிவு (GQ ) உடையவனாக இருக்க வேண்டும் .
————————————————————————————————————
8)
சரி பிழைகளுக்கு அப்பால் தான் சார்ந்த சமூகத்தின் கலாச்சார சமூக விழுமியங்களை போற்றி மதித்து கூச்சமின்றி எவர் முன்னும் கடைப் பிடிப்பவனாக இருக்க வேண்டும் .
————————————————————————————————————
9)
எதிரி தன் சமூகத்தின் மீது என்ன கொடுமைகளைச் செய்திருக்கின்றான் என்பதை நன்கு அறிந்தவராக இருக்க வேண்டும் .
————————————————————————————————————
10)
அதை எதிரியின் கூடாரத்துள் நின்றும் தெளிவாக , உரத்துச் சொல்லக் கூடியவராக இருக்க வேண்டும் .
————————————————————————————————————
11)
அவ்வாறு சொல்வதை உலக மக்களும் சமூகமும் ஏற்றுக் கொள்ளக் கூடியள வுக்கும் மதிப்பும் கண்ணியமும் உள்ளவராக இருக்க வேண்டும் .
————————————————————————————————————
12)
சமூகத்தில் எல்லா மட்டத்தினரின் பிரச்சனைகளையும் அறிந்தவராக
இருக்க வேண்டும் .
————————————————————————————————————
13)
சமூகத்தின் முக்கிய பிரச்சனைகளை அடையாளம் கண்டவராக இருக்க
வேண்டும்
————————————————————————————————————
இத்தனையும் நீதி தேவன் குணாநிதி ஐயா விக்கினேஸ்வ்ரனிடம் இருக்கு இதை நான் 1983 முதல் அறிந்தவன் அது மட்டுமல்ல இந்த தலைவனுக்குரிய பண்பு பற்றி முன்னரும் எழுதியிருக்கிறேன் . இத்தனையும் மட்டுமல்ல இன்னும் பட்டியலிடலாம்.
அதுதான் IQ-EQ-GQ அந்த மூன்று அங்கமும் நான் வணங்கும் கண்கண்ட தெய்வம் குணாநிதி நீதி தேவனிடம் இருக்கு .
உங்களால் முடிந்தால் ஒரு தலைவனுக்கு என்ன பண்பு வேண்டும் என்பதை வரையறுத்து அதில் எது கடவுள் தந்த பாக்கியமாய் வந்த நீதி தேவனிடம் இல்லை எனக் காட்டுங்கள்
குணநிதியாகவும் இருக்கலாம் குறுக்கால போன நிதியாகவும் இருக்கலாம். இங்கே பிரச்சனை இதுதான், ஒரு சமூகத்தின் தலைவன் என்பது என்ன? சமூகத்தின் ஒடுக்கப்படும் பிரிவா ஒடுக்கும் பிரிவா? இது தான் முதலில் தெளிவாக்கப்பட வேண்டும்.
தவிர நீங்கள் அரசியல் எதுவும் இல்லாமல் ஒரு மனிதனின் இயல்பை வைத்துக்கொண்டு தலைவன் என்ற விம்பத்தைக் கட்டமைக்கிறீர்கள். தலைமை என்பது மக்கள் மத்தியிலிருந்து உருவாக வேண்டும். அதற்கு ஜனநாயக மத்தியத்துவப் பண்பு வேண்டும். நீங்கள் சொன்ன தனிமனிதனின் இயல்புகளிலிருந்து உருவாகியதால் தான் ஹிடலரும் உருவானார். அதுவும் முழு ஜேர்மனியர்களது ஆதரவோடு. ஆக, தலைவர், பண்பு என்ற அரசியல் சூனியத்தனத்தை விடுத்து ஒரு உறுதியான அரசசியலை ஒவ்வொரு கூறுகளிலும் வளர்த்துக்கொள்வோம். பிறகு அந்த அரசியலை மக்கள் முன்கொண்டு செல்வோம். மக்கள் அதனை நோக்கி அணிதிரள்வார்கள். அங்கு தலைமை உருவாகும். இல்லையே முள்ளிவாய்க்கால் தான் உருவாகும்.
எனக்கு நெட் வசதிகள் குறைவு . வாசகர்களுடன் கருத்துப் பகிர்வில் ஈடுபட்டுக்குள்ள முடியாதநிலை மன்னிக்கவும்.