Friday, March 6, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

மறுபடி ஒரு முறை காட்டிக்கொடுக்காதீர்கள் : கோசலன்

இனியொரு... by இனியொரு...
06/20/2011
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
41
Home பிரதான பதிவுகள் | Principle posts

போராட்டம் என்பது இரண்டு இரகசிய இராணுவக் குழுக்களிடையே நடைபெறுகின்ற யுத்தமுமோ அந்த இராணுவக் குழுக்களின் இரகசியங்களைப் பேணுகின்ற உளவு நிறுவனமோ அதனைச் சுற்றி அரசியல் காய் நகர்த்தும் பொறிமுறையோ அல்ல. துரதிஷ்ட வசமாக முப்பது ஆண்டுகள் தமிழ் மக்களுக்குச் சொல்லித்தரப்பட்ட, பழக்கப்படுத்தப்பட்ட வழிமுறைகள் இவை மட்டும் தான்.

உலக நாடுகளின் அரசுகள் அனைத்தும் இணைந்தே இனப்படுகொலையை நிகழ்த்திவிட்டு இன்று “நடந்து விட்டதே” என வருத்தம் தெரிவிப்பதன் பின்னணியில் பல அரசியல் காரணங்கள் உள்ளன. தமிழ் மக்கள் என்பவர்களின் பிரதினிதிகளோ உலக நாடுகளை வால் பிடித்து ஏதாவது சாதித்து விடலாம் என்று கோமாளித்தனமாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல தமிழ் மக்களுக்கும் அவ்வாறான நம்பிக்கையை வழங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

இன்று எமக்கு மத்தியில் அதிலும் குறிப்பாகப் புலம் பெயர் நாடுகளில் சமூகப் பற்றுள்ளவர்களின் கடமை, இந்தத் தவறான சிந்தனைக்குள் கட்டுண்டுடிருக்கும் மக்கள் கூட்டத்தை இலங்கை அரசிற்கு எதிரான மக்கள் சார்ந்த போராட்ட வழிமுறையை நோக்கி வென்றெடுப்பதாகும். 80 வீதமான அரபியர்கள் அமரிக்காவைத் தங்கள் எதிரியாகக் கணிக்கிறார்கள். 60 வீதமான உல மக்கள் அதிகார அரசுகளே அழிவுகளுக்குக் காரணம் என்கிறார்கள். இவர்களிலிருந்தெல்லாம் ஒடுக்கப்படும் தேசிய இனமான நாம் விலகிச் சென்று எம்மைச் சிறுபான்மை ஆக்கி எம்மை நாமே அன்னியப்படுத்திக் கொள்கின்ற அவலத்தை இவர்கள் நடத்தி முடிக்கிறார்கள். ஏனென்றால் நமது தலைமகள் இந்த நாடுகளின் ஆட்சி அதிகாரத்திற்கு விசுவாசமானவர்கள். அதனால் அவர்களை ஒடுக்குவோருக்கு ஆதரவானவர்கள்.

பலர் இவற்றைப் புரிந்து கொள்வதில்லை. மூன்று தசாப்தம் உருவாக்கிய பழமைவாதச் சிந்தனை எம் ஒவ்வொருவரிடமும் அழுக்குகளாக ஒட்டியிருக்கின்றது. எதிர்ப்பியக்கதின் பரந்துபட்ட பன்முகத்தை நிராகரித்து தூய்மை, புனிதம் என்ற குறியீடுகளூடாக ஒற்றைப் பரிமாணச் சிந்தனை வளர்ச்சி பெற்றுள்ளது. இதே சிந்தனையும் அதன் அழிவரசியலும் தொடருமானால் இன்னும் 30 வருடங்கள் அழிவுகளை மட்டுமே நாம் அறுவடை செய்வோம்.

தவறுகளை உணர்வதற்கும், பரந்த மனோபாவத்தோடு தவறுகளிலிருந்து கற்றுக் கொள்ளவும் தவறினால் நாம் ஊக்குவிக்க வேண்டிய எதிர்ப்புப் போராட்டம் முன்னோக்கி நகர வாய்ப்பே இல்லை. சிங்கள-பௌத்த “புனித” நிலமாக வடக்குக் கிழக்கு மலையகம் என்பன மாற்றப்பட்டுவிடும்.

தவறுகளை விமர்சித்தல் என்பதே தவறு என்கிற “மிரட்டல்” தமிழ் இனவாதிகளால் முன்வைக்கப்படுகிறது. ஏன் தவறுகளை விமர்சிக்கிறோம் என்றால் அவை மறுபடி நிகழக் கூடாது என்பதற்காக மட்டுமே. இலங்கை அரச பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னோக்கி நகர்த்த வேண்டும் என்பதற்காகவே.

ராஜபக்சவைப் பழிவாங்க வேண்டுமானால் தவறுகளைக் கண்டுகொள்ளாமல் ஒன்றிணையுங்கள் என்கிறார்கள். ராஜபக்ச மட்டுமா எமது பிரச்சனை? அறுபது ஆண்டுகளாக அழிக்கப்படுகின்ற தேசிய இனத்தின் உச்சபட்சக் குறியீடு மட்டுமே ராஜபக்சவும் அவரது குடும்பமும்.

ராஜபக்ச அகற்றப்பட்டால் அவரது இடத்தை நிரப்புவதற்கு ஆயிரம் பேரினவாதிகள் வரிசையாக நிற்கிறார்கள். இனிமேல் ஒவ்வொரு இனப்பகொலையாளியும் இவ்வளவு துணிவாக 50 ஆயிரம் மக்களைக் கொன்று போட்டுவிட்டு அரியாசனத்தில் அமர்ந்திருப்பதை அனுமதிக்க முடியாது என்பதால் ராஜபக்ச தண்டிக்கப்பட வேண்டும் என்ற சிறிய, பரந்த மனோபாவத்தினூடான விளக்கத்தைக் கூட இனவாதிகள் சொல்லத் தயாரில்லை. இங்கே ராஜபக்சவிற்கு எதிரான போராட்டம் பேரினவாதத்திற்கு எதிரான போராட்டமாக, அழிக்கப்படும் தேசிய இனத்தின் மக்கள் சார்ந்த போராட்டமாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

ஏன் இவர்கள் போராட்டத்தின் ஒவ்வொரு அங்கத்தையும் ஆய்விற்கு உட்படுத்த் மறுக்கிறார்கள்? எம்மைச் சுற்றியிருப்போர் கொலைகாரர்களும், திருடர்களும் என்பதை அறிந்து கொண்டும் ஏன் அவர்களோடு கைகோர்த்துக் கொள்வோம் என்கிறார்கள்? ஒடுக்கப்படுவோரின் உண்மையான நண்பர்களை அறிந்துகொண்டும் ஏன் தமிழர்களைச் சிறுபான்மையாக ஒதுக்க எண்ணுகிறார்கள்? உலகெங்கும் உருவாகி பெரும் சக்தியாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் ஜனநாயக முற்போக்கு அணியினரிடம் இருந்து தமிழ் மக்களை ஏன் அன்னியப்படுத்துகிறார்கள்.

இலங்கையில் ராஜபக்ச குடும்பம் நிகழ்த்தும் திட்டமிட்ட குடியேற்றங்களுகு எதிராக, அதிகாரச் சீர்குலைவுகளுக்கு எதிராக எல்லாம் மக்கள் தங்களது சக்திக்கு உட்பட்டுப் போராட முனைகிறார்கள்.

இந்திய இராட்சத இராணுவத்தின் கொலைக் கரங்களுக்கு எதிராகப் பழங்குடி மக்கள் போராடுவது போல, கஷ்மீர் மக்கள் தமது சுய நிர்ணய உரிமைக்காகப் போராடுவதுக் போன்று, நாகாலாந்தில் மரண அச்சுறுத்தலுக்கு மத்தியில் மக்கள் போராடுவது போல ஈழத் தமிழர்களும் போராட ஆரம்பித்திருக்கிறார்கள். அது சிறியதாக இருக்கலாம். அதன் வளர்ச்சி தவிர்க்க முடியாத அரசியல் புறச் சூழலைக் கொண்டிருக்கிறது. அவர்களின் நண்பர்களை இனம் கண்டு கொள்வதும் அதனூடாக அவர்களின் போராட்டத்தைப் பலப்படுத்துவதும் எமது கடமை. மாறாக, 80 களில் இந்தியாவை நம்பி மக்களின் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்து சீரழித்தைப் போன்று இப்போது ஏகாதிபத்திய அரசுகளை நம்பி மக்களைக் காட்டிக்கொடுக்காதீர்கள்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

மனித உரிமை மீறல்களாகக் குறுக்க முற்படும் ஏகாதிபத்தியங்கள்.

Comments 41

  1. தருமன் says:
    15 years ago

    மிகவும் சரியாக எழுதப்பட்டுள்ள கட்டுரை. பல நல்ல கட்டுரைகளை இனியொரு காலத்தின் தேவை கருதி எழுதி வருகின்றது. ஆனால் நடைமுறையில் இனியொருவும் அதன் இன்னொரு பாகமுமான புதிய திசைகளும் இங்கு எழுதப்படுகின்ற ஆக்கங்களிற்கு எதிரான வகையிலேயே செயற்பட்டு கடந்த கால போராட்டத்தின் தோல்விகளிற்கு எவர் எல்லாம் கரணமோ அவர்களுடனேயே மௌனித்த வண்ணம் அரசியல் செயற்பாடுகள் தொடர்கின்றன. ஏன் இந்த முரண்பட்ட நடைமுறை?

    • Kosalan says:
      15 years ago

      அதிகார மையங்களின் பணத்தில் செயற்படும் தன்னார்வ அமைப்புகளும் லும்பன்களும் இவ்வாறான அமைப்புகளுக்கு எதிராக அவதூற்களை மேற்கொள்கின்றனர். அவதூறுகளுக்கு ஆதரமோ உண்மையோ கிடைப்பதில்லை உங்களுக்கும் அது கிடைக்காது. தயவுசெய்து உங்கள் அழிவரசியலை நிறுத்திக் கொள்ளுங்கள்.

  2. நிர்மலன் says:
    15 years ago

    “80 வீதமான அரபியர்கள் அமரிக்காவைத் தங்கள் எதிரியாகக் கணிக்கிறார்கள். 60 வீதமான உல மக்கள் அதிகார அரசுகளே அழிவுகளுக்குக் காரணம் என்கிறார்கள்.”
    99.99வீத சிறிலங்கா முசுலீம்களும் மிகப்பெரும்பாலான முசுலீம் நாடுகளும் இடதுசாரி அரசுகளை கொண்ட நாடுகளும் இனப்படுகொலை குற்றவாளியான சிங்கள பேரினவாதத்தின் ஆதரவாளர்கள். இந்த அப்பட்டமான யதார்த்தம் தெரியாமல் போன மர்மம் என்ன!

    • Kosalan says:
      15 years ago

      //99.99வீத சிறிலங்கா முசுலீம்களும் மிகப்பெரும்பாலான முசுலீம் நாடுகளும் இடதுசாரி அரசுகளை கொண்ட நாடுகளும் இனப்படுகொலை குற்றவாளியான சிங்கள பேரினவாதத்தின் ஆதரவாளர்கள். இந்த அப்பட்டமான யதார்த்தம் தெரியாமல் போன மர்மம் என்ன!//
      இலங்கையின் முதலாவது பேரினவாதத் தாக்குதலே முஸ்லீம்களுக்கு எதிராகத் தான்நடைபெற்றது. புலிகளிலிருந்து பல இயக்கங்களில் முஸ்லீம்கள் போராடிச் செத்திருக்கிறார்கள். நீங்கள் அவர்களின் நகைகளைப் பறித்து கே.பி ஊடாக சட்வதேச வியாபரம்நடத்த அவர்களைச் சொந்த மண்ணிலிருந்து வெளியேற்றினீர்கள். கிழக்கில் பள்ளிவாசலில் வைத்து இனப்படுகொலை செய்தீர்கள். அப்படி இருந்தும் கூட இன்றும் பெரும்பாலானவர்கள் அரசிற்கு எதிரானவர்களே.
      உங்களைப் போன்றவர்கள தான் தமிழினததை அவமானத்திற்கு உள்ளாக்கியிருப்பவர்கள்.
      தவிர, முஸ்லீம் நாடுகளின் சர்வாதிகாரிகள் ராஜபக்சவிற்கு ஆதரவு தெரிவித்திருபது உண்மையே. மக்களுக்கு அதைப்பற்றியே தெரியாது.
      அப்படித் தெரிந்தாலும் அவர்களைக் கொல்லும் அரசுகளோடு உறவு வைத்துக்கொள்ளும் புலிகளின் வாரிசுகளாகத் தான் உங்களை அவர்கள் காண்பார்கள். ஆனால் புலிகளையும் மக்களையும் வேறுபடுத்தி அறிந்து கொள்ளும் அளவிற்கு அவர்கள் புத்திசாலிகள். உங்களைப் போல பழமைவாத குறுகிய நோக்கம் கொண்டவர்கள் அல்ல. அழிக்கப்பட அழிக்கப்பட ஆக்கிரமிப்பிற்கு எதிராகப் போராடுபவர்கள்,

    • கொடுமுடி says:
      15 years ago

      நிர்மலன்,
      இது என்ன கதைகாணும் 100 வீதமான ஐரோப்பியர்கள் புலிகள் தடையை ஆதரித்தார்கள். 60வீதமான ஐரோப்பியர்கள் வெளிநாட்டோரை விரும்பவில்லை. 70வீதமான அமரிக்கர்கள் பிராபாகரனை கொடுமையான பயங்கரவாதியாக எண்ணுகிறார்கள். அமரிக்கர்களை அங்கிருந்து வெளியேற்றிவிட்டு நகைகளையும் கார்களையும் பறித்துக்கொள்ளுங்கள்.

      • நிர்மலன் says:
        15 years ago

        உங்கள் தகவலிற்கான ஆதாரத்தை பதிவிலிடுங்கள்.

  3. Kosalan says:
    15 years ago

    அதிகார மையங்களின் பணத்தில் செயற்படும் தன்னார்வ அமைப்புகளும் லும்பன்களும் இவ்வாறான அமைப்புகளுக்கு எதிராக அவதூற்களை மேற்கொள்கின்றனர். அவதூறுகளுக்கு ஆதரமோ உண்மையோ கிடைப்பதில்லை உங்களுக்கும் அது கிடைக்காது. தயவுசெய்து உங்கள் அழிவரசியலை நிறுத்திக் கொள்ளுங்கள்.

  4. Pingback: Indli.com
  5. நிர்மலன் says:
    15 years ago

    ஒரு கருத்தையே சிந்தனைக்கு எடுப்பதற்கு அல்லது/ உடன்பாடில்ல விட்டால் சகிப்பதற்கு வலுவில்லாத தாங்கள் ஒரு இனத்திற்கு புத்தி சொல்ல வெளிக்கிட்டதே பெரும் அபத்தம். விடயத்தை இன்றையயதார்த்தில் பார்க்காது பழையகதை பேசுகிறீர்கள். நானும் பழைய கதை பேசவெளிக்கிட்டால் முடிவு வெறும் சேறு அடிப்பாகவே முடியும். தங்கள் பந்தியிலுள்ள அறைகூவலில் தொனித்தது வெறும் வார்த்தை ஜாலம் என்பது இப்போ மிகத்தெளிவு. இப்போ தெள்ளத்தெளிவாக தெரிவது சிங்கள பேரினவாதத்திற்கான முண்டுகொடுப்பை கலரும் இனிப்பும் பூசி கொடுக்க முனைந்துள்ளீர்கள். இப்படியானவர்கள்தான் எம்மினத்தின் மாறச்சாபம். பழங்கதை பேச விரும்பமெனில் தொடருங்கள் பதில் சொல்லக் காத்திருக்கிறேன். எனக்கொன்றும் சிரமமில்லை.

    • aalavanthaan. says:
      15 years ago

      100% வீதமான கிழக்கு தமிழ்மக்களும் யாழ்மேலாதிக்கத்திற்கு( யாழ் அகற்றும் சங்கத்தின் வரலாறு தெரிந்திருக்கும்) எதிரானவர்கள். யாழ்ப்பாணத்திலிருக்கின்ற ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்தவர்கள் உங்கள் மேட்டுக்குடி சிந்தனைக்கு எதிரானவர்கள். ஆக இவர்களெல்லாம் பேரினவாத அரச ஆதரவாளர் என கொள்ளலாமா? புலிகளின் காலத்தில் மா(மா)மனிதர் பட்டங்களுக்காகவும், இன்று பதவிகளுக்காக டகலஸின் பின்னாலும் அலைந்துதிரிகின்ற யாழ்கல்வி சமூகத்தின் சிந்தனை எல்லைகளுக்கு அப்பால் யாரும் சிந்திக்கவே கூடாதா? தமிழின் தலைசிறந்த ஆய்வாளர்கள் இதயசந்திரன், அருஷ் போன்றவர்கள் மட்டும்தானா?

      • நிர்மலன் says:
        15 years ago

        இறுதியாக நடந்த நாடளமன்றத் தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து தமிழ் உறுப்பினர்களும் தமிழ் தேசீயகூட்டமைப்பு உறுப்பினர்களே. இன்றைய நடைமுறை யதார்த்தம் இப்படியிருக்கும் போது.”100மூ வீதமான கிழக்கு தமிழ்மக்களும் யாழ்மேலாதிக்கத்திற்கு( யாழ் அகற்றும் சங்கத்தின் வரலாறு தெரிந்திருக்கும்) எதிரானவர்கள்.” என்பது படுபொய்யான தகவல். அதைமறைத்து பழங்கதை (யாழ் அகற்றும் சங்கத்தின் வரலாறு) பேசுவது நேர்மையான கருத்தாடும் திராணியற்ற தன்மையே! எனது சிந்தனை மேட்டுக்குடிசிந்தனையென்று எந்த ஆதார அடிப்படையில் சொல்கிறீர்கள்? “மாமனிதர்” அந்தஸ்த்து மரணித்த தமிழ்தேசீயத்திற்கு உழைத்த புலிகளின் உறுப்பினர் அல்லாதவர்களிற்கே வழங்கப்பட்டது. இந்நிலையில் மரணித்தவர்கள் எப்படி டக்ளசிக்கு பின்னால் அலைந்துதிரிவது எப்படிச் சாத்தியம்? நீங்கள் எவ்வளவு காழ்புணர்வு நிரம்பிய பொய்யர் என்று சுயநிரூபணம் செய்துள்ளீர்கள். நிர்மலன் எனும் தனி மனிதனின் கருத்திற்கு நேரடியாக பதில் சொல்லும் வக்கற்ற தாங்கள் என்னுடனே இல்லை தலைப்புடனே தொடர்பற்ற ஆய்வாளர்களை இழுக்கிறீர்கள். “கல் எறி எங்கு பட்டாலும் காலை தூக்கயோடும்” சுபாபம்தான் இது. மற்றப்படி கொச்சைத்தனமாக “மா(மா)மனிதர்” என விழிப்பது தங்களின் பேடித்தனத்தின் வெளிப்பாடு . உங்களைப்பார்த்து பரிதாப்படலாம். இதைவிட வேறுஎன்ன செய்ய முடியும்.

  6. நிர்மலன் says:
    15 years ago

    //60 வீதமான உல மக்கள் அதிகார அரசுகளே அழிவுகளுக்குக் காரணம் என்கிறார்கள் //
    மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகள் விடயத்தில் உலகுடன் மோதுவதற்கு சிறிலங்கா பயப்படவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

    கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
    உலகத்துடன் மோதுவதற்கு நாம் பயப்படவில்லை. சிறிலங்கா தனித்து விடப்படவும் இல்லை.

    சீனா, ரஸ்யா போன்ற நாடுகளின் பலமான பின்புல ஆதரவு சிறிலங்காவுக்கு உள்ளது.

  7. Kumar says:
    15 years ago

    போராட்டம் எங்குமே மக்கள்தான் நடத்துகிறார்கள் ஆனால் இறுதியில் அவா்களுக்கு தீா்வு வழங்குவதற்கு வல்லாதிக்க நாடுகளே வரவேண்டியுள்ளது,இந்த யதார்த்தத்தை மறுப்பதுவே கோமாளித்தனமாகும்.இதற்கு பல உதாரணங்கள் கூறலாம்:கிழக்கு திமோர் ,கோசவோ,தென்சூடான். பலஸ்தீனியா்களின் தீா்விற்கு முரணாக வல்லாதிக்க அமெரிக்காவே உள்ளது ஆனால் அவா்களுக்கு தீா்வு வழங்குவதாக இருந்தாலும் அதையும் அமெரிக்காதான் செய்யவேண்டியநிலையில் உள்ளது என்பதை இந்த இடதுசாரி கனவு நாயகா்கள் புரியாததுதான் நகைப்பிற்குரியது.

    வல்லாதிக்க நாடுகளின் நரிக்குணம் யாருக்குத்தெரியாது இருந்தாலும் தெரிந்தாலும் அவா்கள் மூலமே நாம் நிலைக்க வழியுணடு இல்லையேல் போராடும் மக்கள் கூட்டங்களெல்லாம் முற்றாக அழிக்கப்பட்டுவிடுவது தவிர்க்கமுடியாதது. போராடும் சக்திகளுடன் நம்மை இணைப்பதா யார் அந்த சக்திகள்? இன்று இலங்கையில் நாம் எஞ்சி இருப்பதற்கு மேற்கத்தய வல்லாதிக்க சக்திகளும் ஒரு காரணம் என்பதை புரிந்து கொள்ள ஏன் முடியவில்லை.

    காஸ்மீரியா்களின், செசேனியா்களின்,திபெத்தியா்களின் ,குா்திஸ்களின் போராட்டங்கள் சிறிதளவேனும் பேசப்படுவதற்கு மேற்கத்தய வல்லாதிக்கமே காரணமாகும் ஆனால் தமது ராணுவ பொருளாதார நலன்களின் காரணமாக இந்தபோராட்டங்களை பயன்படுத்திக்கொள்கின்றார்கள்.இந்த மக்கள் கூட்டங்களால் தனியே போராடி ஒருபோதும் விடுதலை அடையமுடியாது என்பதே யதார்த்தம்.

    • THAMIL MARAN says:
      15 years ago

      விடுங்க குமார், வீணாய்ப் போனவர்க்கு விளங்கவா போகுது?

  8. அரிச்சந்திரன் says:
    15 years ago

    நிர்மலன் வாழ்த்துக்கள்

  9. டங்குவார்! says:
    15 years ago

    முகப்பக்கத்தில் சுட்டது…..

    மக்களுக்காக மண்ணா? மண்ணுக்காக மக்களா? மக்களில்லாத மண்ணை வைத்து என்ன செய்வது? மண் மீட்கப்படவில்லை அந்தமண் ஆக்கிரமிக்கப்பட்டாலும் இருக்கிறது மக்கள் எங்கே? மக்களை அடிமை உணர்விருளில் இருந்து அகற்றி விடுதலை உணர்வு பெறச்செய்திருந்தால் அந்த மக்களே மண்ணை மீட்டிருப்பார்கள். மக்கள் பலவந்தப்படுத்தப்பட்டார்கள் என்பதன் விளைவுதான் முள்ளிவாய்க்கால். போராட்டம் என்றும் வலிந்திழுப்பதல்ல. தானாக உருவாவது. தலைவனும் அப்படியே உருவாகிறான். கிட்லரை இன்று உலகின் கொடியவனாகப் பார்க்கும் ஜேமனிய மக்கள் அதே கிட்லரை தேர்தலில் தேர்ந்தெடுத்தவர்கள் என்பதையும் நாம் மறக்கலாகாது. மக்கள் மாறுகிறார்கள். இனிச் சொல்லுங்கள் மண்ணுக்காக மக்களா? மக்களுக்காக மண்ணா? தமிழீழம் கேட்டவர்களும் கேட்பவர்களும் இன்று வெளிநாட்டு மண்ணித்தானே இருக்கிறார்கள். மண்யாருக்கு?

    • THAMIL MARAN says:
      15 years ago

      சுட்டதுதான் சுட்டீர்கள் அவர்களது பெயரையாவது போடுங்கள்.சிந்திப்பதும் ஒரு கலை தலைவா.

    • நிர்மலன் says:
      15 years ago

      “மக்களுக்காக மண்ணா? மண்ணுக்காக மக்களா? மக்களில்லாத மண்ணை வைத்து என்ன செய்வது?” எனும் கோசத்தத்தைதான் 1980களின் ஆரம்பத்தில் புலிகள் சிங்களப்படைமீது கெரில்லா தாக்குதல் நடத்திய போது அதனால் பொதுமக்களின் உயிருக்கும் உடமைக்கும் சேதமேற்றப்பட்டபோது. புளொட்டும் ஈபிஆர்எல்எப் பும் தமது இராணுவ இயலாமையை மறைக்க பிரச்சார கோசமாக முன்னெடுத்தனர். ஒரு கட்டத்தில் சிங்களப்படை புலிகளின் கெரில்லா தாக்குதலிறகு முகம்கொடுக்க முடியாது முகாம்களிற்குள் முடங்கியது. மக்கள் போராட்டமெனும் வாய்ச்சொல் வீரர்கள் இப்ப இணையதளங்களை நிரப்புவதுபோல். ஊரிலிருந்த மதிற்சுவர்களை மீது வெத்துவேட்டு வசனங்களால் நிரப்பினர். அதுதான் மக்கள் போராட்ட பிரச்சார யுக்தியாயும் என புழுகத்தொடங்கினர். சரி புலிகளும் இவர்களது சமூகவிரோத செயலை தாங்க முடியாது தடைசெய்த போது இவர்களது உழைப்பாளர்சங்கமும் மாணவர் சங்கமும் பெண்கள்சங்கமும் பொங்கியெழாது புஸ்வானமாய் போனார்கள். இவர்கள் மக்களை இந்திய இராணுவ துணைகொண்டு கொன்றதும் பாலியல்வதைசெய்ததும் சித்திரவதை செய்ததும்தான் மக்கள் போராட்டலட்சணத்தை காட்டியது. இப்பவும் ஈபிஆர்எல்எப் ல் அந்தப்பிரிவு இந்தப்பிரிவு என்றும் புளொட்டிலிருந்து ஈஎன்டிஎல்பும் தீப்பொறியெனவும் சிறிலங்கா இந்திய கூலிப்படையாக மாறி ஈழத்தமிழரை பலியெடுப்பதும் பாலியல்வதைசெய்வதும் சித்திரவதை செய்வதும் நாம் பார்க்கும் மக்கள் போராட்டாகாரர்களின் மாண்பை! டங்குவார் ! நீங்கள் இந்த துணைக்குழுவில் எதுப்பா!
      புலிகள்தான் கடைசிவரை மக்களுடன் நின்றார்கள் மடிந்தார்கள்/சிறை சென்றார்கள். எஞ்சியோரில் கணிசமானோர் தமது குறியில் தடம்புரளாது பயணிக்கின்றனர்.புலத்தில் மக்கள் புலிக்கொடியின் கீழ் அணிதிரள்கிறார்கள். விகாரிகளான கேபியையும் கருணாவையும் யாரும் புலிகளென வசைபாட வசதியாக கூப்பிடலாம். “விதிவிலக்குகள் ஒருபோதும் விதியாவதில்லை” என்பதை கவனத்தில் கொள்ளவும்.

      • thurai says:
        15 years ago

        கே.பி. கருணாவை முதலில் தெரியவில்லை. அவர்களை உள்ளே வைத்துகொண்டுதான் துரோகிகளை தேடித்தேடி போட்டுத்தள்ளினீர்கள். நாளைய துரோகிகளை உங்களால் அறியும் திறமை உண்டா? துரை

  10. aalavanthaan. says:
    15 years ago

    நாய்க்குணம், காழ்ப்புணர்வு உள்ளபொய்யர், பேடித்தனம், என்று உங்களை வ
    ர்ணிக்ககூடிய வார்த்தைகளால் மற்றவர்களை வசைபாடுகின்ற நிர்மலன்! பிறரையும் உன்னைப்போல் நேசி என்பதுதான் சான்றோர் வாக்கு. மனப்பிறழ்வுக்குள்ளாகின்றபோது த்ன்னைபோல யோசி என்று எடுத்துக்கொள்வதனால் வருகின்ற வியாதிதான் அது. தலைவர் முக்காலும் உணர்ந்தவர், புலிகளின் நிகழ்ச்சிநிரலின் படியே எல்லாம் நடந்துகொண்டிருக்கின்றது, மாபியா கும்பலை போல செயற்பட்டவர்களுக்கு பொறுப்பாக இருந்த நிழல் உலகமனிதன் கே.பி ஊடாக போர்நிறுத்தம் பற்றியும், சரணடைவது பற்றியும் புலிகள் பேசிக்கொண்டிருக்கும்போதே திருப்பித்தாக்கும் திறனை இழக்கவில்லை என்று தமது வார்த்தைவிளையாட்டுக்கள் மூலம் ஆய்வு(?) செய்து பிழைப்பு நடத்தியவர்களுக்கு தமது பிழைப்பின்மீது மண்விழுகின்றது எனும்போது ஏற்படுகின்ற கோபம் நியாயமானதுதான். மதிப்புமிக்க தொழிலை இழப்பதற்கு யாரும் விரும்புவதில்லைதானே. “100% வீதமான கிழக்கு தமிழ்மக்களும் யாழ்மேலாதிக்கத்திற்கு( யாழ் அகற்றும் சங்கத்தின் வரலாறு தெரிந்திருக்கும்) எதிரானவர்கள். யாழ்ப்பாணத்திலிருக்கின்ற ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்தவர்கள் உங்கள் மேட்டுக்குடி சிந்தனைக்கு எதிரானவர்கள். ஆக இவர்களெல்லாம் பேரினவாத அரச ஆதரவாளர் என கொள்ளலாமா?” என்ற எனது கேள்வியை புரிந்தும் வேண்டுமென்றே புரட்டுகிறீர்கள். த.தே.கூவுக்கு கிழக்குமக்கள் வாக்களித்தமை பேரினவாத அரசிற்கு எதிரான அவர்களின் எதிர்ப்புணர்வையும், வடக்குகிழக்கு இணைந்த தமிழர்தாயக கோட்பாட்டை வலியுறுத்தியுமே என்றுதான் புரிந்துகொண்டிருக்கின்றேன். மாறாக யாழ் மேலாதிக்கத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள் என முடிவுக்கு வந்திருக்கின்றீர்கள். முன்னைநாள் கிழக்கு புலிஉறுப்பினருடனோ, சாதாரண கிழக்கு தமிழ்மக்களுடனோ பேசிப்பார்த்தால் தெரியும் யாழ் மேலாதிக்கத்தினை எவ்வளவு தீவிரமாக எதிர்க்கின்றார்கள் என்பதை. ஆனால் நீங்கள் தான் உங்களுக்குள் பேசி திருப்திபடுபவர்களாயிற்றே. புலிகள் மக்களை மண்மூடைகளை போல வன்னியில் பாவித்துக்கொண்டிருந்தபோதும், எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்காத அறிவுஜீவிகளாயிற்றே. புலிகளின் மக்கள்விரோத நடவடிக்கைகளை நியாயப்படுத்தியவ்ரகளே மோசமான சமூகவிரோதிகள். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவுடன் பிராந்தியத்தையே தனது அணுவாயுதங்களால் அச்சுறுத்திக்கொண்டிருக்கும் சியோனிச இஸ்ரேலை போல உருவாகவிரும்பும், புலம்பெயர் தமிழர்களை யூதர்களின் அமுக்கக்குழுக்களை போல செயல்பட கோருகின்ற பிற்போக்குத்தனம் மேட்டுக்குடி சிந்தனையன்றி வேறென்ன. த்ம்மை ஆண்ட பரம்பரை என்று எண்ணுவதனாலேயே ஆளும்வர்க்கங்களுடன் தோளுடன் தோள் உரசி காரியம் பார்ப்பது உங்கள் பிறப்புரிமை என்று கருதிக்கொள்கின்றீர்கள். நலிந்த பொருளாதாரத்தையுடைய எங்களை போன்ற நாடுகளின் கொல்லைபுறத்துக்கு வல்லரசுகளை கூட்டிச்செல்கின்ற நாடுகளோ ,சிறிய இனமோ உருப்படப்போவதில்லை. இந்த ஆபத்தான விளையாட்டைதான் மகிந்த கும்பலும் விளையாடிக்கொண்டிருக்கின்றது. மக்கள் பற்றுள்ளவ்ர்கள் மேட்டுக்குடிகளின் பாதையை தேர்ந்தெடுக்க்மாட்டார்கள்.

    • நிர்மலன் says:
      15 years ago

      //பிறரையும் உன்னைப்போல் நேசி என்பதுதான் சான்றோர் வாக்கு. //
      தாங்கள் மரணித்தவர்களையே”மா(மா)மனிதர்”என எந்த முகாந்திரமுமின்றி இவ்வளவு இழிவுபடுத்தும் போது. தலைப்புடன் சம்பந்தப்படாத ஆய்வாளர்களை விசமத்தனமாக இழுக்கும் போது. உங்கள் குணவியல்புகளை சுட்டிக்காட்டுவது என்ன தவறு! மற்றப்படி உங்கள் உபதேசம் ஊருக்கு மட்டும்தானா!அடுத்தவரை நேசிக்கத்தான் வேண்டாம் அவமரியாதை செய்வதை தவிர்த்திருந்தாலே. நான் உங்கள் குணவியல்புகளை சுட்டிக்காட்ட வேண்டிய தேவை வந்திருக்காது.
      மீண்டும் சொல்கிறேன் நிர்மலன் எனும் தனி மனிதனின் கருத்திற்கு பதில் சொல்ல வக்கற்ற தன்மையின் வெளிப்பாடே “தலைவர் கேபி மாபியா” எனும் சொல்லாடல்கள்.
      //100மூ வீதமான கிழக்கு தமிழ்மக்களும் யாழ்மேலாதிக்கத்திற்கு( யாழ் அகற்றும் சங்கத்தின் வரலாறு தெரிந்திருக்கும்) எதிரானவர்கள். யாழ்ப்பாணத்திலிருக்கின்ற ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்தவர்கள் உங்கள் மேட்டுக்குடி சிந்தனைக்கு எதிரானவர்கள். ஆக இவர்களெல்லாம் பேரினவாத அரச ஆதரவாளர் என கொள்ளலாமா?”//
      நான் தமிழீழகுடிமகனே தவிர நீங்கள் சொல்லும் மேட்டுக்குடியுமல்ல தாழ்ந்தகுடியுமல்ல.இந்நிலையில் என்னை மேட்டுக்குடி என்பது தாழ்வுமானப்பான்மைகாரரின் மனக்கிடக்கை மட்டுமே. எனக்கும் கிழக்கு மாகாண நண்பர்கள் உண்டு. ஈழத்தமிழன் தமிழீழமென்ற குறியிலேயே இயங்குகின்றான் அதை தகர்க்க நினைப்பவர்கள்தான் மதம் சாதி பிரதேசமெனும் பிரிவினையை தூண்டுகிறார்கள். இப்போ புரிகிறது உங்கள் உண்மையான எத்தனமெதுவென்று.
      எதையும் தர்க்கரீதியில் அணுகப்பாருங்கள். தமிழ் தேசீயத்தை ஆதரிப்பவர்கள் எப்படி சிங்களப்பேரினவாத அரச ஆதரவாளர்களாக இருக்க முடியும்! உங்கள் ஆழ்மனவிருப்பெல்லாம் யதார்த்தமாகி விடாது.
      // த.தே.கூவுக்கு கிழக்குமக்கள் வாக்களித்தமை பேரினவாத அரசிற்கு எதிரான அவர்களின் எதிர்ப்புணர்வையும்இ வடக்குகிழக்கு இணைந்த தமிழர்தாயக கோட்பாட்டை வலியுறுத்தியுமே என்றுதான் புரிந்துகொண்டிருக்கின்றேன்.//
      நான் மாத்திரம் இல்லையென்ற சொல்கிறேன்!
      // புலிகள் மக்களை மண்மூடைகளை போல வன்னியில் பாவித்துக்கொண்டிருந்தபோதும்//
      என்றுதான் சிறிலங்கா பயங்கரவாத அரசின் ஊதுகுழல்கள் சொல்கின்றன. அதையே நீங்கள் இங்கு ஓப்புவிக்கிறீர்கள். லங்காபுவத்தை ஈழத்தமிழன் நம்புவதில்லை.
      //அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவுடன் பிராந்தியத்தையே தனது அணுவாயுதங்களால் அச்சுறுத்திக்கொண்டிருக்கும் சியோனிச இஸ்ரேலை போல உருவாகவிரும்பும்இ புலம்பெயர் தமிழர்களை யூதர்களின் அமுக்கக்குழுக்களை போல செயல்பட கோருகின்ற பிற்போக்குத்தனம் மேட்டுக்குடி சிந்தனையன்றி வேறென்ன//
      ஐரோப்பாவின் யூத இனவழிப்பிற்கு தமது 60 இலட்சம் மக்களை பறிகொடுத்தும். 2000 வருடங்களாக உலகெங்கும் சிதறி வாழ்ந்தும் தமது தனித்துவத்தை இழக்காது தமது தாயகமாம் இஸ்ரேவலை மீட்டெடுத்து. இன்றும் பல பத்து முஸ்லீம் நாடுகளின் அச்சுறுத்தலிற்கு அடிபணியா அவர்களின் வீரம் தியாகம் ஈழத்தமிழருக்கு ஒரு நம்பிக்கை அழிக்கும் விடயம். பலஸ்தீனபயங்கரவாதிகள் சிறிலங்கா அரசபயங்கரவாதத்தின் ஈழத்தமிழின அழிப்பை வரவேற்றைதையும் பார்த்தோம். பாகிஸ்தானிடமுள்ளது அணுகுண்டு இல்லாது வேறு எதாம். ஈரான் செய்ய முயற்சிப்பது எதையாம். மற்றப்படி ஈழத்தமினை அழித்ததில் ஈரான் பாகிஸ்தானிற்கு என்ன பங்கிருக்கோ அதுதான் இஸ்ரேலிற்கும் அமெரிக்கா இந்தியா சீனா விற்கும் மேற்குலகிற்கும் உண்டு.
      //நலிந்த பொருளாதாரத்தையுடைய எங்களை போன்ற நாடுகளின் கொல்லைபுறத்துக்கு வல்லரசுகளை கூட்டிச்செல்கின்ற நாடுகளோ இசிறிய இனமோ உருப்படப்போவதில்லை. இந்த ஆபத்தான விளையாட்டைதான் மகிந்த கும்பலும் விளையாடிக்கொண்டிருக்கின்றது. மக்கள் பற்றுள்ளவ்ர்கள் //
      நாங்களென்ன புதிசாய் கூட்டிச்செல்ல இருக்கு! சேனநாயக்கா ஜேஆர் சந்திரிக்கா மகிந்தா அமெரிக்க மேற்குலக இந்தியா சீனா ரசியா ஈரான் என எல்லோரினதும் எடுபிடிதானே! நீங்கள் கனவுலகில் வாழ்பவர் போலிருக்கு.ஒவ்வொருவரும் தமக்கிடையே பகைமுரண்பாட்டை கொண்டிருந்த போது சிறிலங்காவை அனுபவிப்பதில் ஒற்றுமையாய்தானே உள்ளனர். அந்த வகையில் விபச்சாரி வீடும் சிறிலங்காவும் ஒன்று.

      • aalavanthaan. says:
        15 years ago

        “விபச்சாரி வீடும் சிறிலங்காவும் ஒன்று.”
        விபச்சார வீடாக இருக்கின்ற நாட்டில் பாதிப்பகுதியில் விபச்சாரம் செய்வதற்கு எல்லா உரிமையும் உங்களுக்கு இருக்கு என்று சொல்கிறீர்கள். நன்று. நன்றி. விபச்சாரிகளுடன் நான் விவாதிப்பதில்லை. உங்கள் வியாபாரம் பெருக எனது வாழ்த்துக்கள். நீரே முக்கண் முதல்வனாகவும் ஆகுக. நீர் சொல்வதனைத்தும் சத்தியமாகவும் ஆகுக.

  11. குரு says:
    15 years ago

    ஈழத்தமிழன் தமிழீழமென்ற குறியிலேயே இயங்குகின்றான் அதை தகர்க்க நினைப்பவர்கள்தான் மதம் சாதி பிரதேசமெனும் பிரிவினையை தூண்டுகிறார்கள்…..

    அருமையான வசனங்கள்..
    ஈழத் தமிழன் மிக ஒற்றுமையானவர்கள் ,அவர்கள் சாதி, மதம் எல்லாம் பார்ப்பதில்லை என்று திருமாவளவன் பேசித்திரிவது போல் இருக்கிறது.நிலைமை.புலம் பெயந்து வாழும் தமிழர்கள் மத்தியிலும் சாதி தான் மிக பிரச்சனையாக இருக்கிறது.காதலித்து மணம் முடிப்பவர்களையும் இவர்கள் ஓன்று சேர விடுவதில்லை.
    இவர்களுக்கு எந்த விதமான் யோக்கியதையும் இல்லை தனி நாடு கேட்பதர்க்கு!

    • நிர்மலன் says:
      15 years ago

      ஆம் ஈழத்தமிழர்கள் மிக ஒற்றுமையானவர்கள்தான். தமிழ்தேசீயம் எனும் விடயத்தில் 19977லும் சரி 2004லும் சரி நடந்த நாடளமன்றத்தேர்தல்களில் முன்னிலைப்படுத்தப்பட்ட தமிழீழ கோரிக்கைக்கு அமோக ஆதரவளித்தே வாக்களித்தனர். இது அவர்களின் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டவில்லையா! அப்படியில்லை என்போர் சர்வதேச கண்காணிப்புடன் வடகிழக்கு தமிழரிடம் ஒரு கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்திப் பார்க்கலாமே! அவர்கள் எப்படியான தீர்விற்கு அமோக ஆதரவுடன் வாக்களிக்கிறார்கள் என்பது தெரிந்துவிடும்.
      தனிநாடு கேட்பதற்கு என்னவிதமான யோக்கியதை வேணுமென்பதை வரையறை செய்யுங்கள் அதன் பின் ஈழத்தமிழருக்கு அந்த யோக்கியதை இருக்க இல்லையென பார்ப்போம். அத்துடன் நீங்கள் நிர்மலனுடன்தான் விவாதிக்கிறீர்களே தவிர. திருமாவளவனுடல்ல. அதென்ன சொல்லி வைத்தப்போல் நிர்மலனுக்கு பதில் சொல்ல வருபவர்கள் நிர்மலனுக்கு பதில் சொல்வதைவிட சம்மந்தமில்லாதவர்களை இழுக்கிறீர்கள்! என்ன நேர்மையான விவாத இயலாமையா!

      • thurai says:
        15 years ago

        ஈழத்தமிழர் போராட்டம் வடக்கு கிழக்கில் வாழும் தமிழரின் கற்பனை உலகம். தென்னிலங்கையில், மலையகத்தில் வாழும் தமிழர்கள் ஈழத்திற்கு சொந்தமில்லையா?
        இவர்களின் வாழ்வை வசதிகளை பாதுகாப்பினை கருத்திற்கெடுக்காது, சிந்திக்காது
        செயற்படும் அரசியல் வாதிகழும், அமைப்புகழும் தமிழரின் பெயரால் லாபம் தேடும் சுயநல வாதிகளேயாகும்.

        இத்தனை அழிவுகளைக் கண்டும் அதனைபொருட்படுத்தாது,நடந்த தவறினைக்கண்டறியாது மேலும் அதே வழியில் அதே கொலைவெறியில் அறிவித்தல்கள் விடும் தமிழர்களா
        தமிழர்களை
        காக்கப்போகின்றார்கள்?-துரை

    • wicky says:
      15 years ago

      நிர்மலன்! லங்காபுவத் போன்ற பொய்யர்களுக்கு எதிரான உங்கள் பிரச்சாரபோர் வெற்றியடைய வாழ்த்துக்கள். மேலும் உங்களுக்கு உதவியாக முக்காலும் முண்ணுணர்ந்த தலைவர் மொத்த இலங்கைக்குமே மகிந்தகும்பலினால் ஏற்பட இருந்த ஆபத்தை உரிய முறையில் தடுத்தார். மகிந்த கும்பல் பல மில்லியன் கையூட்டாக கொடுப்பதற்கு தயாராகவிருந்த போதும் மக்கள் நலன் மட்டுமே தனது அரசியலின் அடிப்படையாக கொண்டிருந்த தலைவரின் மதிநுடபமே வென்றது. இந்திய உபகண்டத்தில் போராடிவருகின்ற ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களும், முற்போக்கான அமைப்புக்களும் வி.பு. தலைவரையே தங்கள் முன்னுதாரணமாக அறிவித்திருக்கின்றார்கள். “எதிரியை விட துரோகியே முதலில் அழிக்கப்பட வேண்டியவன். வலியை கொடுத்தவனுக்கு வலியை திருப்பிக்கொடு” போன்ற தலைவரின் ஒப்பற்ற தத்துவங்கள் ஏற்கெனவே உலகில் இருந்த புரட்சிகர தத்துவங்களையெல்லாம் தூக்கிசாப்பிட்டு விட்டதாக தத்துவாசிரியர்கள் மெச்சுகிறார்கள். தமிழ்ச்சமூகத்தில் காணப்பட்ட சமூக ஒடுக்குமுறைக்கெதிரான கருத்துப்பொதுவெளியை உருவாக்குவதில் புத்திஜீவிகளுடன் இணைந்து செயல்பட்ட தலைவரின் பாங்கு வெகுவாக மெச்சப்பட்டது. அரசியல் கல்வி நாட்டில் மட்டுமன்றி புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள புலிஅமைப்புகளிலும் ஊக்குவிக்கப்பட்டதனால் புலம்பெயர் நாடுகளில் புலிகளின் புத்திஜீவிகள் மானுடவியல் தொடர்பாகவும், சர்வதேச பிரச்சனைகள் தொடர்பாகவும் அவர்களின் எழுத்துகளும், செயல்பாடுகளும், சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கின்றன. வேறு சில இனங்களின் புலம்பெயர் அமைப்புகளின் மாபியாக்கள் போன்ற மக்கள் பணத்தில் சுகவாழ்வு,விரயம்செய்தல், பணத்துக்காக தங்களுக்குள் வன்முறையில் ஈடுபடுதல், காட்டிக்கொடுத்தல், என்பன புலிஅமைப்புகளில் இல்லாதிருப்பதற்கு அவர்களின் அரசியல் காரணமாகியது. மக்கள் மீது எந்தவிதமான வன்முறைகளும் எந்த சந்தர்பத்திலும் பாவிக்கப்படக்ககூடாது என்ற தலைவரின் சிந்தனைக்கேற்ப புலிகளுக்கும், இளையோருக்கும், கிரமமான முறையில் மனித உரிமைவகுப்புக்களும், நிகழ்த்த்ப்பட்டன. கலந்துரையாடலொன்றில் பிறிதொருநாட்டில் நிகழ்ந்த சகபோராளிகளை உயிருடன் ரயர்போட்டு எரித்துக்கொன்றது, புத்திஜீவிகள், பல்கலைகழமாணவ்ர், மாற்றுகருத்துடையோர், படுகொலைசெய்யப்பட்டமை, பங்கரில் அடைத்து சித்திரவதைசெய்தமை, யுத்தத்தினால் நலிந்திருந்த மக்களின் மேல் வரிச்சுமையேற்றி நசுக்கியது, தமது படையணிகளுக்கு கட்டாயமாக சிறுவர்களை சேர்க்கும் முயற்சியில் மிலேச்சத்தனமான வன்முறையை பாவித்தமை, சிறுவர்களை முன்னரங்குகளில் யுத்தத்தில் பலிக்கடாவாக்கிவிட்டு, தளபதிகள் தமது சையநற் வில்லைகளை கழற்றி விட்டு சரணடைந்தமை, எல்லாவற்றிற்கும் மேலாக தமது பாதுகாப்புக்காக பயணக்கைதிகளாக வைத்திருந்தபோது தப்பியோடியவர்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றமை போன்ற மக்கள்விரோத பாசிச, செயல்பாடுகளை கேள்விப்பட்ட சில புலிகளின் தளபதிகள் அதிர்ச்சியால் மூச்சையுற்று, ஒருவாரம் விடுப்பு எடுத்துக்கொண்டார்கள். தலைவர் எல்லோரையும் போலவே கிள்நொச்சி சங்கக்டையில் அரிசிவாங்கினார். அதன்மூலம் மக்கள் அன்றாடம் சந்திக்கின்ற பிரச்சினைகள் அத்துபடியாகவிருந்தது. இதனைக்கேள்விப்பட்ட உலகத்லைவர்கள் பலர் தலைவரின் வாழ்க்கை வரலாற்றை எழுதுமாறு புலிகளிடம் வற்புறுத்தியதனால் தலைவரின் அனுமதியோடு புலம்பெயர் புலிஅமைப்பின் புத்தியீவிகள் எழுதவருகின்றார்கள். நெல்மண்டேலாவின் வாழ்க்கை வரலாறான “லோங் வாக் ரு பிறீடம்” போன்ற புத்தங்களையெல்லாம் பின்னுக்குதள்ளிவிடும் என்று எதிர்பார்க்க படுகின்றது. பல இஸ்ரேலிய சமூகவியல் மாணவர்கள் ஆய்வுப்பொருளாக தலைவரின் வாழ்க்கை வரலாற்றை ஆய்வுப்பொருளாக எடுத்துக்கொள்வார்கள் என நம்பப்படுகின்றது. எல்லைபுறத்தில் இருந்த வறிய சிஙகளமக்களை கத்திகள் சகிதம் படுகொலைசெய்த துரோகிகளும், முஸ்லீம் மக்களை பேரினவாதிகளுடன் சேர்ந்து வடக்கில் வெளியேற்றி நகைகளை கொள்ளையடித்த உளவாளிகளும் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டார்கள். இதன் மூலம் தலைவரினதும், புலிகளினதும் பெருமை இம்மக்களிடம் உயர்ந்தது. பிரபாகரனையும், புலிகளையும் தம்து காவல்தெய்வங்களுக்கு ஒப்பாக மதிக்கத்தொடங்கினார்கள்.

  12. நிர்மலன் says:
    15 years ago

    //விபச்சாரி வீடும் சிறிலங்காவும் ஒன்று.”
    விபச்சார வீடாக இருக்கின்ற நாட்டில் பாதிப்பகுதியில் விபச்சாரம் செய்வதற்கு எல்லா உரிமையும் உங்களுக்கு இருக்கு என்று சொல்கிறீர்கள். நன்று. நன்றி. விபச்சாரிகளுடன் நான் விவாதிப்பதில்லை. உங்கள் வியாபாரம் பெருக எனது வாழ்த்துக்கள்//aalavanthaan
    சிறிலங்கா தேசபக்தரா தாங்கள்! இலங்கைத்தீவில் இருதேசங்கள் உண்டு ஒன்று தமிழீழம் மற்றையது சிறிலங்கா. சிறிலங்கா அசிங்கங்களிற்கும் தமிழீழத்திற்கும் எந்த தொடர்புமில்லை. அசிங்கங்களினது முழு பங்குதாரர் சிறிலங்கா சிங்கங்களும் முஸ்லீம்களும் டக்ளஸ் கருணா கேபி எனும் சிங்கள அடிவருடிகளும்தான். குழந்தைகள் விபச்சாரத்தில் உலகளவில் முதலிடத்திற்கு போட்டிபோடும் சிறிலங்காவின் தொழில் வளர்சி ரொம்ப அபாரம்தான்.
    உங்களால் தமிழீழத்தவனுடன் நேர்மையாக விவாத பொருளின் மையத்தில் நின்று விவதாதிக்க முடியாதுதான் அப்ப பின்வாங்குவதைதவிர வேறென்ன செய்ய முடியும்.இன்று போய் நாளை வேறுதலைப்பிற்கு வாருங்கள்.
    //ஈழத்தமிழர் போராட்டம் வடக்கு கிழக்கில் வாழும் தமிழரின் கற்பனை உலகம். தென்னிலங்கையில் மலையகத்தில் வாழும் தமிழர்கள் ஈழத்திற்கு சொந்தமில்லையா?//thurai

    சிறிலங்கா தேசபக்தர்களிற்கு தமிழீழமென்பது ரொம்பத்தான் கசக்குது.தமிழீழம் என்ற முடிவு ஈழத்தமிழரின் அமோக ஜனநாயக வாக்கு ஆதரவுடனேயே எடுக்கப்பட்டது. இந்நிலையில் ஈழத்தமிழரின் அமோக ஜனநாயக அவாவை மறுப்பவர் ஜனநாயக மறுப்பாளர்களாக அல்லது வேற்றினத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். இல்லையேல் சொந்த இனத்தை அழிக்க துடிக்கும் கோடாரிகாம்பாக இருத்தல் வேண்டும்! இதில் நீங்கள் யார்?
    மலையகம் வாழ் தமிழர்களின் தலைமையான செளயமூர்த்தி தொண்டமான். 1974ல் தெளிவாக சொல்லிட்டார் தனது மக்களின் பிரச்சினை வேறு ஈழத்தமிழரின் பிரச்சினை வேறு. அதனால் தனிநாட்டு கோரிக்கையை முன்வைத்து உதயமான த.வி.கூட்டணிக்குள் இணையாது தனித்து இயங்கப்போவதாக . வடமேல்மாகணத்தமிழர் “பிள்ளை”யெனும் பெயர்களை “புள்ளே”யாக்கி சிங்கள சேவகமே தமது முதற்பணி என்று இயங்குகின்றனர். இந்நிலையில் தமிழீழத்தில் அக்கறைபடாதவர்கள் மீது ஏன் ஈழத்தமிழன் அக்கறைபடணும்?
    // உங்களுக்கு உதவியாக முக்காலும் முண்ணுணர்ந்த தலைவர் மொத்த இலங்கைக்குமே மகிந்தகும்பலினால் ஏற்பட இருந்த ஆபத்தை உரிய முறையில் தடுத்தார். //wicky

    உலக வரலாற்றில் போரில் தோற்றவன்தான் எல்லா அழிவுகளிற்கும் பொறுப்பாளியென குற்றம் சுமத்துவது புலிகள் அமைப்பிற்கு மட்டும் நடக்கும் புதுமையல்லவே! 2ம் உலகப் போரின் முழுப்பழியும் ஜேர்மனி ஜப்பான் மீது சுமத்தப்பட்டதும் பிரித்தானியா பிரான்ஸ் அமெரிக்கா புனிதர்கள் என்பதுமான விம்பம் 1940-1960 வரை உலகில் பெருமளவானோரால் நம்பப்பட்டது. பொருளாதார போட்டியில் ஜேர்மனி ஜப்பான் வென்றபின்தான் உலகே அறிந்தது பிரித்தானியா பிரான்ஸ் அமெரிக்கா உலகின் கொள்ளையாரே தவிர நேர்மையான உழைப்பாளர் அல்லவென்பது.அதேபோல் புலிகளின் பின்னடைவு எல்லோரினதும் தவறையும் தற்காலிகமாக மறைக்கவே உதவுமே தவிர சில பத்து வருடங்கள்கழிய ஜேர்மனி ஜப்பான் வழியில் புலிகளின் போராட்த்தின் அறுவடை தெரியவரும். அதுமட்டும் நீங்கள் வாய்க்கு வந்தததை பேசலாம். ஈழ்தமிழ் தேசீயவாதிகள் கதைப்பதை விட்டு கருமம் ஆற்றத்தான் வேண்டும். அதுதான் இப்ப நடக்குது.
    இடதுசாரிய முறை கனவிற்கு ரசியா மக்களை மாத்திரமின்றி அயலிலுள்ள நாடுகளையும் வலிந்திணைத்து அவர்களை ஏழ்மையின் அடிநிலைக்கு கொண்டுவந்தும்.2ம் உலகப்போரில் ஜேர்மனியபடையெடுப்பின் போது ருசியா படைகளின் சேர்ந்து பின்வாங்க மறுத்த இலட்சக்கணக்கான சொந்த குடிமக்களையே சுட்டுக் கொன்ற சோவியத்யூனியன் புனிதவழிகாட்டி. வரட்டு கொம்முனிச வெறிக்கு 60 இலட்சம் மக்களை பட்டினிக்குபலியிட்ட மாவோ புனிதர். அமெரிக்காவை வரட்டு கொம்முனிச வெறிக்கு எதிர்த்தும் தன்னுடன் ஒத்துழைக்க மறுத்த 15 இலட்சம் மக்களையும் கொன்று பலியிட்ட வியட்நாம் இன்று சீனாவினால் எதிர்கால ஆபத்துவருமென்ன பயத்தில் அமெரிக்கா வாராய் வியட்நாமில் கடற்படைத்தளம் போடாய்யென்பது” கோசிம் சிந்தனையின் வெற்றி. பிடல் காஸ்ரோ எனும் சர்வாதிகார வெறியனின் பதவியசைக்கு கியூபா மக்கள் பட்டினியில் வாடுவதும். பட்டினி சாவிலிருந்து தப்ப காற்றடைத்த ரீயூப்புக்களை உயிர்காக்கும் கவசமாக்கி கடல்வழியே அமெரிக்கா தப்பி செல்லும் போது கடலிற்கும் சுறாக்களிற்கும் பலியாவது பிடல் காஸ்ரோ மக்களிற்கு அளிக்கும் உன்னத கொம்முனிச ஆட்சி.
    இலங்கை கொம்முனிசிட்டுக்கள் என்ற பெயரில் தமது பதவியசைக்கு தமிழரின் உரிமைகளை சிங்களத்துடன் சேர்ந்து மறுத்ததும் தெரியும். இன்றுள்ள சிறிலங்கா இந்திய தமிழ்துணை இராணுவகுழுக்கள் கொம்முனிச சிந்தனையின் வழிவந்தவர்கள் என்பதும் தெரியும்.
    சிறிலங்கா முஸ்லீம்கள் சிங்களப்படையின் உபகட்டமைப்பான ஊர்காவல் படையென்ற பெயரிலும் பள்ளிவாசல்களின் நேரடி வழிநடத்தலிலும் முஸ்லீம் காங்கிரஸின் தலைமையில் இயங்கும் ஜிகாத்குழு ஓசாமாகுழு என்ற பெயர்களில் மூதூர் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்கள் தோறும் தமிழினபடுகொலையும் கிராமங்களை அபகரித்ததும் சிறுமி முதல் வயோதிப மாதுவரை வல்லுறறுவு கொண்டதும் 1990ல் இந்த கொடுமையிலிருந்து தப்ப கிழக்குதமிழர் இந்திய செல்ல முயற்சித்த போது ஒரு பவுண் 500 ரூபா என தவிச்ச முயலடித்ததும். தென்னிலங்கைக்கு இடம்பெயர்ந்த தமிழர்களை புலிகளென காட்டிக்கொடுத்ததும் அதே அவர்கள் பெரும்தொகை லஞ்சபணத்தை வாங்கிக்கொண்டு சிங்களபடைக்கும் பங்கு கொடுத்து விடுவித்ததும். சிங்கள புலனாய்வு பிரிவிலும் ஊடக பிரிவிலும் கடமையாற்றி கூட வாழ்ந்த தமிழனுக்கு குறிபறித்ததும். கலவரமெனும் பெயரில் நடந்த தமிழின அழிப்பில் சிங்களத்துடன் சேர்ந்து கொலையும் கொள்ளையும் புரிந்ததும். சிங்கள பேரினவாத அரசு கொண்டுவந்த தமிழர் ஒடுக்கு முறைச்சட்டங்களிற்கு தவறாது ஆதரவளித்ததும். 2009 வவுனியா வதை முகாம்களில் சிங்களப்படையை காட்டிலும் மிக மோசமாக தமிழரை வதைத்ததும் வதைத்து கொண்டிருப்பதும் சிறிலங்கா முஸ்லீம்களின் அதிஉன்னத மனிதாபிமான நடவடிக்கைதான்.
    அலன்தம்பதி கடத்தல் கொலை அச்சுறுத்தல். மாலைதீவு ஆக்கிரமிப்பெல்லாம் தமிழ் தேசீய இராணுவமெனும் பெயரில் இந்திய கூலிப்படைக்கு கட்டாய சிறுவர்பிடிப்பும் இடதுசாரி மக்கள்போராட்டம். யாழ்பல்கலைகழகத்தில் பதுங்கியிருந்து கொண்டு கிட்டுமீது கிரனைட் வீசியதும் .அதற்கு கிடைத்த கூலிப்பணத்தில் கனடா பிரித்தானியாவென்று ஒடிவந்து இடதுசாரிய பம்மாத்து விடுவது நிட்சயம் மக்கள் போராட்ட வழிமுறைதான். நீங்கள் உத்தமர்தான் உங்கள் இடதுசாரிய பம்மாத்தை தொடருங்கள்.

    • bathmini guru says:
      15 years ago

      நிர்மலன்,
      எப்படி இப்படி எல்லாம் எழுதுகிறீர்கள். போராட வேண்டும் என்று கூறுகிறவர்களை எல்லாம் துரோகிகள் என்றும் இன்னுமொருக்கால் போராட்டம் முள்ளிவாய்காலில் ஒரு லச்சம் மக்களை பலிகொடுது அழிந்து போக வேண்டும் என்றும் விரும்புகிறீர்கள்? உங்களுக்கு மகிந்த பணம் அனுப்புகிறாரோ?

      • நிர்மலன் says:
        15 years ago

        புலிகள் உயிரை கொடுத்து போராடி போது எதிர்த்தீர்கள். சர்வதேச உதவியுடன் சிறிலங்கா தமிழின அழிப்பு செய்த போது. எத்தனை இலட்சம் தமிழர் அழிந்தாலும் பராவாயில்லை புலிகள் அழிய வேணுமென்ற சைக்கோதனத்தில். அது பாசிசபுலியழிப்பென வியாக்கியானாம் கொடுத்து வரவேற்றீர்கள். இப்பவும் மக்களின் விருப்பறியாது புலிக்கொடியை தடுப்பதில் காட்டும் அபரிமித ஆர்வமா! உங்கள் போராட்டம். அதை மற்றவர்கள் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கணுமா!பேர்லின் சுவர் ஜேர்மனியின் முடிவல்ல. அமெரிக்கா அணுகுண்டு ஜப்பானின் முடிவல்ல. முள்ளிவாய்க்கால் தமிழ்தேசீயத்தின் முடிவல்ல.
        அண்மைக்காலங்களாக மகிந்தாவும் கோத்தபாயவும் புலம் பெயர் தமிழர்களின் தமிழ் தேசீய உணர்வை ஒடுக்கணும் என அறைகூவல்விட அதற்கு தோதாக ஈழத்தமிழர் அணிதிரளும் அடையாளத்தை அழிக்க நினைப்பது உங்கள் மகிந்தா சிந்தனை விசுவாசமா!
        இடதுசாரி நாடுகளான ரசியா சீனா கியூபா வியட்நாம் வெனிசுலா மற்றும் முஸ்லீம் நாடுகள் சிறிலங்காவின் தமிழினப்படுகொலையை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் தாங்கள் காட்டும் கள்ளமெளனமா போராட்டம்.!
        இப்ப புரிகிறதா மகிந்த யாருக்கு பணம் அனுப்புகிறார் என்பது.

        • thurai says:
          15 years ago

          புலம்பெயர் தமிழர்களிற்கு பெற்ர பிள்ளைகளைக்கூட பார்க்க முடியாமல் இரவும் பக்லும் பண்த்திற்காக அலையும்போது  தமிழ்தேசிய உணர்வா? கொண்டாட்டம்  கொத்து ரொட்டி ஒகே.-துரை

          • Soorya says:
            15 years ago

            நீங்கள் பணம் உழைக்க ஓடுகிறீர்கள். எனக்கு அது தேவையில்லை. பணம் மகிந்த தருகிறார். நான் தமிழ் தேசிய உணர்வை எப்போதோ விற்றுவிட்டேன். நான் தற்போது தமிழன் இல்லை. ஆனால் உங்களுக்கு பிழைக்கத் தெரியாமல் இன்னமும் ஓடிக்கொண்டு இருக்கிறீர்கள். துரை.

  13. bathmini guru says:
    15 years ago

    //புலிகள் உயிரை கொடுத்து போராடி போது எதிர்த்தீர்கள். சர்வதேச உதவியுடன் சிறிலங்கா தமிழின அழிப்பு செய்த போது. எத்தனை இலட்சம் தமிழர் அழிந்தாலும் பராவாயில்லை புலிகள் அழிய வேணுமென்ற சைக்கோதனத்தில். அது பாசிசபுலியழிப்பென வியாக்கியானாம் கொடுத்து வரவேற்றீர்கள்.//யாரப்பு அப்படி வரவேற்றது உந்தக் குறுக்கால போன கே.பி அண்ணனே? அவர் புலியெல்லோ? தேசியத் தலேன்ற குடும்பியலோ? அப்ப நீங்கள் அவருக்கு எதிரே? அப்ப கொடி பிடிக்கிற கூட்டத்திலையும் கே.பிக்கு எதிரக் கூட்டம் இருக்கு என்டே சொல்ல வாரியள். சரிச்சரி, நான் கொடிக் காரர் எல்லாம் கே.பின்ற பினாமியள் என்டில்லே யோசிச்சனான்.
    //அது பாசிசபுலியழிப்பென வியாக்கியானாம் கொடுத்து வரவேற்றீர்கள். இப்பவும் மக்களின் விருப்பறியாது புலிக்கொடியை தடுப்பதில் காட்டும் அபரிமித ஆர்வமா! உங்கள் போராட்டம். அதை மற்றவர்கள் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கணுமா!// புலிகொடியை த்தடுப்பதற்கு நாங்கள் என்ன பாதாளச் சிறையும் கொலைக்க் கூடங்களும் வைத்துக் கொண்டு வன்னியில் அரசா நடத்துகிறோம்? நாங்கள் மகிந்த ராஜாபக்ச போன்ற இனக் கொலையாளிகளை வளர்த்த புலிகளைப் போன்ற சர்வாதிகாரிகளா என்ன? நாங்கள் புலிக் கொடியின் பின்னணியில் உள்ள அரசியலைப் பற்றியல்லவா பேசுகிறோம். அவமானம்! உங்களுக்கு எப்பவும் வன் முறை நினைப்புத் தான். அப்படி அரசியல் விளைவு என்றால் புலிக் கொடி பிடிப்பதால் உள்ள அரசியல் லாபத்தை வைத்து நீங்கள் வாதிக்கலாமே? அதை விட்டு ஏன் வன்முறை ?
    //பேர்லின் சுவர் ஜேர்மனியின் முடிவல்ல. அமெரிக்கா அணுகுண்டு ஜப்பானின் முடிவல்ல. முள்ளிவாய்க்கால் தமிழ்தேசீயத்தின் முடிவல்ல// இப்பததான் விளங்குது ஏன் புலிகள் குழந்தப் பிள்ளைகளையும், கர்ப்பிணித் தாய்களையும், வயது முதிர்ந்தோரையும் கதறக் கதற மண்மூட்டையாகப் பாவித்தார்கள் என்று? உங்களுக்குக் குற்ற உணர்வே வருவதில்லையா? இன்னொருக்கா கொஞ்சப் பேரை பிடித்து வைச்சு கொலைசெய்து வீடியோப் பிடிச்சுக் காட்டிப்போட்டு அமரிக்க அணுகுண்டைப் பற்றியென்ன அன்றாக்சைப் பற்றியும் கைதைப்பியள் காணும்.
    //அண்மைக்காலங்களாக மகிந்தாவும் கோத்தபாயவும் புலம் பெயர் தமிழர்களின் தமிழ் தேசீய உணர்வை ஒடுக்கணும் என அறைகூவல்விட அதற்கு தோதாக ஈழத்தமிழர் அணிதிரளும் அடையாளத்தை அழிக்க நினைப்பது உங்கள் மகிந்தா சிந்தனை விசுவாசமா!//
    நீங்கள் வைத்த்ரிக்கும் கொலை கார அடையாளங்கள் மகிந்த அரசிற்கு சார்பானதல்லவா? உங்களைப் போன்றவர்களைத் தானே மகிந்த லோ லோ என்று தேடித் திரிகிறார். அவருக்குத் தேவை ஐக்கி நாடுகள் சபை ரிப்போர்டில் குறிப்பிட்ட மனிதக் கேடயமாகப் பாவித்த கூட்டம் தான் புலம் பெயர் நாடுகளில் இன்னும் கத்திக் கொண்டு இருக்கு என்று உலகத்திற்கு சொல்ல வேண்டும். அதற்கு நீங்கள் அச்சொட்டான ஆள். எவ்வளோ தாறார்? //இடதுசாரி நாடுகளான ரசியா சீனா கியூபா வியட்நாம் வெனிசுலா மற்றும் முஸ்லீம் நாடுகள் சிறிலங்காவின் தமிழினப்படுகொலையை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் தாங்கள் காட்டும் கள்ளமெளனமா போராட்டம்.!//
    இடது சாரி நாடுகள்?? என்ன குசும்பு இது?? 1960 இல உந்த நாடுகள் இப்ப இடது சாரிகள் இல்லை ஆனல் இடது சாரிகள் என்று பிரசாரம் செய்ய வேணும் என சி.ஐ.ஏ. முடிவெடுத்து. அந்த முடிவுக்குக் காரணம் என்ன தெரியுமோ? அப்பத் தான் உண்மையான இடது சாரிகளுக்கு எதிராகப் பிரசாரம் செய்யலாம் என்று. நிர்மலன் அப்ப….. சீ.ஐ.ஏ உம் உங்களுக்கு மகிந்த மாதிரி தருகீனயையே?
    முஸ்லீம் நாடுகளின் அரசாங்கங்களுக்கு எதிராக அந்த நாட்டு மக்கள் போராடுகீன அவை கூட முஸ்லீம் நாடுகளுக்கு எதிரானவை தான். அவைதான் எங்களுக்கு சப்போர்ர்டுப் பண்ணுவீன. நிர்மலன், உங்கள் தேசியத் தலை.. அமரிக்கா வரும் என்டு நம்பி பங்கருக்க குந்தியிருந்து அமரிக்கன் வந்துட்டான் என்று ஆமிக்காரன்ட கோவணத்துக்க விழுந்த கதை தெரியாதோ? இந்தக் கோதாரியை எல்லாம் நான் கதைக்க விரும்பேல்ல நிர்மலன், நீங்கள் தான் கிளறிவிட்டுக் கூத்துப் பாக்குறீயள் கண்டியளே.

    • நிர்மலன் says:
      15 years ago

      //யாரப்பு அப்படி வரவேற்றது உந்தக் குறுக்கால போன கே.பி அண்ணனே? அவர் புலியெல்லோ? தேசியத் தலேன்ற குடும்பியலோ? அப்ப நீங்கள் அவருக்கு எதிரே?//
      வேறையார் தமிழின இனவழிப்பை புலியழிப்பென வரவேற்றது. கொம்முனிச வெத்து வேட்டுக்கள்தான்.சிங்களத்திற்கும் இந்திக்கும் விலை போனவர்கள் உங்களின் தலையா இருக்கலாம் தமிழ் தேசீயத்தின் தலையாய் இருக்க முடியாது.
      கே.பியின் பினாமியள் உங்கட சிங்கக்கொடியெல்லோ பிடிப்பார்கள்.கார்டியன் பத்திரிகைக்கு தமிழின அழிப்பை வரவேற்று மகிந்தா புகழ்பாடி கடிதமெழுதினரே கே.பியின் பினாமி ஒருவர்.அவர் தங்களின் யூனியரா இல்லை சீனியரா!
      //புலிகொடியை த்தடுப்பதற்கு நாங்கள் என்ன பாதாளச் சிறையும் கொலைக்க் கூடங்களும் வைத்துக் கொண்டு வன்னியில் அரசா நடத்துகிறோம்?//
      அதை அங்கு ஈபியும் கேபியும் பார்க்கிறார்கள். புலத்தில் சிங்கக்கொடி பிடிக்கிறது லங்காபுவத் செய்தி பரப்புவது எல்லோ தங்கள் தொழில்.
      // நாங்கள் புலிக் கொடியின் பின்னணியில் உள்ள அரசியலைப் பற்றியல்லவா பேசுகிறோம். அவமானம்! உங்களுக்கு எப்பவும் வன் முறை நினைப்புத் தான். அப்படி அரசியல் விளைவு என்றால் புலிக் கொடி பிடிப்பதால் உள்ள அரசியல் லாபத்தை வைத்து நீங்கள் வாதிக்கலாமே?அதை விட்டு ஏன் வன்முறை ?
      //
      நீங்கள் பேசுவது அரசியலல்ல. சிங்கள ஆதிக்கத்திற்கான வக்காலத்து.புலிக் கொடி பிடிப்பதில் உள்ள அரசியலை தெரிந்து கொண்டுதான் புலிக்கொடி பிடிப்பவர்கள் பிடிக்கிறார்கள். புலிக்கொடி தியாகத்தின் நேர்மையின் உறுதியின் அடையாளம்.
      ஆயுத அமைப்பாகவிருந்தும் தமிழின கொலைஞன் ராஜீவை இந்தியக் கைக்கூலி நாபா கும்பலை கொன்றதை தவிர புலிகள் சர்வதேசத்தில் என்ன வன்முறையை மேற்கொண்டனர் சொல்லுங்கள் பார்க்கலாம்.
      //இப்பததான் விளங்குது ஏன் புலிகள் குழந்தப் பிள்ளைகளையும்இ கர்ப்பிணித் தாய்களையும்இ வயது முதிர்ந்தோரையும் கதறக் கதற மண்மூட்டையாகப் பாவித்தார்கள் என்று? //
      கேட்டு கேட்டு புளிச்சுப் போன லங்காபுவத் செய்தி இது.
      //நீங்கள் வைத்த்ரிக்கும் கொலை கார அடையாளங்கள் மகிந்த அரசிற்கு சார்பானதல்லவா?நீங்கள் வைத்த்ரிக்கும் கொலை கார அடையாளங்கள் மகிந்த அரசிற்கு சார்பானதல்லவா? உங்களைப் போன்றவர்களைத் தானே மகிந்த லோ லோ என்று தேடித் திரிகிறார். அவருக்குத் தேவை ஐக்கி நாடுகள் சபை ரிப்போர்டில் குறிப்பிட்ட மனிதக் கேடயமாகப் பாவித்த கூட்டம் தான் புலம் பெயர் நாடுகளில் இன்னும் கத்திக் கொண்டு இருக்கு என்று உலகத்திற்கு சொல்ல வேண்டும். அதற்கு நீங்கள் அச்சொட்டான ஆள். எவ்வளோ தாறார்?//
      மகிந்தாவும் அவரது கூலிப்படையும் புலத்திலுள்ள தமிழ் தேசீயவாதிகளைதான் தேடிதிரியும். அவரின் அடிவருடும் பேர்வழிகளை தேடதேவையில்லைதான். அவரின் காலிற்குள் அல்லவா கிடக்கிறீர்கள்.
      புலியே அறிவிக்குது தம்மீது சுமத்தப்பட்ட ஐநா நிபுணர் குழு குற்றச்சாட்டை சட்டப்படி எதிர்கொள்ளத் தயாரென! தம்மீது ஐரோப்பிய யூனியன் விதித்த தடையை சட்டப்படி எதிர்கொள்ளுது.இந்நிலையில் எங்களிற்கு புலிக்கொடி புலுடாவா விடுகிறீர்கள்.
      உங்களிற்கு மகிந்தா எவ்வளவு தருகிறார் என்பது எனக்கெப்படி தெரியும்.!
      //இடது சாரி நாடுகள்?? என்ன குசும்பு இது?? 1960 இல உந்த நாடுகள் இப்ப இடது சாரிகள் இல்லை ஆனல் இடது சாரிகள் என்று பிரசாரம் செய்ய வேணும் என சி.ஐ.ஏ. முடிவெடுத்து. //
      பாட்டி வடை சுட்ட கதை கேட்கும் வயதில்லை எனக்கு.
      //முஸ்லீம் நாடுகளின் அரசாங்கங்களுக்கு எதிராக அந்த நாட்டு மக்கள் போராடுகீன அவை கூட முஸ்லீம் நாடுகளுக்கு எதிரானவை தான். அவைதான் எங்களுக்கு சப்போர்ர்டுப் பண்ணுவீன.//
      ஓம் நல்ல போராடியினம் மொகமதி நபி காலத்திற்கு தாம் செல்லவேண்டுமென! நீங்களும் முஸ்லீமாக இருந்தால் /முஸ்லீமாக மாறினால் கல்லெறிவது கழுத்து வெட்டுவது எப்படி. அல்லாவை மகிழ்விக்கும் புனித காரியங்கள் எவை ….. இப்படி அறிவுகளை கற்றுத்தந்து நல்ல உதவிசெய்வினம். தமிழராக இந்துவாக கிறிஸ்தவனாக இருந்தால் காபீர் எனச்சொல்லி கொல்லுவினம். “கடல்வத்துமாம் வாயிறு நிறைய கருவாடு சாப்பிடலாமென கனவில் குடல் வத்தி செத்துதாம் கொக்கு”
      //தேசியத் தலை.. அமரிக்கா வரும் என்டு நம்பி பங்கருக்க குந்தியிருந்து அமரிக்கன் வந்துட்டான் என்று ஆமிக்காரன்ட கோவணத்துக்க விழுந்த கதை தெரியாதோ? //
      ஓம் அவருடைய பிள்ளை இந்த வெளிநாட்டு யூனிவேசிட்டியிலை. இந்தப் வெளிநாட்டு பள்ளிக்கூடத்திலை இளைய மகன்.மாத்தையா சுட்டுப்போட்டார் சுனாமி கொணடு போட்டுது ….. இப்படி உங்களிடம் கேட்காத கதையா! நீங்களும்தான் என்ன செய்வீர்கள் மகிந்தாவிடம் வாங்கும் பணத்திற்கு இப்படியெல்லாம் சொல்லி லங்காபுவத் சேவை செய்யணுமே!

  14. siva says:
    15 years ago

    முள்ளி வாய்க்காலிக்கு  முந்திய காலத்தில் இருந்தே இலங்கை அரசின் ஒடுக்கு முரைகளுக்கு  எதிராக  குரகல் கொடுக்கும் பலரை  குற்றம் சாட்டுவது  கேலிக்கு உரியதாக உள்ளது  னிர்மலன்

    • நிர்மலன் says:
      15 years ago

      சிவா! மனிதவுரியை காக்கவோ இல்லை தமிழர்களின் உரிமை மீட்பிற்கு போராடுபவர்களை முன்னிறுத்தவே விரும்புகிறேன். ஒரு போதும் எதிர்க்கவில்லை. என் கண்ணை நானே குத்திக்கொள்வேனா?
      தமிழ்தேசீயத்திற்கு எதிராக மகிந்தா சிந்தனையை முன்னெடுப்பவர்களையே எதிர்க்கிறேன். தமிழ்தேசீய ஆதரவாளர்களை ஒன்றிணைக்கும் சக்தி படைத்த கொடியொன்றை எதிர்ப்பது தமிழ்தேசீயத்தை எதிர்ப்பதற்கு ஒப்பானது. குழுவாதத்தை பேணும் நேரமிதுவல்ல! ஒன்றிணையும் நேரமிது. 10000 பேரை அணித்திரட்டும் கொடியை 10 பேரின் விருப்பிற்கு கைவிடணுமா?

      • mamani says:
        15 years ago

        ஒன்றிணைவதற்கு ஏதாவது ஒரு பொது வேலை திட்டத்தை முன் வையுங்கள் 10 ஆயிரமென்ன 1லட்சம் கூடுவோம்.நீங்களே சிந்தித்து பாருங்கள் தேசியம் என்ற பெயரில் சிங்கள அரச படைக்கு சமமாக எமது இயக்கங்கள் செய்த அட்டூழயங்களை அதில் பலமாகவிருந்த புலிகள் அதிகமாக செய்தார்கள். பொது கருத்தின் கீழ் அணிதிரள எந்த அடையாளமும் தேவையில்லை

      • siva says:
        15 years ago

        இனி ஒரு முள்ளி வாய்க்காலுக்கு முதல் காலத்திலிருந்தே இலங்கை அரசிற்கு எதிரான மிகத் தீவிர கருத்துக்களை முன்வைக்கும் இணையம். இதைக் கூட குற்றம் சாட்டினால் உங்களில் சந்தேகம் தான் வருகிறது.

        • நிர்மலன் says:
          15 years ago

          உமா நாபா டக்ளசு சிறிசபாவும் தமிழீழவிடுதலைப் போராட்டம் நடத்தவே இயக்கம் நடத்துவதாக சொன்னார்கள். மாத்தையா 1990வரை கருணா 2003வரை கேபி 2009வரை தாங்கள் விடுதலைப்புலிகள் என்றுதான் சொன்னார்கள்! அது இன்று உண்மையா! இலங்கைத்தமிழரில் காட்டிக்கொடுப்போரில் மிக அதிகமானோர். கொம்முனிசம் பேசியவர்கள்தான். அதனால் எந்த இலங்கைத்தமிழனும் கொம்முனிசம் பேசினாலும் சந்தேகம் தான் வருகிறது.

          • chandran.raja says:
            15 years ago

            கம்யூனிஸ்சம் பேசியானால் உங்கள் சொந்தபுத்தி எங்கு போயிற்று?.

            சுறுட்டும் வரை சுருட்டுவதற்கான அரசியலில் ஈடுபடவும். அது தான் தமிழ்தேசியம். இக்காலத்திற்திற்குரிய “பாஷன்”.
            ஏன்னென்றால் நாம் தமிழர் அல்லவோ!.

  15. கொடுமுடி says:
    15 years ago

    இபழைய புலியள்ள 90 வீதம் மகிந்தன்ட காலை சுத்தி சுத்தி வருகுதுகள் என்று அப்ப சொல்லும் போது விளங்கவில்லை. இப்போ இந்த நிர்மலனை பார்த்தவுடன் புரிகிறது.

  16. sevarkodiyon says:
    15 years ago

    கொடி யாவாரத்தில் ஏழை மக்களும் வாழ்கிறார்கள். கொடி தைப்பவர், கலர் போடுபவர், பக்பண்ணுபவர், என்று தொழிலாளர்கள். 10 இலிருந்து 100 யூரோ வரைக்கும் கொடி உண்டு. இவர்களின் வைத்தில் மண்ணை அள்ளிப் போடாதீங்கள்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...